சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களின் 121-வது பிறந்தநாள் விழா: திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அன்னதானம் வழங்கி கோலாகலக் கொண்டாட்டம்
தமிழுக்கும் தமிழினத்தின் எல்லை மீட்சிக்கும் தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட 'சிலம்புச்செல்வர்' ம.பொ. சிவஞானம் அவர்களின் 121 வது பிறந்தநாள் விழா இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
கிராமணி நாடார் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து மரமேறும் மக்கள் நலச்சங்கம் ஆகியவை இணைந்து இவ்விழாவினை மிகச் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்திருந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களின் திருவுருவச் சிலைக்கு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மலர் தூவி தங்களது நெஞ்சார்ந்த மரியாதையைச் செலுத்தினர். ம.பொ.சி. அவர்களின் தமிழ்த்தொண்டையும், எல்லைப் போராட்ட தியாகங்களையும் நினைவுகூரும் விதமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
இவ்விழாவில் பல்துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
நீதியரசர் ப. ஜோதிமணி(சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, சங்க கௌரவ செயலாளர் மற்றும் பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவர்) அவர்கள் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
திரு. மா. ரா. சௌந்தரராஜன் (சமூக சிந்தனையாளர், சர்வதேச விளையாட்டு வீரர் மற்றும் எழுத்தாளர்) அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இவர்களுடன் முக்கியப் பிரமுகர்களான திரு. KVS. சரவணன் மற்றும் திரு. விருகை VN. கண்ணன் ஆகியோரும் முன்னிலை வகித்து விழாவைத் தொய்வின்றி நடத்தினர்.
ம.பொ.சி. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நலப்பணியாக இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த பொதுமக்களும், அப்பகுதி மக்களும் இதில் பெருமகிழ்ச்சியோடு கலந்துகொண்டனர்.
ம.பொ.சி. அவர்களின் 121-வது பிறந்தநாளை வெறும் விழாவாகக் கொண்டாடாமல் மக்களுக்கு உதவும் அன்னதானப் பணியோடு ஒருங்கிணைத்து நடத்தியது. அவரது மக்கள் நல்வாழ்வுச் சிந்தனைக்குச் செய்யும் உண்மையான மரியாதை என விழாவில் பங்கேற்ற சான்றோர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களின் 121-வது பிறந்தநாள் விழா: திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அன்னதானம் வழங்கி கோலாகலக் கொண்டாட்டம்
தமிழுக்கும் தமிழினத்தின் எல்லை மீட்சிக்கும் தன் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட 'சிலம்புச்செல்வர்' ம.பொ. சிவஞானம் அவர்களின் 121 வது பிறந்தநாள் விழா இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
கிராமணி நாடார் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ்நாடு அனைத்து மரமேறும் மக்கள் நலச்சங்கம் ஆகியவை இணைந்து இவ்விழாவினை மிகச் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்திருந்தன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களின் திருவுருவச் சிலைக்கு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் மாலை அணிவித்து மலர் தூவி தங்களது நெஞ்சார்ந்த மரியாதையைச் செலுத்தினர். ம.பொ.சி. அவர்களின் தமிழ்த்தொண்டையும், எல்லைப் போராட்ட தியாகங்களையும் நினைவுகூரும் விதமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
இவ்விழாவில் பல்துறை சார்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
நீதியரசர் ப. ஜோதிமணி(சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, சங்க கௌரவ செயலாளர் மற்றும் பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவர்) அவர்கள் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்.
திரு. மா. ரா. சௌந்தரராஜன் (சமூக சிந்தனையாளர், சர்வதேச விளையாட்டு வீரர் மற்றும் எழுத்தாளர்) அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இவர்களுடன் முக்கியப் பிரமுகர்களான திரு. KVS. சரவணன் மற்றும் திரு. விருகை VN. கண்ணன் ஆகியோரும் முன்னிலை வகித்து விழாவைத் தொய்வின்றி நடத்தினர்.
ம.பொ.சி. அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நலப்பணியாக இருநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த பொதுமக்களும், அப்பகுதி மக்களும் இதில் பெருமகிழ்ச்சியோடு கலந்துகொண்டனர்.
