முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு,தேனி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட போடிநாயக்கனூர் மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனைகளில் ஜூன் 3ஆம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அன்புப் பரிசாக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான அண்ணன் தங்கதமிழ்ச்செல்வன் @ThangaTamilselv அவர்கள் வழங்கினார்கள் உடன் போடி நகர செயலாளர் புருஷோத்தமன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆசிப் கான் பெரியகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மாவட்ட அவை தலைவர் கழக உடன்பிறப்புகள் உடன் நானும் கலந்து கொண்டேன்.
#KalaignarForever
#DMKTHENI
ராப் இசை பாடகர் வேடன் அவர்கள் இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு @Udhaystalin அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது அவருக்கு @muthamilarignar பதிப்பகத்தின் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு: திமுக 75’ நூலையும், பெரியார்-அண்ணா-கலைஞர் சிலையையும் அன்பளிப்பாக வழங்கி வாழ்த்தினார் எதிர்கட்சித் தலைவர் அவர்கள்.
#Vedan
ஸ்டாலின் சார் ஆகமுடியுமா விஜய் ப்ரோ?
எதற்கெடுத்தாலும் ‘ஸ்டாலின் சாரா, விஜய்யா?' என்று கேள்வி எழுப்பும் #SofaModel முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே... இந்த சிறு ஒப்பீட்டைப் பாருங்கள்...
இன்றைய @MPaasarai பக்கத்தில்...👇
#TVKFails
பத்திரிகைச் செய்தி
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு, Ex.M.L.A., அவர்கள் தலைமையில் மாற்றுக் கட்சியினர் 1000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (07.06.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் பாபு, Ex.M.L.A. அவர்கள் தலைமையில் உப்பளத் தொழிலாளர் சங்கத் தலைவர் உமாநாத், செயலாளர்கள் எட்டியான், முனியாண்டி – விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 188வது பகுதி செயலாளர் மடிப்பாக்கம் கோபு, 197வது வட்ட மீனவர் அணி செயலாளர் செல்லகுமார், திருக்கழுக்குன்றம் இளைஞர் அணிச் செயலாளர்கள் மூர்த்தி, கேசவன், த.வெ.க. கட்சியைச் சேர்ந்த திருக்கழுக்குன்றம் ஒன்றிய அமைப்பாளர் சண்முகம் – காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வாயலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அசோகன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த புதுப்பட்டினம் கிளைச்செயலாளர் முகமது யூசுப், அண்ணா தொழிற்சங்க ஒன்றியச் செயலாளர் அமிஞ்சிகரை சாந்தகுமார், இடைக்கழிநாடு 5வது வார்டு செயலாளர் எம்.நைனாமுகமது, பா.ஜ.க.வைச் சேர்ந்த மாவட்ட தலைவர் பகதூர் சேட், மாவட்ட துணைத் தலைவர் சதிஷ், சித்தாமூர்த் ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் எம்.கோகுல், ம.தி.மு.க.வைச் சேர்ந்த சிறுபான்மை அணி இதயதுல்லா உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
அதுபோது கழக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
கொண்ட கொள்கைக்காக உறுதியோடு உழைக்கும் செயல்வீரர் பனையூர் பாபு அவர்களை வரவேற்கிறேன்!
ஏற்கெனவே இருந்த இயக்கத்தைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உரை
இன்று (07-06-2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற, செய்யூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்கள் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழாவில் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:
செய்யூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் நம்முடைய பனையூர் பாபு அவர்களையும், அதேபோன்று அவரோடு கைகோத்து வந்திருக்கும் உங்களையும் நான் வருக வருக வருக என்று வரவேற்கிறேன். மாவட்டக் கழகத்தின் சார்பில் நம்முடைய சுந்தர் அவர்கள் ஏற்கனவே வரவேற்றிருந்தாலும், தலைவர் என்ற முறையில் நான் தலைமைக் கழகத்தின் சார்பில் உங்கள் அத்தனை பேரையும் நான் வருக வருக வருக என்று வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இலட்சக்கணக்கான கழக உடன்பிறப்புகளில் ஒருவராக உங்களை இணைத்துக்கொள்ள வந்திருக்க உங்கள் அனைவரையும், இந்த இயக்கத்தின் முதன்மைத் தொண்டனாக மிகுந்த மகிழ்ச்சியோடு வாஞ்சையோடு வருக வருக வருக என்று நான் வரவேற்கிறேன்.
