பிரபல இசையமைப்பாளர் அன்புச் சகோதரர் “தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எளிய பின்னணியில் இருந்து வந்து, எளிய மக்களின் வாழ்வியலை தன் இசையால் பிரதிபலித்தவர் தேவா அவர்கள். Mass, Melody, Devotion என அனைத்து வகையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர்.
தேவா அவர்களின் “கானா” பாடல்களுக்கு துள்ளாத கால்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரின் உள்ளங்களிலும் நிறைந்திருக்கிறது அவருடைய இசை.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீது பெரும் மதிப்பும், நம் @AIADMKOfficial கழகத்தின் மீது பேரன்பும் கொண்ட சகோதரர் தேவா அவர்கள், நம் கழகத்திற்காக மெட்டமைத்த பிரச்சாரப் பா��ல்கள் என்றைக்கும் கழகத் தொண்டர்களின் இதயங்களில் தனித்த இடம் பெற்றவை.
மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் சரி, நான் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னும் சரி, தேவா அவர்கள் நமக்காக பாடிய பிரச்சாரப் பாடல்களே கழகத்தின் குரலாக பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், நம் இயக்கத்தின் அறைகூவல் குரலாக அன்புச் சகோதரர் தேவா அவர்களின் காந்தக் குரல் திகழும் என்பதில் எந்த மாற்றுக் க���ுத்தும் இல்லை.
“தேனிசைத் தென்றல்” தேவா அவர்கள் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறை மற்றும் இசைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
#Deva
@AIADMKOfficial
என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே!
புரட்சித் தலைவரின் தியாகத்தால் உருவாகி, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தீரத்தால் கட்டிக் காக்கப்பட்ட நம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், 54 ஆண்டுகாலப் பெருமைமிகு வரலாற்றை நிறைவு செய்து, 55-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தப் பொன்னான தருணத்தில், என் பேரன்பிற்குரிய கழக உடன்பிறப்புகள் அனைவரு��்கும் எனது இதயபூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
“இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும்!” என்று நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முழங்கிய வரலாற்றுப் பிரகடனத்தை நனவாக்கும் உறுதியோடு, நமது வெற்றிப் பயணத்தைத் தொடர்வோம்!
இதற்கு முன்பு எத்தனையோ எதிரிகளையும், துரோகிகளையும் எதிர்கொண்டு வெற்றிகண்ட என் அன்பிற்குரிய கழகத் தோழர்களே! புரட���சித் தலைவரின் இரத்தத்தின் இரத்தங்களே!
இன்றைக்கு நம் முன்னால் எழுந்திருக்கும் புதிய அரசியல் சவால்களையும், ஜனநாயக விரோத சக்திகளையும், மக்கள் விரோத ஆட்சியையும் ஜனநாயக வழியில் எதிர்கொண்டு வீழ்த்திட, ஒற்றுமையோடும், உறுதியோடும் களமிறங்கிட வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறேன்!
புரட்சித் தலைவர் காட்டிய பாதையில் ! புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்துத் தந்த இலட்சிய வழியில்! தமிழகத்தின் உரிமைகளைக் காத்து, மீண்டும் நல்லாட்சி மலர்ந்திட ஒன்றுபட்டு உழைப்போம்!
#55YrsOfAIADMK
#என்றென்றும்_அஇஅதிமுக
@AIADMKOfficial
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் @BJP4TamilNadu மாநிலத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆ��ுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் தொடர்ந்து தாங்கள் மக்கள் பணியாற்றிட என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிய மறுத்து, தாய்நாட்டின் சுதந்திரத்திற்காகத் தன் உயிரையே தியாகம் செய்த பாஞ்சாலங்குறிச்சியின் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாளில், தாய்த் திருநாடு காக்க மரணக் கயிற்றையே அரவணைத்துக் கொண்ட அவர்தம் தீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 26 மீனவர்கள்,
கடந்த 12.10.2026 அன்று மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசின் சார்பில்,
மூன்று நாட்களு��்கு பிறகே (15.10.2026),
முதல்வர் ஒரு சம்பிரதாயக் கடிதத்தை சாவகாசமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதி இருக்கிறார்.
