இரு நாட்கள் முன் ToI Resident editor Arun Ram விஜய் கட்சியினரின் குற்றங்களை பட்டியலிட்டு, விஜயின் மவுனத்தை விமர்சித்திருந்தார். உடனே மரியாதை நிமித்தம் அவர் முதல்வரை சந்தித்த பழை
பதிவை நீக்கிவிட்டது இன்ஸ்டா. பாயாசம்!
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் – கொள்கை மாமணி பொத்தனூர் க.சண்முகம் மறைந்தாரே! வீர வணக்கம்! வீர வணக்கம்!!
அண்மையில், தமிழ்நாடு சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டிய எனது சுற்றுப்பயணத்தின் போது பொத்தனூர் சென்று, அவரைச் சந்தித்து அளவளாவி வந்தோம். 80 ஆண்டுகளுக்கும் மேல் பொதுத் தொண்டாற்றி நிறை வாழ்வு வாழ்ந்து, இயக்கத்திற்கும், பொதுத் தொண்டுக்கும் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் ஒளிவீசும் பெருமகன் ஆவார். மறைந்தும், மருத்துவ மாணவர்களுக்குத் தன் உடல் பயன்படவேண்டும் என்ற அவரின் விருப்பப்படி, நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை அளிக்கப்பட���வது, திராவிடர் கழகத்துக்கே உரித்தான உன்னத மாண்பும், சிறப்பும் ஆகும்.
‘க.ச.’ என்று எல்லோராலும் மதிப் போடும், அன்போடும் அழைக்கப்பட்டவர்.
பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் நேற்று (15.11.2026) இரவு மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வேதனையுற்றோம்.
திருச்சி நேஷனல் கல்லூரியில் படிக்கும்போதே (அந்தக் காலத்திலேயே இண்டர்மீடியட் படித்தவர்) தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, இறுதி மூச்சு (வயது 104) அடங்கும்வரை தந்தை பெரியாரின் ஒப்பற்ற சீரிய தொண்டராக ஒளி வீசினார். 1944 ஆம் ஆண்டு சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி, திராவிடர் கழகமாகப் பெயர் மாற்ற மாநாட்டிலேயே பங்கு கொண்டவர். அம்மாநாட்டில் பங்கு பெற்றவுடனேயே பொத்தனூரில் திராவிடர் கழகக் கிளையைத் தோற்றுவித்தவர். ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவராக சிறந்த முறையில் பணியாற்றியவர். தந்தை பெரியார�� 1957இல் ‘பிராமணாள்’ பெயர் அழிப்புப் போராட்டம் நடத்தியபோது இவர், பொத்தனூர் ஊராட்சித் தலைவராக இருந்தார்.
இந்தியாவிலேயே முதன் முறையாக பொத்தனூரில்தான் ஜாதிப் பெயர் கொண்ட உணவகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (‘விடுதலை’ 28.6.1957)
தந்தை பெரியார், சேலம் மாவட்ட சுற்றுப்பயணம் செல்லும்போதெல்லாம், பொத்தனூரில் அவரின் இல்லத்தில் தங்குவது வழக்கம். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் (அறக்க��்டளை) தலைவராக 13 ஆண்டுகள் (2013 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை) இருந்தவர். திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் எல்லாம் பங்கேற்றுச் சிறை சென்றவர். சேலம் சிறையில் ‘மிசா’ கைதியாக ஓராண்டுக்காலம் இருந்தார் (1.2.1976 முதல் 23.1.1977 வரை).
இவருடைய பொதுத் தொண்டுக்கு உற்ற துணையாக இருந்தவர், அவரது வாழ்விணையர் சுந்தராம்பாள் ஆவார்கள். தமிழரசி, மலர்க்கொடி ஆகிய இரு மகள்களும், செங்குட்டுவன் என்ற மகனும் ��ள்ளனர். பொத்தனூர் மானமிகு க.சண்முகம் அவர்கள், அமைதி, தொண்டறம், நேர்மை ஆகியவற்றை இயல்பா��க் கொண்டவர். அதனால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். அவருடைய நூற்றாண்டு விழா 2022 இல் பொத்தனூரில் வெகு சிறப்பான வகையில் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்று மகிழ்ந்தோம். சென்னை பெரியார் திடலில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் தரைத் தளத்திற்கு அவருடைய பெயரைச் சூட்டினோம் (25.8.2026).
அண்மையில், தமிழ்நாடு சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டிய எனது சுற்றுப்பயணத்தின் ��ோது பொத்தனூர் சென்று, அவரைச் சந்தித்து அளவளாவி வந்தோம். 80 ஆண்டுகளுக்கும் மேல் பொதுத் தொண்டாற்றி நிறை வாழ்வு வாழ்ந்து, இயக்கத்திற்கும், பொதுத் தொண்டுக்கும் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் ஒளிவீசும் பெருமகன் ஆவார். மறைந்தும், மருத்துவ மாணவர்களுக்குத் தன் உடல் பயன்பட வேண்டும் என்ற அவரின் விருப்பப்படி, நாமக்கல் மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை அளிக்கப்படுவது, திராவிடர் கழகத்துக்கே உரித்தான உன்னத மாண்பும், சிறப்பும் ஆகும்.
நேற்றுவரை நம்முடன் வாழ்ந்து, இன்று ‘‘சுயமரியாதைச் சுடரொளி’’ ஆகிவிட்டார்.
