முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவர் நமது தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள்.
#DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!
#வெல்வோம்_ஒன்றாக!
#dmdk#dmk
ஒவ்வொரு கோரிக்கையும் வெவ்வேறானது… ஒவ்வொரு கோரிக்கையின் பின்னாலும் மக்களின் தேவையும், எதிர்பார்ப்பும் இருக்கிறது.
அதனைப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு கோரிக்கையையும் தனித்தனியாக கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மக்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்க, அரசு செயல்பட்டே ஆக வேண்டும்!
மக்களின் குரலை புரிந்துகொண்டு செயல்படுவதே உண்மையான மக்கள் பணி!
#dmdk #premalathavijayakanth
சட்டசபை முடிந்த பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்து, மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து எடுத்துரைத்தேன்.
மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு உரிய முக்கியத்துவம் அளித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
#tnassembly2026
#premalathavijayakanth
சென்னை தின வாழ்த்துகள்!
உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில், வரலாற்றுச் சிறப்பும், பண்பாட்டுப் பெருமையும், நவீன வளர்ச்சியும் கொண்ட நமது அன்புச் சென்னை மாநகருக்கு என் இனிய சென்னை தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னையின் பெருமையும், வளர்ச்சியும் மேலும் உயர்ந்து, அனைவரும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
#chennaiday #wishes
புகைப்படக் கலைஞர்களுக்கு வாழ்த்து!
புகைப்படம் என்பது ஒரு நொடியை வரலாறாக மாற்றும் அற்புதக் கலை. தங்களது கேமரா கண்கள் மூலம் நிகழ்வுகளையும், உணர்வுகளையும், நினைவுகளையும் உலகிற்கு பதிவு செய்து வரும் அனைத்து புகைப்படக் கலைஞர்களுக்கும் உலக புகைப்படக் கலைஞர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது திறமையும் உழைப்பும் என்றும் போற்றப்படட்டும்!
#premamalathavijayakanth #photographerday
கேப்டன் 74-வது பிறந்தநாள் – முப்பெரும் விழா
கழகத்தின் நிறுவனத் தலைவர் புரட்சிக் கலைஞர் கேப்டன் அவர்களின் 74-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருத்தாசலத்தில் வரும் 25.08.2026 அன்று எனது தலைமையில் வறுமை ஒழிப்பு தினம், மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறு இருக்கிறது.
மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கணினி மையம் மற்றும் தையல் பயிற்சி பள்ளி திறந்து வைக்கப்பட உள்ளன.
கேப்டன் அவர்களின் பிறந்தநாளை மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாகக் கொண்டாடுவோம்!
#happybirthdaycaptain
கேப்டன் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவுகளை போற்றி வணங்கினேன்.
கேப்டனின் கொள்கைகளையும், அவர் காட்டிய மக்கள் சேவைப் பாதையையும் தொடர்ந்து முன்னெடுத்து செல்வோம்.
#dmdkofficial#premalathavijayakanth
80 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று தேமுதிக தலைமைக் கழகத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினேன். 🇮🇳
நாட்டிற்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்த தியாகிகளையும், சுதந்திரப் போராட்ட வீரர்களையும் இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்குகிறோம்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
கேப்டன் அவர்களின் வழியில், தேமுதிக என்றும் மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் கம்பீரமாக பயணிக்கும்.
“கேப்டன் காட்டிய பாதையில்… மக்கள் பணியே மகேசன் பணி!”
#IndependenceDay2026 #சுதந்திரதினம் #DMDK #PremalathaVijayakanth #india
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை -
#DMDK2#PremalathaVijayakanth#fisherman
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமநாதபுரம் மீனவர்கள் உள்ளிட்ட கைது செய்யபட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி அறிக்கை -
#DMDK2#PremalathaVijayakanth#fisherman
கேப்டன் ஆலயத்தில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவிடமான கேப்டன் ஆலயத்தில் இன்று சிறப்பு பூஜை செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினேன்.
கேப்டன் மீது அன்பும், பாசமும் கொண்ட அனைவரின் நலனுக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தோம். கேப்டன் வழியில் மக்கள் பணியே எங்களின் பயணம்.
#premamalathavijayakanth #Cpatainvijayakanth