பத்திரிகைச் செய்தி
பாலியல் குற்றவாளிக்கு துணை போகும் தவெக அரசு. விஜயின் ரசிகைக்கே பாதுகாப்பு இல்லை. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு, அச்சத்தில் பெண்கள் அப்போது CM சார்.. CM சார் என கூவிவிட்டு... இப்போது மட்டும் தனிமனித ஒழுக்கம் என கூறி தப்பித்துக் கொள்ள நினைக்கிறார் முதல்வர் விஜய்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திருமிகு கீதா ஜீவன் அவர்கள் இன்று (11.06.2026) பத்திரிகையாளர்களை சந்தித்து தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத சூழல் நிலவி வருவதையும், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு பற்றியும் எடுத்துரைத்தார்.
அவர் பேசுகையில் " கடந்த திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முழுவதும் பெண் காவலர்கள் அடங்கிய பிங் பேட்ரோலை தொடங்கினார் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் கழகத்தலைவர் அவர்கள். இப்போது அதற்கு ஒரு ஸ்டிக்கர் ஒட்டி சிங்கப்பெண் அதிரடிப்படை என தொடங்கி உள்ளது இந்த புதிய அரசு. ஆடியோ லாஞ்ச் போல விளம்பரம் செய்வதில் மட்டும் குறியாக இருக்கும் இந்த அரசு நிஜத்தில் எந்த பாதுகாப்பையும் உறுதி செய்யவில்லை. ஒருபக்கம் சிங்க பெண் படையை தொடங்கி வசனம் பேசுவது மறுபக்கம் பெண்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களுக்கே ஆதரவாக இருப்பது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே , முதல்வர் விஜயின் தீவிர ரசிகை ஒருவரை தூத்துக்குடி தவெக நிர்வாகிகள் பாலமுருகன், ஜெயபால் ஆகியோர் ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ வி.ஜி. சரவணன் மூலம், அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதுபற்றி புகார் அளித்த அந்த பெண்ணையே புகாரை வாபஸ் பெற சொல்லி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் தவெக எம்.எல்.ஏ சரவணன்.
அந்த அப்பாவி பெண் பத்து நாட்களாக நியாயம் வேண்டி கதறி அழுது கொண்டிருப்பது முதல்வர் விஜயின் காதுக்கு கேட்கவில்லையா..? என கேள்வி எழுப்பினார்".
மேலும் " விஜய் முதலமைச்சராவதற்கு உழைத்த ஒரு பெண் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்காமல் பொது வெளியில் வந்து அழுது புலம்புவதைக் கூட முதல்வர் விஜய் பொருட்படுத்தவில்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குற்றத்துக்கு துணை போயுள்ள அந்த எம்.எல்.ஏ மீது எந்த விசாரணையும் நடத்தவில்லை. சிங்கப்பெண் திட்டத்தை புரோமோசன் செய்வதிலும் , பொய்யான தகவல்களை பரப்புவதிலுமே தீவிரமாக உள்ளதே தவிர பெண்களின் பாதுகாப்பு பற்றி எல்லாம் அக்கறையே இல்லை." என கடுமையாக சாடினார்.
அதோடு " தேர்தலுக்கு முன்பு எதற்கெடுத்தாலும் CM சார்.. CM சார் என கூவிவிட்டு... இப்போது மட்டும் தனிமனித ஒழுக்கம் சமூக ஒழுக்கம் என கூறி தப்பித்துக் கொள்ள நினைக்கிறாரா முதல்வர் விஜய்... நடக்கும் குற்றங்களை தடுக்க அரசுக்கு பொறுப்பு இல்லையா.?
கடந்த கழக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் கழகத்தலைவர் அவர்கள் பெண்களுக்கு ஆதரவாக இருந்து பெண்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து அதேபோல பாதுகாப்பை உறுதி செய்தார். அதனால் தான் பெண்கள் தைரியமாக வெளியே வந்து புகார் அளிக்கும் சூழல் நிலவியது. ஆனால் இன்று புகார் அளித்த பெண்ணையே ஒரு ஆளும் கட்சி எம்.எல்.ஏ பகிரங்கமாக மிரட்டுவதும் அப்படி மிரட்டும் எம்.எல்.ஏ மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த அரசு குற்றவாளிக்கு துணையாக இருப்பதும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி உள்ளது. ஆளும்கட்சியை சேர்ந்த பெண்ணுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்கள் எப்படி இனி தைரியமாக வந்து புகார் அளிப்பார்கள்.?
