சென்னை அரசு ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் து.ராஜா அவர்களை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். உடன் #CPIM மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், சிபிஐ மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
நில வகை மாற்றம் செய்து அனைவருக்கும் விரைந்து பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி #CPIM வடசென்னை மாவட்டக் குழு சார்பில், மிண்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விரைவில் வெளிவரவிருக்கிற மிக முக்கியமான நூல் இது. "தமிழ் மார்க்ஸ் குழு" இந்நூலைப் பதிப்பித்துள்ளனர்.
முன்வெளியீட்டுத் திட்டத்தில் கூரியர் செலவுடன் சேர்த்து ரூபாய் 300.
தோழர் லத்தீஸ் அவர்கள் இன்று மாலை நேரில் சந்தித்து இந்நூலை வழங்கினார்.
"ஆகா வென்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என்று ரஷ்யப் புரட்சியைக் குதூகலத்துடன் கொண்டாடி வரவேற்றான் மகாகவி பாரதி.
உலகத்துக்கு ஒரு புதுமையாக அப்புரட்சி வெற்றியடைந்து, தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. இதைவிடச் சிறந்த வேறு ஒரு ஆட்சி உலகில் இல்லை என்ற நிலையில், அது ஏன் வீழ்ந்தது? யாரால் வீழ்த்தப்பட்டது? எது காரணம் என்பதை அறிந்துகொள்வது சோசலிசத்தின் மீது அக்கறைகொண்ட அனைவரின் கடமை.
நூலை வாசித்துவிட்டு முழுமையான மதிப்புரை பின்னர். நூலுக்கு முன்பதிவு செய்யுங்கள்.
நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக மேலும் ஒரு தற்கொலை.
நீட் தேர்வு காரணமாக அனிதா முதல் சாய் அபிநோவ் வரை அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது நெஞ்சை உலுக்குகிறது.
பல்லாவரம் சாய் அபிநோவ் ஏற்கனவே இரண்டு முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத நிலையில் பயிற்சி மையத்தில் சேர்ந்து மீண்டும் தேர்வெழுதத் தயாராகி வந்துள்ளார். இந்த முறையும் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இன்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போயுள்ளார். அவருடைய பெற்றோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வற்புறுத்தித் தமிழகம் ஒன்றுபட்டு குரலை வலிமையாக எழுப்ப வேண்டும். இதற்காக இனி ஒரு மாணவனின் மரணமும் நிகழக் கூடாது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானிய கோரிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதிலுரை வழங்கினார். ஆனால் சட்டம் ஒழுங்கு, காவல்துறை உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய எந்த கேள்விக்கும் இந்த 'பதிலுரையில்' எந்த பதிலும் இடம் பெறவில்லை.
மக்கள் பிரச்சனை பற்றி பேசுவதற்கு பதிலாக முழுக்க முழுக்க எதிர்க்கட்சியை குறிவைத்து அடுக்கிய குற்றச்சாட்டுகளே நிரம்பி இருந்தன. ஒன்றிய அரசின் பிடியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் உள்ள நிலையில் அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை மட்டும் சொல்லி அதை ஊழல் என வகைப்படுத்துவது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல.
முதலமைச்சர் ஆக இருந்த திரு.அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டதும் பின்னர் நீதிமன்றம் அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மை அல்ல என்று தள்ளுபடி செய்ததையும் நாடு அறியும். தோழர் பினராயி விஜயன் மீது தங்கக் கடத்தல் வழக்கு பதியும் அளவிற்கு ஆளும் கட்சியின் அடியாளாக அமலாக்கத்துறை நடந்து கொண்டிருப்பதை விபரம் அறிந்த அனைவரும் அறிவோம். எனவே அமலாக்க துறையின் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களாக முன்வைப்பது பொருத்தமானது அல்ல.
அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்.
சட்டமன்றத்தை மக்கள் நலனுக்கு எந்த வகையிலும் எள்ளளவுக்கு கூட உதவாத தனிமனித தாக்குதல்களுக்கான இடமாகவோ அல்லது தங்கள் தலைவரை பாராட்டி பேசும் இடமாகவோ மாற்றுவது முற்றிலும் அறமற்ற செயலாகும். கடுமையான அரசியல் ரீதியான விமர்சனங்களை, அதுவும் கூட நாகரீகமாக சட்டமன்றத்திற்கு வெளியே வைப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது.
ஆனால் ஏழை, எளிய மக்கள் உள்ளிட்ட தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்றத்தின் நேரத்தை மக்கள் நலனுக்காக அன்றி விரயம் செய்வது, அது யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்த நாளான இன்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். #CPIM மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், #CPI மாநிலக்குழு உறுப்பினர் டி.லெனின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மாண்புமிகு தமிழ்நாடு அமைச்சர்கள் ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.
தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் ஆகியோரின் நடவடிக்கை தொடர்பாக அரசின் கவனத்திற்கு வராமல் அதிகாரிகள் செய்த தவறு என்றும், அதற்காக எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் செப்டம்பர் 2, 3தேதிகளில் சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர்.நினைவகத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் வசிக்கும் பழங்குடியினரான நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 10 மாணவிகள் அரசு பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்டு காயம் அடைந்து, தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொடூரமான செயலுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சம்பவத்திற்கு காரணமான ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது சரியானது.
சாதிய பாகுபாடு சட்டப்படி குற்றம் என்பதை ஊழியர்களுக்கு அரசு உணர்த்துவது அவசியம்.