ம.பொ.சி. அவர்களின் 121-வது பிறந்தநாளை வெறும் விழாவாகக் கொண்டாடாமல் மக்களுக்கு உதவும் அன்னதானப் பணியோடு ஒருங்கிணைத்து நடத்தியது. அவரது மக்கள் நல்வாழ்வுச் சிந்தனைக்குச் செய்யும் உண்மையான மரியாதை என விழாவில் பங்கேற்ற சான்றோர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
போரால் சீர்குலைந்த உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பான சர்வதேச மறுசீரமைப்பு மாநாடு போலந்து நாட்டின் கடான்ஸ்க் நகரில் நடைபெறவுள்ள நிலையில் அதில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி நேரில் பங்கேற்காமல் புறக்கணித்தது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
போலந்துடன் நீடித்து வரும் ராஜதந்திர மோதலே இந்த முடிவுக்குக் காரணம் என கூறப்படுகிறது. ஜெலன்ஸ்கிக்கு பதிலாக உக்ரைன் பிரதமர் யூலியா ஸ்விரிடென்கோ தலைமையிலான குழு மாநாட்டில் பங்கேற்கிறது.
இரு நாடுகளுக்கிடையேயான விருது மற்றும் வரலாற்று சர்ச்சைகள் இந்த முடிவுக்கு பின்னணியாக இருப்பதாகவும் மாநாடு சுமுகமாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே ஜெலன்ஸ்கி வரவில்லை என போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.
#Ukraine #Poland #VolodymyrZelenskyy #DonaldTusk #YuliaSvyrydenko #UkraineRecovery #InternationalNews #Diplomacy #Europe #WorldNews #Geopolitics #BreakingNews
உலகக் கோப்பை களத்தில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியை நேருக்கு நேர் சந்தித்தால் அற்புதமாக இருக்கும் என்று போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
#CristianoRonaldo#LionelMessi#Ronaldo#Messi#Portugal#Argentina#FIFAWorldCup#WorldCup2026#Football #Soccer #CR7 #GOATDebate #FootballNews #SportsNews #PortugalVsArgentina #WorldCupQualifiers #LegendaryRivalry #ViralSports #FootballFans #MessiVsRonaldo
JUNE 21, Lions District 3241 C Annual Awards Ceremony at the MCC School Auditorium, Harrington Road was filled with excitement for the extraordinary service projects done by Lions club of AAYUSH. Lions AAYUSH Members are well known for their dedicative services and where there is a need there is a Lion.
A proud moment to share that Lions Club of AAYUSH, received an impressive "INNOVATIVE PROJECT AWARD" along with 11 awards. This remarkable achievement and outcome is the result of the collective efforts, dedication, and commitment of all our club members.
LIONS CLUB OF AAYUSH is a family-oriented professionals club with a strong focus on meaningful community service with Humanitarian touch. One of our flagship service project is regular free medical camps to the needy people.
Congratulations to all the award winners and contributors who made this achievement possible.
MJF Lion Dr Chandrakumar N Club Membership Chairperson recieved International President's appreciation Certificate for membership growth along with keymember pin from Honourable Justice S K Krishnan on 21 June 2026.
FIFA உலகக் கோப்பை 2026 தொடரில் வீரர்களின் திறமையைப் போலவே பயிற்சியாளர்களின் அனுபவமும் கவனம் ஈர்த்து வருகிறது.
இந்த தொடரில் குராசாவோ அணியின் 78 வயதான டிக் அட்வோகாட், செக்கியா அணியின் 74 வயதான மிரோஸ்லாவ் கௌபெக், தென்னாப்பிரிக்காவின் 74 வயதான ஹியூகோ ப்ரூஸ் மற்றும் கானா அணியின் 73 வயதான கார்லோஸ் குவெய்ரோஸ் ஆகியோர் உலகக் கோப்பை வரலாற்றில் மிக வயதான தலைமை பயிற்சியாளர்களாக திகழ்கின்றனர்.
பல தசாப்தங்களாக கால்பந்தில் அனுபவம் பெற்றுள்ள இவர்கள். வயது என்பது வெற்றிக்கு தடையல்ல என்பதை நிரூபித்து வருகின்றனர். இளம் வீரர்களின் ஆற்றலுடன் மூத்த பயிற்சியாளர்களின் அனுபவமும் இணையும் போது உலக கால்பந்தில் புதிய சாதனைகள் உருவாகும் என்பதை இந்த உலகக் கோப்பை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.
