என் மண் என் மக்கள் யாத்திரை அண்ணன் @annamalai_k அவர்களின் வருகையால் கலைகட்டியது உடன் இளைஞர்களின் எழுச்சி நாயகன் அண்ணன் @ShivaaBJYM அவர்களுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது உடன் மாநிலநிர்வாகிகள்மாவட்டதலைவர் @rajasimha123 உடன் மண்டல் தலைவர்கள் (ம )நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், எனது இனிய நண்பருமான @annamalai_k அவர்கள் இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வுப் பயணம் தொடரவும், நூறாண்டு வாழவும் வாழ்த்துகிறேன்.
இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன.
உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
My heartfelt gratitude to all my brothers and sisters, friends, and well-wishing elders for your warm greetings that made my birthday truly special.
Your immense love, affection, and continuous support have given me the motivation and enthusiasm to work with even greater dedication for the welfare, safety, and prosperous future of all sections of our society, especially Tamil Nadu's farmers, youth, women, and children.
I remain forever indebted to your love and trust. Once again, my sincere thanks to everyone.
நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
மதுரை சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு எத்தனை எம்எல்ஏ-க்கள்??
எந்தத் தொகுதியானாலும் ஒரு எம்எல்ஏ மட்டும் தான். அதன்படி சோழவந்தான் எம்எல்ஏ மட்டும் தானே, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ இருக்கையில் அமர வேண்டும்.
#தவெக உறுப்பினர் அட்டையோடு வருகிறவர், போகிறவர் எல்லாம் அமர்ந்து Reels எடுத்து விளையாட அது என்ன Musical Chair?
@TVKVijayHQ@BJP4TamilNadu
கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.
குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, CBSE அமைப்பு மீறியிருக்கிறது.
CBSE அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும்.
எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
TVK Minister Thiru Aadhav Arjuna has relived the famous Tamil comedy; "ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து". For a moment, Thiru Aadhav Arjuna seemed to have forgotten which party he presently belongs to now. Party Hopper’s Paradox!
Even DMK cadres did not go this length to defend Thiru Udhayanidhi Stalin as Thiru Aadhav Arjuna did.
How does Sanathana Dharma become synonymous with the Hindu religion in North India, but conveniently get redefined as inequality the moment the discussion shifts to Tamil Nadu?
Very confusing bro!
Instead of expressing regret for the deeply irresponsible remarks made by the TVK MLA, Thiru Aadhav Arjuna has chosen to justify and normalise them.
குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம்.
கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.
கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது.
அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ@TVKPartyHQ
தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என அறிவித்துவிட்டு தற்போது இரு மாதத்திற்கு 200 யூனிட் இலவசம் என அறிவிப்பதா ? - தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதை முழுமையாக செயல்படுத்திட தவெக அரசு முன்வர வேண்டும்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தகுதியுள்ள வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் மின்சாரம் கட்டணமின்றி வழங்கப்படும் என வாக்குறுதியளித்த தமிழக வெற்றிக் கழகம், ஆட்சிக்கு வந்த முதல் நாளே இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்திருப்பது முன்பின் முரணாக உள்ளது.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வீசுவதையும், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அதனை செயல்படுத்த மறுப்பதையுமே அடிப்படையாக கொண்டிருந்த திமுக அரசின் நீட்சியாகவே இந்த அரசையும் பார்க்கவேண்டியுள்ளது.
எனவே, இரு மாதங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற உத்தரவை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @TVKVijayHQ@TVKPartyHQ@CMOTamilnadu
Backstabbing from the shadows.
Every sacrifice was mocked. Every struggle was ignored.
But storms are not born in comfort.
They are born through pain, betrayal, and fire.
Everything will change.
A storm is coming.
Silent. Relentless. Uncontrollable.
And when it rises,
nothing can stand in its way.
2031.
AIADMK - PMK - AMMK to form Govt..
DMK - VCK - CPI - CPM to support from outside..
CMP - Common Minimum Program
DMK's schemes will continue..
Centre's PMShri, 3 language policy etc., will not be supported..
Heartfelt congratulations to Thiru.@RCPK_Official on his resounding victory in the Madras High Court Advocates’ Association (MHAA) President election.
His unwavering devotion to the Judiciary and our great Nation has always been an inspiration to many. Wishing him a highly successful tenure ahead!
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க (MHAA) தலைவர் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி அடைந்துள்ள திரு.பால் கனகராஜ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நீதித்துறையின் மாண்பைக் காப்பதிலும், நமது தேசத்தின் மீதும் அவர் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அனைவருக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகும். அவரது இந்தத் தலைமைப் பொறுப்பு மென்மேலும் பல சிறப்புகளைப் பெற்றுத் திகழ நல்வாழ்த்துக்கள்!
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில், மகத்தான வெற்றி பெற்றுள்ள @BJP4Tamilnadu மாநிலத் துணைத் தலைவர், அன்பு அண்ணன் திரு @RCPK_Official அவர்களுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப் பணியில் சீரிய அனுபவமும், சமூகப் பொறுப்பும் கொண்டுள்ள அண்ணன் திரு @RCPK_Official அவர்கள், தனது மேலான பணிகளாலும், தலைமைப் பண்புகளாலும், வழக்கறிஞர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
" சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வு, சித்திரை பௌர்ணமியன்று மதுரையில் வைகை ஆற்றில், அழகர் இறங்கும் வைபவம்.
பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் பக்தியில் இணைக்கும் ஓர் உன்னதவிழா.
தவளையாக சாபம் பெற்ற மண்டூகமகரிஷிக்கு விமோசனம் கொடுக்க சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடமிட்டுத் தங்கக்குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருள, பக்தர்கள் காவல் தெய்வமான கருப்பசாமி வேடத்தில் இசைக்கேற்ப ஆடுவதும், தண்ணீர் பீய்ச்சி அடிப்பதும் காணக் கண்கொள்ளாக் காட்சி.
திருக்கண் எழுந்தருளலும், தெருதோறும் அன்னதானமும் மனதையும் வயிறையும் நிறைவு செய்யும்.
இவ்விழாவைக் கொண்டாடும் மதுரை மக்களை வாழ்த்துவதோடு, நல்லமழை பெய்து நானிலம் சிறக்க நானும் வேண்டுகிறேன்." - ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு ஆளுநர்
#KallalagarFestival #ChithiraiFestival #Madurai
#TamilNadu
@rashtrapatibhvn@VPIndia@PMOIndia@HMOIndia@rajendraarlekar@KeralaGovernor@MIB_India@PIB_India@pibchennai@DDNewslive@DDTamilNews@airnewsalert@airnews_Chennai@CBCCHENNAI_MIB@ANI@PTI_News
கண்ணா. வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்.
திமுக கூட்டணியை தரைமட்டமாக்குறதுல என் பங்கு இல்லன்னா எப்படி ?
குஜராத்தில் என்னை பாதுகாத்து வைக்கச் சொல்லி உத்தரவிட்டவர் @AmitShah@chennaipolice_ முடிந்தால் வந்து கைது செய்யட்டும்.
இன்றைய தினம் மதுரை திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு தமிழ் கடவுள் முருகப்பெருமானை பக்தியுடன் தரிசனம் செய்ய நம் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள், நம் பாரத தேசத்தின் வளர்ச்சிக்காக ரூபாய் 4,400 கோடி மதிப்பிலான பல புதிய தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கவும், மேலும் மதுரையில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான NDA கூட்டணி மாநாட்டில் கலந்து கொள்ளவும் நேற்றைய தினம் தமிழகம் வருகை தந்தார். அவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றேன்.