முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்!
தற்போதைய 2025-2026 ஆம் ஆண்டிற்கான அதிக புதிய முதலீடுகளை ஈர்த்த TOP 10 மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் 10 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. நமது மாநிலத்தின் தொழில் முதலீடுகள் எந்தளவிற்கு நலிவடைந்துள்ளன என்பதற்கான சான்றாக விளங்கும் இந்த தகவலை, தற்போதைய தவெக அரசாவது சற்று தீவிரமாகக் கையாள வேண்டும்.
“ஒரு காலத்தில் நாங்கள் இப்படி இருந்தோம், அப்படி இருந்தோம்” என்ற கடந்த கால வெற்றியையே பேசிக் கொண்டிருந்தால், நிகழ்கால வளர்ச்சியும் எதிர்கால லட்சியமும் கேள்விக்குறியாகிவிடும் என்பதைத் தான் தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. புதிய தொழில் முதலீடுகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தாமல், பழங்கதைகளைப் பேசியும், வெற்று பேப்பரில் மட்டுமே பதிவாகிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மட்டுமே வைத்து, தங்களது ஐந்து ஆண்டுகளையும் ஒப்பேற்றி விட்டது திமுக. அதன் விளைவால் தான், புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் சோடை போயுள்ளது. பெரிய பெரிய நிறுவனங்களும் பிற மாநிலங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
எனவே, முந்தைய திமுக ஆட்சியில் இருந்தாவது தற்போதைய தவெக அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் போக்கை கைவிட வேண்டும்! இணைப்பு வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், கடன் வசதிகள், மானியங்கள், சட்ட அனுமதிகள் ஆகியவற்றை எளிதாக்கி, மேம்படுத்தி புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இந்திய திரை உலகின் மிக முக்கியமான பின்னணி பாடகி திருமதி ஜமுனா ராணி அவர்கள் இன்றைய தினம் இயற்கை எய்தினார் என்ற செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியது.
சிறந்த பின்னணி பாடகி ஜமுனா ராணி அவர்களின் மறைவு தமிழ் திரையுலகிற்கும் இசை உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு.
தனித்துவமான குரலால் எண்ணற்ற மனங்களை கவர்ந்த அவர், செந்தமிழ் தேன்மொழியாள், காட்டில் மரம் உறங்கும், ஆடாத மனமும் ஆடுதே உள்ளிட்ட பல மறக்க முடியாத பாடல்களின் மூலம் என்றும் நம் நினைவில் வாழ்வார்.
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
FL-2 மதுபான உரிம விவரங்களை தவெக அரசு மறைப்பது ஏன்?
தமிழகத்தில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் முகவரிகளை மறைத்த முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களின் அரசு, இப்போது புதிய FL-2 (தனியார் கிளப்) மதுபான உரிமங்களின் விவரங்களையும் தர மறுப்பது RTI மூலம் அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் தலைமைச் செயலக மதுவிலக்குத் துறைக்கே இந்த அடிப்படைத் தகவல்கள் தெரியாதா அல்லது முறைகேடுகளை மறைக்க அரசு திட்டமிட்டுச் சதி செய்கிறதா என்ற வலுவான சந்தேகம் எழுகிறது.
பொழுதுபோக்குக் கிளப்புகளுக்கான FL-2 உரிமங்களைப் பெற்றுக்கொண்டு, அவை விதிகளை மீறி அனைவருக்கும் மது விற்கும் வணிகக் கூடங்களாகச் செயல்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஒருபுறம் 717 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக விளம்பர நாடகமாடிவிட்டு, மறுபுறம் FL-2 உரிமங்களை வாரி வழங்குவது என்பது மக்களின் கண்களில் மண்ணைத் தூவி, மது வியாபாரத்தைத் தனியாரிடம் தாரைவார்க்கும் துரோகச் செயலாகும்.
தகவல் அறியும் உரிமைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாக, உரிய தகவல்களைத் தராமல் மாவட்ட வாரியாக அலைக்கழிக்கும் அதிகாரிகளின் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. @TVKPartyHQ அரசு மக்கள் நலனுக்கானது என்றால், 2026 ஜனவரிக்குப் பிறகு வழங்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட அனைத்து FL-2 உரிமங்களின் விவரங்களையும் உடனடியாகப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
10 நாட்களில் 6 கொலைகள்! பொதுமக்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் "Reels Model" அரசு!
