தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டியதன் தேவை குறித்தும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாயத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் நடப்பு கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வலியுறுத்திய போது.!
#CasteSurvey #PMK
தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு விஜய் அவர்களுடனான சந்திப்பிற்கு பின்பு ANI ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு நேர்காணல் அளித்த போது.!
#CasteCensus#PMK
தமிழக முதல்வர் விஜய் அவர்களை சந்திக்கிறார் பாமக தலைவர்
****************************************
சாதி வாரி சர்வே நடத்தக் கோரி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக முதல்வரிடம் வழங்கி, உடனடியாக சாதி வாரிக் கணக்கெடுப்பை தொடங்க வலியுறுத்தவிருக்கிறார்
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி அவர்கள்.
#AnbumaniRamadoss
#CasteSurvey
#SocialJustice
அமைச்சர் சொல்லாமல் போகணும்.. கனிமவளம் கொள்ளை போவதை தடுக்க கடும் நடவடிக்கை தேவை.. "சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய கொள்கை முடிவு ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டும்.." அன்புமணி ராமதாஸ் பேட்டி
#Tiruvannamalai | #PMK | #AnbumaniRamadoss | #PolimerNews
இன்று, தருமபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சி.புதூர், எம்.கே.எஸ் நகர், அண்ணாநகர், அனுமந்தபுரம், தின்னூர், காளேகவுண்டனூர், பன்னாகனஅள்ளி, குட்டம்பட்டி காலனி, போலநாய்க்கனஅள்ளி, சிக்கனம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நன்றி தெரிவித்த போது.!
#PMK | #DHARMAPURI

தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப. அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, தருமபுரி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை செய்த போது.!
#Dharmapuri#PMK
திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பால ஒப்ப்ந்தம்
ரத்து செய்யப்படுவது வரவேற்கத்தக்கது: ரூ.700 கோடி ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்!
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை 13.30 கி.மீ தொலைவுக்கு ரூ.2100 கோடியில் 4 வழி உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வது குறித்து அரசு ஆய்வு செய்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன. மக்களின் வரிப்பணம் ரூ.700 கோடியை ஊழல் மூலம் சுரண்டும் இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவது வரவேற்கத்தக்கது ஆகும்.
திருவான்மியூருக்கும், உத்தண்டிக்கும் இடையே ரூ.2100 கோடியில் உயர்மட்டச் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கடந்த திசம்பர் 24&ஆம் நாள் ஐதராபாத்தைச் சேர்ந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நாளில் இருந்தே ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இதன் பின்னணியில் நடந்த ஊழல் மற்றும் கூட்டுச் சதி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறேன். கடைசியாக கடந்த மே 28-ஆம் தேதி கூட இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதற்கு காரணம் இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது அப்பட்டமாக தெரிவது தான்.
உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.2100 கோடி செலவாகும் என குறிப்பிட்டிருந்த நிலையில், அதில் ரூ.700 கோடி குறைவாக ரூ.1400 கோடியில் அப்பணியை முடித்துத் தருவதாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திலிப் பில்ட்காப் என்ற நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி அளித்திருந்தது. ஆனால், அதிக தொகையை குறிப்பிட்டிருந்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்த அளிக்க வேண்டும் என்பதற்காக திலிப் பில்ட்காப் நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியை எந்தக் காரணமும் கூறாமல் திமுக அரசு நிராகரித்து விட்டது. பின்னர் கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டதை எதிர்த்தும், தங்களின் ஒப்பந்தப்புள்ளி இரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும் தொடக்கத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திலிப் பில்ட்கான் நிறுவனம் பின்னர் ஏனோ பின்வாங்கி விட்டது. திமுக ஆட்சியில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், புதிய ஆட்சியிலும் தடையின்றி பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தேன். அதன் பிறகாவது இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் பெருமளவில் ஊழல் நடந்திருப்பதை தெரிந்து கொண்டு அதை இரத்து செய்வதற்கான முயற்சிகளை அரசு தொடங்கியிருப்பது நீதி வெல்லும் என்பதைக் காட்டுகிறது.
வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான வெளிவட்ட சாலையை மதுரவாயல் பகுதியுடன் இணைப்பதற்காக 6 வழி உயர்மட்டப்பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்த பாலம் அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.147 கோடி மட்டுமே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதை விட அகலம் குறைந்த 4 வழி உயர்மட்டப்பாலத்திற்கு கிலோ மீட்டருக்கு ரூ.157.89 வழங்குவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலத்திற்கு அதிகபட்சமாகவே ரூ.1400 கோடி தான் செலவாகும் எனும் நிலையில், அதில் 50 விழுக்காடான ரூ.700 கோடியை ஒரு தனியார் நிறுவனத்திற்கு கூடுதலாக வழங்கும் வகையில் ஒப்பந்தம் செய்வது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். கடந்த ஆட்சியில் இதன் பின்னணியில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான்.
