இன்று, புதிதாக தயாரிக்கப்பட்ட நான்கு ‘அம்ரித் பாரத்’ விரைவு இரயில்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேற்கு வங்கம் மாநிலத்திலிருந்து நாட்டின் வெவ்வேறு பகுதிகளை இணைக்கின்ற இந்த இரயில்களில், தமிழகம்-மேற்கு வங்கம் மற்றும் அவற்றிற்கு இடையிலான பகுதிகளை இணைக்கும் வகையில் இரண்டு அம்ரித் பாரத் இரயில்கள் இடம்பெற்றுள்ளது.
நியூ ஜல்பைகுரி-நாகர்கோவில் மற்றும் நியூ ஜல்பைகுரி-திருச்சி இடையிலான இரண்டு இரயில்களானது, தொழில் மற்றும் ஏனைய பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அமைகின்றது.
மேலும், மேம்பட்ட மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய புதிய ‘வந்தே பாரத்’ இரயிலும் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. நாட்டு மக்களின் தேவை உணர்ந்து, இரயில்வே துறையில் புதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்ற மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு. @AshwiniVaishnaw அவர்களுக்கும் நாட்டு மக்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
@RailMinIndia@GMSRailway
#PMModiInBengal #JitbeBJPJitbeBangla
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக, மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள். ஆகா, தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கப் போகிறார் என்று அனைவரும் நினைத்தோம். ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, ஒரு ரூபாய் கூடக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று, மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என்று மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin.
ஏற்கனவே, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த ஐந்து ஆண்டுகளில், கொடுக்கப்பட வேண்டிய சுமார் ₹60,000 ஊக்கத்தொகை எப்போது வருமென்று தெரியவில்லை. இப்படி தொடர்ந்து வெற்று வாக்குறுதிகள் கொடுத்து யாரை ஏமாற்றலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என்பது தெரியவில்லை.
முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்குப் பிடித்த "பேரு பெத்த பேரு, தாக நீலு லேது" என்ற தெலுங்குப் பழமொழி, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கு முழுமையாகப் பொருந்தும்.
இன்று எனது மனைவி ஷிவஶ்ரீ மற்றும் எனது தலைப்பொங்கல். இந்த நன்னாள் ராகிகுட்டாவில், ஆயிரம் பொங்கல் பானைகள் பொங்க மகிழ்ச்சியோடும் குதூகலத்தோடும் கொண்டாடப்பட்டது. இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நமது பண்டிகைகள் அனைத்தும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும்போது மகிழ்ச்சி பன்மடங்காக பெருகும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
@ArtSivasri
ஈரடியில் உலகப் பொதுமறை அளித்து அறம், பொருள், இன்பம் என முப்பாலில் ஒட்டு மொத்த வாழ்வியலையும் உணர்த்திய அய்யன் திருவள்ளுவர் தினம் இன்று..!
திருக்குறள் நெறிப்படி வாழ்வோம்..! திருவள்ளுவரைப் போற்றுவோம்..!
#ThiruvalluvarDay
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பு பொங்க
உழைப்பின் பயன் இனிதே கிடைக்க
இல்லமெல்லாம் சந்தோஷம் நிரம்ப வாழ்த்துக்கள்!
இனிய பொங்கல் & மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
#Pongal2026
இந்தியாவின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பியதோடு, சாதி, மதங்களைக் கடந்து இளைஞர்களின் வழிகாட்டியாக திகழ்ந்த சுவாமி விவேகானந்தர் அவர்களின் கொள்கைகளைப் பின்பற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க அவர் பிறந்த இந்நாளில் உறுதியேற்போம்.
#swamivivekananda
இளைஞர்களின் ஆற்றலைக் கொண்டு நாட்டையும் சமுதாயத்தையும் வலிமையாக்கிட முனைந்த சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் நாள் தேசிய இளைஞர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
தேசத்தின் 15-வது துணைக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கவுள்ள அண்ணன் திரு.சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.💐
@CPRGuv
வாக்கு வங்கி அரசியலுக்காக ஊடுருவல்காரர்களை ஆதரித்து, அடைக்கலம் கொடுத்த எதிர்கட்சியினரின் சதியை முறியடிக்க வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது..!
திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையத்தில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்றது இன்று ஆலயத்திற்கு சென்று அம்மனை வழிபட்டேன்.
அப்போது நடிகர் திரு. ரஞ்சித் அவர்களும், இந்து முன்னணியின் மாநில தலைவர் திரு. காடேஸ்வர சுப்பிரமணியம் அவர்களும், திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் திரு @kcmb_srinivasan அவர்களும் உடன் இருந்தனர்.