தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு விபத்தில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
மேற்படி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களை இந்தியா கொண்டு வரவும், மீட்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியத் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகரும், தன்னுடைய கந்தர்வக் குரலால்
தமிழக மக்களை கவர்ந்தவருமான திருமதி எஸ். ஜானகி அம்மாள் அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
1957 ஆம் ஆண்டு ‘விதியின் விளையாட்டு’ என்ற திரைப்படம் மூலம் தன்னுடைய இசைப் பயணத்தை தொடங்கிய திருமதி எஸ். ஜானகி அவர்கள், தலைமுறைறளைக் கடந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இசைத் துறையில் கொடிகட்டி பறந்தவர். பதினேழு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர் திருமதி ஜானகி அவர்கள்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, கேளர அரசின் சிறந்த பாடகிக்கான விருது, ஆந்திர அரசின் சிறந்த பாடகிக்கான விருது, தேசிய விருது என பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். 1962-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கொஞ்சும் சலங்கை’ என்ற திரைப்பட்த்தில் திருமதி ஜானகி அவர்கள் பாடிய ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல் தமிழக மக்களின் மனங்களில் இன்றளவிலும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. மழலைக் குரல், இளம் வயதினரின் குரல், மூதாட்டியின் குரல் என பல குரல்களில் உணர்ச்சிப் பொங்கப் பாடுவதில் திருமதி ஜானகி அவர்கள் வல்லவர். இசைத் துறையில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் திருமதி ஜானகி அவர்கள்.
திருமதி ஜானகி அம்மாள் அவர்களுடைய பாடல் இடம்பெறாத படமே இல்லை என்ற அளவுக்கு புகழின் உச்சிக்குச் சென்ற அவர் இன்று நம்முடன் இல்லை என்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இவருடைய மறைவு இந்திய மக்களை, குறிப்பாக தமிதுழநாட்டு மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய இழப்பு திரைப்படத் துறையினருக்கு, இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு. இவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.
திருமதி ஜானகி அம்மாள் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், திரைத் துறையினருக்கும், இசைத் துறையினருக்கும். எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர், நடிகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் எனப் பன்முகத் தன்மை கொண்ட அன்புச் சகோதரர்
திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத்
துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களின் ‘பதினறு வயதினிலே’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த திரு. பாக்யராஜ் அவர்கள், திரு. பாரதிராஜா இறந்த 17 நாட்களுக்குள் காலமாகிவிட்டார் என்ற செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது. ‘முந்தானை முடிச்சு’, ‘அந்த ஏழு நாட்கள்’, ‘இன்று போய் நாளை வா’, ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழக மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர் திரு. பாக்யராஜ் அவர்கள். பழகுவதற்கு மிக எளிமையானவர். மிகச் சிறந்த பண்பாளர்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் தீவிர ரசிகரான திரு. பாக்யராஜ் அவர்கள், பல திரைப்பட இயக்குநர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். பல விருதுகளுக்கு சொந்தக்காரர். திரு பாக்யராஜ் அவர்களின் மறைவு தமிழக மக்களுக்கு, குறிப்பாக திரைத் துறையினருக்கு பேரிழப்பு.
திரு. பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், திரைத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தை வெளிப்படுத்தும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாகங்களை எண்ணிப் பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். இதன் அடிப்படையில், நபிகள் நாயகத்தின் போதனைகளை நினைவில் கொண்டு, சாதி, மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்த உயர்ந்த நாளில் உறுதியேற்போம்.
அன்பு, ஈகை, மத நல்லிணக்கம், மனித நேயம், ஆகிய பண்புகள் நிலைத்து நிற்க வேண்டும்; எல்லோர் வாழ்விலும் வளமும், நலமும் பெருகி மகிழ்ச்சி பொங்கிட வேண்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமான தளபதி திரு மு.க. ஸ்டாலின் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.
அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்து, எனது வெற்றிக்காக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோன்று, எனது வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணித் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு துணை
முதலமைச்சருமான இளைய தளபதி திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும்; தேர்தல் பணியாற்றிய தேனி மாவட்டக் கழகப் பொறுப்பாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திரு. தங்கத் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும்; மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; நகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; ஊராட்சிக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும்; சார்பு அணி நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெய் வருத்தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், 'கருமமே கண்ணாயினார்' என்பதற்கேற்ப, ஓயாமல் அல்லும் பகலும் அயராது உழைத்த திராவிட முன்னேற்றக் கழக உடன் பிறப்புகளுக்கும்; மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும்; நிர்வாகிகளுக்கும்; தொண்டர்களுக்கும்; என்னை வெற்றி பெறச் செய்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் எனது கோடானு கோடி நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழிலாளர்களின் உழைப்புக்கு மதிப்பளிக்கும் நாளாகவும், தொழிலாளர்களின் வெற்றிகளை நினைவுகூரும் நாளாகவும் ‘மே தின’ திருநாள் விளங்குகிறது.
நம் நாடு சிறந்த கட்டமைப்பினை இன்றைக்கு பெற்றிருக்கிறது என்றால் அதற்கு முக்கியக் காரணமாக விளங்குபவர்கள் தொழிலாளர்கள். உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளாம் ‘மே தின’ நன்னாளில் அனைத்து தொழிலாளர் பெருமக்களுக்கும் எனது ‘மே தின’ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் வெற்றி பெற எனது நல்வாழ்த்துகள்.
நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளராக என்னைத் தேர்வு செய்து மகத்தான வாய்ப்பு அளித்து, என்னை ஆதரித்து தேர்தல் பரப்புரை ஆற்றிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் நான் வெற்றி பெற உறுதுணையாக இருந்து, தேர்தல் பரப்புரை ஆற்றி, உற்சாகம் ஊட்டிய கழக இளைஞர் அணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களுக்கும், கழக துணைப் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.திருச்சி சிவா @tiruchisiva அவர்களுக்கும், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.கி.வீரமணி அவர்களுக்கும், தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன் @ThangaTamilselv அவர்களுக்கும், களத்தில் அயராது உழைத்த, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், நமது கழக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், சமூக வலைதளப் போராளிகள், தன்னார்வலர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் எனக்கு வாக்களித்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்கள் என அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும்!
தமிழ்நாடு வெல்லும்!
நாம் வெல்வோம் ஒன்றாக!
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக #வெல்வோம்இருநூறு_படைப்போம்வரலாறு #CMMKStalin #DMKfor2026