பனையூர் பாபு அவர்களைப் பற்றி நான் இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், கடந்த ஐந்து வருடங்களாக நான் சட்டமன்றத்தில் அவரைத் தொடர்ந்து கூர்ந்து கவனித்ததுண்டு. சட்டமன்றத்திற்கு வரும்போது அமைதியாக வருவார், அமைதியாகச் செல்வார்; ஆனால், அதே சமயம் சட்டமன்றத்தில் எழுந்து பேசும்போது ஆக்கப்பூர்வமான கருத்துக்களை, தன்னுடைய தொகுதிக்குச் சம்பந்தப்பட்டிருக்கும் பிரச்சினைகளை அங்கே வலியுறுத்திப் பேசக்கூடியவர். ஒரு கொள்கைவாதியாக, ஒரு இலட்சியவாதியாக, ஒரு போராளியாகத் தன்னுடைய கருத்துகளை முன்வைத்துப் பேசக்கூடியவர்.
பொதுவாகச் சிலர் ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேறுகிறபோது, மற்றொரு இயக்கத்தில் சென்று சேருகிறபோது, சிறிது விமர்சனம் செய்து, ஏன் தரம் தாழ்ந்து கூடப் பேசும் பாணியைப் பார்த்திருக்கிறோம். ஆனால் நம்முடைய பாபு அவர்கள் அப்படி அல்ல. அரசியல் மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் அடக்கத்தோடு சுட்டிக்காட்டி, ஏற்கனவே ஓர் அறிக்கையாக வெளியிட்ட அந்தச் செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள், நானும் படித்தேன். அப்படி வெளியிட்ட அந்தச் செய்திகளில் யாரையும் புண்படுத்தும் வகையில் எந்த வார்த்தையும் இல்லை; அமைதியாக, அழகாக, அடக்கமாக அவர் கையாளும் விதம்... இப்போது கூடப் பேசும்போது நீங்கள் பார்த்திருக்கலாம்... யாரையாவது விமர்சனம் செய்து பேசினாரா? இல்லை! எதற்காக இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறோம், அதைத்தான் அவர் இங்கே வலியுறுத்தி, வற்புறுத்தி, அழகாக எடுத்துச் சொல்லி அவர் பேசியிருக்கிறார். கொண்ட கொள்கைக்காக உறுதியோடு உழைக்கும் ஒரு செயல்வீரர்தான், நம்முடைய பனையூர் பாபு அவர்கள். அதற்கு அவருடைய அரசியல் பயணமே சாட்சியாக அமைந்திருக்கிறது.
2007-இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்து, 2009-இல் இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் பொறுப்பேற்று, அந்த அமைப்பிற்கு ஓர் ஊடக வலிமையை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தொலைக்காட்சி ஒன்றையும் அவர் உருவாக்கி இருக்கிறார். அந்த ஊடகப் பிரிவின் முதன்மைச் செயலாளராக இருந்து பணியாற்றி இருக்கிறார். அப்படிப்பட்ட அந்த உழைப்பாளர்தான் 2021-ஆம் ஆண்டு செய்யூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக அவர் உயர்ந்தார்.
அவரே சொன்னார், சட்டமன்றத்தில் நம்முடைய திராவிட மாடல் அரசின் சார்பில் செய்திருக்கும் சாதனைகளை எல்லாம் எடுத்துச் சொன்னார். சட்டமன்றத்தில் அதற்கான கேள்விக் கணைகளை எல்லாம் தொடுத்தார், கோரிக்கைகளை எல்லாம் எடுத்து வைத்தார். தனக்காக அல்ல, தன்னுடைய தொகுதிக்காக, தனது தொகுதியில் இருக்கும் மக்களுக்காக அவர் அந்தப் பணியை ஆற்றி இருக்கிறார். அதுமட்டுமல்ல, அவரே குறிப்பிட்டார், ஒட்டுமொத்தமாக ஆதிதிராவிட மக்களின் நலனுக்காகக் கோரிக்கைகளை நாங்கள் வைத்தோம். "என்னுடைய சார்பில் மட்டுமல்ல, என்னுடைய இயக்கத்தின் சார்பில் கூட நாங்கள் கோரிக்கைகள் வைத்தோம், அதையெல்லாம் அவர் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றித் தந்திருக்கிறார்" என்பதைப் பட்டியலிட்டு, குறிப்பிட்டுச் சொன்னார்.
பரமக்குடியில் சாதி எதிர்ப்பு சுயமரியாதைப் போராளி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்தது திராவிட மாடல் அரசுதான்.
அதேபோன்று, ஆதிதிராவிடர் பள்ளிகளின் பெயர்களில் சாதிப் பெயர்கள் இருக்கக் கூடாது, அந்த அடையாளங்களை நீக்க வேண்டும் என்று சொல்லி அதையும் சட்டமாக்கித் தந்தோம்.
