சொத்து வரி நிலுவை வைத்திருந்த 15 கட்டிடங்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு இன்று செய்யப்பட்டுள்ளது.
3 நாட்களுக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்தாவிடில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எனவே பொதுமக்கள்குடிநீர் இணைப்பு துண்டிப்பைத் தவிர்க்க நிலுவை வரிகளை உடனே செலுத்துங்கள்!
தருவைகுளம் பகுதியில் உள்ள உரக்கிடங்கில் நாய்களுக்கான அறுவை சிகிச்சை செய்யும் மையம், வெறி நாய் தடுப்பு மையத்தின் செயல்பாட்டினையும், நாய்களுக்கான தங்குமிடம் அமைக்கும் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் திரு.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலம் கோயில் பிள்ளை நகர் பகுதியில் உள்ள ஓடையின் கரை பலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்திரு.விஷு மகாஜன், இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடையின் நீரை வெளியேற்றும் திறனை அதிகரித்தல் , வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக நடைபெறும் பக்கிள் ஓடை அகலப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்திரு.விஷு மகாஜன், இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பணிமய மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பொது சுகாதார பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட சங்கர் காலனி பகுதியில் பொதுமக்களிடம் இருந்து வரப்பட்ட புகாரிணை தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் விநியோக பணிகளை மாநகராட்சி ஆணையர் திரு.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட மேல ரத வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை சீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
அண்ணா பேருந்துநிலைய வளாகம் பகுதியில் உள்ள வார்டு அலுவலகத்தில் பணியாளர்களின் வருகை பதிவேட்டினையும்,தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு வினியோகம் குறித்தும், சுகாதார வளாக பராமரிப்பு பணிகளையும் மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி,மாவட்ட ஆட்சியரின் திங்கள் குறைதீர்க்கும் நாள் , தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்ததான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு மேயர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள்,மாநகராட்சி ஆணையர் திருமதி சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் இன்று கள ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்
மாநகராட்சிப் பகுதிகளுக்குச் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் நீரேற்று நிலையங்களுக்குச் செல்லும் நடைமேம்பாலப் பராமரிப்புப் பணிகள்,பழுதான மின் மோட்டார்கள் சீரமைக்கப்பட்டு, அவற்றின் செயல்பாட்டுத் திறன் குறித்தும்
தூத்துக்குடி மாநகராட்சி வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாட்டினையும் நடைபெறும் பணிகளையும் மாண்புமிகு மேயர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள், மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப,அவர்கள் ஆய்வு செய்தார்கள் ஆய்வில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர் .
தூத்துக்குடி மாநகராட்சி வி.வி.டி சிக்னல் பகுதியில் உள்ள வார்டு அலுவலகத்தில் பணியாளர்களின் வருகை பதிவேட்டினையும் மற்றும் நடைபெறும் தூய்மை பணிகளையும் மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
சொத்து வரி,தண்ணீர் கட்டணம் மற்றும் வரி இல்லா இனங்கள் தொடர்பான வசூல் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.ஆய்வு கூட்டத்தில் துணை ஆணையர்,மண்டல உதவி ஆணையர்கள்,வருவாய் பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்குட்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி பகுதிகளில் நடைபெற்று வரும் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்கும் பணி மற்றும் குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள அம்மா உணவகத்தின் செயல்பாட்டினையும், மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகளையும் மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.