இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் ஒற்றை நம்பிக்கை நாயகர், நம் ஜனநாயகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து, அவரது அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றேன்.!
@TVKVijayHQ
சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அ���்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu ��வர்களின் உத்தரவின்படி,
இன்று (05.09.2026) சனிக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N. @BussyAnand MLA அவர்கள், சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு நேரில் சென்று மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர்.K.G.அருண்ராஜ் அவர்களுடன் இணைந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.மாணிக்கம் தாகூர் மற்றும் MP பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.!
இந்நிகழ்வில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.செ.ராஜேஷ் குமார் அவர்கள் உடன் இருந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவின்படி,
இன்று (05.09.2026) சனிக்க���ழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.@BussyAnand MLA அவர்கள், சென்னை காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கி, நாட்டுப்பற்றின் அடையாளமாக திகழ்ந்த வ.உ.சிதம்பரனார் அவர்கள் இழுத்த செக்கிற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாணவர்களின் சார்பில் நடைபெற்ற நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து, மாணவர்களைப் பாரா���்டி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் K.G.அருண்ராஜ் அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.செ.ராஜேஷ் குமார் அவர்கள், மாண்புமிகு சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.M.அருள் பிரகாசம் அவர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப. அவர்கள், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் திரு.மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்காக இன்று (1.9.2026) சேலம் மாவட்டத்திற்கு வருகைதந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்குப் பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்ச���் @CMOTamilnadu அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (29.08.2026) சனிக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.@BussyAnand MLA அவர்கள், சென்னை தரமணியில் உள்ள ஐஐடியில் நடைபெற்ற இந்தியன் செஸ்ட் காங்கிரஸ் 2026 தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டார்.
உலகம் முழுவதும் சுவாச நோய்கள் அதிகரித்து வரும் நிலையில், நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதைவிட, நோய் வராமல் தடுப்பதும், ஆரம்ப நிலையிலேயே க��்டறிந்து சிகிச்சை அளிப்பதும் மிகவும் முக்கியம் என அவர் தெரிவித்தார்.
மேலும், புகைப்பிடித்தல் மற்றும் புகையிலைப் பயன்பாட்டைத் தவிர்ப்பதுடன், கிராமப்புறங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுவாச நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், நவீன மருத்துவத்தின் பயன்கள் தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் முதல் தேசிய மாநாடு சிறப்பான வெற்றியைப் பெறவும், புதிய மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் சிகிச்சை முறைகளுக்கு வழிவகுக்கவும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த மாநாட்டில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு செயலாளர் திரு. டாக்டர்.டேரேஸ் அகமது, இ.ஆ.ப அவர்கள், முன்னாள் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் திரு.டாக்டர். H.V. ஹண்டே, பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவின் படி,
நேற்று (28.08.2026) வெள்ளிக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand MLA அவர்கள், நேபாளத்தில் நிகழ்ந்த பேரிடரிலிருந்து மீட்கப்பட்டு, ச���ன்னை விமான நிலையம் வந்தடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றார்.
இந்நிகழ்வின்போது மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். விக்னேஷ் அவர்கள், துணைச் செயலாளர் (மரபு) திரு. ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், இ.ஆ.ப. அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவின்படி,
இன்று (28.08.2026) வெள்ளிக்கிழமை,
நேபாளத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கின் காரணமாக, கைலாஷ் யாத்திரைக்காகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பலரும் அங்கு சிக்கித் தவித்தனர்.
இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்���ளின் உத்தரவின்படி, தமிழகத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாக மீட்டு அழைத்து வரவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கவும் 4 அமைச்சர்கள் அடங்கிய குழு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நேபாள வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட 21 தமிழர்கள், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்திற்கு நேரில் சென்று, மீட்கப்பட்�� 21 பேரையும் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand , MLA அவர்கள் அன்புடன் வரவேற்று, அவர்களது நலன் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், அனைவரும் காரில் ஏறி செல்லும் வரை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விமான நிலையத்திலேயே இருந்து வழி அனுப்பினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு, இக்கட்டான சூழ்நிலைகளிலும் தமிழர்களுக்கு துணை நின்று, அவர்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பத���ல் தொடர்ந்து முழு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிகழ்வில் மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு டி.சரத்குமார் அவர்கள், மாண்புமிகு முசிறி சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். விக்னேஷ் அவர்கள் உடன் இருந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான கொடி. அடர்சிவப்பு - மஞ்சள்- அடர்சிவப்பு நிறத்துடன் இரட்டைப் போர் யானைகள், வாகைப்பூ மற்றும் 28 நட்சத்திரங்களுடன் அரசியல் உலகை அத���ர வை��்த கொடி.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உறுதி எனும் உயிர்க் கயிற்றில் உயர்ந்த கொடி அன்று. உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உற்சாகத்துடன் உயர்ந்து பறக்கும் கொடி இன்று.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நிகழ்த்திக் காட்டி இருக்கும் கொடி மட்டுமன்று இது, தன் படபடக்கும் பட்டொளி வீசிப் பறத்தலால், மக்களை ஆண்டாண்டுக் காலமாக வாட்டி வதைத்த லஞ���ச ஊழல் அழுக்குகளை அடித்து விரட்டிய அசாத்தியக் கொடி. ஒவ்வோர் உயிரின் கனவையும் சாத்தியமாக்கவே பறக்கும் நித்தியக் கொடி. உழைக்கும் வர்க்கத்தினரின் சத்தியக் கொடி.