அதே போல " தவெக வினர் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடைகளுக்கு சென்று மிரட்டி மாமூல் கேட்பது, பள்ளி தலைமை ஆசிரியரை மிரட்டுவது , பொது மக்களை மிரட்டுவது என அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர். மொத்தத்தில் இந்த புதிய ஆட்சியில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது." என கடுமையாக விமர்சித்தார்.
மேலும் "இது அத்தனையையும் கண்டும் காணாமல் முதல்வர் விஜய் இருக்கிறார். அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் ஊடங்களை முடக்குகின்றனர். ஆளும்கட்சியினர் இப்படி அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு பொது மக்களுக்கு எதிராக செயல்படுவதை, எதிர்த்து மக்களுக்கு ஆதரவாக கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் திமுக போராடும். எங்களின் எதிர்க்கட்சி தலைவர் சட்டமன்றத்தில் மக்களின் குரலை எதிரொலித்து நீதியை நிலைநாட்டுவார்" என்றார்.
இறுதியாக பேசுகையில் "இந்த அரசு சுயமாக எதையும் செய்யாமல் திமுக செய்த சாதனைகளுக்கு எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி தங்களது என பொய் செய்தியை பரப்பி வருகிறது. சமீபத்தில், முதல்வர் படம் இல்லாமல் ஸ்கூல் பேக் வழங்குவது கடந்த திமுக ஆட்சியில் இருந்து நடைபெற்று வருவது அதைக் கூட மறைத்து தற்போதைய ஆட்சி தான் செய்ததாக பொய்யைப் பரப்பி மக்களை ஏமாற்ற நினைத்தனர். இப்படி மக்களை ஏமாற்றுவதை மட்டுமே முழு நேர வேலையாக கொண்டுள்ளது இந்த அரசு" என்பதையும் குறிப்பிட்டார்.
***
பத்திரிகைச் செய்தி
கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (11-06-2026) சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள கோபிநாத் கார்டனில் நடைபெற்ற புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் திரு. பெரியண்ணன் அரசு – சுஜாதா அரசு இணையரின் மகள் அமிர்தா - கி. ஜித்தேன்குமார் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
#DMK
இன்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தினமும் நடந்து கொண்டிருக்கக்கூடிய, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இந்த அரசு கட்டுப்படுத்த முடியாமல், நிறுத்த முடியாமல் இருக்கக்கூடிய சூழலை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு. @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#TVKFails
⚖️ ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
❌ குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
❌ அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
Reels, Fake news narrative இதைத்தான் தவெக ஆட்சி செய்கிறது. திமுக ஆட்சியில் செய்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி புதிதாக செயல்படுத்துவது போல Buildup செய்கின்றனர் தவெகவினர்.
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
ஆதவ் அர்ஜுனா பேசுவதெல்லாம் உண்மைக்கு புறம்பானதாக உள்ளது. அவருக்கு வாய் சவடால் விடுவதை தவிர வேறு என்ன தெரியும்?
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார். ஆனால், ஸ்ரீவைகுண்டத்தில் தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
தூத்துக்குடியில் தவெகவை சார்ந்த பெண்ணை பாலியல் வன்முறை செய்த தவெக நிர்வாகிகள், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த இருந்த தவெக எம்.எல்.ஏ மீதும் ஏன் இன்னும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை? அந்தப் பெண்ணின் அழுகுரல் முதலமைச்சர் காதில் விழவில்லையா?
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
"உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா?" என்று தமிழ்நாட்டுப் பெண்களை எல்லாம் கொதிப்படைய வைத்துள்ளது ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகை ஒருவருக்கு நடந்துள்ள அநீதி.
