ஆவடி மாநகரம் :இந்திய விமானப்படை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ய முயன்ற 4 பேரை முத்தாபுதுப்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இராணிப்பேட்டை சோளிங்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரவத்தூர் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை பள்ளி இடைநிற்றலில் இருந்த ஒரு குழந்தையை மீட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்தனர்.
ஆவடி காவல் ஆணையரகத்தின் போதைப் பொருள் ஒழிப்பு தொடர் நடவடிக்கையில், சாத்தாங்காடு போலீசார் 21 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, 7 பேரை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம்: விக்கிரவாண்டி காவல் நிலையம்
கஞ்சா வழக்கில் தொடர்புடைய 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம்: கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த அசோக்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 1.2 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் :சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் கடலூர் துறைமுகம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளிடம், பெண்கள் (ம) குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் காவல் உதவி செயலி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்
அறிமுகமில்லாத நபர்களின் அழைப்புகள், போலி முதலீட்டு திட்டங்கள், பகுதி நேர வேலை வாய்ப்புகள், OTP கேட்கும் செய்திகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளை நம்பாதீர்கள்.
இராமநாதபுரம் மாவட்டம்: சத்திரக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்த குணால் மற்றும் மதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2.1 கிலோகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தண்டையார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூர்விகா ஷோரூமில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு, பெண்களின் பாதுகாப்பு, அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி மோசடிகளைத் தவிர்ப்பது, தனிப்பட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம்: மணச்சநல்லூர் மற்றும் வாத்தலை காவல் நிலைய எல்லைகளில் நடைபெற்ற தனித்தனி நடவடிக்கைகளில் 5.940 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில், வீரபாண்டி, நல்லூர் மற்றும் திருமுருகன்பூண்டி காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட சோதனையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 299 டேபென்டடால் (Tapentadol) மாத்திரைகள் மற்றும் 500 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது, ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே 2.1 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்த போலீசார், போதைப்பொருளை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.