அந்த ஒரு கடிதத்தை தவிர,
எந்த ஒரு அடிப்படை தகவல் பரிமாற்றமோ, அதற்குரிய துறை வாரியான செயல்பாடுகளையோ மீன்வளத்துறையும், ஆட்சியர் அலுவலகமும் இன்று வரை
எடுக்க வில்லை என செய்திகள் வருகின்றன.
மீனவர்களின் வாக்குகளின் மீது காட்டக்கூடிய முனைப்பை,
அவர்களின் வாழ்வில் காட்டாத அக்கறையற்ற இந்த தவெக அரசுக்கு
எனது கடுமையான கண்டனங்கள்.
அந்த பகுதியைச் சார்ந்த அரசு அலுவர்களோ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரோ நேரில் சென்று மீனவர்களின் உறவினர்களை சந்திக்கவோ, பாதிக்கப்பட்ட மீனவர்கள் எங்கு, எப்படி இருக்கிறார்கள் என்ற தகவலைக் கூட பரிமாறவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு செய்தி.
இதுகுறித்து மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் சென்று கேட்டாலும், மாவட்ட மீன்வளத் துறை அலுவலகம் சென்று முறையிட்டாலும் எந்த பதிலையும் அளிக்காமல் அலட்சியப் போக்கில் செயல்படுகிறது இன்றைய தவெக அரசு.
இடைத்தேர்தலில் ஓடி ஓடி வாக்கு கேட்ட, மீன்வளத்துறை அமைச்சர்,
தன் பகுதியைச் சார்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ள இந்த சம்பவத்தின் போது காணாமல் போயுள்ளாரே? ஏன்?
அங்கு ஏதும் இடைத்தேர்தல் வரப்போவதில்லை என்பதாலா ?
அல்லது வெத்தலை பாக்கு வைத்து அழைத்தால்தான் வருவாரா?
இந்த அரசிடம் நான் அடிப்படையான கேள்வி ஒன்றைக் கேட்கிறேன்-
தவெக அரசிடம் காணாமல் போன மீனவர்களின் விவரங்கள் முதலில் இருக்கிறதா?
3 விசைப்படகுகளில், அதாவது அமல் சங்கர் படகில் 8 பேர், நிக்சன் படகில் 9 பேர் மற்றும் ஆரோன் படகில் 9 பேர் கடலுக்கு சென்றுள்ளனர் என்ற அடிப்படை விவரமாவது இந்த அரசுக்கு தெரியுமா?
காணாமல் போயுள்ள மீனவர்கள் யாரென்று தெரியவில்லை என்றால் சொல்லுங்கள்- என்னிடம் உள்ள விவரங்களை நான் அளிக்கிறேன்.
@AIADMKOfficial ஆட்சி இருந்தபோது மீனவர்களை அரணாகக் காத்து நின்றது அம்மாவின் அரசு. மீனவர்களுக்கு ஒன்றெனில், உடனடியாக களத்தில் நிற்பதை உறுதி செய்தோம். மத்திய அரசுடன் உடனடியாக பேசி, ��ீட்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவோம்.
இது தான் அக்கறை உள்ள அரசின் செயல்பாடு.
சுறா படத்தில் வருவது போல் கடலுக்கு நடுவே நீச்சல் அடித்து உங்களை யாரும் மீனவர்களை காப்பாற்றச் சொல்லவில்லை; குறைந்தபட்சமாக ஒரு அரசால் என்ன செய்ய முடியுமோ அதை செய்யுங்கள் என்று தான் அப்பகுதி மக்கள் கேட்கிறார்கள்.
மீனவர்களை மீட்டு தாயகம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவும், அவர்களின் உறவினர்களை மாநில அரசின் சார்பில் அரசு அலுவலர்களை, சட்டமன்ற உறுப்பினரை, துறை அமைச்சரை குறைந்தபட்ச அக்கறையோடு அனுப்பி வைத்து அவர்களுக்கான உரிய தகவல் பரிமாற்றத்தை அளிக்குமாறும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
இந்தியாவின் தென்கோடியில்
எளிய குடும்பத்தில் பிறந்து,
வடகோடியில் தமிழர்களின்
பெருமையை நிலைநாட்டிய
மக்களின் குடியரசுத் தலைவர்!
