மாண்புமிகு முதல்வர் அவர்களால் நேற்று சட்டப்பேரவையில் தென்னிந்திய மாநிலங்களின் உரிமையினை கருத்தில் கொண்டு முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள, ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை முன்னெடுப்பை கைவிட வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அரசினர் தனித்தீர்மானத்தை ஆதரித்து எனது முதல் சட்டமன்ற உரையினை ஆற்றினேன்.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படக் கூடாது. எனவே, ஒன்றிய அரசு மேற்கொள்ளவுள்ளதாக உத்தேசிக்கப்படும் தொகுதி மறுவரையறையினை கைவிடவும், மக்களவையில் தற்போதுள்ள நிலையே தொடரவும் வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் அவர்கள், அனைத்து உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு கோரிக்கை விடுத்தார்.
தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாகப் பாதுகாத்திடத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றிட ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் உரிமையினை நிலைநிறுத்திட அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் வழிகாட்டலில், டெல்டா மாவட்டங்கள் உட்படத் தமிழ்நாடு முழுவதும் 25-க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளோடு இன்று தலைமைச் செயலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாண்புமிகு அமைச்சர்கள் திரு. N. ஆனந்த் அவர்கள், திரு. செங்கோட்டையன் அவர்கள், திரு. CTR. நிர்மல் குமார் அவர்கள், திரு. வெங்கட்ரமணன் அவர்கள், திரு. ராஜ்மோகன் அவர்கள், திரு. V. காந்திராஜ் அவர்கள் மற்றும் திரு. R. வினோத் அவர்களுடன் பங்கேற்றேன்.
இக்கூட்டத்தில் விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டன. இந்தக் கூட்டம் குறித்த விவரங்கள் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
1/2
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்-2026'ல், ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டி - 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு ரூ. 30 இலட்சம், ஆண்களுக்கான Triple Jump போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு.பிரவீன் சித்திரவேல் அவர்களுக்கு ரூ. 30 இலட்சம், அதேபோட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற திரு. செல்வ பிரபு அவர்களுக்கு ரூ. 20 இலட்சம் ஆகிய உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை மாண்புமிகு முதல்வர் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் திறனை உலக அரங்கில் வெளிப்படுத்தும் விதமாகச் சாதனைப் படைத்துள்ள வீரர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து, உலகப் போட்டிகளில் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர் - வீராங்கனையர்கள் சாதனைப் படைக்கத் தமிழ்நாடு அரசு அனைத்து விதத்திலும் துணை நிற்கும்.
அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக மாற்றிய ஆபாசநிதி!
பேரறிஞர் அண்ணா தனது தமிழ் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை, இன்று தனது ஆபாச மொழியாலும் இரட்டை அர்த்தப் பேச்சுக்களாலும் அழித்து வருகிறார் 'ஆபாச'நிதி.
தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராய்கூட அல்ல, அடிப்படை மனித மாண்புகூட கொஞ்சமும் இல்லாமல், தரங்கெட்டத்தனமாக மேடையில் பேசியிருக்கிறார் - அண்ணா உருவாக்கிய அறிவாலயமான திமுக-வை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்ட ஆபாசநிதி.
பெண்கள் பற்றி அவர் கொண்டிருக்கும் வக்கிர சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக இன்று அவர் பேசியுள்ள ஆபாசப் பேச்சு கேட்பவர்களைக் காது கூசச் செய்கிறது. இதுபோன்ற இழிவான பேச்சுகளை தமிழ்நாட்டின் எந்தவொரு தாய்மார்களும், அக்கா - தங்கைகளும், பெற்றோர்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
இதுபோன்ற நபர்களின் ஆதிக்க சிந்தனையால்தான் திமுகவை இந்த தேர்தலில் தமிழ்நாட்டுப் பெண்கள் தூக்கியெறிந்தார்கள். ஆனால் இப்போது, பொது மேடைகளிலேயே தனது குரூர எண்ணத்தைக் காட்டிக்கொண்டிருக்கும் ஆபாசநிதியை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியலிலிருந்தே துடைத்தெறிவார்கள் தமிழ்நாட்டின் தாய்மார்களும், பெண்களும்!
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மூத்தவர்; சிலம்பு, வில்வித்தை, மல்யுத்தம், வாள்வீச்சு போன்ற பல்வேறு திறன்களைக் கொண்டிருந்த வீரர்; ஏழை மக்கள் மீது அடக்குமுறை ஏவியவர்களுக்கு எதிராகக் கொங்கு மண்டலத்திலிருந்து கிளர்ந்து எழுந்து சாட்டை சுழற்றிய தீரர்; அந்நிய ஆதிக்கத்துக்கு எதிரான தன்னாட்சி உரிமைப் போராட்டத்தின் அடையாளம்; சமூக நல்லுறவு மற்றும் மத நல்லிணக்கத்தோடு மக்களை ஒன்றுதிரட்டிய விவேகமான தலைவர் தீரர் சின்னமலை அவர்களின் 221-வது நினைவு நாளான இன்று, அவரது தியாக வாழ்வையும் புகழையும் போற்றுவோம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர், மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு. கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் மூத்த மகனார் மருத்துவர் திரு. கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. நேசத்திற்குரிய அன்பு புதல்வரை இழந்து வாடும் மதிப்பிற்குரிய பேராசிரியர் திரு. கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத் தோழர்கள் ஆகியோர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 'Commonwealth Games 2026' போட்டிகளில் Triple jump விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள வீரர் பிரவீன் சித்ரவேல், வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ள வீரர் செல்வ பிரபு ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இவ்விரு வீரர்களும் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயிற்சி பெற்ற முன்னாள் மாணவர்கள் என்பது தனிச்சிறப்பாகும்.
