அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழ்கின்ற
அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்..!
நாளை(23-04-2026) வாக்குப்பதிவு நாள்!
மக்களாட்சி தத்துவத்தை ஏற்றுக்கொண்ட நம் நாட்டில் மக்களுக்கு இருக்கும் கடைசி மதிப்புமிக்க உரிமை என்பது வாக்குதான். வாக்கு ஒரு வலிமைமிக்க ஆயுதம்! அந்த ஆயுதத்தை அநீதிக்கு எதிராக நாம் தூக்க வேண்டும். இங்கே அறிவை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள், மருத்துவர்கள், சட்டம் படித்த வல்லுநர்கள், இந்திய குடிமைப் பணிபுரியும் ஆட்சியர்கள், கற்றறிந்த சான்றோர்கள், வரலாற்று ஆய்வறிஞர்கள் உள்ளிட்ட பெருமக்கள் நிறைந்து வாழ்கிற நம் நாட்டில் தவறாமல் நாம் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும்.
நாம் ஏன் வாக்கு செலுத்த வேண்டும் தவறான எண்ணம் நம்மில் எவருக்கும் எவருக்கும் தோன்றக்கூடாது. நாம் ஒருவர் வாக்கு செலுத்தி என்னவாகப் போகிறது? அதனால் ஏதேனும் மாறிவிடப் போகிறதா? என்கிற எண்ணம் எவருக்கும் வரக்கூடாது. ஒரே ஒரு வாக்கில் வென்ற நிகழ்வும் உண்டு. ஒரே ஒரு வாக்கில் தோற்ற நிகழ்வும் உண்டு. தனிமரம் தோப்பாகாது, சரிதான்; ஆனால், தனித்தனி மரங்கள் சேர்ந்துதான் தோப்பாகிறது! என்பதையும் மறந்துவிடக்கூடாது.
எவ்வளவு பெரிய கோலமாக இருந்தாலும், ஒரு புள்ளியில் இருந்துதான்
தொடங்க வேண்டும். எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் ஒரு விதையிலிருந்துதான் முளைக்க வேண்டும். எவ்வளவு பெரிய காவியமாக இருந்தாலும் ஒரு எழுத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். எவ்வளவு பெரிய கடலாக இருந்தாலும் ஒரு துளியிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்பது போல, ‘மாறுதல்’ என்பதும் நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் இருந்துதான் உருவாக முடியும். மண்ணில் புரட்சி வருவதற்கு முன்பு மக்களின் மனங்களில் புரட்சி உருவாக வேண்டும். அண்ணல் காந்தியடிகள் அவர்கள், ‘உலகில் எப்படிப்பட்ட மாறுதல் உருவாக வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதை உன்னிலிருந்தே தொடங்கு’ என்கிறார். நான் என்னில் இருந்து தொடங்குகிறேன்.
நீங்கள் உங்களிலிருந்து தொடங்குங்கள். நாம் நம்மில் இருந்து தொடங்குவோம்.
வாக்கு செலுத்துவது என்பது மக்களாட்சி நாட்டில் ஒரு மகத்தான பொறுப்பு. அமெரிக்காவில் கருப்பின மக்கள் வாக்குரிமையைப் பெற 200 ஆண்டுகாலம் ஆனது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் பெண்கள் வாக்குரிமையைப் பெற 250 ஆண்டுகாலம் ஆனது. நம் நாட்டிலும் தொடக்கத்தில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், சொந்தமாக நிலமோ, சொத்தோ இருப்பவர்கள் மட்டும்தான் வாக்களிக்க முடியும், படித்து பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதையெல்லாம் மாற்றி இன்றைக்கு குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம் என்ற உயர்நிலையை நாம் எட்டியுள்ளோம். இந்த நாட்டின் முதல் குடிமகனாகிய குடியரசுத் தலைவர் முதல், கடைக்கோடியில் வாழும் கடைசி குடிமகன் வரை அனைவருக்கும் ஒற்றை வாக்குதான். ‘சனநாயக நாட்டில்
நாம் அனைவருமே சமம்’ என்ற சமத்துவ தத்துவத்தைப் போதிக்கும் ஒரு வலிமைமிக்க பேராயுதம்தான் நம் கையில் ஏந்தும் வாக்கு என்பதிலிருந்து, வாக்குரிமை எத்தனை மாண்புமிக்கது, மதிப்பிற்குரியது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தையும் தீர்மானிப்பது அரசு; அந்த அரசை தீர்மானிப்பது அரசியல். அதற்கான ஒரு அரிய வாய்ப்புதான் தேர்தல். நாட்டின் அடுத்த ஐந்தாண்டுகால எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிற தலைமையை தேர்வு செய்கிற வாய்ப்பை நம் நாட்டின் மக்களாட்சி அரசமைப்பு நமக்கு வழங்கியுள்ளது. அந்த அரிய வாய்ப்பை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நாம் பெற்ற பிள்ளைகளுக்கு மணமகன், மணமகளை பார்த்து, பார்த்து, தேடித்தேடி தேர்வு செய்கின்றோம். சாப்பாடு, துணி, கைக்கடிகாரமா, கால் செருப்பா, எதுவொன்றிலும் நாம் நல்லதை, சரியானதைத்தான் தேர்வு செய்கின்றோம். அதுபோல, நாட்டை ஆள நல்ல தலைவரை தேர்வு செய்கின்ற வாய்ப்பு நமக்கு வந்துள்ளது. அதனை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆகவே என் அன்புச் சொந்தங்கள் அனைவரும் தவறாமல் வாக்குச் செலுத்த வேண்டும். இதில் நாம் பொறுப்பற்று, அலட்சியமாக இருக்கக்கூடாது. நம்முடைய தாத்தாக்கள் காமராசர், கக்கன், ஜீவானந்தம், முத்துராமலிங்கத்தேவர் என்று தூய்மையானத் தலைவர்களை தேர்ந்தெடுத்தது மக்கள்தான். மக்கள் அக்கடமையிலிருந்து விலகும்போது அயோக்கியர்கள் அந்த பதவிகளுக்கு தேர்வாகின்றனர். குண்டு வைத்து கொலை செய்வது, ஊழல் செய்வது, இலஞ்சம் வாங்குவது, முறைகேடாக சொத்து சேர்ப்பது வருமான வரி கட்டாமல் இருப்பது இவை தான் தேசத்துரோக குற்றம் என்று நீங்கள் நினைத்துள்ளீர்கள். இவை மட்டும் தேசத்துரோகமல்ல. (1/2)
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. மோ.அருண்குமார் அவர்களை ஆதரித்து நடைபெற்று வந்த பரப்புரைகள் இன்று மாலை 5 மணியுடன் சிவகிரி பகுதியில் நிறைவு பெற்றது.
