#அறம் இதழின் ஆசிரியர்
திரு சாவித்திரி கண்ணன் அவர்களுக்கு நன்றி.
.....
சீனு ராமசாமியின் சிறப்பான படைப்புகள்.
சினிமா புகழ் என்பது உண்மையான நட்புகளையும், உறவுகளையும் மறக்கடிக்கும்!
அப்படியில்லாமல் இன்னும் மனதின் ஈரத்தை அப்படியே பாதுகாத்து நேச நெஞ்சோடு வலம் வருபவராக இயக்குனர் சீனு ராமசாமி இருக்கிறார் என்பதற்கு இந்த நூல்களே சாட்சியாகும்.
பால்ய காலத்தில் தான் பழகிய நண்பர்கள், தன்னை பக்குவப்படுத்திய தோழமைகள், உதவிக் கரம் தந்து உயர்த்திவிட்டவர்கள், சென்னையில் பசியால் அலைந்து திரிந்த போது சோறிட்டவர்கள்..என எல்லோரையும் உள்ளம் நெகிழ எழுதி நினைவு கூர்ந்துள்ளார், சீனு ராமசாமி ‘பெரும் மெளனங்கள்’ எனும் நூலில்!
இவற்றில் ஒரு சிறுகதைக்குரிய இலக்கிய அந்தஸ்த்து பெறும் அனுபவப் பதிவுகளும் அடக்கம். ஒரு சினிமா உருவாகத் தேவையான கதை மூலங்களும் உள்ளன என்பது தான் இந்த நூலின் சிறப்பாகும்.
மணல் உயிர், நிலத்தவள் இரண்டு நூல்களும் கவிதை தொகுப்பு.
இவை சொல்லும் அனுபவ வலிகள் அசாதரணமானவை!
செல்வாக்கானவர்களால் வாய் பேச முடியாதவனின் வலியை இந்தக் கவிதை மிக வலிமையாகவும், நக்கலாகவும் கடத்துகிறது.
நேற்று ஒருவன்
என்னை நாயாக மாறி வாலாட்டச் சொன்னான்
ஒருவன் குனிந்து
முதுகு தூக்கி பணிவான பூனையாக்கினான்.
அவன் தட்டில் அவ்வளவு பால் எவர் வைத்தது எனத் தெரியவில்லை.
ஒருவன் ஆசைபூட்டிக் குதிரையாக்கி
தி.நகர் வரை சவாரி செய்தான்.
ஒருவன் நரியாக்கப் பார்த்தான்.
ஒருவன் குரங்காக்கி கோபமா என்கிறான்.
குணக்கேட்டின் மனித வடிவு.
ஒவ்வொருவரும் ஒரு மிருகமாக்கிட
கடைசியில்
நான் யானையாகி தனியே அலைந்து
மரங்கள் முட்டி பிளிறினேன்.
இதே போல மற்றொரு கவிதை என்னை திகைக்க வைத்தது.
தந்திரம் அறிவாகி
அறிவு செல்வத்தை
பயக்கும் செயலாகி
செயல் முன்னுதாரணமாகி
பிழைக்க தெரிந்தவன்
கதைகளில் நேர்மையாளன்
மனநோய் வினோதன்,
நன்மையாளன்
பிழைக்கத் தெரியாத மூடன்,
கருணையாளன் மன்னிப்பவன் கோழை
மறப்பவன் பிசகிய அதீதன்
வஞ்சகன் வன்மன் குரூரன்
ஊர் மெச்சும் நாயகன்.
இந்தக் கவிதை இந்த போலிச் சமூகத்தின் முகத் திரையை விளக்கி நமக்கு காட்டுகிறது.!
சினிமாவின் ஆன்மா, ஒளிரும் வகுப்பறைகள் இரண்டும் சர்வ தேச அளவினான தரமான படங்கள் குறித்த ஆசிரியரின் ரசனையான விவரணைகளாகும். ஒரு திரைப் படக் கல்லூரியின் பாடத் திட்டமாக வைக்கத் தகுந்த நூல்கள் என இவை இரண்டையும் சொல்லத் தோன்றுகிறது.
சாவித்திரி கண்ணன்
Having carved his artistic mettle and depth as an actor in Kozhipannai Chelladurai — a cinematic journey I had the privilege of directing, brought to fruition by Vision Cinema House— Actor
Aegan returns today with #Haiku.
As it steps into the world today,
I extend my most heartfelt wishes for its resounding success. May this creation find its rightful place in the hearts of the audience.