தமிழ்நாட்டின் இளைஞர்கள் உலக அளவிலான போட்டிகளில் பங்குபெற்று பல்வேறு சாதனைகள் படைக்க இந்த வெற்றி ஊக்கமாக அமைந்துள்ளது. நம் தமிழ்நாட்டு வீரர்களின் திறமை மேலும் பல உலகப் போட்டிகளில் மிளிர தமிழ்நாடு அரசு அனைத்து விதத்திலும் துணை நிற்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம்
இன்று தலைமைச் செயலகத்தில் ஆறு பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணைகளும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் பதிமூன்று பேருக்கு ஓய்வூதிய ஆணைகளும் மூன்று நபர்களுக்கு குடும்ப ஓய்வூதிய ஆணைகளும் வழங்கினோம்.
1/2
சென்னை இராயபுரத்தில் நேற்று நடைபெற்ற 'டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தேசிய விருது 2026' விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். இந்திய இளைஞர்களிடையே கனவு நாயகராக விளங்கிய டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களுடைய பெயரிலான இந்த விருதினை பெறும் அண்ணன் திரு. வைகோ அவர்களுக்கு எனது மகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் உரிமைக்காக இளம் வயதிலேயே போராட்ட களத்தைக் கண்டவர்; நாடாளுமன்றத்தில் கர்ஜித்தவர்; இன்று கொள்கைக் களத்தில் ஒலித்துக்கொண்டிருப்பவர் அண்ணன் திரு. வைகோ அவர்களுக்கு வாழ்த்துரை வழங்கியதில், அவரது மேடைப்பேச்சின் மாணவராகப் பெருமை கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் அடையாளமான சமூகநீதி, மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி ஆகிய கொள்கைகளை உறுதியாகக் காப்போம். அனைவருக்குமான சமத்துவ ஆட்சியை முன்னெடுத்துச் செல்வோம்.
1/3
பெண் கல்விக்குத் தடையாக இருந்த அனைத்து சமூக ஆதிக்கத்தையும் தகர்த்து 'இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்' என்ற வரலாற்றுப் புகழைப் பெற்றவர் டாக்டர். முத்துலட்சுமி அம்மையார். பெண்களுக்கான சொத்துரிமை முன்னெடுப்பு, குழந்தை திருமணத் தடைச் சட்டம், சமூகத்தில் சில குறிப்பிட்ட பெண்களை இழிவாக நடத்திய தேவதாசி முறையை ஒழித்த சட்டம் போன்ற சமத்துவ புரட்சிகளைச் செய்தவர். பொதுமக்களிடம் நிதி திரட்டி, சென்னை - அடையாற்றில் தென்னிந்தியாவின் முதல் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை நிறுவியவர்.
மருத்துவ சேவகர், பெண்ணுரிமை போராளி, சமத்துவ செயற்பாட்டாளர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் பிறந்தநாளான இன்று, அவர் புகழைப் போற்றுவோம்.
Met with the @ndtv team today at the Secretariat for an insightful discussion with Mr. Rahul Kanwal (CEO), Mr. Shiv Aroor (Managing Editor), Ms. Vasudha Venugopal (Editor - Politics), Mr. Rahul Shah (Head - Events), and Psephologist Mr. Pradeep Gupta (CMD, Axis My India).
தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பின் வழிகாட்டலில் சரகர்ஹி சூட்டிங் அகாடமி ஒருங்கிணைக்கும் '51st Tamilnadu State Shooting Championship in Rifle and Pistol - 2026' தொடரின் தொடக்க விழா சென்னையில் உள்ள குருநானக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, துப்பாக்கி சுடுதல் விளையாட்டின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர் - வீராங்கனையர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினேன்.
1/2
சென்னை பத்திரிகையாளர் மன்றம் நடத்திய இரண்டாமாண்டு "CPC Cricket league 2026" தொடரின் பரிசுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கி, வாழ்த்துரை ஆற்றினேன்.
ஸ்காட்லாந்து - கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 'Commonwealth Games 2026' விளையாட்டில் 'Men's 65kg பளு தூக்குதல் போட்டியில்' வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ள நம் கோவில்பட்டியைச் சேர்ந்த வீரர் திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் இளைஞர்கள் உலக அளவிலான போட்டிகளில் பங்குபெற்று பல்வேறு சாதனைகள் படைக்க இந்த வெற்றி ஊக்கமாக அமைந்துள்ளது. இந்திய நாட்டிற்குப் பெயர் வாங்கி தரும் விதமாக வெற்றிகளை நிலைநாட்டிவரும் வீரர் - வீராங்கனையர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள்.