ஆட்சி அதிகார அரசியலுக்கான கொடியாக மட்டும் அறிமுகமாகாமல் அகிலமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவால் விண்முட்டப் பறக்கும் விஜயக் கொடி. வீரக் கொடி. வெற்றிக் கொடி. தொடர் வீர வரலாற்றுக் கொடி.
சீரி���மையுடன் திறன் வியக்கப் பறக்கட்டும் இக்கொடி. கூர்நுட்பத்துடன் உலகத் தமிழர் ஒவ்வொருவருக்கும் திசைகாட்டியாய்ச் சிறக்கட்டும் இக்கொடி. சிறகடிக்கட்டும் இக்கொடி என ��ெஞ்சார வாழ்த்துகின்றனர் எதிர்வரும் இளந்தலைமுறையினரும். இதயமார ஆசிர்வதிக்கின்றனர் இன்னும் பல்லாண்டு வாழத்துடிக்கும் எல்லாத் தலைமுறையினரும்.
எல்லோரும் ஒற்றைக் குரலில் உரக்கச் சொல்கின்றனர்.
நம் வெற்றித் தலைவன் கொடி உயரட்டும்.
நம் தவெக கொடி பறக்கட்டும்.
இத் தரணி எங்கும் தமிழர் மானம் தழைக்கட்டும்.
மாண்���ுமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவின்படி,
இன்று (17.08.2026) திங்கட்கிழமை,
வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (VB-GRAMG) கீழ், தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகள், ரூ.500 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் தொடங்க��்பட உள்ளன.
மழைநீரை முறையாக சேமித்து, நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு நீர்வளத்தை பாதுகாக்கவும் இப்புனரமைப்புப் பணிகள் முக்கிய பங்காற்றும்.
இதன் ஒரு பகுதியாக, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.@BussyAnand , MLA அவர்கள், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம��, நெடுங்குன்றம் ஊராட்சியில் உள்ள புத்தூர் கிராம ஏரி வரத்துக் கால்வாயில் ரூ.3.19 கோடி மதிப்பீட்டிலான புனரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் நீர்நிலைகளை பாதுகாத்து, நீர்வளத்தை மேம்படுத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்வில் மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு.டி.சரத்கும��ர் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.டாக்டர் எம். வீரப்பன், இ.ஆ.ப அவர்கள், மாண்புமிகு செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தியாகராஜன் அவர்கள், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.B.விஜயராஜ் அவர்கள், ஊராட்சித் துறை ஆணையர் திருமதி. வி.அமுதவல்லி, இ.ஆ.ப.,அவர்கள் மற்றும் துறை சார்ந்த பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.
#100DaysofTVKGovt
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தங்கள் கிராமங்கள் மேம்பட கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கிராம சபை சிறக்கட்டும்!கிராமங்கள் செழிக்கட்டும்!!