@vchproduction@arulanandhu_d@ActorAegan
இயேசு பிரானின் அற்புதங்களின் பெருமையை சொல்லும், "கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்றார்", எனும் திருவசனப் பாடலின் வழி
தன் அன்பின் குரல்வளத்தால்
என் இதயத்தில் நீங்கா
இடம் பிடித்தவரும்
திரைப்பட பின்னணிப் பாடகருமான
திரு,கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
என் இதயபூர்வமான
அஞ்சலி 🙏🕯️
https://t.co/k31zcDHlAw
#SingerKrishnaraj #RIPKrishnaraj #TamilPlaybackSinger #DevaSongs #Tribute
எனது அனுபவங்களின் கட்டுரைத் தொகுப்பான 'பெரும் மௌனங்கள்' நூலுக்குச் சிறப்பான விமர்சனம் வழங்கிய 'தினமணி' நாளிதழுக்கு மிக்க நன்றி
இந்நூலை வெளியிட்ட வம்சி பதிப்பகம் மற்றும் பதிப்பாசிரியர் & எழுத்தாளர் கே.வி. சைலஜா அவர்களுக்கு எனது அன்பும் நன்றிகளும்
@DinamaniDaily #வம்சிபதிப்பகம்
#PerumMaunangal #BookReview
ஒளியின் மலர்கள்
....
பூக்கூடையுடன்
தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வாகனத்தின்
பின்புறம் அமர்ந்திருக்கும்
பெண்கள்மீது
இளவெயிலின்
வெளிச்சம் தொட்டும் தொடாமல்
பின்தொடர்கிறது.
சீனு ராமசாமி
International Day of Rural Women
#seenuramasamypoetry
Photo: Idam porul yeaval movie
அனைவருக்கும் அன்பான வணக்கம்,
உங்கள் ஒவ்வொருவரின் பிறந்தநாள் வாழ்த்தும்
எனக்கு மிகவும் முக்கியமானது,
அது உங்களது
தனிப்பட்ட அன்பின் பிரார்த்தனை.
நன்றியுடன்
சீனு ராமசாமி.
An artist always lives through his art form.
Writer Director Chezhiyan here 🌺
Proud to share the teaser of his film #KaagithaMalar .
https://t.co/TPsiutejcG
@Rchezhi
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீட்டில் எனது புதிய கவிதை நூலான "திருஷ்டி பொம்மையின் மீசை" விரைவில் வெளிவருகிறது
நூலிலிருந்து இரண்டு சிறிய கவிதைகள்.
இரகசியம்
...
இலைகள் பழுத்த
வெயில் காலத்திய வேப்பமரம்
இரவெல்லாம்
இரகசியமாக என்ன செய்தது?
கொஞ்சம் காற்று வீசிக்கொண்டிருந்தது
கொஞ்சம் மரமும் அசைந்துகொண்டிருந்தது
அவ்வளவுதான்
விடியும்பொழுது
பூத்திருக்கிறது.
கூட்டிசை
...
அந்த மலையோரக் கிராமத்தின்
கிணற்றில்
சிட்டுக்குருவிகளின் கூடுகள்
அங்கே
மிதக்கும் நிலவில்
கீச்சொலிகள்.
சீனு ராமசாமி
#seenuramasamypoems
@vediyappan77
"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாம்"
என்பார் பாரதி,
அத்தகைய நெஞ்சத்தால்
தன் செயலில் துணிந்து
அமைதிக்கான சர்வதேசச் சட்டங்களையும் பாதுகாப்புகளையும்
மீளுருவாக்கம் செய்ய முனைந்தமைக்கு
2026 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கும்
தென்னாப்பிரிக்காவில்
தமிழ் வம்சாவளியில் பிறந்த
நவநீதம் அம்மையாருக்கு நல்வாழ்த்துகள்.
#Navanethem #NobelPeacePrize2026 #HumanRights #Tamil #Bharathiyar #Peace #SouthAfrica
அனைவருக்கும் அன்பான வணக்கம்.
வாழ்த்துகள்.
தனியார் பள்ளிகளைப் போல அரசுப் பள்ளிகளுக்கும் பேருந்து அல்லது வேன் (School Bus / Van) வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எழுதப்பட்ட இக்கட்டுரை,
வெகு சிறப்பாகச் செயல்பட்டுவரும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கவனத்திற்கு
இது விரைவில் நிறைவேறும் என்று நம்புவோம்.
கட்டுரையை வெளியிட்ட அறம் பத்திரிக்கையின் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி
🔗 https://t.co/JkSmC7v8SF
@tnschoolsedu