தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
விஜய்க்கு குழந்தைகள் சொல்லி ஒட்டு போட்டோம் என்பதே பொய். உண்மையிலே அந்த பெற்றோர்கள் விஜய்க்கு தான் போட வேண்டும் என்று போட்டு இருக்காங்க. ஆனால் விஜய்க்கு போட்டேன் என்று சொல்ல முடியாமல் அசிங்கப்பட்டு அப்படி சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.
2016 அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றிபெறவே மாட்டார் என்று அனைத்து ஊடகங்களும் உறுதியிட்டு சொல்ல அனைவரும் ஹிலாரி கிளிண்டன் காலடியில் இருந்தார்கள். ஆனா டிரம்ப் வெற்றி பிறகு பல ஆட்களிடம் கேட்கும்போதும் அவர்கள் வேற காரணம் சொல்லி அதனால் ஒட்டு போட்டோம் என்றார்கள். உண்மையில் அவர்கள் டிரம்ப்க்கு விரும்பி தான் வாக்களித்தார்கள். ஆனா வெளிய சொல்ல வெக்கப்பட்டு கொண்டு கதை சொன்னார்கள் .
அதே தான் தமிழ்நாட்டிலும் நடந்து இருக்கிறது. எனவே அதை நாம் accept பண்ணிட்டு தான் போகணும்..
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
ஆட்சிக்கு வந்ததுல இருந்து ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த கூட துப்பு இல்லையா என மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க CM Sir...
சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க விஜய்!
#TVKFails
மானமுள்ள காங்கிரஸ்காரர் என்றால் @manickamtagore பதில் சொல்வாரா?
தமிழக வெற்றிக்கழகத்தின் செய்தி தொடர்பாளர் ஜோசியர் ரிக்கி ராதன் பண்டிட், சேனல் சேனலாக ஜோதிட பேட்டிகள் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் த.வெ.கவின் அறிவிக்கப்படாத செய்தி தொடர்பாளராக மாறியிருக்கிறார் காங் எம்.பி மாணிக்கம் தாகூர்.
தி.மு.க உடன்பிறப்புகளின் உழைப்பாலும் வியர்வையாலும் திக்கித் திணறி தேர்தலில் வெற்றி பெற்ற மாணிக்கம் தாகூர், ‘நீட் குளறுபடிகளுக்கும் பெட்ரோல் விலை உயர்வுக்கும் எதிராக வாய் திறக்கவில்லை’ என்று மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களைக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
போராட்டக்களம், மக்கள் மன்றம் எதற்கும் போகாமல் அடுத்தவர் உழைப்பில் எம்.பி ஆகிவிட்டு X தளத்திலேயே குடியிருக்கும் மாணிக்கம் தாகூர் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவரின் இந்த பதிவுகள் உங்கள் கண்ணில் படவில்லையா?
https://t.co/gP4Uep2Mbf
https://t.co/d7UTx8hziI
மானமுள்ள காங்கிரஸ்காரராக இருந்தால் கீழ்க்கண்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்…
•கடந்த 5 ஆண்டுகளில் ஆளுநர் அத்துமீறல், வக்பு வாரிய திருத்த மசோதா, இந்தி திணிப்பு, மாநில அரசுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம், தொகுதி மறுவரையறை மசோதா என்று எல்லாவற்றுக்கும் எதிராக களத்தில் இறங்கிப் போராடியது தி.மு.க.
நீங்கள் இப்போது முட்டு கொடுத்துக்கொண்டிருக்கும் உங்கள் சோபா மாடல் அரசின் தலைவர், பா.ஜ.க.வுக்கு எதிராக எந்த போராட்டத்துக்காக வீதியில் இறங்கினார்?
•தி.மு.க கூட்டணியிலேயே பா.ஜ.கவுக்கு எதிராக குறைவான செயற்பாடுகள் கொண்ட கட்சி தமிழ்நாடு காங்கிரஸ்தான். உங்கள் காங்கிரஸ் கட்சி அதிகமாக போராடியதே ‘ஜனநாயகன்’ தடையை எதிர்த்தும் தனிப்பெரும்பான்மை இல்லாத த.வெ.கவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காத ஆளுநரை எதிர்த்தும்தான்.
