காதலித்தவரை கரம்பிடிக்க முடியாமல் போனாலும்,
கட்டிக்கொண்டவர் எந்த குறையும் வைக்கவில்லை எனக்கு,
முப்பது வருட திருமண வாழ்க்கையில் மூன்று பிள்ளைகள்,
மூன்றாவது பெண்பிள்ளைக்கான திருமண பத்திரிகையை வைக்கப்போன இடத்தில்
இத்தனை வருடங்கள் கழித்து
அவரை இப்படி பார்ப்பேன் என்று நினைக்கவில்லை..!
வீடு திரும்பும் வரை
நான் நானாக இல்லை,
வீட்டுக்கு வந்தபின்பும்
நான் நானாக இல்லை. .!
எவ்வளவோ பேர் காதலிக்கிறார்கள்,
எல்லா காதலும் கல்யாணத்தில் சேர்வது இல்லை,
அவரவர்கென்று விதிக்கப்பட்ட வாழ்க்கையில்
அவரவர் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போய்விடுகிறார்கள்,
இப்படி என்றாவது ஒரு நாள் சந்திக்கும் போது,
என்னை நினைத்து அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை என்று கேள்விப்பட நேர்ந்தால்
அந்த வலி எவ்வளவு வலிக்கும் என்பது சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மட்டுமே தெரியும்..!
அப்படி சம்மந்தப்பட்ட பெண்ணாக நானிருப்பதால் அந்த வலியின் வலியை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவருக்கே போன் செய்து பேசிவிடலாமா என்று படபடக்கிறது மனம்!
இன்னொவர் மனைவியாக இருந்துகொண்டு முன்னாள் காதலருக்கு போன் செய்வதை நினைத்தால் தப்பாகவும் தெரிகிறது,
ஏன் இப்படி திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தீர்கள் என்று கேட்காமல் மனதில் வைத்து புழுங்கவும் முடியவில்லை!
அலுவலக நண்பர்களிடம் கேட்டு அவருடைய நம்பரை வாங்கிக்கொண்டேன்,
இரவு 9.45க்கு ஆறுமுறை போன் செய்து ஆறுமுறையும் ரிங் போவதற்குள் கட் பண்ணிவிட்டேன்!
ஏழாவது முறை போன் செய்வதற்குள் அவரிடம் இருந்தே போன் வந்தது!
எப்போது வெளியே வந்து விழுந்துவிடுமோ இதயம் என்கிற படபடப்போடு நீண்ட நேரம் ரிங் போன பிறகு போனை எடுத்து காதில் வைத்தேன்,
வணக்கங்க. .
ரெண்டு முறை இந்த நம்பர்ல இருந்து மிஸ் கால் வந்தது
யாருன்னு கேட்கலான்னு தான் போன் பண்ணேன் என்றார்,
முப்பது வருடங்கள் கழித்து அந்த கண்ணியவானின் குரலை கொஞ்சம் கரகரப்போடு கேட்டேன்,
நான் தனலட்சுமி பேசறேன் என்றேன்!
சில வினாடி இடைவெளிக்கு பிறகு எந்த தனலட்சுமி என்று கேட்டார்,
தனலட்சுமி என்றேன்..
அவருக்கு புரிந்துவிட்டது. .
அந்தப்பக்க மௌனம்
இந்தப் பக்கத்தில் இருந்தே
சத்தமாக கேட்டது!
எப்படி இருக்கீங்க தனலட்சுமி,
நல்லா இருக்கீங்களா என்றார்,
இந்தப்பக்க மௌனம் இப்போது அந்தப்பக்கமும் பலமாக கேட்டிருக்கும் என நினைக்கிறேன்!
மௌனத்தை உடைத்து,
இப்போ நல்லா இருக்கேன்னு பொய் சொல்ல விரும்பல,
நேத்து உங்களை பார்க்கிற வரைக்கும் நல்லா தான் இருந்தேன்,
நீங்க கல்யாணம் பண்ணிக்கலன்னு தெரிஞ்சதில இருந்து அந்த சந்தோஷம் போயிடுச்சி என்றேன்!