#மொடக்குறிச்சி#நாம்தமிழர்
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. மோ.அருண்குமார் அவர்களை ஆதரித்து 19/04/2026(ஞாயிற்றுக்கிழமை) அன்று தொகுதி முழுவதும் வாகன பேரணி மற்றும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
வாக்களிப்போம்..!! விவசாயி சின்னத்திற்கு..!!
#மொடக்குறிச்சி#நாம்தமிழர்#ஈரோடு#ntkerode#ntkitwing
#மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் திரு. மோ.அருண்குமார் அவர்களை ஆதரித்து கொடுமுடி, வெங்கம்பூர், ஊஞ்சலூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 18/04/2026(சனிக்கிழமை) அன்று வேட்பாளருடன் இணைந்து வாகன பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
வாக்களிப்போம்.! விவசாயி சின்னத்திற்கு.!
#நாம்தமிழர்
#மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. மோ.அருண்குமார் அவர்களை ஆதரித்து குலவிளக்கு, வெள்ளோட்டம்பரப்பு, நஞ்சை கொளாநல்லி, கொளத்துபாளையம் ஆகிய ஊராட்சி/பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 17/04/2026(நேற்று) வேட்பாளருடன் இணைந்து வாகன பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
#நாம்தமிழர்
#மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் திரு. மோ.அருண்குமார் அவர்களை ஆதரித்து எழுமாத்தூர்,குலவிளக்கு,ஈஞ்சம்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 16/04/26(வியாழக்கிழமை) அன்று வேட்பாளருடன் இணைந்து வாகன பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
வாக்களிப்போம்.! விவசாயி சின்னத்திற்கு!
#நாம்தமிழர்
#மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. மோ.அருண்குமார் அவர்களை ஆதரித்து மாநில கொள்கை பரப்புச் செயலாளர் திரு.சந்திரமோகன் அவர்கள் சோலார்,லக்காபுரம், சின்னியம்பாளையம்,நஞ்சை ஊத்துக்குளி மற்றும் மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் 15/04/26(இன்று) பரப்புரை மேற்கொண்டார்.
#நாம்தமிழர்
#மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் மோ.அருண்குமார் அவர்களை ஆதரித்து இச்சிப்பாளையம், வள்ளிபுரம், அஞ்சூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13/04/26(திங்கட்கிழமை) அன்று வேட்பாளருடன் இணைந்து வாகன பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
வாக்களிப்போம்..! விவசாயி சின்னத்திற்கு..!
#நாம்தமிழர்
#மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் திரு. மோ.அருண்குமார் அவர்களை ஆதரித்து சென்னசமுத்திரம், ஆவுடையார்பாறை, எழுநூத்திமங்கலம் ஆகிய ஊராட்சி/பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 13/04/2026(திங்கட்கிழமை) அன்று வேட்பாளருடன் இணைந்து வாகன பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
#நாம்தமிழர்#ntkerode
#மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் திரு. மோ.அருண்குமார் அவர்களை ஆதரித்து கண்டிக்காட்டுவலசு, 60 வேலம்பாளையம், பூந்துறை சேமூர், மொடக்குறிச்சி ஆகிய உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 12/04/26 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வேட்பாளருடன் இணைந்து வாகன பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
#நாம்தமிழர்
#மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திரு.மோ.அருண்குமார் அவர்களை ஆதரித்து சிவகிரி, கொல்லங்கோவில், வடுகபட்டி, கொங்குடையாம்பாளையம் ஆகிய ஊராட்சி/பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 11/04/2026 அன்று வேட்பாளருடன் இணைந்து வாகன பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
#விவசாயி#நாம்தமிழர்
இந்திய அரசியல் வரலாற்றில் என் அளவுக்கு தோற்றவர்கள் யாரும் இல்லை! ஆனால் என் அளவுக்கு சளைக்காமல் களத்தில் நின்றவர்களும் யாரும் இல்லை!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
கொடையளிக்க👇
https://t.co/haai7pYmk7
#எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே#சீமான்#ntk#ntkitwing #seeman #tamilnationalism
#மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளர் திரு.மோ.அருண்குமார் அவர்களை ஆதரித்து இச்சிப்பாளையம், கொந்தாளம், சிவகிரி ஆகிய உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 10/04/2026(நேற்று) வேட்பாளருடன் இணைந்து வாகன பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.
வாக்களிப்போம்..!! விவசாயி சின்னத்திற்கு..!!
#நாம்தமிழர்