திண்டுக்கல் மாவட்டத்தில் தனக்கென்று தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது என்று சொல்லிக்கொள்ளும் நத்தம் விஸ்வநாதன், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்த போதும் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஏன் தோல்வியுற்றார்?
- கழக சட்டமன்ற கொறடா, முன்னாள் அமைச்சர் திரு. அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்,
கழகத்திற்குத் துரோகம் இழைத்தவர்களைப் பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டு, கழகத்திற்காக உண்மையாக உழைத்த நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.
- கழக சட்டமன்ற கொறடா, முன்னாள் அமைச்சர் திரு. அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், சென்னைக்கு வருகை புரிந்த மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களை விமான நிலையத்தில் சந்தித்து, பூங்கொத்து அளித்து வரவேற்றார்கள்.
விவசாயிகள் வங்கிகளில் பெற்ற பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாமல் அவர்களை வஞ்சித்து வருவதோடு; மேகதாது பிரச்சனையில் மெத்தனம் காட்டி வரும் த.வெ.க. அரசைக் கண்டித்தும்; காவிரியில் நமக்குரிய பங்கு நீரை உரிய முறையில் பெறுவதற்கு முயற்சி எடுக்காத த.வெ.க. பொய்க்கால் குதிரை அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், வேளாண்துறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிகழ்வில் பங்கேற்க சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தார்கள்.
#TNAssembly#AIADMK
தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உடனடியாக இழப்பீடு வழங்க த.வெ.க. கூட்டணி அரசை வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு அஞ்சாது, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக இறுதிவரை போராடிய ஓடாநிலையின் ஒப்பற்ற மாவீரர் #தீரன்_சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், வீரத்தையும் போற்றி வணங்குகிறேன்.
மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி, சென்னையில் உள்ள அவர்தம் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
அதேபோல், ஓடாநிலை மணிமண்டபத்திலும், சங்ககிரி ஈரோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள நினைவுச் சின்னத்திலும் @AIADMKOfficial சார்பிலும், எனது சார்பிலும் மூத்த கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர் .
2026 தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும்; காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சரை வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 221-ஆவது நினைவு நாளை முன்னிட்டு கழகத்தின் சார்பில் அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்தும்,
திருஉருவப் படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்துதல்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு, மற்ற மாநிலங்களின் அனுமதி பெறப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் பதில் அளித்ததற்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மறைந்த கல்வியாளர் திரு. பொள்ளாச்சி
N மகாலிங்கம் அவர்களின் மகளும்,
திரு. கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களின் மனைவியுமான திருமதி. கருணாம்பாள் வானவராயர் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
நாடு போற்றும் அறிவும், மக்கள் போற்றும் அன்பும், பதவிகள் வந்த போதெல்லாம் பணிவும் நிறைந்த இந்தியாவின்
மேனாள் குடியரசுத் தலைவர்,
பாரத ரத்னா டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழை வணங்குகிறேன்.
“கனவு காணுங்கள்; அந்தக் கனவுகளை நனவாக்க உழையுங்கள்” என்ற
அவரது உயரிய சிந்தனை,
இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.
அவரது எளிமை, தேசப்பற்று, அறிவியல் பங்களிப்பு மற்றும் இளைஞர்கள் மீதான நம்பிக்கை என்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்.
@AIADMKOfficial
கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அணை நிரம்பினால்தான் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கார்நாடக காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் அவர்கள் கூறுவது உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரானதாகும்.
சட்ட ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரைப் பெற வேண்டிய த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் இன்றுவரை வாய்மூடி மௌனியாக இருக்கிறார்.
தற்போது, 'தமிழக முதலமைச்சர்,
காவிரிப் பிரச்சனையில் பேச்சுவார்த்தைக்காக கர்நாடக முதலமைச்சரை சந்திக்கப் போகிறேன்' என்று சொன்ன பிறகு, 'யார் வேண்டுமானாலும் வரட்டும், யாரோடும் நாங்கள் பேசத் தயார், எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை' என்று கர்நாடகாவின் காங்கிரஸ் முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமார் அவர்கள் கூறியுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.
மேகதாது விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களது கருத்துகளைக் கேட்டும்; டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்தும், பிறகு அனைவரது கருத்துகளின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்துகிறேன்.
ஏற்கெனவே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, கர்நாடக அரசு காவிரியில் நமக்கு வழங்க வேண்டிய உரிய பங்கு நீரை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடக அரசு நடந்துகொள்ள வேண்டும். காவிரியில் நமக்குரிய பங்கு நீரைப் பெற வேண்டும் என்று த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
கள்ளக்குறிச்சி, தென் சென்னை வடக்கு (கிழக்கு) மற்றும் தென் சென்னை தெற்கு (கிழக்கு) ஆகிய மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில்,
சேலம் மாநகர், சேலம் புறநகர், சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.
#AIADMK