I strongly condemn the high-handedness of the police against CJP youth who were peacefully participating in a rally over the NEET discrepancies.
The visuals from Delhi are shocking.
Instead of addressing their concerns, the government is responding with its police force. This is unacceptable in a democracy.
For more than a decade now, DMK has been advocating abolition of NEET.
Today, Tamil Nadu's voice against NEET is resonating across the nation, including from the national capital.
The demand of the Nation's Youth is clear. Listen to them.
#BanNEET
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இன்றைய தினம் பங்கேற்றோம்.
தமிழ்நாட்டு மக்களின��� ஏற்றத்திற்காக, கழகத் தலைவர் வழிகாட்டுதலில் அயராது உழைப்போம்.
@arivalayam
தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும்!
தமிழ்நாட்டின் அரசியலுக்கு மிக முக்கியமான நாள் இன்று. தொகுதி மறுவரையறைக்கு எதிரான நம் போராட்டங்களின் முடிவினை அறியப் போகும் நாள்.
நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என மாண்புமிகு பிரதமர் அவர்களும் உள்துறை அமைச்சர் அவர்களும் நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர்.
ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்டமுன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்���வும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்.
இந்தச் சட்டமுன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், இவர்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை மாற்றியமைத்துக் கொள்வதற்கான வழிவகைகள் இந்தக் கருப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பெரும் சூழ்ச்சியை உள்ளடக்கியதாக இந்தச் சட்டமுன்வடிவு இருக்கிறது.
அவசரகதியில் இதனை நிறைவேற்றக் கூடாது. ஒன்றிய அரசு இதனை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும். எண்ணிக்கை பலம் இருக்கிறது என்ற திமிரில், எங்களின் எதிர்ப்பை மீறி இதனை நிறைவேற்றினால், அதற்கான விளைவுகளைத் தமிழ்நாட்டில் நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
நேரு அவர்கள் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார், இருந்தவரை அந்த உறுதிமொழியைக் ��ாப்பாற்றினார். ஆனால், தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்களோ மாநில உரிமைகளைக் காப்பாற்றுவோம் எனச் சொல்லிக்கொண்டே அதனைச் சில்லு சில்லாக நொறுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர்.
நாம் கோருவது, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி அவர்களும், வாஜ்பாய் அவர்களும் அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் செய்து, 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்ததைப் போன்ற சட்டப் பாதுகாப்பு.
#WithdrawDelimitationBill: தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்!
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation #வ��ல்வோம்_ஒன்றாக
#WithdrawDelimitationBill
Today is a defining moment in Tamil Nadu’s political history. It is the day we will see the outcome of our relentless resistance against delimitation.
In the face of our sustained protests and uncompromising opposition, the Hon’ble Prime Minister and the Union Home Minister have, on the floor of Parliament, offered a verbal assurance that Tamil Nadu’s representation will not be reduced.
But their words say one thing, their actions reveal another. The Bill they have introduced is nothing but a calculated deception. We reject it outright. It cannot be trusted. It will not be accepted.
The sweeping powers granted to the Delimitation Commission under this Bill make one thing clear. At any time, in any manner they choose, they can alter the representation of states to suit their political interests. This so called legislation is a carefully crafted trap, loaded with dangerous intent.
This Bill must not be rushed through in haste. The Union Government must withdraw it in full. If they attempt to bulldoze it through Parliament, emboldened by the numbers they have stitched together, and in complete disregard of our opposition, they will face the consequences in Tamil Nadu.
Jawaharlal Nehru assured that Hindi would never be imposed, and he honoured that promise as long as he lived. The present Union regime, however, speaks of protecting state rights even as it systematically dismantles them piece by piece.
What we demand is clear. The same constitutional safeguard that former Prime Ministers Indira Gandhi and Atal Bihari Vajpayee provided by freezing delimitation through constitutional amendment must be restored.
The Union BJP Government must listen to the voice of Tamil Nadu.
I am also sharing for your attention my detailed article published in today’s edition of @TimesOfIndia, explaining the grave dangers posed by this delimitation exercise:
#SayNoToNDA #TNWillFightTNWillWin #Delimitation #வெல்வோம்_ஒன்றாக
@TOIChennai @Arun_Ram
தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு, நமது 110-வது வார்டு நுங்கம்பாக்கம் மைதானத்தில், சகோதரி யமுனா வடிவேல் அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் 'சமத்துவப் பொங்கல்' விழா நடைபெற்றது.
எனது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினேன். மேலும், அப்பகுதி மக்களுடனும், கழகத் தோழர்களுடனும் இணைந்து பொங்கல் விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடினோம்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!
#திராவிடப்_பொங்கல் @mkstalin@Udhaystalin #DMK4TN #DMK #Chitrarasu #ChennaiWestDMK
சென்னை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் பெரம்பூரில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில், பெரம்பூர் - இராயபுரம் - ஆர்.கே. நகர் தொகுதிகளைச் சேர்ந்த 5000 கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
தமிழ்நாட்டைச் சூழும் ஆபத்துகளை தகர்க்கவும், மாநில உரிமைகளைக் காக்கவும் கருப்பு-சிவப்பு கொடியேந்தி களத்தில் சுற்றிச்சுழன்று பணியாற்றிடும் கழக உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்தி பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
கழகத்தலைவர் @mkstalin அவர்களை தொடர்ந்து 2-ஆவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கிட அடுத்து வ��ும் 100 நாட்களுக்கு ஓய்வு - உறக்கமின்றி உழைப்போம் என்று உரையாற்றினோம்.
