யோகி, ஞானி, தொலைநோக்குப் பார்வையாளர் &
@ishafoundation நிறுவனர்
சத்குருவிடம் இருந்து வரும் டுவீட்களின் மொழிப்பெயர்ப்பு “-சத்குரு” என்று குறிக்கப்பட்டிருக்கும்.
வாழ்க்கையின் வெளிப்புற பரிமாணங்கள் உங்களுக்கு வசதியையும் சௌகரியத்தையும் கொண்டு வரலாம். உள்நிலை பரிமாணம் மட்டும்தான் நிறைவை கொண்டு வரும்.
#SadhguruQuotes#குருவாசகம்
எந்த உறவும் பரிபூரணமானது அல்ல - எப்போதுமே அது மாறக்கூடிய விஷயம்தான். தினம்தினம் அதை நீங்கள் நல்லபடியாக நடத்திக்கொள்ள வேண்டும்.
#SadhguruQuotes#குருவாசகம்
நீங்கள் யார் என்பது நீங்களாக உருவாக்கிக் கொள்வதுதான். இது உங்களுக்கு புரிந்து விட்டால், குறைந்தபட்சம் உங்களை மட்டுமாவது நீங்கள் விரும்பிய விதத்தில் இருக்கும்படி ஆக்கிக்கொள்ள வேண்டும்.
#SadhguruQuotes#குருவாசகம்
பணம் பண்ணுவதை பற்றி மட்டுமே யோசிக்காதீர்கள், நன்றாக வாழ்வதை பற்றி
யோசியுங்கள். நன்றாக வாழ்வதின் மிக முக்கியமான அம்சம் – உங்களுக்கு
மிகவும் அக்கறையானது எதுவோ, அதை செய்வதுதான்.
#SadhguruQuotes#குருவாசகம்
குழந்தைகள் சாதி, மதம், வர்க்கம் என்ற விஷயங்களுக்குள் பொருந்த
வேண்டியதில்லை. அவர்களின் இயல்பான தன்மைக்குள் அவர்கள் மலர வேண்டும்.
#SadhguruQuotes#குருவாசகம்