"சாதிக்க வேண்டும்" என்ற கனவும், "உறுதியாக சாதிப்போம்"
என்ற நம்பிக்கையும்,
அதற்கான ஓயாத உழைப்பும் நிச்சயம் வெற்றியைத் தரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த ஏவுகணை நாயகர்!
"கனவு காணுங்கள்" என்ற உன்னத வரிகளால் கோடிக்கணக்கான இளைஞர்களின் இதயங்களில் நம்பிக்கையை விதைத்த பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
அவர்களின் பிறந்தநாளில்...
அவர் வகுத்துத் தந்த லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணித்து,
வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்!
@AIADMKOfficial
தமிழகத்தில் எதிர்பாராவிதமாக
5 மாதங்களுக்கு முன் அமைந்த
த.வெ.க. கூட்டணி அரசின் ,
தமிழ்நாடு மின்சார வாரியம் வரலாற்றிலேயே இல்லாத வகையில்
யூனிட் ஒன்றுக்கு சராசரியாக
35 ரூபாய் ���ன்ற மிக, மிக அதிக விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது!
ஏற்கனவே தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மின்சார வாரியம் கடன் சுமையால் தள்ளாடுகிறது என்றும், முந்தைய ஆட்சியில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி, மின் கணக்கீட்டில் மாறுதல் செய்கிறோம் என்று ஏற்கனவே ரூ.1500 மின் கட்டணம் செலுத்தி வந்த தமிழக மக்கள் தற்ப��து சுமார் ரூ.4,000 வரை கட்டுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், இந்த அதிக விலையில் மின் கொள்முதல் செய்ய போடப்பட்ட ஒப்பந்தம், தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேலும் கடன் சுமையில் ம���ழ்கடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேர்தலுக்கு முன் தனது சொகுசுப் பேருந்தில் மேல்புறத்தில் இருந்து வசனம் பேசிய நடிகர் விஜய், எழுதிக் கொடுத்த வசனத்தை, அதாவது மின்சார வாரியத்தைப் பற்றி பேசும்போது, 'டெண்டர்' என்ற வார்த்தையை மிக அழகாக, தொண்டை நரம்பு தெறிக்குமளவிற்கு, ஏற்ற இறக்கத்துடன் பேசி கைத்தட்டலை பெற்று. ஆட்சியைப் அமைத்த திரு. ஜோசப் விஜய், மின் பற்றாக்குறை அவசர நிலையை பயன்படுத்தி, ஏற்கனவே யுனிட் ஒன்றிற்கு ரூ.11-20 கொள்முதல் பொடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு சராசரி யூனிட் ஒன்றுக்கு ரூ.35 வரை அதிக விலைக்கு 'மின் கொள்முதல் ஒப்பந்தம்' செய்வதில் மிகப் பெரிய 'மெகா ஊழல்' நடைபெற்றுள்ளதாக மக்கள் பேசுகின்றனர். த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் 'வெற்றி மெகா வசூல் திட்டத்தை' தொடங்கிவிட்டதாக மக்கள் பரவலாக பேசுகின்றனர்.
ஏற்கனவே பல லட்சம் கோடி கடனில் மிதக்கும் தமிழக மின்சார வாரியத்தை மேலும் கடனில் மூழ்கடித்து கடைசியில் தனியாருக்கு தாரை வார்க்க இந்த அரசு திட்டமிடுகிறதோ என்ற ஐயம் தமிழக மக்கள் மத்தியில் எழுந்த���ள்ளது. அநியாய விலைக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கும் இந்த ஒப்பந்தத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், இந்த ஒப்பந்தத்தை இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
@CMOTamilNadu
@AIADMKOfficial
இன்றைய தினம், தமிழகத்திற்கு வருகை புரிந்து, #ChennaiMetro#Phase2 திட்டத்தின் வடபழனி-பூந்தமல்லி வழித்தடத்தை துவக்கி வைத்துள்ள மாண்புமிகு இந்தியப் பிரதமர்
திரு. @narendramodi அவர்களை
சென்னை விமான நிலையத்தில் மகிழ்ச்சியோடு வரவேற்றேன்.
