குடும்ப அட்டையில் e-KYC பதிவு செய்யாத அனைத்து
உறுப்பினர்களும், 02.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) அருகிலுள்ள நியாயவிலைக் கடையில் நடைபெறும் சிறப்பு e-KYC முகாமில் கலந்து கொண்டு,கைரேகை / கண் கருவிழி பதிவு செய்து e-KYC-யை நிறைவு செய்யுங்கள்.
188 பயனாளிகளுக்கு ரூ. 10.99 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்,பரிசுத்தொகை, விருதுகள் மற்றும் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள்
வழங்கினார்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக, நபார்டு திட்டத்தின் கீழ்,
ரூ.2 கோடியே 82 இலட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள
12 புதிய வகுப்பறைகளை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள், குத்து விளக்கு ஏற்றி, திறந்து வைத்தார்.
மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் ரூ.26.82 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விவசாயம் சார்ந்த உணவு பதப்படுத்தும் தொழில் வளாகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர், ஜுஜுவாடி சோதனை சாவடியில், கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று சோதனைச் சாவடியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.