முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை | சோலைமலை அருள்மிகு முருகன் திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா ஆனி மாதம் 21-ஆம் நாள். 05.07.2026 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.45 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சிறப்பாக நடைபெறுகிறது.
பக்தப்பெருமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
@CMOTamilnadu@RameshOffcl@TNDIPRNEWS
அன்பிற்குரிய பொது மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள், சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள். நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
E-Mail : [email protected]
அன்புடன்,
S.ரமேஷ்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @tnhrcedept
அறுமுகப்பெருமானின் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை | சோலைமலை அருள்மிகு முருகன் திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா ஆனி மாதம் 21-ஆம் நாள். 05.07.2026 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5.45 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சிறப்பாக நடைபெறுகிறது.
பக்தப்பெருமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
@CMOTamilnadu@RameshOffcl@TNDIPRNEWS
திருநெல்வேலி மாவட்டம், டவுண் அருள்மிகு நெல்லையப்பர் - அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலின் 520-வது ஆனிப் பெருந்தேரோட்டத்தினை இன்று (28.06.2026) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சீ.ரமேஷ் அவர்கள் மற்றும் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.பெ.மதன் ராஜா அவர்கள் ஆகியோர் வடம் பிடித்து தேர் இழுத்து தொடங்கி வைத்தார்கள். @CMOTamilnadu@RameshOffcl@TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay #tndipr
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் அவர்கள் இன்று (24.06.2026) சென்னை, கொடுங்கையூர், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு பெருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். @CMOTamilnadu@RameshOffcl@TNDIPRNEWS#tnhrce#CMJosephVijay#tndipr