இந்த திட்டத்தை பொறுத்தவரை, எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு இருந்த போது, இதற்கான DPR தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் அனுமதி பெற்று, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களால் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மத்திய அரசின் நிதி வராத சூழலிலும், மாநில அரசின் நிதியை ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்கிய அரசு அஇஅதிமுக அரசு.
மேலும், மாண்புமிகு பிரதமர் அவர்களை பலமுறை நான் நேரில் சந்தித்து இதற்கான நிதி குறித்து கோரிய நிலையில், மத்திய அரசும் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ரூ.63,246 கோடி ஒதுக்க 2024-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம், வடபழனி - பூந்தமல்லி வழித்தடம் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. @AIADMKOfficial கழக ஆட்சியில் நாம் விதைத்த விதைகள், தற்போது வரை விருட்சமாவதைக் காண மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த பழனிசாமி நினைத்திருந்தால் மெட்ரோ பாலத்தின் மீது கூலிங் கிளாஸ் போட்டு ஒரு போட்டோஷூட், Tunnel அடியில் Safety Helmet போட்டு ஒரு ரீல்ஸ் ஷூட��டிங் எடுத்திருக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருநாளும் உடன்பாடு இல்லை.
“நாம் பேசக் கூடாது. நம்முடைய செயல்கள் பேச வேண்டும்” என்பதை எப்போதும் நம்புபவன் நான். யாருடைய ஆட்சி இருந்தாலும், நம்முடைய செயல்கள் தான் தமிழக மக்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்ற பெருமிதத்தை நமது திட்டங்கள் இன்றுவரை நமக்கு தந்துக்கொண்டு இருக்கின்றன.
இந்த இனிய தருணத்தில், தலைநகர் சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மெச்சத்தக்க பங்காற்றிவரும் @cmrlofficial அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்���ுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
மழலையின் புன்னகையில் மகிழ்ச்சியையும், அவர்களின் கனவுகளில் நாளைய உலகின் நம்பிக்கையையும் சுமந்து வரும் தேவதைகள் பெண் குழந்தைகள் அனைவருக்கும் உலக பெண் குழந்தைகள் தினமான இன்று, எனது இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு பெண் குழந்தையும் அச்சமின்றி வாழவும், தடைகளின்றிக் கல்வி கற்கவும், தன்னம்பிக்கையுடன் கனவு காணவும், தனது கனவுகளை நனவாக்கவும் வாய்ப்புகளை உருவாக்கித் தர இந்நாளில் உறுதியேற்போம்.
@AIADMKOfficial
உலக அரங்கில் மனித உரிமைகளுக்காகவும்,
நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும் தொடர்ந்து பணியாற்றி வரும் திருமதி. நவநீதம் பிள்ளை அவர்களுக்கு நோபல் அமைதிப் பரிசு கிடைத்துள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் வேர்களைக் கொண்ட ஒருவரின் மனிதத்திற்கான பயணத்தில், மனிதநேயத்திற்கும் நீதிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இந்த உயரிய நோபல் பரிசு வாயிலாக அங்கீகரிக்கப்படுவது பெருமைக்குரியது.
உலகெங்கும் அமைதி, மனித உரிமைகள் மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டிட விழையும் தி��ுமதி. நவநீதம் பிள்ளை அவர்களின் அரும்பணி தொடர்ந்திட வாழ்த்துகிறேன்.
#NavanethemPillay
#NaviPillay #NobelPeacePrize #NobelPrize
@AIADMKOfficial
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்,
முன்னாள் மத்திய அம��ச்சர் மருத்துவர்
திரு. அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு
எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
தாங்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும், தொடர்ந்து மக்கள் தொண்டாற்றிட வாழ்த்துகிறேன்.
@draramadoss
@AIADMKOfficial
சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும்
தன் வாழ்நாளை அர்ப்பணித்த
தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்தநாளில்,
அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்.