அந்தப் பெண்ணை ஸ்ரீவைகுண்டம் த.வெ.க எம்.எல்.ஏ. சரவணனுக்கு நெருக்கமான அக்கட்சி நிர்வாகிகள் இருவர், வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் பேசி உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று எம்.எல்.ஏ சரவணன் சமரசம் பேச முயன்றதாக பாதிக்கப்பட்டப் பெண் கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தப் பெண் கூறுகிறார்.
இன்னொரு அமைச்சருக்கும் இந்தப் பிரச்சினை தெரியும் என்கிறார். எல்லாம் மேலிடத்துக்கு தெரியும் என்று குற்றவாளிகள் கூறியதாகவும் சொல்லி உள்ளார்.
ஆளுங்கட்சியில் "யார் அந்த மேலிடம்" என்று மக்கள் கேட்கின்றனர்.
'தனிமனித ஒழுக்கம்' பற்றி பாடமெடுத்துள்ள முதலமைச்சரின் ஒட்டுமொத்த #SofaModel அரசும், இந்த விவகாரத்தை மூடிமறைக்க முயன்றுள்ளது.
குற்றத்தை செய்தவர்களை பாதுகாக்க முயன்றதோடு மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை கட்சியில் இருந்தும் நீக்கி இருக்கிறார்கள்.
பாலியல் வன்கொடுமை செய்திகளை கேட்கும் போதெல்லாம் நெஞ்சம் கலங்குகிறது - பதறுகிறது என்று 2 நாட்கள் முன்பு முதலமைச்சர் பேசினார்.
ஆனால், தன் கட்சியைச் சேர்ந்த த.வெ.க. ஆட்களே பாலியல் வன்கொடுமை செய்தால், பாதிக்கப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கிறார்.
Reels எடுத்து Post செய்ய தான் 'சிங்கப்பெண்' பிரிவை முதலமைச்சர் உருவாக்கினாரா?
இந்த கேள்விகளுக்கு முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
ஸ்ரீவைகுண்டத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணிற்கு முழுமையான நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.எல்.ஏ சரவணன் உடனடியாக பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
அவருக்கு ஆதரவாக இருந்த ஆளுங்கட்சி மேலிட புள்ளிகள் யாரென்று விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Warm birthday wishes to RJD National President Thiru. @LaluPrasadRJD.
Your consistent defence of secularism and #SocialJustice remains an inspiration to democratic and progressive forces across the country.
Wishing you good health and happiness.
@yadavtejashwi
உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்குத் துணையிருப்போம்!
ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை கொடுத்த போது இதயம் கனக்கிறது.
உடன்பிறப்புகளே… உங்கள் ஒவ்வொருவருக்கும் - உங்கள் குடும்பத்திற்கும் துணை நிற்க வேண்டியது கழகத்தின் கடமை! ஆனால், அதைவிடப் பெருங்கடமையாக நான் கருதுவது: சாலைப் பயணங்களை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.
உடன்பிறப்புகள் ஒவ்வொருவொருவர் மீது நானும்,உங்கள் குடும்பத்தினரும் வைத்துள்ள நம்பிக்கையைக் காத்து நலமுடன் வாழ வேண்டும்!
#DMK4TN
பத்திரிகைச் செய்தி
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பா. பெஞ்ஜமின் அவர்கள் தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் யாமினி இளையராஜா - மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் தினேஷ் - 155வது வட்டக் கழக செயலாளர் ராஜ்குமார் பச்சையப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (10.06.2026) மாலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட முன்னாள் செயலாளரும் - முன்னாள் அமைச்சருமான பா.பெஞ்ஜமின் அவர்கள் தலைமையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த திருவள்ளூர் மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் யாமினி இளையராஜா - மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் தினேஷ் - 155வது வட்டக் கழக செயலாளர் ராஜ்குமார் பச்சையப்பன், மத்திய மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ., செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மதுரவாயல் தெற்கு பகுதி செயலாளர் காரம்பாக்கம் கணபதி, முன்னாள் எம்.எல்.ஏ., வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர் அயப்பாக்கம் அ.ம. துரை வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.