கடந்த 10 நாட்களில் மட்டும், நாமக்கல், கரூர், திருப்பூர், சேலம், சிவகங்கை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் 6 முதியவர்கள் படுகொலையாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றன. ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் கழித்தும் கூட, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாத முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களின் நிர்வாகத் திறனின்மை கடும் கண்டனத்திற்குரியது.
திரும்பும் இடமெல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், போதை கலாச்சாரம், மாமூல் வேட்டைகள் என குற்றச் செயல்கள் கண்களை மறைக்கின்றன. வீட்டில் தனியே இருக்கவும், குடும்பத்துடன் வெளியில் செல்லவும் தமிழக மக்கள் அஞ்சுகின்றனர். ஆனால், திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான அமைச்சரவையோ, ஆளுக்கொரு Reels எடுத்து, அதை Trending BGM உடன் பொருத்தி வெளியிட்டுக் கொண்டிருப்பது மாண்பற்றது.
சீரழிந்த சட்டம் ஒழுங்கு சமன்படும், மக்களின் உயிர், உடைமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் தான், “மாற்று சக்தி” என்று தங்களைக் கூறிக் கொண்ட தவெகவினை தமிழக மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் செயல்திறன் இல்லை என்றால் முதல்வரும் அவரது அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகிக் கொள்ளட்டும்! தகுதியான தலைமையை தமிழகம் தேடிக் கொள்ளும்!
மக்களின் உடல்நலனுடன் விளையாடும் ஆவின் நிர்வாகம் - முறைகேடுகளைக் கண்டறிய உயர்மட்டக் குழு அமைத்திடுக!
தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாகப் பொதுமக்களும் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஒருபுறம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக், குளோரின் மற்றும் மருந்து நெடி வீசுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டும் நிலையில், மறுபுறம் கடலூர் சேத்தியாதோப்பில் பாலில் மரவள்ளிக்கிழங்கு மாவு, அகர் அகர் போன்ற ரசாயனங்களைக் கலந்து கலப்படம் செய்வதாகப் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இத்தகைய ரசாயனக் கலப்படங்களை அனுமதிப்பதும், முறைகேடுகளைத் தட்டிக்கேட்பவர்களைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதும் தற்போதைய @TVKPartyHQ அரசின் நிர்வாகச் சீர்கேட்டைப் படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும், முறையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் ஏதுமின்றி, தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலைக் கொள்முதல் செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, பாலில் வரும் ரசாயன நெடி மற்றும் சேத்தியாதோப்பு மாவுக்கலப்பட முறைகேடு ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்தும் உடனடியாக உயர்மட்டக் குழு அமைத்து அரசு விசாரணை நடத்த வேண்டும். மக்களின் உடல்நலத்தோடு விளையாடும் ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தூய்மையான ஆவின் பால் விநியோகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய தினம் திருநெல்வேலி
வண்ணார்பேட்டை அருள்மிகு தீப்பாச்சி அம்மன் திருக்கோவிலில் அம்பாளை மனம் உருகி வேண்டினேன்.
பாரத மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ அம்பாள் துணை நிற்க வேண்டிக் கொண்டேன்.
இன்று திருநெல்வேலி மாவட்டம், தாளையூத்தில், நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் காரியகர்த்தாவான திரு. பரமசிவம் அவர்கள், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதையொட்டி, அவரது இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தோம்.
இந்த நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
A. P. சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் Dr. ராணி சுப்பிரமணியன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, காவேரி மருத்துவமனை, திருநெல்வேலி இணைந்து ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கான மருத்துவ சேவையை தொடங்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது.
சமூக நலனையும், மருத்துவ சேவையையும் உயர்ந்த நோக்கமாகக் கொண்டு, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து தரமான மற்றும் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கி வரும் காவேரி மருத்துவமனை நிர்வாகம், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்காலத்திலும் இதுபோன்ற மக்கள் நல மருத்துவப் பணிகளை மேலும் விரிவுபடுத்தி, எண்ணற்ற மக்களின் வாழ்வில் நம்பிக்கையையும் நலனையும் விதைக்கும் உயரிய சேவையை தொடர்ந்து சிறப்பாக ஆற்றிட, எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
(1/2)
நீட் தேர்வில் சாதனை படைத்த திருப்பூர் அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாராட்டுகள்!