அதேபோன்று, தாத்தா இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் அமைத்துத் தந்தோம்.
அதேபோன்று, அருமைப் பெரியவர், பெருந்தலைவர் எல். இளையபெருமாள் அவர்களுக்குச் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கத்தை அமைத்துக் கொடுத்தோம்.
இங்கே நந்தனத்தில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்... எம்.சி. ராஜா மாணவர் விடுதி. அது ஒரு காலத்தில் எப்படி இருந்தது? இப்போது அண்ணா சாலையில் வருகிறபோது, எம்.சி. ராஜா மாணவர் விடுதி என்ற அந்தப் புதிய கட்டிடத்தைப் பார்க்கிறபோது நமக்கே பிரமிப்பாக இருக்கிறது, அதையும் புதுப்பித்து உருவாக்கித் தந்திருக்கிறோம்.
குறிப்பாக நம்முடைய பனையூர் பாபு அவர்களின் செய்யூர் தொகுதிக்குச் செய்யப்பட்ட திட்டங்களைப் பற்றி அவரே சொன்னார். இருந்தாலும் நானும் அதை வழிமொழியக் கடமைப்பட்டிருக்கிறேன்:
செய்யூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
புதிய சிப்காட் தொழிற்சாலை,
அரசு மருத்துவமனை, 28 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலைப்பின்னல் கூடங்கள், கடல் சீற்றத்தால் ஏற்படும் கடல் அரிப்பைத் தடுத்துக் குடியிருப்புகளைப் பாதுகாக்கக் கடலோரங்களில் கருங்கல் கொட்டும் தடுப்புச் சுவர்கள், பத்தாயிரம் பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்... இவ்வாறு பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டிருக்கிறது என்று சொன்னால், "நாங்கள் செய்தோம்" என்றால் அதற்குக் காரணமாக இருந்தவர், உங்களுடைய செய்யூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்த பனையூர் பாபு அவர்கள்தான்.
இப்படிப்பட்ட ஆற்றலுக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல... “தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் நமக்கு வகுத்துத் தந்திருக்கும் கொள்கைகளே என்றென்றும் வாழும் நிலையான ஆயுதங்கள்” என்று அறிக்கை வெளியிட்ட ஒரு கொள்கைவாதிதான், இங்கே வந்திருக்கும், இந்த இயக்கத்தில் இன்று தன்னை இணைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய பனையூர் பாபு அவர்கள்.
அவர் இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் வந்து சேர்ந்திருப்பதில் நீங்கள் எல்லாம் எவ்வாறு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறீர்களோ, அவர் எப்படி மகிழ்ச்சியோடு வந்திருக்கிறாரோ, அதைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சியை நாங்கள் அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
"புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆகியோர் காட்டிய வழியில், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக என்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்" என்று நம்முடைய பாபு அவர்கள் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அந்தப் பயணத்தைத் தொடர ஒரு சரியான இயக்கமாக இருப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை உணர்ந்து இங்கே வந்து அவர் இணைந்திருக்கிறார். அவரையும் அவரோடு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் இந்த இயக்கத்தின் தலைவனாக மட்டுமல்ல, இந்த இயக்கத்தின் தலைமைத் தொண்டனாக அவரை வருக, வருக, வருக என்று வரவேற்கிறேன்.
தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் வேலை அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் உழைப்பதற்குத் தயாராக நாங்கள் இருக்கிறோம், "நாங்கள் உங்களுக்குத் துணை நிற்கிறோம்" என்று நமக்கு இன்றைக்குத் துணையாக வந்து சேர்ந்திருக்கும் பாபு அவர்களையும், உங்களையும் நான் மீண்டும் வருக வருக வருக என்று வரவேற்கிறேன்.
நீங்கள் ஏற்கனவே இருந்த இயக்கம்... அந்த இயக்கத்தைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, செய்யவும் கூடாது; விமர்சிக்கத் தேவையில்லை. ஏனென்றால் அண்ணா அவர்கள், "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்றுதான் சொல்லி இருக்கிறாரே தவிர, யாரையும் குறைத்து மதிப்பிட்டுப் பேச வேண்டிய அவசியம் இல்லை. அதைத்தான் இங்கே நம்முடைய பாபு அவர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். ஏதாவது ஒரு வார்த்தை விமர்சித்து பேசினாரா? இல்லை! குறைத்துப் பேசினாரா? இல்லை! அதுதான் பாபு, அதுதான் பனையூர் பாபு. எனவே, அப்படிப்பட்ட பாபு அவர்கள் இன்றைக்குத் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார், நான் அவரை மீண்டும் மீண்டும் வருக வருக என வரவேற்கிறேன்.