மதுரையில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் அறிவித்தபடி, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த
தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன், ம.சுகன்யா - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் - தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி. சண்முகம் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் ஆகிய 4 குடும்பங்களுக்கு தி.மு.க. சார்பில் தலா ரூ.10 இலட்சம் வீதம் மொத்தம் 40 இலட்சம் ரூபாயினை இன்று (10.6.2026) குடும்ப நிவாரண நிதியாக வழங்கினார்.
இதுவரை 22 கழக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 கோடியே 20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது
மதுரையில் 1.6.2025 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் அந்தக் குடும்பத்துக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் பத்து இலட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும். அந்தப் பிள்ளைகளின் படிப்பு, குடும்பச் சூழலுக்கு இந்த நிதி உதவும்." என்று அறிவித்திருந்தார்.
அந்த வகையில், விபத்தில் மரணமடைந்த திண்டிவனம், இறையனூரைச் சேர்ந்த திருமதி சரிதா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த க.முத்தமிழ்செல்வன் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வே.சரவணன் - திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.விக்னேஷ் - கடலூர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி - காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.ராம்பிரசாத் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரண்ராஜ் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரகாசம் - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.மேகலிங்கம் - சேலம் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.முருகன் - விழுப்புரம் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மு.இராமதாஸ் - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கு.சரவணகுமார், ஈரோடு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம். லிங்கேஸ்வரன் - மதுரை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த என். திருப்பதி - நாமக்கல் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.முத்துராஜா - இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நா.மாரிமுத்து - திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி பார்வதி (எ) உஷா - திருப்பூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த இ.பரத்குமார் ஆகிய 18 குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கியதைத் தொடர்ந்து;
தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன் தனது மனைவி ம.சுகன்யா ஆகியோர், 09.12.2025 அன்று உத்தமபாளையம் - கம்பம் மெயின் ரோடு காக்கில்சிக்கையன்பட்டி பண்டாரம் களம் அருகில் அவர்கள் சென்ற இருசக்கரம் வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்தில் சிக்கியும் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் அவர்கள், கடந்த 20.11.2025 அன்று சென்னிமலையிலிருந்து இரவு பணி முடிந்து வீடு திரும்பும்போது வழியில் சென்னிமலை, பெருந்துறை ரோடு, எஸ்எல்என் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் வரும்போது வேன் மோதி விபத்தில் சிக்கியும் - தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி.சண்முகம் அவர்கள், 10.07.2025 அன்று ஓசூருக்கு வேலை செல்வதற்காகபிளப்பநாயக்கஅள்ளி - ஏ.பாப்பாரப்பட்டி ரோட்டில் எட்டியாம்பட்டி ஏரி மதகு அருகே அவர் சென்ற இருசக்கரம் வாகனம் மீது எதிரில் வந்த மினி லாரி மோதி விபத்தில் சிக்கியும் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், வில்வராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் அவர்கள், 30.10.2025 அன்று ஜி.எஸ்.டி.சாலை, இருங்குன்றம்பள்ளி பாலாறு பாலம் அருகே அவர் வந்த இருசக்கர வாகனம்மீது அரசு பேருந்து மோதி விபத்தில் சிக்கியும் உயிரிழந்த இந்த 4 குடும்பங்களுக்கும் குடும்ப நிவாரண நிதியாக, தலா ரூபாய் 10 இலட்சத்திற்கான காசோலையினை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,
தேனி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ப.மணிகண்டன் - திருமதி ம.சுகன்யா ஆகியோரின் மகன் எம்.கௌதம் அவர்களிடமும் - ஈரோடு மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த வி.கோபாலகிருஷ்ணன் அவர்களின் மனைவி திருமதி ஜி.சவிதா அவர்களிடமும் – தருமபுரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பி. சண்முகம் அவர்களது மனைவி திருமதி எஸ்.நதியா அவர்களிடமும் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த என்.கார்த்திக் அவர்களின் மனைவி திருமதி சபிதா அவர்களிடமும் இன்று (10-06-2026) காலை வழங்கினார்.
“கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி”
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நினைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடுபடுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழியாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
“கழகத் தலைவர் அவர்களது பேச்சைத் திரித்துப் பரப்புகிறார்கள்”
“ஆட்சிக் கலைப்பு - கவிழ்ப்பு என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல; மக்கள்தான் களைத்துப் போய்விட்டார்கள்”
- விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திரு. தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. அவர்கள் அறிக்கை.
