அடுத்த தலைமுறைக்கான வளர்ச்சி! அனைவருக்குமான வளர்ச்சி!
பொ��ுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் காலத்திற்கேற்ற புதிய திட்டங்களை உள்ளடக்கிய கட்டமைப்பை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
@AnithaAgam26 5-6 வருசத்துக்கு முந்தி
ஏதோ ஒரு விழாவில்
திருமுருகன்காந்தியை பார்த்து
"சீரியஸாக மட்டுமே பேசாமல்
கொஞ்சம் கமர்ஷியலாகவும்
பேசுங்க தோழர்" என்றான்
விஜயசேதுபதி....
சீமானை மனதில் வைத்து.
@seenuramasamy ஸ்டாலின் மீது அவர் குடும்பத்தின���்
கூட இவ்வளவு பாசம் வைத்தனரா
என்று தெரியவில்லை. ஆனால்
சேது வைத்திருக்கிறார்.
மிசா பற்றி முதல்வர் விஜய் பேசியது சேதுவை வெறியாக்கி
இருக்கிறது.... அதன் எதிரொலி தான் சேதுவை இப்படி பேச
வைத்திருக்கிறது.
கண்ணியம் என்பது திமுகவின் மேடைகளில் வெறும் வெற்று முழக்கம்தானா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுவெளியிலும் தொண்டர்கள் கூட்டத்திலும் "அரசியல் களத்தில் யாரை விமர்சித்தாலும் கண்ணியத்தோடும் நாகரிகத்தோடும் பேசுங்கள���" என்று உபதேசம் செய்கிறார். ஆனால் எதார்த்த களத்தில் நடப்பதோ அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆர்.எஸ்.பாரதி போன்ற மூத்த உறுப்பினர்கள் பொதுமேடைகளில் வரம்பு மீறி, முதலமைச்சர் விஜய் அவர்களை ஒருமையில் விளிப்பதும், "ஓடுகாலி நாய்" எனத் தரம் கெட்ட வன்மச் சொற்களைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் களத்தில் கொள்கை ரீ��ியான முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் இருப்பது இயல்ப���தான்; ஆனால் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை நோக்கி தனிநபர் வன்மத்தையும், அநாகரிகமான வசவுகளையும் வீசுவது ஒட்டுமொத்த ஜனநாயக மாண்புகளுக்கு விடுக்கப்படும் பெரும் அச்சுறுத்தல். கட்சித் தலைவரின் குடும்பம் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை இந்த எல்லை மீறல்களைத் தொடர்ந்து அரங்கேற்றுவதை திமுக தலைமை கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்?
மக்கள் தீர்ப்பை மதிக்காமல் மாநில முதலமைச்சரையே பொதுமேடைகளில் ஒருமையில் இழிவுபடுத்துவது, பெண்களுக்கு எதிரான தொடர் அவமதிப்புகள் மீது தன் கட்சிக்குள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது, அதிகாரத்தை இழந்த விரக்தியில் பொதுவெளியில் தரம் தாழ்ந்து கூச்சலிடுவது என திமுக இன்று தன் நம்பகத்தன்மையை இழந்து மூழ்கும் கப்பலாக மாறிக் கொண்டிருக்கிறது.
பொது அமைதியையும் அரசியல் நாகரிகத்தையும் சீர்குலைக்கும் வகையில் முன்னாள் அமைச்சர்களு���் நிர்வாகிகளும் இப்படி நாவடக்கமின்றிப் பேசுவதை திமுகவின் தலைமை கண்டும் காணாமல் இருப்பது அவர்களின் வீழ்ச்சிக்கான தெளிவான அறிகுறி. அரசியல் களம் ம���்கள் நலனுக்கான ஆரோக்கியமான விவாதக் களமாக இருக்க வேண்டுமே தவிர, இத்தகைய நாகரிகமற்ற தனிநபர் வசவுகளுக்கான கூடாரமாக ஒருபோதும் மாறக்கூடாது.
#TNCongress #CMJosephVijay #TVKVijay
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக அளவற்ற அன்பை வா��ி வழங்கி, வாழ்வில் கிடைத்தற்கரிய ஓர் உயரிய இடத்தைப் பேரன்புடன் தந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவனாக, உறவாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக ஒவ்வோர் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரு நிரந்தர இடத்தை வழங்கி, தாயன்புடன் தாங்கி வருகின்றீர்கள்.
எல்லாவற்றையும் அளித்த ஒட்டுமொத்தத் தமிழக மக்களுக்கும் உலகத் தமிழ் உறவுகளுக்கும் என் நன்றியை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்று யோசித்தோம். அதன் வெளிப்பாடாகவே, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே 2024-இல் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் அரசியல் களம் கண்டே 27 மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் அதற்குள், தமிழக அரசியல் வரலாற்றில் எவருக்கும் கிடைத்திராத ஒரு பேரதிசயத்தை, கடந்த சட்டமன்றத் தேர்தலில் நிகழ்த்திக் காட்டினீர்கள்.
35% வாக்குகளுடன் தனிப்பெரும் கட்சியாகத் த.வெ.க.வை உயர்த்திப் ப���டித்தீர்கள். உங்கள் தீர்ப்பை மதித்த ஜனநாயக சக்திகளின் ஆதரவுடன் இதோ இன்று, தமிழக மக்களின் முதல் சேவகனாக, முதலமைச்சராக உங்கள் விஜய். ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை லட்சியமாகக் கொண்டு, மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆட்சியை நிறுவிக் காட்டி இருக்கிறோம்.
மக்களே… என் சொந்தங்களே…தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பேரதிசயத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டினீர்கள். அதன் வெளிப���பாடாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உங்கள் தமிழக வெற்றிக் கழகத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவித்துள்ளது. ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் த.வெ.க.வின் சின்னமாக அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கையுடன் நம்மை நம்புகிற ஒட���டுமொத்த மக்களுக்கான நன்றிக்கடன் பணி என்றென்றும் தொடரும். இந்த வேளையில், பேருழைப்பைத் தந்து கழகம் காக்கும் தோழர்களையும் நிர்வாகிகளையும் நெகிழ்வுடன் நினைத்துப் பார்க்கிறேன். அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!