#Gramasabai
மாண்புமிகு த���ிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (11.08.2026) சென்னை தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @BussyAnand |
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவின்படி,
இன்று (11.08.2026) செவ்வாய்க்கிழமை,
சென்னை தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மாண்புமிகு தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand , MLA அவர்கள் தலைமையில், வடகிழக்கு பருவமழை 2026-ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையின்போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக, மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளை ம���ன்கூட்டியே கண்டறிந்து, மழைநீர் வடிகால்களை தூர்வாரி சீரமைத்தல், நீர்வழித்தடங்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்றுதல், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் விரைந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மழைக்காலங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்காத வகையில் தேவையான முன்னேற்பாடுகளை செய்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மழைக்காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படுவதற்கான மீட்புப் பணிகள் மற்றும் தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்தல், மின்கம்பிகள் மற்றும் மின்சார சாதனங்கள் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனடியாக சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த��ம் ஆய்வு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையர் திரு. எச்.ஆர். கௌஷிக், இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்க�� மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு, மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தற்போது பின்வரும் 27 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
கழகப் புதிய மாவட்டங்கள்:
1.விருதுநகர் மேற்கு மாவட்டம்
2. மதுரை வடக்கு மாவட்டம்
3. மதுரை மாநகர் மத்திய ��ாவட்டம்
4. மதுரை கிழக்கு மாவட்டம்
5. புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்
6. நாமக்கல் தென்கிழக்கு மாவட்டம்
7. தேனி வடகிழக்கு மாவட்டம்
8. தேனி தென்மேற்கு மாவட்டம்
9. தூத்துக்குடி மத்திய மாவட்டம்
10. திருவள்ளூர் வடமேற்கு மாவட்டம்
11. திருப்பூர் தென்கிழக்கு மாவட்டம்
12. திருப்பத்தூர் தெற்கு மாவட்டம்
13. திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
14. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்
15. திருச்சி புறநகர் தெற்கு மாவட��டம்
16. திண்டுக்கல் தென்மேற்கு மாவட்டம்
17. தருமபுரி புறநகர் மேற்கு மாவட்டம்
18. சேலம் மத்திய மேற்கு மாவட்டம்
19. சேலம் தெற்கு மாவட்டம்
20. சென்னை தெற்கு மாவட்டம்
21. செங்கல்பட்டு வடக்கு மாவட்டம்
22. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்
23. கோவை கிழக்கு மாவட்டம்
24. கிருஷ்ணகிரி தென்கிழக்கு மாவட்டம்
25. கரூர் தெற்கு மாவட்டம்
26. ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்
27. ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்
புதிய மாவட்டங்களின் நிர்வாகிகள் விவரங்களை அறிய... Click Here https://t.co/MdFPIj5NN5
புதியதாக பொறுப்பேற்கும் மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுகளும். இந்தப் புதிய நிர்வாகிகளுக்கு, கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பும் மரபும் மிக்க மிகப்பெரிய பொறுப்பை உணராமல், வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. தன் தாத்தாவும் ��ந்தையும் வகித்தும்கூடவா முதல்வர் பதவியின் தகுதியும் தராதரமும் தெரியாமல் ஒருவர் இருக்க முடியும்?.
அவை அடக்கமும் நாவடக்கமும் இல்லாத ஒருவரா நம் தமிழகத்தின் துணைமுதல்வராக இருந்திருக்க முடியும்?. மக்கள் மத்தியில் இத்தகையக் கேள்விகள் இமாலய அளவிற்கு எழுந்துள்ளன. எல்லை மீறி இழிவாகப் பேசியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் ?.
Decent Approach - Decent Attack கற்றுக்கொடுத்து எங்களைக் கட்டுப்படுத���தி வளர்க்கும் மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்படி அநாவசியமாகவும் அநாகரிகமாகவும் தொட்டவர்கள் நிலை என்னவாயிற்று என்பதை யாராக இருந்தாலும் உணர்ந்தே ஆக வேண்டும். மக்கள் உணர்த்தியே தீருவர். அதில் மாற்றமும் இல்லை. மாற்றுக் கருத்தும் இல்லை.
அமைதி காக்கச் சொல்லி எங்கள் தலைவர் தளபதியின் நாகரிக வளர்ப்பு எங்களைத் தடுக்கி���து. வேறு என்ன சொல்ல?.
அறிஞர் அண்ணா பாணியில் ‘வசவாளர்கள் வாழ்க’ என்று சொல்லலாம்.ஆனால், ஆபாசநிதிகளை?.
மாண்பும் மரியாதையும் தகுதியும் தராதரமும் மிக்க எங்கள் தலைவர் தளபதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சொல்வதுபோல மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். யாரும் மறந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.
#ஆபாசநிதி
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமானத் தாக்குதலாகும். இ��ு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு நடைமுறைபப்டுத்தப்பட்டது முதலே அதன் மீதான நம்பகத் தன்மை குறைவது மட்டுமல்லாமல், மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தங்களின் எதிர்காலக் கனவு மிகப்பெரிய கேள்விக்குறியாவதும் தொடர்கிறது.
நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை. எனவே ஒன்றிய அரசு நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலி���ுறுத்துகிறோம்.
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு ��திரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பா��ு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்க���்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி ��ள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வ��ளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.