தமிழ்நாட்டில் புதிதாக ஒரு ஆட்சி அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதமும் டிவியைப் பார்த்தாலும் நாளிதழ்களைத் திருப்பினாலும் கொலையும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைகளும், போதை மருந்து நடமாட்டமும் தான் செய்திகளாக இருக்கின்றன. பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஆளும் கட்சியான த.வெ.க. நிர்வாகிகளே சம்பந்தப்பட்டு உள்ளனர்.
ஆளும்கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், சொந்தக் கட்சிக்காரர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்தப் பெண்ணால் குற்றம் சாட்டப்படும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது இதுவரை நடவடிக்கை இல்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்சியை விட்டு நீக்கி இருக்கிறது தூய சக்தி என்று கபட வேடம் போடும் அரசு.
“இந்த ஆட்சியை ஆறு மாதம் விமர்சிக்க மாட்டோம்” என்று எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருந்தாலும், நிலைமை மிக மோசமாகப் போய்வரும் நிலையில் அவர் விமர்சனம் செய்தார். “ஆறு மாதம் அல்ல, மூன்று மாதம் கூட தாங்காது என்ற நிலைமையில் தான் ஆட்சி போய்க்கொண்டு இருக்கிறது” என்று தலைவர் அவர்கள் பேசினார்கள். ஆனால், மூன்று மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று அவர் சொன்னதாகத் திரித்து செய்தி பரப்பப்படுகிறது.
இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.க. தலைவர் அப்படி பேசியிருக்கக் கூடாது என்று பேசி உள்ளனர். ஆட்சி கவிழும் என்று தலைவர் அவர்கள் பேசவுமில்லை; அது அவரது நிலைப்பாடும் அல்ல!
“ஆறு மாதம் வரை, இந்த ஆட்சி பற்றி விமர்சித்துப் பேசப் போவதில்லை” என்று அவர் சொல்லியிருந்தார். ஆனால் நாள்தோறும் கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டுகள், போதை மருந்துகள் நடமாட்டம், பெட்ரோல் குண்டு வீச்சுகள், மின்வெட்டு, விவசாயிகள் போராட்டம், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதைப் பார்க்கும் போது, இதை விமர்சிக்காமல் எப்படி இருக்க முடியும் என்ற பொருளில், “மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது” என்று பொருள்படும்படிதான் சொன்னார்கள்.
ஆசை அறுபது நாள் என்பார்கள். ஆனால் இன்றைய ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்கள் ஒரு வாரம் தான் அமைதியாக இருந்தார்கள். சமூகவலைத்தளங்கள் முழுக்கவே ஆளும் கட்சிக்கு எதிரான ஆவேசமான கருத்துகளைத்தான் மக்கள் சொல்லி வருகிறார்கள்.
இதைத்தான் தலைவர் அவர்கள் தனது உரையில் சுட்டிக் காட்டினார்கள். கலைப்பு, கவிழ்ப்பு எண்ணத்தோடு அல்ல. மக்களே களைத்துப் போய்விட்டார்கள் அதற்குள்!
அவதூறுகள், ஆபாசப் பதிவுகள், பொய்ச் செய்திகள் பரப்புவோர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
பட்டப்பகலில் நட்டநடு வீதியில் ஓட ஓட விரட்டிப் படுகொலைகள் நடக்கின்றன. அவற்றைத் தடுக்கவும் துப்பில்லை, வக்கில்லை.
தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டினால் மக்கள் நள்ளிரவு முழுவதும் சாலையில் அமர்ந்து போராடினால் கேட்க நாதியில்லை.
ஆனால், இவர்களின் ஊழல்களையும் உண்மை முகங்களையும் வெளிக்கொணர்ந்து பதிவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். விமர்சனத்தை முடக்குவதில் மட்டும்தான் இந்த அரசு proactive-ஆகச் செயல்படும் போல.
இது பாசிசமா, இல்லை பாயாசமா? ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்திலேயே இப்படி அடக்குமுறைகளை அவிழ்த்து விடும் இவர்கள் போகப் போக இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்திருக்கிறார்களோ?
