தாய்லாந்து நாட்டின் Nakhon Chai Si நகரில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 'FIM Asia Women's Cup of Circuit (ACCR)' போட்டித் தொடரில், மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மோட்டார் விளையாட்டு வீராங்கனையர் ஜெகதிஸ்ரீ குமரேசன் அவர்களை இன்று நேரில் வாழ்த்தினேன்.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான அதிநவீன மற்றும் பாதுகாப்பான விளையாட்டுச் சூழலை வழங்கும் விதமாக, உலகத்தரம் வாய்ந்த Motor Sports கட்டமைப்புகள் மற்றும் அதற்கான கொள்கைகளை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டி - '10m Air Rifle' தனிநபர் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீராங்கனையர் இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்கனவே, இவர் மகளிருக்கான துப்பாக்கிச் சுடுதல் குழுப் போட்டியில் இடம்பெற்று பதக்க���் வென்ற நிலையில், தற்போது ஒரே நாளில் இரண்டாவது பதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, தொடர் உழைப்பு ஆகியவற்றின் மூலம் நிச்சயம் வெற்றி பெற முடியும் என இவரது சாதனை தமிழக இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்று கூறி, தள்ளாத வயதிலும் சமத்துவத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் 148 ஆவது பிறந்தநாளான இன்று, சென்னை - அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாண்புமிகு பேரவைத் தலைவர், அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
'சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதி' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழக மக்கள் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்.
வாழ்க பெரியார்!
வளர்க அவர்தம் சுயமரியாதைத் தொண்டு!
'மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு உண்டென்ற கொள்கையை அடியோடு மறுக்கிறோம்' என்று சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடான செங்கற��பட்டு மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த சமத்துவக் கோட்பாட்டை தன் வாழ்நாள் முழுவதும் பிரசாரம் செய்து, தமிழக மக்கள் தன்மானத்துடன் வாழப் பேரொளியாய் வழிகாட்டிய தந்தை பெரியாரின் பிறந்தநாள் இன்று.
சமத்துவச் சிந்தனையை மக்கள் மயமாக்கிய பேராளுமை. சமூகநீதிக்காகச் சளைக்காமல் போராடி அரசியலமைப்பு முதல் திருத்தத்தை மேற்கொள்ளக் காரணமாக இருந்த துணிச்சல்காரர். பெண் விடுதலைக்காக முன்��ின்று, 'மானுட சமத்துவத்தின் முதல் படி ஆண்-பெண் சமமென்ற சமூகம்' என்று கூறிய அறத்தின் குரல். இந்தி மொழி ஆதிக்கத்தைக் கண்டித்த போராளி. 'சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு' என்று அறிவித்த சுடரொளி.
சாதி மற்றும் மதப் பெரும்பான்மைவாதத்திற்கு எதிரான கொள்கை அரணாக நம்மை வழிநடத்திக்கொண்டு இருக்கும் தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம். 'மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகள்' வழியில் சமரசமின்றி பயணிப்போம் என்று உறுதியேற்போம்.
உலகின் தலைசிறந்த அறிஞர், சமத்துவப் போராளி, உலகத் தலைவர், முன்னோடி சிந்தனையாளர், நவீன இந்தியாவின் அரசியலமைப்பு சிற்பி' ஆகிய புகழுக்குச் சொந்தக்காரரான புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், லண்டனில் பொருளாதார மாணவராக ஆய்வு மேற்கொண்டபோது வசித்த நினைவு இல்லத்தை பார்வையிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினேன். 'சுதந்த���ரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்கிற லட்சியத்தின் வழியில் உன்னத சமூகத்தை உண்டாக்க, தன் வாழ்வையே அர்ப்பணித்த புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும்.
அண்ணா!
இந்த மூன்றெழுத்து தமிழ் நிலத்தில் புது சரித்திரம் படைத்தது. மாநிலக் கட்சிகள் ஆட்சியமைத்து ஜனநாயகத்தைப் பரவலாக்க முடியும் என்று இந்திய அரசியலுக்கு புதிய அத்தியாய���்தை எழுதியது. கூட்டாட்சி தத்துவமே இந்திய நாட்டின் அடையாளம் என்று அரசியலமைப்பு சிறப்பை முழுமைப்படுத்தியது. சாமானியர்களும் ஆட்சியாளர்கள் ஆகலாம் என்ற மக்களாட்சி புரட்சியை நிலைநாட்டியது.