அரிய சாதனைகள் எப்போதும் எளிய பின்னணியில் இருந்தே தொடங்குகின்றன என்பதைத் திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளனர். நடப்பு நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, தங்களது மருத்துவக் கனவை நனவாக்கியுள்ள இந்த இளம் சாதனையாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, "முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கு இலக்கணமாகத் திகழும் இம்மாணவர்களில் 9 பேர், முதல் முயற்சியில் ஏற்பட்ட சறுக்கல்களால் சோர்ந்து போகாமல், விடாமுயற்சியுடன் மறுமுறைத் தேர்வு (Repeaters) எழுதி சாதித்துள்ளனர். இம்மாணவர்களோடு சேர்ந்து அவர்களின் மருத்துவக் கனவுக்குத் தோள் கொடுத்த அன்புப் பெற்றோர்களுக்கும், அர்ப்பணிப்புடன் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணி ஒருவரது கனவுகளுக்குத் தடையல்ல என்பதை இம்மாணவர்களின் வெற்றி நிரூபித்துள்ளது. தங்களது உழைப்பால் உயர்ந்து, எதிர்காலத்தில் ஏழை, எளிய மக்களுக்குச் சேவை செய்யும் சிறந்த மருத்துவர்களாக உருவாக இவர்களை வாழ்த்துகிறேன்.
மாணவர்களின் கடின உழைப்பைப் பாதுகாக்கவும், #ViksitBharat எனும் #வளர்ந்த_இந்தியா அடித்தளத்தை வலுப்படுத்தவும், வெளிப்படையான, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் தேர்வு முறை, வலுவான வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டங்கள் மற்றும் தேர்வு மாஃபியாக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை ஆகியவற்றை பிரதமர் மோடி முன்னிலைப்படுத்துகிறார்.
இன்றைய தினம் சென்னை கமலாலயத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அனைத்து மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தேசியச் செயலாளர் மற்றும் தமிழக பாஜக மேலிட திரு. @MenonArvindBJP அவர்கள், தமிழக பாஜக மேலிட இணைப்பு பொறுப்பாளர் திரு. @ReddySudhakar21 அவர்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினர் திரு. @HRajaBJP அவர்கள், முன்னாள் தெலுங்கானா ஆளுநர் திருமதி. @DrTamilisai4BJP அவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. @PonnaarrBJP ex MP அவர்கள், நீலகிரி சட்டமன்ற உறுப்பினர் திரு. @Bhojarajan4Ooty அவர்கள் மாநில பொருளாளர் திரு. @SRSekharBJP அவர்கள் அனைவரும் உடன் கலந்து கொண்டனர்.
(1/2)
அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அரங்கேறும் அவலங்கள்!
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்படாததால் விபத்தில் காயமடைந்த பரமேஸ்வரன் என்பவர் உயிரிழந்து விட்டதாகவும், கோபிச்செட்டிபாளையம் அருகே குழந்தைகள் நல மையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 10 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகவும், தேனி பெரியபாளையம் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக 14 வயது சிறுவன் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகளை பார்க்கையில், தமிழகத்தின் சுகாதாரத்துறை எந்தளவிற்கு சீரழிந்து கிடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகக் தெரிகிறது.
பதவியேற்ற புதிதில், “அரசு அமைச்சர்கள் எல்லாம் அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுவோம்” என்று வசனம் பேசிய, சுகாதாரத் துறை அமைச்சர் திரு. @arunraajkg அவர்கள், படத்திற்கு போவது போலவும், பைக்கில் செல்வது போலவும் விதவிதமாக ரீல்ஸ்கள் எடுப்பதில் தான் தற்போது அதீத ஆர்வம் காட்டுகிறாரே தவிர, அரசு மருத்துவமனைகளின் தர மேம்பாட்டிற்காக இதுவரை ஒரு செங்கல்லைக் கூட நகர்த்தவில்லை. மொத்தத்தில் “மாற்றம்” என்று கூறி, மக்களை “ஏமாற்றி” ஆட்சிக்கு வந்த தவெக அரசு, தற்போது நிர்வாகம் தெரியாமல் திணறுகிறது என்பது தான் உண்மை.