#FIFAWorldCup2026 #WorldCup2026 #Football #DickAdvocaat #MiroslavKoubek #HugoBroos #CarlosQueiroz #Curaçao #Czechia #SouthAfrica #Ghana #FootballCoach #WorldCupRecords #SportsNews #PalsuvaiSeithigal
இந்திய அணியில் அறிமுகமாகி உள்ள 15 வயது இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
சச்சினின் 36 ஆண்டுகால இளம் வயது அறிமுக சாதனையை முறியடித்து இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்துள்ள வைபவ் குறித்து பேசிய அவர், “சச்சின் கிரிக்கெட்டின் கடவுள். வைபவ் சூர்யவன்ஷி கடவுளின் பிள்ளை.
சச்சினுக்கு நிகராக யாரும் வர முடியாது. எனவே இருவரையும் ஒப்பிடாமல் வைபவ் தனது சொந்த அடையாளத்துடன் வளர அனுமதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இளம் வயதிலேயே இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ள வைபவ் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
#VaibhavSuryavanshi #SachinTendulkar #KrisSrikkanth #TeamIndia #IndianCricket
#CricketNews #YoungTalent #CricketUpdates #SportsNews #TamilSportsNews
இந்தியா - ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அபாரமாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் டி20 அணியில் இடம் பெறாதது குறித்து முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் 84 மற்றும் 154 ரன்கள் குவித்து இந்தியாவின் தொடர் வெற்றியில் முக்கிய பங்காற்றிய கில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அயர்லாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பேசிய அசாருதீன் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடும் திறன் கொண்ட கில் போன்ற வீரரை டி20 அணியில் புறக்கணித்திருப்பது ஆச்சரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரன்கள் குவித்து வரும் கில்லை டி20 அணியில் சேர்க்காத தேர்வாளர்களின் முடிவு தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
#ShubmanGill #MohammadAzharuddin #TeamIndia #IndianCricket #T20Cricket #CricketNews #INDvsAFG #ShubmanGill154 #IndiaCricket #CricketUpdates #T20Squad #ShreyasIyer #SportsNews #CricketFans #TamilSportsNews
இஷான் கிஷன் விளையாடிய விதம் குறித்து அணி மீட்டிங்கில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இஷான் கிஷன் சதம் அடித்தப் பிறகு அனைத்து பந்துகளையும் தூக்கியடிக்க முற்பட்டார். குறிப்பாக கடைசி நேரத்தில் சோர்வுடன் விளையாடி ஒத்த கையில் மட்டுமே பந்துகளை தூக்கியடிக்க ஆரம்பித்தார். அப்படி விளையாடி தொடர்ந்து இரண்டு பந்துகளில் சிக்ஸர்கள் அடித்த இஷான் கிஷன் மூன்றாவது பந்தையும் ஒத்த கையில் தூக்கியடித்தார். அந்த பந்து கேட்ச் ஆனது. இதுதான் தற்போது கம்பீரின் கோபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து அணி மீட்டிங்கில் பேசிய கம்பீர், ''இஷான் கிஷன், ஷுப்மன் கில் ஆட்டம் வியப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இருப்பினும் கிஷன் அவுட் ஆன விதம் எனக்கு கோபத்தைதான் ஏற்படுத்தியது. சோர்வாக இருந்தால் களத்திற்குள் பிசியோவை அழைத்து அதனை சரி செய்யும் வேலையை செய்திருக்க வேண்டும் அல்லது ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறியிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ஏன் ஒத்த கையில் ஆடி, அவுட் ஆக வேண்டும்.இது நல்ல பழக்கம் கிடையாது''
''நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளீர்கள். அதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இந்திய அணியில் யாருக்கான இடமும் நிரந்தம் கிடையாது. மீண்டும் இதேபோன்ற தவறை செய்தால் அடுத்து அணியில் எப்படி, தொடர்ச்சியாக விளையாட வைக்க முடியும். இது சாதாரண தவறு கிடையாது. இந்திய அணிக்காக விளையாட வந்துவிட்டால் கடைசிவரை முழு அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். இப்படி சோம்பேறியாக ஆடினால் இந்திய அணியை அவமதிக்கும் செயல்'' என கம்பீர் இஷான் கிஷனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#IshanKishan #GautamGambhir #ShubmanGill #TeamIndia #IndianCricket #ODICricket #CricketNews #IshanKishan125 #GambhirWarning #SportsNewsTamil