என்ன CM Sir, உங்களை எதிர்த்தால் இதுதான் கதி என மிரட்டிப் பார்க்கிறீர்களா?
#TVKFails
பத்திரிகைச் செய்தி
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்தனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (08.06.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், ஐ.யூ.எம்.எல். – அதிமுக – காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த வாலாஜா ஒருங்கிணைப்பாளர்கள் ரிபாய், ஏ.எஸ்.இல்யாஸ், முகமது முபாரக், அக்பர் பர்ஷா, ஏ.பாஷா, இம்ரான் ஜலீல், அக்பர், மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் ஜகபர்சாதிக், வணிகர் அணி அமீர்பாபுகாஜா- குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நிஜாம், அல்அமீன், முகமது சபீர், குளைச்சல் பகர்தீன், தொண்டர் அணி நசீர்ஷா, மாணவர் அணி மா.முகமது அஸ்கர், குளைச்சல் அப்துல்கரீம், அஜமல்கான், ஜகபர்சாதிக், முகமது சபீர், புதுமடம் ஹலீம், ரஷித்அலி, நிசார்அலி, ஹாரிஷ்அல்யாசின், முகமது அசாருதீன், முகமது பைசல், முகமது இம்தியாஸ், இஃபான்கான், ஹாபில்அல்யாசின், ஆசிக் அலி நஜிமுதீன், அகமது, அலாஹ்வாத்அமீர்பாஷா, சபீர்அகமது, இன்பராஜ், சபீர்அகமது, இன்பராஜ், சீர்காழி வெங்கடேஷ், முகமது பைசல், மருத்துவ மணி அஃபான் அகமது, ஷாகுல்இம்தியாஸ், முகமது நவீத், முகமது சலீம், அஜ்மல்அஹமது, முகமது ரியாஸ் - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புகாரிகாஜா, அமீர்பாபுகாஜா, சீர்காழி வெங்கடேஷ், இராஜசேகர் - அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் சாகுல்அமீத், சாகுல் அமீது - விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த குளைச்சல் அ.சித்திக், சந்தோஷ்குமார் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாநில சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு செயலாளர் டாக்டர் சுபேர்கான் ஆகியோர் உடனிருந்தனர்.
#DMK
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து!
பதிவுத் துறையில் இணைய வழியில் ஆவணப் பதிவை த.வெ.க அரசு அறிமுகப்படுத்தியிருப்பது போல செய்திகளை வெளியிட்டு, நேரில் வருகை தராமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யலாம் என்ற வீண் விளம்பரத்தை ஊடகங்கள் மூலம் பரப்புகிறது சோபா மாடல் அரசு.
பத்திரப்பதிவுத் துறையை கணினிமயமாக்கி, பொதுமக்களுக்கு எளிமையாக்கும் முறையை 6-2-2000ஆம் நாளன்றே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஸ்டார் கணினிமயமாக்கும் திட்டத்தின் மூலம் தொலைநோக்குப் பார்வையுடன் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக பத்திரப்பதிவுப் பணிகள் கணினிமயமான நிலையில், திராவிட மாடல் ஆட்சியில், 2026 ஜனவரி 23 அன்று ஸ்டார் 3.0 என்ற திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதன் மூலமாக, காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம், மறு விற்பனையாகும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு களப்பணியின்றி அன்றே ஆவணங்களை திரும்ப வழங்கும் திட்டம், சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் எளிய முறையில் வில்லங்கச் சான்றிதழ் தேடுதல் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய செயல்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தை, ஜூன் மாதத்தில் புதிய அரசின் திட்டம் போல ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கு வெட்கமாக இல்லையா விஜய் அரசே? இந்த அற்பத்தனத்துக்கு End Card-ஏ கிடையாதா joker cards அமைச்சரவையே?
நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்!
உண்மையின் முகம் இதுதான்: TNEB பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!
உண்மையின் பின்னணி இதோ:
நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.
திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது!
இப்போது எழும் கேள்வி?
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?
மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?
தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு [28.01.2024 & 21.08.2025 G.O]
குறிப்பு:
மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை