ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், கோல் ஊன்றித் தாண்டும் (Pole Vault) போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தடகள வீராங்கனை பரணிகா இளங்கோவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இவ்வெற்றியைப் பெற்றுள்ள அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அவரது வெற்றி, இலக்கை நோக்கி அயராது உழைக்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும்.
பரணிகா இளங்கோவன் அவர்கள் தொடர்ந்து பல உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay
#AsianGames2026
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், தடகளம் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்திய அணியின் 4 நபர் அடங்கிய இந்தக் கலப்பு தொடர் ஓட்டக் குழுவில், 2 வீரர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பு மட்டுமில்லாமல், தமிழ்நாடு விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாகும்.
தடகள வீரர்கள் வித்யா ராம்ராஜ் மற்றும் விஷால் டி.கே. ஆகியோரது சிறப்பான சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.50 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 'ELITE Sportsperson Scheme' திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுவரும் இருவரும் தங்களது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இச்சாதனையைப் படைத்துள்ளனர்.
இவர்களது வெற்றி, விளையாட்டில் சாதனை படைக்கத் துடிக்கும் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கிறது. இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள இவர்களின் வெற்றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைத்திட வாழ்த்துகள்!
#CMJosephVijay
#AsianGames2026
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், பேட்மிண்டன் ஆடவர் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் திரு.ஹரிஹரன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
அவரது திறமையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் 'ELITE Sportsperson Scheme' திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுவரும் திரு.ஹரிஹரன் அவர்களின் இந்த சாதனை, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.
விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்கு தமிழ்நாடு அரசு என்றும் தோள்கொடுக்கும். திரு. ஹரிஹரன் அவர்கள் மேலும் பல உயரங்களைத் தொட வாழ்த்துகள்!
#CMJosephVijay
#AsianGames2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (23.9.2026) சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திற்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் "தடையற்ற மின்சாரம் –மின்கட்டமைப்பு –நுகர்வோர் சேவை" குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#CMJosephVijay
உடலுறுப்பு தானம் குறித்த முக்கியத்துவத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையிலும், சிறுவன் ஹிதேந்திரனின் உடலுறுப்புகளை தானமாக வழங்கியதை நினைவுகூரும் வகையிலும் ஆண்டுதோறும் செப்டம்பர் 23-ஆம் நாள் தமிழ்நாடு உடலுறுப்பு தான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
உடலுறுப்பு தானம் என்பது, ஒருவர் மறைந்த பின்னரும் அவரது உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்கும் மகத்தான மனிதநேயச் செயலாகும். உறுப்பு மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பலருக்குத் தானமாக வழங்கப்படும் ஒவ்வொரு உறுப்பும் புதிய நம்பிக்கையையும், புதிய வாழ்வையும் அளிக்கிறது.
மனிதநேயச் சுடரை ஏந்தி, உயிர்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்டும் உடலுறுப்புக் கொடையாளர்கள் அனைவரையும் இந்நாளில் பெருமையுடன் நினைவுகூர்வோம்!
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.9.2026), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை, திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.
#CMJosephVijay
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின், மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினி அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிரிக்கெட் வீராங்கனை கமலினி அவர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும்.
இவரைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். கமலினி அவர்களின் இந்த வெற்றி, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும், மகளிருக்கும் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். இவர் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!
#CMJosephVijay
#AsianGames2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (22.9.2026) தலைமைச் செயலகத்தில், கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (22.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தெற்கு உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தெற்கு உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.
மலைப்பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (22.9.2026) தலைமைச் செயலகத்தில், தேசிய பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் திரு.அந்தர் சிங் ஆர்யா, உறுப்பினர்கள் டாக்டர் ஆஷா லக்ரா, திரு. ஜாதோத்து ஹுசைன், இணைச் செயலாளர் திரு. அமித் நிர்மல், இயக்குநர் திரு. கல்யாண் ரெட்டி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.9.2026), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை, திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.9.2026), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை, திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.9.2026), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை, திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.9.2026), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை, திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.
#CMJosephVijay
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
#CMJosephVijay