சமத்துவத்தை முன்னிறுத்திய தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தேர்தல் அரசியலில் வென்றெடுத்தார்; சமூகநீதியை அரசின் திட்டங்களில் அமல்படுத்தினார்; 'மாநில சுயாட்சி' என்ற வலிமையான அரசியலின் மூலம் 'தமிழ்நாடு' தனித்துவத்தோடு தலைநிமிர வழிகாட்டினார்.
'மக்களிடம் செல்', 'உன்னால் முடியும் தம்பி', 'அரசியல் ஆர்வம் குன்றிடும் நாளே ஜனநாயக முறை அழிந்திடும் நாள்' ஆகிய அண்ணாவின் பிரசாரங்களே என்னைத் தேர்தல் அரசியல் சிந்தனை நோக்கிப் பயணிக்க வைத்தன. அரசியல் அறிவியல் மாணவனான எனது ஆசிரியர்களில் மூத்தவரான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவே எப்பொழுதும் எனது வழிகாட்டி.
'அண்ணாவின் கொள்கை வழியில் அர்ப்பணிப்புடன் பயணிப்போம். அண்ணாவின் மாபெரும் கனவுகளை மீட்டுருவாக்குவோம்' என்று அவரது பிறந்தநாளான இன்று உறுதியேற்போம்.
மோட்டார் விளையாட்டின் உச்சபட்சமாக இருக்கும் 'Formula One' உலக சாம்பியன்ஷிப் போட்டி, 1950 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ���ில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 'The Le Mans Cup - Silverstone Round' போட்டியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்நிகழ்வை தொடங்கி வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைக் கொண்டார்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற திரைத்துறை நட்சத்திரமும், மோட்டார் விளையாட்டு வீரரும் எனது அன்புக்குரிய சகோதரருமான திரு. அஜித் குமார் அவர்களின் சிறப்பு அழைப்பின் ப��ரில் இப்பயணத்தில் பங்கேற்றோம்.
'Motor Sports' மீதான அவரின் ஆர்வமும், தமிழ்நாட்டில் இந்த விளையாட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அவரது தொலைநோக்குத் திட்டங்களும் நம்மை மிகவும் கவர்ந்தன. மோட்டார் விளையாட்டின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அதன் பிரமாண்டத்தையும் அவர் பொறுமையாகவும் அர்ப்பணிப்புடனும் நம்மிடம் விளக்கினார். முன்னாள் இந்திய ‘Formula One’ வீரர் திரு. நரேன் கார்த்திகேயன் அவர்களும் உடனிருந்தார். தொடர்ந்து, இதுசார்ந்த உலகின் முன்னணி தொழில், வணிக மற்றும் விளையாட்டுத்துறைத் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) உறுப்பினர் செயலாளர் திரு. ஜே. மேகநாத ரெட்டி அவர்களும் இப்பயணத்தில் பங்கேற்றார்.
'நம் தமிழ்நாட்டில் உலகத்தரமான உள்கட்டமைப்பை அடித்தளமாக மேற்கொண்டு சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்கள�� உருவாக்க வேண்டும்' என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடாகும். இதன்பொருட்டு, தமிழ்நாட்டில் உலகத்தரமான 'Motor Sports City' விரைவில் அமையப்பெற உள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களுடன் இணைந்து தமிழ்நாட்டை முதன்ம���யாகக் கொண்டு, இந்தியா முழுவதற்கும் சர்வதேச அளவிலான Sports Economy-ஐ உருவாக்குவதற்கான பல புதிய தேடல்கள், கற்றல்கள், புதிய பார்வைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டோம்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இப்பயணம், தமிழ்நாட்டின் விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும். தமிழ்நாடு விளையாட்டு கட்டமைப்பிலும் விளையாட்டுப் பொருளாதாரத்திலும் தலைசிறந்து விளங்கி, இந்தி��ாவின் விளையாட்டுத் தலைநகரமாக உருவாகும். மேலும், தமிழக விளையாட்டுத்துறையை நவீனமயமாகவும் உலக நாடுகளுக்கு இணையாகவும் உருவாக்க வேண்டிய பல்வேறு புதிய செயல்திட்டங்களை இப்பயணத்துடன் மேற்கொண்டு வருகிறோம்.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் லட்சியமிக்க இளைஞராகப் பங்கேற்றவரும், சமூக சீர்தி��ுத்தத்திற்காக பல்வேறு சமத்துவப் போராட்டங்களை முன்னெடுத்தவருமான இமானுவேல் சேகரனார் நினைவு நாள் இன்று.