பீகார் மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரக்ஸாலைச் சேர்ந்த இளம் வீராங்கனை அக்சரா குப்தா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். வெறும் 126 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 306 ரன்கள் குவித்த அவர். 55 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களை விளாசி எதிரணியை திணறடித்தார். 242.86 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய அக்சரா, 16 பந்துகளில் அரைசதமும் 34 பந்துகளில் சதமும் அடைந்து அசத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வைபவ் சூர்யவன்ஷி மூலம் கவனம் பெற்ற பீகார் கிரிக்கெட் தற்போது அக்சரா குப்தாவின் இமாலய சாதனையால் மீண்டும் உலக கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பீகார் கிரிக்கெட் சங்கம் நடத்தும் மகளிர் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டம் இன்று (வியாழக்கிழமை, ஜூன் 18) பாகல்பூரில் உள்ள சாண்டிஸ் காம்பவுண்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் களமிறங்கிய ரக்ஸால் பகுதியைச் சேர்ந்த அக்சரா குப்தா எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
மைதானத்தில் 233 நிமிடங்கள் வரை நிலைத்து நின்று விளையாடிய அவர் 242.86 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெறும் 126 பந்துகளில் 306 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அக்சரா குப்தாவின் இந்த அசாத்திய இன்னிங்ஸில் 55 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பவுண்டரிகளாக விளாசிய அவர் வெறும் 16 பந்துகளில் தனது அரைசதத்தையும், 34 பந்துகளில் சதத்தையும் கடந்து மிரட்டினார்.
இவரது இந்த அபாரமான பேட்டிங் திறன் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அக்சரா குப்தாவின் இந்த இமாலய சாதனையைப் பாராட்டிய பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஹர்ஷ்வர்தன் மற்றும் செயலாளர் ஜியாவுல் அர்பின் ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தின் கிரிக்கெட் வீராங்கனைகள் தொடர்ந்து மாநிலத்திற்குப் பெருமை சேர்த்து வருவதாகவும் இந்த தொடக்க ஆட்டத்திலேயே இத்தகைய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பீகார் கிரிக்கெட்டின் பிரகாசமான எதிர்காலத்தைக் காட்டுகிறது என்றும் அவர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முன்பாக இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வரலாற்றில் மும்பையைச் சேர்ந்த ஐரா குப்தா மாநில அளவிலான போட்டியில் 42 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 346 ரன்கள் குவித்ததே அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக உள்ளது. தற்போது அவருக்கு அடுத்தபடியாக அக்சரா குப்தா 306 ரன்கள் குவித்து மகளிர் கிரிக்கெட்டில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக பீகாரில் இருந்து வந்த 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தற்போது மகளிர் கிரிக்கெட்டிலும் அதே போல அக்சரா குப்தா அதிரடியாக 300 ரன்களுக்கு மேல் குவித்து இருக்கிறார். இதை அடுத்து பீகார் கிரிக்கெட் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
#AksharaGupta #BiharCricket #WomenCricket #CricketRecord #U19Cricket #IndianCricket #CricketNews #DoubleCentury #TripleCentury #SportsNews #BiharWomenCricket #YoungTalent #CricketWorld #WomenInSports #BreakingNews
2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனை முன்னாள் வீரர்கள் மனோஜ் திவாரி மற்றும் மோஹித் சர்மா கணித்துள்ளனர்.
இருவரின் அணிகளிலும் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களுக்கு ஏற்ற அணிக்கலவையை கருத்தில் கொண்டு மனோஜ் திவாரி குல்தீப் யாதவையும், மோஹித் சர்மா ரவீந்திர ஜடேஜாவையும் தனது அணியில் தேர்வு செய்துள்ளார்.
உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் இந்திய அணி பல முக்கிய ஒருநாள் தொடர்களில் விளையாடி தனது சிறந்த அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வரவிருக்கும் சுற்றுப்பயணங்கள் 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் திட்டங்களை மேலும் தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#TeamIndia #WorldCup2027 #IndianCricket #RohitSharma #ShubmanGill #ViratKohli #IshanKishan #KLRahul #HardikPandya #JaspritBumrah #KuldeepYadav #RavindraJadeja #CricketNews #ODIWorldCup #SportsNews
விராட் கோலி பல ஆண்டுகளாக இந்திய அணியின் நம்பர் 3 இடத்தை வெற்றிகரமாக நிரப்பி வந்த நிலையில் எதிர்காலத்தில் அந்த பொறுப்பை ஏற்கக்கூடிய வீரராக ஷுப்மன் கில் உருவெடுத்து வருகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசை மாற்றத்தை வெற்றிகரமாக சமாளித்துள்ள கில் ஒருநாள் போட்டிகளிலும் 3 வது வரிசையில் களமிறங்கி சதங்கள் மற்றும் அரைசதங்கள் அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இளம் தொடக்க வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவும் அணியின் பேட்டிங் சமநிலையை பேணவும் கில்லை நம்பர் 3 ல் பயன்படுத்துவது சிறந்த முடிவாக இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றும் திறன், இலக்கை துரத்தும் திறமை மற்றும் தொடர்ச்சியான ரன் குவிப்பு ஆகியவை அவரை இந்திய அணியின் அடுத்த நம்பர் 3 பேட்டராக மாற்றும் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
#ShubmanGill #ViratKohli #TeamIndia #IndianCricket #ODI #CricketNews #IndiaCricket #FutureStar #Number3Batsman #ShubmanGillFans #ViratKohliFans #CricketUpdates #SportsNews #TamilCricket #BCCI
இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாக பார்க்கப்படும் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, திடீர் புகழும் அதே வேகத்தில் வரும் விமர்சனங்களும் நிறைந்த கடினமான கட்டத்தில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் 2011 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் மனநல ஆலோசகராக இருந்த பேடி அப்டன் "வைபவ்வை வெற்றிக்காக மட்டுமல்ல. தோல்விகளுக்காகவும் தயார்படுத்த வேண்டும்" என்று முக்கிய ஆலோசனை வழங்கியுள்ளார். தொடர்ந்து ரன்கள் குவிப்பதும் சில போட்டிகளில் தோல்வியடைவதும் விளையாட்டின் ஒரு பகுதிதான் என்றும் அந்த அழுத்தங்களையும் எதிர்பார்ப்புகளையும் சரியாக கையாளும் மனவலிமையே ஒரு வீரரை நீண்ட காலம் உச்சத்தில் வைத்திருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இளம் வயதில் கிடைக்கும் புகழை சமநிலையுடன் கையாள்வதே வைபவின் அடுத்த பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.
#VaibhavSuryavanshi #PaddyUpton #IndianCricket #CricketNews #YoungTalent #IPL2026 #BCCI #MentalStrength #CricketUpdates #TamilSportsNews
10 வயதில் 103 ரன்கள்
வைபவ் சூர்யவன்ஷியின் இளைய சகோதரரான ஆசிர்வாத் சூர்யவன்ஷி (Aashirwad/Ashirvad Sooryavanshi) தற்போது கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
வெறும் 10 வயதான அவர் பீகாரின் சமஸ்திபூரில் நடைபெற்ற உள்ளூர் பயிற்சிப் போட்டியில் 87 பந்துகளில் 103 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இன்னிங்சில் 20 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அதிரடி சதத்தின் உதவியால் அவர் விளையாடிய Cricket Academy Tajpur அணி 29.5 ஓவர்களில் 234/4 என்ற வலுவான ஸ்கோரை பதிவு செய்தது. போட்டிக்குப் பிறகு பேட்டை உயர்த்தி கொண்டாடிய அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆசிர்வாத் தற்போது தனது அண்ணன் வைபவ் சூர்யவன்ஷியின் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளார். ஐபிஎல் மற்றும் இந்திய அணித் தேர்வால் ஏற்கனவே நட்சத்திரமாக உருவெடுத்துள்ள வைபவின் குடும்பத்தில் இன்னொரு திறமையான பேட்ஸ்மேன் உருவாகி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிறுவயதிலேயே காட்டிய இந்த திறமை காரணமாக எதிர்காலத்தில் பீகார் மற்றும் இந்திய வயது பிரிவு அணிகளில் ஆசிர்வாதை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
#AshirvadSooryavanshi #AashirwadSooryavanshi #VaibhavSooryavanshi #Cricket #YoungTalent
#Century #BiharCricket #Samastipur #FutureStar #IndianCricket #CricketNews #SportsUpdate #RisingStar #YouthCricket #CricketAcademyTajpur
சுவிடன் அரசு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதித்துள்ளது.