@AIADMKOfficial
த.வெ.க. மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்றப் பாடுபடும் முதலமைச்சர் திரு. விஜய் தமிழகத்தில் சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
Warmest greetings and heartfelt congratulations to Hon’ble Prime Minister Thiru. @narendramodi Avl on completing 25 years of continuous service as the head of a government.
From Gujarat to the leadership of the Government of India, this extraordinary journey stands as a significant chapter in India’s contemporary public life.
A quarter century dedicated to public service reflects a long and sustained engagement with the aspirations, challenges and ambitions of the people.
On this historic milestone,
I extend my best wishes to our Hon’ble Prime Minister. May the years ahead bring continued strength and dedication in the service of our nation.
@PMOIndia@AIADMKOfficial
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது இன்றைய தவெக அரசின் காவல்துறை அரங்கேற்றியுள்ள அராஜகம் என்பது கொடூரத்தின் உச்சம்.
“பாசிசம், பாயாசம்” என்று Rhyming வசனங்கள் பேசிய முதல்வரின் கையில் இருக்கும் காவல்துறை, உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் மீது நடத்தியுள்ள பாசிச அக்கிரமத்தை எப்படி இந்த Reels முதல்வர் Justify செய்வார்?
ஆட்சிக்கு வருவது முன், இதே செவிலியர்கள் முன் நின்று உங்கள் கட்சி நிர்வாகிகள், இன்றைக்கு அமைச்சராக ��ருப்பவர்கள் பேசியது எல்லாம் நினைவில் இருக்கிறதா? ஆட்சிக்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு பின் அதற்கு மாறான செயல் என்பது தான் மாற்றமா?
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து மக்கள் பிரச்சனையை சுட்டிக்காட்டினால் கூட ஏற்றுக்கொள்ள மனமின்றி அவதூறுகளை அள்ளி வீசும் நபராக இருக்கிறார் இன்றைய சுகாதாரத் துறை அமைச்சர்.
தனது துறையைச் சார்ந்த செவிலியர்கள் போராடுவது குறித்து ஒரு வார்த்தை பேசினாரா? செவிலியர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதை விட அப்படி என்ன பெரிய வேலை இருக்கிறது இந்த அமைச்சருக்கு?
போராடும் இடத்தில் மின்சாரத்தை துண்டிப்பது, பேச்சுவார்தை எனக் கூறி அழைத்து சென்று கைது செய்வது என மிகவும் கீழ்த்தரமாக ஒரு போராட்டத்தை அணுகியுள்ள இன்றைய ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம்.
கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டு, அவர்கள் மீது எந்த வழக்கும் பதியாமல் இருப்பதை உறுதி செய்து, ஜனநாயக ரீதியாக அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வே��்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
நான் பெரிய அரசியல்வாதியின் வாரிசோ, மிகப் பெரிய சினிமா நட்சத்திரமோ கிடையாது.
நான் உங்களில் ஒருவன். உங்க ஊருல, தெருவுல, வீட்டுல, நீங்க தினசரி சாதாரணமா பாக்குற அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா மாதிரி, எளிய மனிதன், இந்த எடப்பாடி பழனிசாமி.
எனக்கு நம்ம மக்கள் படுற கஷ்டம் தெரியும், நம்ம ஜனத்தோட அன்றாட வாழ்க்கை தெரியும், நம்மளோட பிரச்சனைகளை தெரியும்.
ஆனா எனக்கு அதுக்கு மொழியில் பக்கம் பக்கமாக, ரசிகர்களை மயக்குற மாதிரி, போலி வசனங்கள் பேசத் தெரியாது.
ஏன்னா, நான் கீழ இருந்து வந்தவன். அதனாலதானோ என்னவோ, மற்ற எல்லா கட்சி தலைவர்களை விட, இந்த விவசாயி பழனிசாமிக்கு எதிரா, அத்தனை சூழ்ச்சிகள்.
எனக்கு பின்னால், 100 வருடத்திற்கு இ���்த இயக்கம் இருக்கும்ணு சொன்ன, புரட்சி தலைவி அம்மாவின் சின்ன��், இந்த இரட்டை இலை.