எனவே, எந்த தயக்கமும் இல்லாமல் திருவான்மியூர் - உத்தண்டி உயர்மட்ட பாலம் திட்டத்தை செயல்படுத்த கே.என்.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் நடந்த ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
@CMOTamilnadu
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, போளூர் கிழக்கு ஒன்றியம் பொத்தரை கிராமத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைக் கூட்டத்தில் பங்கேற்று செய்தியாளர்களை சந்தித்த போது.!
மின்சார வாரிய கேங்மேன்களை
கள உதவியாளர், வயர்மேன்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், காலியாக உள்ள கள உதவியாளர்கள், வயர்மேன் ஆகிய பணியிடங்களில் தங்களை நியமிக்க வேண்டும் என்ற கேங்மேன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது என்றாலும் கூட, அதை ஆய்வு செய்ய மின்வாரியம் முன்வராதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நீண்டகாலமாக களப்பணியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு தான் கேங்மேன் எனப்படும் கடைநிலை தொழில்நுட்பப் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில் உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்ற 9613 பேர் 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கேங்மேன் பணியில் நியமிக்கப்பட்டனர்.
இரு வருடப் பயிற்சிக்குப் பிறகு ரூ.16,200 - ரூ.51500 ஊதிய விகிதத்தில் நியமிக்கப்பட்ட அவர்கள், கேங்மேன் பணிக்கான வேலைகளைக் கடந்து மின் தடை நீக்குதல், தாழ்வழுத்த மின் தடை நீக்குதல், மின்மாற்றிகள் பராமரிப்பு, மின் கணக்கீடு செய்தல் உள்ளிட்ட கள உதவியாளர்கள், வயர்மேன் செய்யும் பணிகளையும் செய்து வருகின்றனர். இந்தப் பணிகளை செய்யும் போது மின்சாரம் தாக்கி 80-க்கும் மேற்பட்ட கேங்மேன் உயிரிழந்துள்ளனர்; 200-க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கி பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.
கேங்மேன் என்ற பெயரில் இவர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தாலும் கூட வயர்மேன், கள உதவியாளர் பணிகளையும் இவர்கள் தான் செய்து வருகின்றனர். இத்தகைய நிலையில் காலியாக உள்ள 26,605 கள உதவியாளர்கள், 14,358 வயர்மேன் பணிகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் போது, இப்போது பணியில் உள்ள கேங்மேன்களை அந்த பணிகளில் நியமித்து விட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும் புதிதாக ஆள்களை தேர்வு செய்யலாம் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானது தான்.
கேங்மேன்களாக பணியாற்றி வருபவர்கள் வயர்மேன், கள உதவியாளர் பணிக்கான கல்வித் தகுதியையும், பயிற்சிகளையும் பெற்றுள்ளனர்; ஆயிரக்கணக்கானோர் தேவையான கல்வித் தகுதியையும் கடந்து பட்டப்படிப்பு, முனைவர் ஆராய்ச்சிப் பட்டம் வரையிலான படிப்புகளையும் முடித்துள்ளனர். கேங்மேன்களை அடுத்தக்கட்ட பணிகளுக்கு நியமிப்பது குறித்து மின்வாரியம் ஆய்வு செய்யலாம் என்று நீதிமன்றங்களும், தொழிலாளர் நல அமைப்புகளும் பரிந்துரைத்துள்ளன. ஆனால், மின்வாரியம் மட்டும் இவற்றையெல்லாம் செவிமடுக்க மறுக்கிறது.
மிகக்குறைந்த ஊதியத்தில் பணி செய்யும் கேங்மேன்கள் அவர்களின் சொந்த ஊரிலிருந்து 500 கி.மீ தொலைவுக்கு அப்பால் பணி செய்ய வேண்டியிருப்பதே அவர்களுக்கு பெரும் தண்டனையாகும். இந்த தண்டனையிலிருந்து கேங்மேன்களை மீட்கவும், அவர்களின் தகுதிக்கேற்ற பணியும், ஊதியமும் கிடைப்பதை உறுதி செய்யவும் அவர்களை வயர்மேன், கள உதவியாளர் பணிகளில் அமர்த்த அரசு முன்வர வேண்டும்.
@CMOTamilnadu
தருமபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட
சின்னபங்குநத்தம், முருகானந்தபுரம், தின்னப்பட்டி, ஏறுப்பள்ளி, எச்சனஅள்ளி, அரிச்சந்திரனூர், பண்டஅள்ளி, பங்குநத்தம், குறிஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நன்றி தெரிவித்த போது.!

தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம்,
ஏறுப்பள்ளி கிராமத்தில், மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நன்றி தெரிவித்த போது.!
#PMK | #DHARMAPURI
தருமபுரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியம்,
அரிச்சந்திரனூர் கிராமத்தில், மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நன்றி தெரிவித்த போது.!
#PMK | #DHARMAPURI
தருமபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட
இராமர்கூடல், தாசன்கொட்டாய், கருபையனஅள்ளி, நெக்குந்தி, ஈச்சம்பள்ளம், எர்ரபையனஅள்ளி, சின்னகானஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நன்றி தெரிவித்த போது.!