கொஞ்ச நேர அமைதிக்கு பிறகு,
எனக்கு சரியா அமையல
அதுனால பண்ணிக்கல வேற எதுவும் காரணம் இல்லை என்றார்,
சின்னதா ஒரு பொய் சொன்னா கூட காலேஜில அப்படி கத்துவீங்க
இப்ப உங்களுக்கே பழகிடுச்சா என்றேன்,
கொஞ்சம் இடைவெளி விட்டு
நான் உண்மையை தான் சொல்றேன் என்றார்,
அந்த ஆஞ்சநேயர் கோயில்ல சத்தியம் பண்றீங்களா என்றேன்,
அமைதியாக இருந்தார்,
நான் உங்களுக்கு Invitation வைக்கனும் நாளைக்கு வரட்டுமா என்றேன்,
நான் ஓசூர் கிளம்பிட்டேன்
இன்னும் அரைமணி நேரத்தில்
பஸ் எடுத்துடுவாங்க என்றார்,
எனக்காக ஒரு நாள் தள்ளி போட முடியாதா என்றேன்,
இல்ல நீங்க வெங்கடேசன் கிட்ட கொடுத்துடுங்க நான் வாங்கிக்கிறேன் என்றார்,
உங்க கிட்ட நேர்ல சில கேள்விகள் கேட்கனும்,
அதுனால தான் நேர்ல பார்க்கனும்னு கேட்கிறேன் என்றேன்,
நாம இப்படி சந்திக்கிறது கரெக்ட் இல்ல, ஏதாவது கேட்கனும்னா போன்லயே கேளுங்க சொல்றேன் என்று கொஞ்சம் உறுதியாக சொன்னார்,
எனக்கு இப்போ இருபது வயசும் இல்ல,
நான் உங்களுக்கு காதலியும் இல்ல,
எனக்கும் எல்லாம் தெரியும்,
ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் பார்க்கனும் அவ்வளவு தான் என்றேன்!
சரி நான் ஆபிஸ்ல பேசிட்டு உங்களுக்கு போன் பண்றேன் என்றார்,
ஐந்து நிமிடம் கழித்து போன் செய்தார்,
நாளைக்கு ஒரு நாள் லீவு சொல்லி இருக்கேன் எங்க வரணும் என்றார்,
நான் உங்களை கடைசியா சந்திச்ச அந்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு வர முடியுமா என்றேன்,
அஞ்சு நிமிஷம் பேசறதுக்கு அவ்வளவு தூரம் போகனுமா என்றார்,
எனக்கு அந்த ஊர்ல கொஞ்சம் வேலையும் இருக்கு,
நீங்க அவ்வளவு தூரம்
வர முடியுமா என்றேன்,
கொஞ்சம் யோசித்து சரி என்றார்!
அடுத்த நாள் டிரைவரை அழைத்துக்கொண்டு கொஞ்சம் Invitation களை எடுத்துக் கொண்டு தனியாக கிளம்பினேன்!
சிறிய மலையில் இருந்த அழகான ஆஞ்சநேயர் கோயில் அது,
எங்கள் வாழ்க்கையை போல அதுவும் நிறைய மாறி இருந்தது,
எனக்கு முன்பே அவர் காத்திருந்தார்,
Congratulations on winning the ICC World Cup final 😂
Oh, sorry, it was just a group-stage match of the biggest event of all time, "Rising Stars Asia Cup" 🤪
These morons are celebrating a Group stage win of a Tin-top Trophy, such a delusional kaum 😅
When Pakistan 🇵🇰 U19 posted 337 runs on board, this Jahil illegitimate Chacha from Bhikharistan was challenging Indian 🇮🇳 U19 team 😂
"Tum hindu ho, tumse ye chase nhi ho paega, tumhare me dum nhi hai" 🤨
A must watch👇🏻🤪
Outstanding day for Indian cricket!
Immensely proud of our young cricketers for today’s impressive performance and for winning the Men’s U-19 Asia Cup 2026. Their success will inspire several youngsters.
Best wishes to the team for their endeavours ahead.
ACTION: Pakistan U19 Team after winning a Group stage match mocked India U19 Team and India spectators 🧐
REACTION: India U19 Team after winning the U19 Asia Cup 2026 Final took the revenge and mocked Pakistan U19 Team 💥
#INDvsPAK