இதை காப்பாத்த நினைச்சது நம்முடைய தவறா? இல்ல, உங்களை போல சாதாரண குடும்பத்தில் பிறந்தது என்னோட தவறா?
புரட்சி தலைவரும், புரட்சித் தலைவியும், கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாதுன்னு, இந்த நிமிடம் வரை நானும், தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், போராடிட்டு இருக்கிறோம்.
ஆனால்... அதற்கு எதிராக எத்தனை சோதனைகள்?
எத்தனை சூழ்ச்சிகள்?
எத்���னை துரோகங்கள் ?
இந்த இயக்கத்தை சூறையாட எத்தனை நாடகங்கள்?
இன்று இந்த இரட்டை இலையை விமர்ச்சனம் செய்ய நினைக்கிற தமிழக வெற்றிக் கழகத்துக்கு கூட, நாம கரூர் விவகாரத்துல நல்லதுதானே நினைச்சோம்?
அதான் நாம செய்த குற்றமா ? அதுக்கான பிரதிபலனாதான் நம்ம MLA-க்களை பேரம்பேசி திருடிட்டு போக பாக்குறாங்களா?
உயிரை கொடுத்து உழைத்த 6,000 கட்சி நிர்வாகிகளைப் பற்றியோ, இவங்களை நம்பி வெற்றிபெற வைத்த லட��சக்கணக்கான மக்களைப் பத்தியோ ஒரு நிமிடம் யோசிச்சிருந்தாகூட, இப்படி செய்ய மனசு வந்துருக்குமா?
அன்பு மதுராந்தகம் ��ற்றும் தாராபுரம் தொகுதி மக்களே, நாங்க நியாயம் கேட்கிறோம்.
அன்பு பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர-சகோதரிகளே, உங்ககிட்ட நியாயம் கேட்கிறோம்.
புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி சார்பில் உங்களிடம் நியாயம் கேட்கிறோம்.
இதற்கான தீர்ப்பை நீங்களே கொடுங்க. நீங்க கொடுக்கப்போற தீர்ப்பு, இனி MLA-க்களை, குதிரை பேரத்தில் விலை பேசும் த.வெ.க-வுக்கும், விலை போக நினைச்ச துரோகிகளுக்கும், வாழ்நாள் பாடமாக, இந்த பச்சை துரோகத்துக்கு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்.
எனவே, அக்.6 அன்று,
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை 🌱
#வெல்லட்டும்_இரட்டைஇலை
@AIADMKOfficial
Heartiest congratulations to #TeamIndia on a magnificent #GoldMedal 🥇 victory at the #AsianGames2026, defeating Pakistan in a memorable cricket final.
This achievement reflects the finest values of Indian sport- discipline, determination, teamwork and an unwavering commitment to excellence.
May this victory inspire millions of young Indians to dream bigger, work harder and carry our Tricolour with pride.
Congratulations to our Men in Blue.
You have brought great honour to the nation. 🇮🇳🏆
#AsianGames #INDvsPAK
@BCCI@AIADMKOfficial
அகிம்சை என்னும் ஒற்றை ஆயுதத்தால் உலக வல்லரசின் பேரரசை அசைத்துப் பார்த்த அறத்தின் திருவுருவம்!
சமத்துவம், எளிமை, சத்தியம் ஆகியவற்றைத் தன் வாழ்நாளெல்லாம் மூச்சாகக் கொண்டு, இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுத்த மாமனிதர்!
உடையைத் துறந்து, எளிய வாழ்வை ஏற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய், கிராமங்களின் உயிர்ப்பாய், இந்தியாவின் பெயரை உலகரங்கில் உயர்த்திய 'தேசத் தந்தை' மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளான இன்று,
தாய்த்திருநாட்டி��்கு அவர் ஆற்றிய ஈடு இணையற்ற சேவைகளைப் போற்றி வணங்குவதோடு, மகாத்மா காட்டிய சத்திய பாதையில் வழுவாது நின்று, அறவழியில் என்றென்றும் பயணிப்போம் என இந்நாளில் உறுதியேற்போம்.
@AIADMKOfficial