எனவே, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் கூட, இன்னும் “Reels Mode” -லேயே உலவிக் கொண்டிருக்கும் முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களும் அவரது அமைச்சர்களும், இனியாவது மக்களின் அடிப்படைத் தேவைகளையும், பிரச்சினைகளையும் கவனிக்க வேண்டும்! அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள், தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்து ஏழை, எளிய மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும்! இனியும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்!
மருத்துவம், பெண்கள் கல்வி, சமூக நீதி ஆகிய துறைகளில் அழியாத தடம் பதித்த தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் பத்ம பூசன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்தநாளில், அவரது உயர்ந்த சேவைகளையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்கிறோம்.
ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் கைவிடப்பட்ட சிறுமிகளுக்காக அவ்வை இல்லம் தொடங்கி ஆதரவாக இருந்தவர், மேலும் 1954இல் அடையாறு புற்றுநோய் நிலையத்தை தொடங்கி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்தும் வந்தார்.
பெண்களின் உரிமைகள், குழந்தைகள் நலம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காக அவர் மேற்கொண்ட முன்னோடி முயற்சிகள், தலைமுறைகள் கடந்தும் வழிகாட்டியாகத் திகழ்கின்றன.
அவரது கனவுகளும் கொள்கைகளும் என்றும் நமக்கு ஊக்கமாக இருக்கட்டும்.
சென்னை ஆவடியில், மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததாகவும், அதை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் திரு. ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் அலட்சியத்திற்கு மற்றுமொரு சான்று.
நமது சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தி, சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு, சுத்தமான, சத்தான உணவை அரசால் வழங்க முடியவில்லை என்பது வெட்கக்கேடு. தேர்தல் நேரங்களில் மட்டும் தூய்மைப் பணியாளர்களோடு ஒன்றாக அமர்ந்து, சிரித்து, பேசி, உணவு உண்டு விதவிதமாக வீடியோக்கள் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டும் அரசியல் கட்சிகள், ஆட்சிப் பொறுப்பு கையில் வந்தவுடன் அம்மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டுமென நினைப்பதே இல்லை.
அதிலும், திரு. @TVKVijayHQ அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, தூய்மைப் பணியாளர்களை காலணிகளை சுத்தம் செய்ய வைப்பது, எச்சில் இலைகளை அப்புறப்படுத்த வைப்பது என தவெகவினர் செய்யும் அராஜகங்களுக்கு அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. எனவே, கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியாளர்களை கணிவன்புடன் நடத்துமாறு தனது கட்சியினருக்கு அறிவுறுத்துவதோடு, அவர்களுக்கு தரமான, சுத்தமான உணவு வழங்குவதற்கும் முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
தமிழின் இலக்கண மரபை ஆழமாக ஆய்ந்து, அதன் பெருமையை அறிவுலகிற்கு எடுத்துச் சென்ற அறிஞர் ஸ்ரீ சுப்பிரமணிய சாஸ்திரியார் அவர்களின் பிறந்த நாள் இன்று .
தொல்காப்பியத்தை முதன்முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்குரிய அறிஞர் என்ற நிலையான இடத்தை அவர் பெற்றுள்ளார். அவரது மொழிபெயர்ப்பும் ஆய்வுகளும் தமிழை உலகளாவிய கல்வி மற்றும் ஆராய்ச்சி வட்டாரங்களுக்கு அறிமுகப்படுத்திய அரிய பங்களிப்பாகும்.
அவரது தமிழ்ப்பணி, ஆய்வுப் பார்வை மற்றும் சேவை என்றும் நமக்கு வழிகாட்டியாக இருக்கும். அவரின் பிறந்த நாளில் அவரது நினைவைப் போற்றுவதோடு, தமிழ்மொழியின் செம்மையையும் செழுமையையும் உலகெங்கும் பரப்புவோம்.
அறிவின் ஒளியை ஏற்றி, வாழ்க்கையின் சரியான பாதையை காட்டும் அனைத்து குருமார்களுக்கும் மனமார்ந்த குரு பூர்ணிமா நல்வாழ்த்துகள்!
நம்மை நம்பிக்கையுடன் முன்னேறச் செய்து, ஒவ்வொரு வெற்றிக்கும் அடித்தளமாக இருக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை என்றும் போற்றுவோம். அவர்களின் ஆசீர்வாதம் அனைவரின் வாழ்விலும் அறிவும், அமைதியும், வளமையும் பெருகச் செய்யட்டும்.