மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) சென்னை, ஆழ்வார்பேட்டையிலுள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில், உலகிலேயே முதன்முதலாக அமைக்கப்பட்டுள்ள நுண்துளை கருவிழி சீரமைப்பு மையத்தைத் (PINHOLE PUPILLOPLASTY CENTRE) திறந்து வைத்து, நுண்துளை கருவிழி சீரமைப்பு அறுவைசிகிச்சை செய்து கொண்டவரிடம் தற்போதைய கண் பார்வையின் திறன் குறித்துக் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோச��் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தின் காரணமாக, அந்நாட்டிற்கு சுற்றுலா சென்று அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர���ச்சியும், துயரமும் அடைந்தேன்.
இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில் அவர்களோ அல்லது தமிழ்நாட��டில் உள்ள அவர்களது உறவினர்களோ தொடர்பு கொள்ள ஏதுவாக அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயில���க, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்னாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய மிலா��ு நபி நல்வாழ்த்துகள்!
மனிதகுலத்தின் மீது அன்பையும், ஏழை எளியோரின் மீது இரக்கத்தையும், அனைவரிடத்திலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேண வேண்டும் என இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் போதித்த உயரிய நெறிகளைப் பின்பற்றி, உலகில் அன்பையும் நல்லிணக்கத்தையும் தழைக்கச் செய்வோம்!
இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நலமும், வளமும் நிறைந்திடட்டும்!
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (25.8.2026) தலைமைச் செயலகத்தில், பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த திரு.ஜி.சுப்பிரமணியன், திரு.எஸ்.டி. கதிரேசன் மற்றும் உள்ளுர் விவசாயப் பெருமக்கள் சந்தித்து, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்��டும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
#CMJosephVijay
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
23/08/2026 நேற்று மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி திருநகர் பூங்காவில் வாசன் கண் மருத்துவமனை குழுமம் நடத்திய சமூகசேவகர்களுக்கான விரு��ு வழங்கும் விழா மற்றும் விளையாட்டு போட்டிகளுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி வாழ்த்திய போது.
இன்று (23.08.2026) மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்க���ட்பட்ட மூத்தான்குளம் கிராமத்தில், சுமார் 60 ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாத நிலை இருந்து வந்தது. இந்நிலையில், அப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை கேட்டறிந்து, இன்று மூத்தான்குளம் கிராமத்திற்கு புதிய பேருந்து சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்த போது.
நேற்று (22.08.2026) சின்ன சொக்கிகுளத்தில் ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை வடக்கு வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டேன்.
மக்களுக்குத் தேவையான அரச�� சேவைகள் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்கும் வகையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது நமது அரசின் முக்கிய நோக்கமாகும்.
மக்கள் நலன் சார்ந்த பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொடர்ந்து முன்னெடுப்போம்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மதுரை சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்/துணை மேயர், மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அறிமுகமான கொடி. அடர்சிவப்பு - மஞ்சள்- அடர்சிவப்பு நிறத்துடன் இரட்டைப் போர் யானைகள், வாகைப்பூ மற்றும் 28 நட்சத்திரங்களுடன் அரசியல் உலகை அதிர வைத்த கொடி.
தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களின் உறுதி எனும் உயிர்க் கயிற்றில் உயர்ந்த கொடி அன்று. உலகத் தமிழர்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் உற்சாகத்துடன் உயர்ந்து பறக்கும் கொடி இன்று.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆட்சி மாற்றத்தை மட்டுமே நிகழ்த்திக் காட்டி இருக்கும் கொடி மட்டுமன்று இது, தன் படபடக்கும் பட்டொளி வீசிப் பறத்தலால், மக்களை ஆண்டாண்டுக் காலமாக வாட்டி வதைத்த லஞ்ச ஊழல் அழுக்குகளை அடித்து விரட்டிய அசாத்தியக் கொடி. ஒவ்வோர் உயிரின் கனவையும் சாத்தியமாக்கவே பறக்கும் நித்தியக் கொடி. உழைக்கும் வர்க்கத்தினரின் சத்தியக் கொடி.
ஆட்சி அதிகார அரசியலுக்கான கொடியாக மட்டும் அறிமுகமாகாமல் அகிலமெங்கும் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்களின் தொப்புள்கொடி உறவால் விண்முட்டப் பறக்கும் விஜயக் கொடி. வீரக் கொடி. வெற்றிக் கொடி. தொடர் வீர வரலாற்றுக் கொடி.
