தமிழக அரசே – தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தொலைக்காட்சி ஒன்றை அமைத்து தமிழ் செய்தி சேனல்களை ஒளிபரப்பி ஊழல், லஞ்சம் உள்ளிட்ட எந்த ஒரு முறைகேடும் நடைபெறாமல் இருக்கவும், பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#கவிஞர்_கண்ணதாசன் பிறந்த நாளை அரசு நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
கவிஞர் கண்ணதாசனின் பிறந்த நாளை அரசு நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
அவரது நூற்றாண்டிலே அவருடைய புத்தகத்தை அரசுடைமையாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்.
இன்று 24.06.2026, புதன்கிழமை, #கவியரசர்_கண்ணதாசன் பிறந்த நாளில், காலை, சென்னை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள #கண்ணதாசன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு @CMOTamilnadu@TVKVijayHQ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மக்கள் நலன் சார்ந்து தாங்கள் எடுக்கும் முயற்சிகளும் வெற்றிப் பெறவும், தாங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு நீடுழி வாழவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைபேர் கிராமத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்துள்ளார்கள், மேலும் 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வரும் தகவல் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு (#நீட்) எழுதும் மாணவர்கள் தைரியத்தோடும், நம்பிகையோடும் தேர்வு எழுதுங்கள் வெற்றி நிச்சயம்.
மாணவர்களே உங்கள் எதிர்காலம் உங்கள் கையில். யாருக்காகவும், எதற்காகவும் அஞ்சதேவையில்லை. விடா முயற்சியோடு முயன்றால் வெற்றி நிச்சயம்.
#NEET
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 25,000 டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளது விவசாயிகளிடையே மிகுந்த வருத்ததை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் வட்டாரம் தோறும் பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்
இன்று 18.06.2026 இரவு, சென்னையில், மூத்த வழக்கறிஞரும், IJK கட்சியின் நிறுவுனர் திரு. பாரிவேந்தர் அவர்களின் சம்மந்தியுமான திரு. G .இராஜன் உடையார் அவர்கள் இன்று உடல்நிலைக் குறைவால் காலமானதை முன்னிட்டு அவர்களது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய போது.
இன்று 16.06.2026, செவ்வாய்க்கிழமை, மாலை,
திருவாரூர், ஆன்மீக ஆனந்த குருகுலத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஏற்று மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கிய போது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 3-வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
குற்றச் செயலுக்கு அடிப்படையாக விளங்கும் போதை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#WATCH | Chennai | President of the Tamil Maanila Congress (Moopanar), GK Vasan, says, "Today we had Tamil Manila Congress executive Committee meeting in which there was a detailed discussion about the party's alliance, how to go about... Around 300 wrote their suggestions and 90% of it said that Tamil Manila Congress had been very friendly with the alliance partner, we put up a very hard work to ensure NDA wins, but unfortunately, the people's mandate was very different... and that this time we must strengthen the party alone, because 3 years are to go for the Parliament elections and 5 years for Assembly elections. Only Panchayat elections are up ahead. Therefore, the party took a unanimous decision to strengthen Tamil Manila Congress alone, and in a very friendly manner, we are moving out of the NDA alliance..."
இன்று 14.06.2026, ஞாயிற்றுக்கிழமை, காலை, 10.15 மணிக்கு, எனது தலைமையில் சென்னை, எழும்பூர், ஹோட்டல் அசோகாவில் #தமாகா(மூ) செயற்குழு கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் துணை அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
கடலூர் அருகே புதிதாக 4 #ஹைட்ரோகார்பன் எண்ணெய் கிணறுகள் அமைக்க கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
தமிழக அரசு விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.
இன்று 12.06.2026, வெள்ளிக்கிழமை, காலை, தேனி, கொடைக்கானல் பிரிவு ரோடு, காட்ரோட்டில் உள்ள மறைந்த திரைப்பட இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்களின் பண்ணை வீட்டிற்கு சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது.
எனது தலைமையில் சென்னை, எழும்பூர், ஹோட்டல் அசோகாவில், 14.06.2026, ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு, #தமிழ்மாநிலகாங்கிரஸ் (மூ) செயற்குழு கூட்டத்தில், இயக்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் துணை அமைப்பின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்
#tmc
தமிழக அரசு – இன்று ஜூன் 12 - மேட்டூர் அணையை திறக்காததால் #டெல்டா_விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழக அரசு – கர்நாடக அரசிடம் பேசி #காவிரி நீரைப் பெறவும், மும்முனை மின்சாரத்தை மின் தடை ஏற்படாமல் வழங்கவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
#KaveriRiver#MetturDam
இந்தியாவில் தொடர்ந்து அதிக நாட்கள் பிரதமராக பதவி வகிக்கும் திரு. @PMOIndia@narendramodi
அவர்களுக்கு வாழ்த்துகள்,
வலிமையான பாரதத்தை ஏற்படுத்தக்கூடிய உயர்ந்த நிலையில், கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடி அவர்களை #தமிழ்மாநிலகாங்கிரஸ்(மூ) சார்பில் வாழ்த்துகிறேன்.
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநராக, நடிகராக விளங்கிய #பாரதிராஜா அவர்களின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது.
1977 ல் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி தன் இறுதி மூச்சு வரை தமிழ் திரையுலகத்திற்காக பாடுபட்டவர்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் எனப் பேரும் புகழும் பெற்றவர்
தமிழக அரசு கேபிள் டிவி ஒளிபரப்பில் இருந்து பாலிமர் நியூஸ், தமிழ்
ஜனம் மற்றும் நியூஸ் தமிழ் 24/7 ஆகிய செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.
இது பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகும்.
#tactv@polimernews@NewsTamilTV24x7@TamilJanamNews