சரி, இதற்காக உங்கள் காங்கிரஸ் கட்சி போராடியதே, தனக்கு வந்த பிரச்சினைகளுக்காவது பா.ஜ.கவை எதிர்த்து குரல் கொடுத்தாரா உங்கள் சோபா மாடல் தலைவர்?
சொல்லாமல் கொள்ளாமல் நம்பிக்கைத் துரோகம் இழைத்துவிட்டு ஓடிப்போய் கூட்டணியில் சேர்ந்தபிறகாவது, ‘ஏன் ஆளுநரை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை?’ என்று உங்கள் சோபா மாடல் முதலமைச்சரைக் கேள்வி கேட்க திராணியில்லாத மாணிக்கம் தாகூர் அவர்களே, உங்களுக்கு தி.மு.கவைப் பார்த்து கேள்வி கேட்க யோக்கியதை இருக்கிறதா?
•மதச்சார்பின்மையைத் தூக்கி நிறுத்தத்தான் த.வெ.க ஆதரவு என்றீர்களே, பா.ஜ.க கூட்டணியில் வெற்றிபெற்ற அ.ம.மு.க எம்.எல்.ஏவை விலைக்கு வாங்கியது, அ.தி.மு.கவை உடைப்பது என்று தொடர்ந்து குதிரை பேரத்தில் பா.ஜ.க கூட்டணி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் உங்கள் புதிய எஜமானரைப் பார்த்து ஏன் கேள்வி எழுப்புவதில்லை?
•தி.மு.க கூட்டணியில் இருந்தபோது நீங்களும் பிரவீண் சக்கரவர்த்தியும் தி.மு.கவை எதிர்த்து மாறி மாறி லாவணி பாடினீர்களே, உங்கள் மீது அகில இந்திய தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காதபோது, ‘காங்கிரஸ் கட்சியில் கருத்து சுதந்திரம் இருக்கிறது, இதுதான் உள்கட்சி ஜனநாயகம்’ என்று வகுப்பு எடுத்தீர்களே, நீங்கள் வாக்களித்த மக்களுக்கும் தி.மு.க தலைமைக்கும் துரோகம் இழைத்து ஓடியபோது, விமர்சித்த காரணத்துக்காக அலிம் அல் புகாரியை உங்கள் காங்கிரஸ் தலைமை நீக்கியதே, அப்போது எங்கே போனது காங்கிரஸ் கட்சியின் கருத்து சுதந்திரமும், உள்கட்சி ஜனநாயகமும்?
•நீங்கள் த.வெ.க அரசை ஆதரித்தபிறகு, கேரள காங்கிரஸ் முதலமைச்சர் பதவியேற்றாரே, அந்த பதவியேற்பு விழாவில் உங்கள் சோபா மாடல் முதலமைச்சர் ஏன் கலந்துகொள்ளவில்லை? டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும், அதற்கு முன்பு காங் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டாம் என்பதால்தானே?
எங்கள் கூட்டணியில் இருந்தபோது கேள்விகள் எழுப்பிக்கொண்டிருந்த நீங்களும் பிரவீண் சக்கரவர்த்தியும், உங்கள் சோபா மாடல் முதலமைச்சரைக் கேள்வி எழுப்பாமல் மௌனம் காப்பது ஏன் மாணிக்கம் தாகூர் அவர்களே?
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
பிள்ளைகளை கூத்தாடி விஜய் பாடலுக்கு ஆட வைப்பது, ஓட்டு கேட்ட வைப்பது இல்லை மாற்றம்..
......த்தா இதுதான்டா உண்மையான மாற்றம் 💪💪💪💪💪
ஆதங்க படாதீங்க தமிழ்நாட்டு மக்களே. மீண்டும் வருவோம் புத்துணர்ச்சி யோடு,
#DMK_டா 🔥🔥🔥🔥
This is the most terrifying 5 minutes you will see today.
We are literally living in a fake economic bubble created to shield the image of one man.
We are so cooked.
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.
இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!