இன்றைக்கு நாட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒரு ஆட்சி எப்படிப்பட்ட ஆட்சி என்பதெல்லாம் நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே இந்த ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் நான் சொன்னேன், "ஆறு மாதங்களுக்கு இதைப்பற்றி நான் பேசப் போவதில்லை" என்று. ஆனால், ஆறு மாதங்களுக்கு முன்பே பேச வேண்டிய ஒரு சூழ்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம்தான் இருந்து கொண்டிருக்கிறது; வந்துவிட்டது. அதைப் பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள், இந்த விமர்சனங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. ஆறு மாதம் அல்ல, ஐந்து மாதம் அல்ல, நான்கு மாதம் அல்ல... மூன்று மாதமாவது தாங்குமா என்ற கேள்விக்குறியோடுதான் இன்றைக்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் இன்றைக்கு நீங்களும் வந்து இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, கழகம் ஈடுபடும் எந்தப் பணிகளாக இருந்தாலும், அந்தப் பணிகளுக்கு நீங்களும் ஒத்துழைப்பு தருவதற்காக வந்திருக்கிறீர்கள். அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருக்கிறீர்கள். அண்ணா அறிவாலயம் மட்டுமல்ல, கலைஞர் அரங்கத்திற்கே வந்திருக்கிறீர்கள்; அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களை எல்லாம் மீண்டும் மீண்டும் வருக வருக வருக என்று வரவேற்று விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்!
உண்மையின் முகம் இதுதான்: TNEB பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!
உண்மையின் பின்னணி இதோ:
நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.
திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது!
இப்போது எழும் கேள்வி?
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?
மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?
தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு [28.01.2024 & 21.08.2025 G.O]
குறிப்பு:
மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் பனையூர் பாபு அவர்கள் தனது ஆதரவாளர்கள், 1200 பேருடன் நமது தலைவர் @mkstalin அவர்களின் முன்னிலையில் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றபோது அதில் நாம் பங்கேற்றோம்.
கழகத்தில் இணைந்த தோழர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்.
கொள்கை அரசியலை, கவர்ச்சி அரசியலை வைத்து வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை முறியடிப்போம்.
ஒற்றுமையுடன் கரம் கோத்து தமிழ்நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடச் செய்வோம்.
சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கக் கருத்துக்களைப் பரப்பி வரும் ஊடகவியலாளர் சகோதரர் இந்திரகுமார் தேரடி அவர்கள் குடும்பத்தின் புதுமனைப் புகுவிழா இன்று நடைபெற்றதையொட்டி அவரது இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்தோம்.
தந்தை பெரியாரின் கொள்கைகளை புதிய ஆற்றலுடன் இளம் தலைமுறையினரிடம் கொண்டுச் சேர்க்கும் சகோதரர் இந்திரகுமாரின் பணி பாராட்டத்தக்கது.
அவர்களின் புதிய இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்!
@Subramanian_ma@PrabhakarRaja88
கழகத் தலைவர் திரு. @mkstalin , இன்று சென்னை நீலாங்கரை RK கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத் தொழிலாளர் அணிச் செயலாளர் திரு. PTC ஜி. செல்வராஜ் - ரமணி இணையரின் மகன்வழிப் பேரனும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் திரு. S.R. ரவி - திருமதி R. கீதா இணையரின் மகனுமான திருநிறைசெல்வன் R.G. அபிஷேக் M.B.A., - திரு. D.R.S. சசிகுமார் - திருமதி S. புஷ்பராணி இணையரின் மகள் S. கீர்த்தனா M.B.A., ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் அண்ணன் PTC G.செல்வராஜ் அவர்களின் பேரன் R.G.அபிஷேக் - S. கீர்த்தனா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் இன்று நடைபெற்றபோது அதில் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துக் கூறினோம்.
அன்பும் இனிமையும் சூழ்ந்து, மணமக்களின் இல்லற வாழ்வு சிறப்பாக அமையட்டும்!
மணிக்கணக்கில் காத்திருக்கும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள்..
அதிமுகவில் இருந்து வந்தவர்களை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் தாய் கழகமான திமுகவில் இணைந்து கொண்ட கழக தலைவர் ஸ்டாலின்@mkstalin
தலைமை பண்புக்கும் தற்குறித்தனத்துக்கு மாண வித்தியாசத்தை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்
#TVKFails