சீரிளமையுடன் திறன் வியக்கப் பறக்கட்டும் இக்கொடி. கூர்நுட்பத்துடன் உல��த் தமிழர் ஒவ்வொருவருக்கும் திசைகாட்டியாய்ச் சிறக்கட்டும் இக்கொடி. சிறகடிக்கட்டும் இக்கொடி என நெஞ்சார வாழ்த்துகின்றனர் எதிர்வரும் இளந்தலைமுறையினரும். இதயமார ஆசிர்வதிக்கின்றனர் இன்னும் பல்லாண்டு வாழத்துடிக்கும் எல்லாத் தலைமுறையினரும்.
எல்லோரும் ஒற்றைக் குரலில் உரக்கச் சொல்கின்றனர்.
நம் வெற்றித் தலைவன் கொடி உயரட்டும்.
நம் தவெக கொடி பறக்கட்டும்.
இத் தரணி எங்கும் தமிழர் மானம் தழைக்கட்டும்.
VIDEO | Madurai: Tamil Nadu CTR Nirmal Kumar (@CTR_Nirmalkumar) clarifies about the issues discussed during 31st Southern Zonal Council meeting with Union Home Minister Amit Shah, says, “Something is pending before the Supreme Court, and therefore, it cannot be discussed outside the Court. We are very clear about that. We did not allow or accept any discussion on matters that are pending before the Supreme Court. Only the matters that were officially listed for discussion were discussed. Apart from that, everyone is free to express their views, but we cannot accept discussions on issues that are pending before the Supreme Court. Nothing regarding the Cauvery or Mekedatu was discussed, and our Chief Minister is very firm on this matter. It has already been clearly stated that anything pending before the Supreme Court, including matters relating to the Cauvery or Mekedatu, cannot be discussed outside the Supreme Court.”
(Full video available on PTI Videos - https://t.co/bIyFWTfmBd)
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதிற்��ு தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டின் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் திரு.தங்கராஜ் மற்றும் மதுரை, பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசிரியை திருமதி அமுதா ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டு வரும் தங்களின் அர்ப்பணிப்பு, புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர் நலனில் கொண்ட அக்கறைக்கு கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம், தமிழ்நாட்டின் கல்விச் சிறப்புக்கும், ஒட்டுமொத்த ஆசிரிய சமூகத்திற்கும் மேலும் பெருமை சேர்க்கிறது.
இந்த தேசிய விருது தங்களின் பணிக்கு மேலும் ஊக்கமளித்து, எண்ணற்ற மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றட்டும்!
நல்வாழ்த்து��ள்!
#CMJosephVijay
மாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள் தலைமையில் இன்று (20.8.2026) மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார்.
#CMJosephVijay
���ாண்புமிகு ஒன்றிய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள் தலைமையில் இன்று (20.8.2026) மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார்.
#CMJosephVijay
ஓடும் காலத்தின் பக்கங்களை ஒரு கணத்தில் உறையச் செய்து, வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் சிறந்த சமூகக் கண்ணாடியே புகைப்படமா��ும்.
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் வாழ்நாள் நினைவாக மாற்றுவதோடு, வார்த்தைகளால் சொல்ல இயலாத நிகழ்வுகளை கலைநயம் மிக்க புகைப்படங்களால் உணர்த்தும் அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் எனது 'உலக புகைப்பட நாள்' நல்வாழ்த்துகள்! உங்களின் கலைப் பயணம் சிறக்கட்டும்!
#CMJosephVijay
#WorldPhotographyDay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் 17.8.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள அ���ுள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலிலிருந்து களவாடப்பட்டு, இங்கிலாந்து நாட்டிலிருந்து மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையைப் பார்வையிட்டார்.
#CMJosephVijay
விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் 23 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் பக்தர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு உதவிப் பொறியாளர் (கட்டுமானம்), உதவி ஸ்தபதி மற்றும் செயல் அலுவலர் பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவ��யில், விதி 110-ன் கீழ், விவசாயப் பெருமக்களின் நலனிற்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குக் கூடுதல் தள்ளுபடியை அறிவித்தார்.
#CMJosephVijay