மாணவர்களின் கவனச்சிதறலைக் குறைத்து கல்வித் திறன் மற்றும் வகுப்பறை ஒழுங்கை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்து அமலுக்கு வந்துள்ள இந்த விதி 7 முதல் 16 வயது வரையிலான ஆரம்ப மற்றும் கீழ்நிலை இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பொருந்தும். ஏற்கனவே பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் இதேபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது சுவிடனும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. டிஜிட்டல் கல்வியில் முன்னோடியாக இருந்த சுவிடன் எடுத்துள்ள இந்த முடிவு உலக கல்வித் துறையில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.
#Sweden #MobilePhoneBan #SchoolEducation #StudentFocus #EducationNews #SchoolStudents #SwedishSchools #DigitalEducation #France #Netherlands #Denmark #WorldNews #EducationPolicy #TamilNews #PalsuvaiSeithigal
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்க மொத்தம் 1,248 வீரர்கள் களமிறங்க உள்ளனர். 16 மைதானங்களில் 104 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் அதில் 78 போட்டிகள் அமெரிக்காவிலும், தலா 13 போட்டிகள் மெக்சிகோ மற்றும் கனடாவிலும் நடத்தப்படுகின்றன.
நேபாளம், கியூரசாவ், ஹோண்டுராஸ் மற்றும் உஸ்பெகிஸ்தான் போன்ற அணிகள் முதன்முறையாக உலகக் கோப்பை மேடையில் களமிறங்குவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 60 லட்சம் ரசிகர்கள் நேரில் போட்டிகளை காண வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், போட்டிக்கான செலவினம் ரூ.35 ஆயிரம் கோடியாகவும், வருவாய் ரூ.84 ஆயிரம் கோடியாகவும் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக இந்த தொடர் அமைய உள்ளது.
#FIFAWorldCup2026 #WorldCup2026 #FootballWorldCup #USA2026 #Mexico2026
#Canada2026 #Football #Soccer #FIFA #WorldCup #Nepal #Curacao #Honduras #Uzbekistan #SportsNews #FootballFans #SportsUpdate #TamilSports #FootballNews #PalsuvaiSeithigal
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியைக் கொண்டாட அங்குள்ள இரவு விடுதிக்கு சென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன் ஆகிய இருவரும் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
அந்த இரவு விடுதியில் இருந்த உள்ளூர் ரக்பி வீரர் ஒருவருடன் இவர்கள் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டது அம்பலமாகியுள்ளது. அணி வீரர்களுக்கான கட்டுப்பாட்டை மீறி அவர்கள் விடுதிக்குச் சென்று கும்மாளம் போட்டது, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை (ECB) கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இது குறித்து கிரிக்கெட் வாரியம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த விவகாரத்தால் பென் ஸ்டோக்ஸின் கேப்டன் பதவி பறிபோகும் என்றும் தெரிகிறது.
இந்த சூழ்நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் 17ஆம் தேதி தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
இப்போட்டிக்கு பொறுப்பு கேப்டனாக ஜோ ரூட் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்குப் பதிலாக ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோர்டன் காக்ஸ் ஆகியோர் அணியில் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெற்றி களிப்பில் இங்கிலாந்து வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டு அணியில் இருந்து நீக்கப்பட்ட இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#EnglandCricket #BenStokes
#GusAtkinson #JoeRoot
#JofraArcher #JordanCox
#EnglandVsNewZealand
#ENGvNZ #TestCricket
#CricketNews #CricketUpdate
#SportsNews #ECB
#EnglandCaptain #CricketControversy
#OvalTest #LondonCricket
#CricketFans #BreakingNews
#SportsUpdate #TamilSports
#CricketWorld #RedBallCricket
#TeamEngland #TrendingCricket