@rdsekarmla @DrKalanidhiV @JJEbenezer1 @idream_murthy #பொங்கல்_விழா
என் பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த என்னுடைய அன்பு நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச��சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@mkstalin
பவளவிழா கண்ட ஜனநாயக பேரியக்கமான தி.மு.கழகத்தின் தலைவராக மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட நாள் இன்று!
#CMMKStalin#DMK4TN
கழகத்தின் மூத்த முன்னோடி - தலைமைச் செயற்குழு உறுப்பினர் அண்ணன் குளித்தலை அ.சிவராமன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதல்முறையாக குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட போது கலைஞரின் வெற்றிக்காக களப்பணியாற்றியவர்.
குளித்தலை நகரச் செயலாளர் - மாவட்ட துணைச் செயலாளர் - ஒன்றியப்பெருந்தலைவர் உள்ளிட்டப் பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டவர்.
நம் முதலமைச்சர் அவர்கள் மீது தனிப்பாசமும் - மரியாதையும் கொண்டிருந்��ார்.
அண்மையில் நான் கரூர் மாவட்டத்துக்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்த போது நேரில் சந்தித்து என் பணிகள் சிறக்க அன்போடு வாழ்த்தினார்.
கழக முப்பெரும் விழாவில், பாவேந்தர் விருதினை பெறவிருந்த அவர���ு மறைவு நம் கழகத்துக்கு பேரிழப்பு.
அவரைப் பிரிந்து வாடும் அவரது மகன் திரு.சிவ.சீனிவாசன் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் - நண்பர்கள் - கரூர் மாவட்ட உடன்பிறப்புகளுக்கு என் ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையின் அடையாளமான மெரினாவுக்கு நீலக்கொடி கடற்கரை சான்று பெற @chennaicorp மூலம் ரூ.7.31 கோடி மதிப்பில் பல்வேறு மேம்பாட்டுப்பண��களை நம் #திராவிட_மாடல் அரசு மேற்கொண்டு இருக்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகளை நாம் நேற்று திறந்து வைத்தோம்.
மூங்கில் நிழற்குடைகள் - சாய்வு நாற்காலிகள்- selfie points - கண்காணிப்பு கோபுரங்கள் - தியான மேடை - படிப்பக முனை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மெரினா புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இவற்றை பயன்படுத்தி மகிழ அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
இந்த வசதிகளை அதிகமான பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக அவற்றை பொறுப்புணர்வோடு பயன்படுத்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
#Marinabeach #Blueflagbeach
ஆண்களுக்கு நிகராக கல்வி - வேலைவாய்ப்புகளைப் பெற்று, பெண்களும் பொருளாதார சுதந்���ிரம் அடையவேண்டும் எனும் தந்தை பெரியாரின் லட்சிய கனவை, மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் நம் #திராவிடமாடல் அரசு சாத்தியமாக்கியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆண்டாப்பட்டு ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளுடனான சமீபத்திய சந்திப்பில், ‘கந்துவட்டி பிரச்சினை தீர்ந்திருக்கிறது, கல்வி - மருத்துவம் - தொழில் என எங்கள் குடும்பத்தின் எல்லா தேவைகளையும் ��ாங்களே பூர்த்திசெய்துகொள்வதற்கான பொருதாளார சுதந்திரத்தைப் பெற்றிருக்கிறோம்’ என அரசின் மகளிர் நலத்திட்டங்களைப் பட்டியலிட்டு, சுய உதவிக்குழு சகோதரிகள் மகிழ்ச்சியுடன் விவரித்தனர்.
மகளிர் நலனே, மாநில நலன் என செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான நம் திராவிட மாடல் அரசு, இன்னும் பல லட்சம் மகளிரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த தொடர்ந்து துணை நிற்கும்!
#DMK4Women
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வெற்றி பெற்ற 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார்கள்.
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தொடங்கி வைத்த #உங்களுடன்_ஸ்டாலின் திட்ட முகாம் மூலம், தமிழகமெங்கும் மக்களுக்கு நேரடி நிவாரணம் கிடைத்துவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் சென்னை மேற்கு மாவட்ட��், ஆயிரம் விளக்கு தொகுதி, மேற்கு பகுதியிலுள்ள 112-வது வார்டில் நடைபெற்ற சிறப்பு முகாமைத் துவக்கி வைத்து, மக்களின் கோரிக்கைகள் குறித்த மனுக்களைப் பதிவு செய்யும் செயல்முறைகளை நேரில் பார்வையிட்டேன்.
மனுதாரர்களுடன் நேரடியாக உரையாடி, துறை சார்ந்த அதிகாரிகளுடன் இணைந்து,
அவர்களின் தேவைகளுக்கு உடன���ி தீர்வுகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டேன்.
@Udhaystalin #DMK4TN #DMK #Chitrarasu #ChennaiWestDMK #AnnaNagar #Chepauk #Triplicane #ThousandLights