எளிய மக்களின் உரிமைக் குரலாக குலக்கல்வி திட்டத்திற்கு எதிராகக் கையெழுத்து இயக்கம், விளிம்புநிலை மக்களுக்கான கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரசாரம், தீண்டாமைக்கு எதிரான 'இரட்டைக் குவளை முறை ஒழிப்பு மாநாடு', புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடும் வி��மாக 'ஒடுக்கப்பட்டோர் எழுச்சி இயக்க மாநாடு' ஆகிய பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டார்.
அனைத்து மக்களும் நட்புறவாய் வாழும் சமூகத்திற்காகப் பாடுபட்ட இமானுவேல் சேகரனார் புகழைப் போற்றுவோம்.
தமிழகத்தில் முதன்முறையாக 26.38 லட்சம் பேர் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டி என்கிற வரலாற்றுச் சிறப்பை பெற்ற, SDAT-யின் 'Chief Minister's Trophy 2026' போட்டிகளை நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்கி வைத்தேன்.
தமிழகம் முழுவதும�� தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெறும் 'Chief Minister's Trophy 2026' போட்டிகளை நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்திலிருந்து தொடங்கி வைத்தேன்.
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என முதன்முறையாக 26.38 லட்சம் பேர் போட்டியில் பங்கேற்கப் பதிவு செய்திருக்கிறார்கள். இதன்மூலம், தமிழ்நாட்டில் குடும்பமாக 1 கோடி பேர் விளையாட��டோடு இணையும் வரலாற்றுச் சிறப்பை காண்கிறோம்.
'தமிழ்நாட்டின் ஒலிம்பிக் கனவு' என்கிற குறிக்கோளின் அடிப்படையில் முதன்முறையாக 45 விளையாட்டுகளை உள்ளடக்கிச் சிறப்பாகப் போட்டிகள் நடத்தப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு ஊட்டச்சத்தான உணவு, தரமான விளையாட்டு உபகரணங்கள், புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட இரு பாலருக்கான விளையாட்டு விடுதிகள், ��லிம்பிக் நகரம், முதன்முதலாக நான்கு இலக்கத்தில் விளையாட்டுத்துறைக்கு நிதி ஒதுக்கீடு என விளையாட்டுத்துறைக்கு முதன்மையாகக் கவனம் செலுத்தி வருகிறார் மாண்புமிகு முதல்வர் அவர்கள்.
விளையாட்டை ஊக்குவிப்பது, விளையாட்டு வீரர்-வீராங்கனையர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, தமிழக இளைஞர்கள் உலக அரங்கில் சாதனைகள் பல படைக்க துணை நிற்பது என்கிற நோக்கத்தில் தமிழ்நாடு அரச��� செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
1/3
"மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி!"
ஒரு வரலாறு உருவாகிறது. இந்திய நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக சிறப்பையும், தமிழ்நாட்டின் சமூகநீதி அடையாளத்தையும் பின்பற்றி அனைவருக்குமான கொள்கை அரசியலில் உறுதியுடன் பயணிப்போம்.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிற சமத்துவ கோட்பாடு, 'சுதந்திரம், ச��த்துவம், சகோதரத்துவம்' என்கிற அரசியலமைப்பு மாண்பு, 'சுயமரியாதை மற்றும் சமூகநீதி' என்கிற தமிழக வரலாற்று மரபு ஆகியவற்றைக் காக்கும் விதமாக, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தன்னிகரற்ற சக்தியாக விளங்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய தோழமைக் கட்சிகள் கைகோர்த்துள்ள கூட்டணிக்கு 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் ���ூட்டணி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் மதச்சார்பின்மை சிறப்பையும், தமிழ்நாட்டின் சமூகநீதி அடையாளத்தையும் பின்பற்றி அனைவருக்குமான கொள்கை அரசியலில் உறுதியுடன் நமது கூட்டணி பயணிக்கும்.
1/3