அவர் மறைவால் ஆறாத் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் குடும்பத்தினருக்கும், கொள்கை உறவு கொண்ட தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து, வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்!
- கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
16.11.2026
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் பாலகிருஷ்ணன் என்பவர் செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்து சென்றவர், பின்னர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு அங்கேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
காவல் நிலையத்துக்குள்ளேயே மரணம் (Lockup Death, சிறைச்சாலைக்குள் சந்தேக மரணம் (Custodial Death) என்பவை எல்லாம் அடிக்கடி நடைபெறுகின்றன. மக்களின் பாதுகாப்புக்கும், உயிருக்கும் காவல்நிலையங்களே அச்சுறுத்தலாவ��ா? மனித உரிமை என்னாயிற்று?
நடந்த கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடிய குடும்பத்தவரை, உறவினர்களைக் கைது செய்வது அதைவிடக் கொடுமையல்லவா? உடனடியாக அவர்களை விடுதலை செய்வதுடன், யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லாமல், முறையான விசாரணை நடைபெற வேண்டும். தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் இத்தகு கொடுமைகளுக்கு தீர்க்கமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்
🔺பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுந்தகவல் அனுப்பியதாகச் சொல்லப்படும் பிரச்சினையில்
கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
🔺எதுவுமே கட்டுப்பாட்டில் இருக்காது எ���்றால் எதற்கு இந்த ஆட்சி?
🔺உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்கலாமே!
கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள்விக்னேஷ் என்பவர், அந்த மாவட்டத்தின் பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், ஆட்சியரின் அலுவல்பூர்வ இல்லத்தில் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைய முயன்றதாகவும் அருவருக்கத்தக்க, கண்டிக்கத்தக்க செய்தி வெளிவந்து அய்ந்து நாட்களுக்கும் மேலாகின்றன. ஆனால், இது குறித்து முறையான நடவடிக்கையோ, பொறுப்பான பதிலோ இதுவரை அரசு தரப்பிலிருந்து இல்லை என்பது பெரும் ஏமாற்றமளிப்பதாகும்.
அதிகாரம் மிக்க பதவியில் அமர்ந்து இருந்தாலும், ஒரு பெண் என்பதால் இத்தகைய நெருக்கடிகள் வழங்கப்படுகின்றன என்பது எத்தகைய கொடுமை! சொல்ல வெட்கமாக இருக்கிறதே!
த.வெ.க. ஆட்சியில், மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மற்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்னும் கேள்வி எழுகிறதே! பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர், முறைப்படி தலைமைச் செயலாளருக்குத் தகவல் தெரிவித்திருப்பதாகவும், அவருடைய வாழ்விணையரான மற்றொரு மாவட்ட ஆட்சியர் இது குறித்துப் புகார் அளித்திருப்பதாகவும் செய்திகளில் காண்கிறோம். ஆனால், ‘‘புகார் வரட்டும் - பார்க்கலாம்’’ என்கிறார் ஓர் அமைச்சர். உலகமே அறிந்த பின்னரும், எதுவும் தெரியாததைப் போலவே பேசுவது பொறுப்பற்ற செயல் அல்லவா?
இந்திய அளவில் தலைக்குனிவை ஏற்படுத்தும் இந்த அவலத்திற்குக் காரணமானவர்கள் மீது தமிழ்நாடு அரசால் வெளிப்பட��யாக இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? அல்லது மறைமுகமாகத்தான் இதுவரை என்ன நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள் – சமாதானம் பேச முன்வந்ததைத் தவிர?
முதலமைச்சர் இது குறித்துக் கூட வாயைத் திறக்க மாட்டாரா?
🔺ஊடகங்களைக் கொண்டு கதையளந்துவிட்டால் போதுமா?
‘தப்புச் செய்த எம்.எல்.ஏ.வை அழைத்துக் கண்டித்தார், நெருப்புக் கணைகளை வீசினார், கோபப் பார்வை பார்த்தார்’ என்று மூடிய ‘தக���த்’ தடுப்புகளுக்கு உள்ளே நடந்ததைத் ‘துப்புத் துலக்கி’ எழுதுவது போல ஊடகங்களைக் கொண்டு கதையளந்துவிட்டால் போதுமா?
ஆட்சிக்குப் போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்பதால், ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய இவர் மீதும், வீட்டுக்குப் புகார் அளிக்க வந்த குடிமகன் ஒருவரைத் தாக்கிய பிரச்சினையில் சிக்கியுள்ள சட்டப்பேரவைத் துணைத் தலைவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற��� சொல்லப்படுவது உண்மையா? ஆட்சியில் நீடிப்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் என்ன அநியாயம் செய்தாலும் பார்த்துக் கொண்டிருப்பாரா முதலமைச்சர்?
🔺சட்டமன்ற உறுப்பினர் மக்கள் ஊழியர் அல்லவா?
அவர்களுக்கென பொது ஒழுக்கம் வேண்டாமா?
‘எம்.எல்.ஏ.க்களையெல்லாம் அழைத்துள்ளார். ஆங்காங்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்துக் கண்டிப்பார்’ என்றெல்லாம் சொல்லப்பட்ட நிலையில், எல்லோருக்கும் பட்டுச் சட்டை, பட்டு வேட்டி அளித்து, முடிந்துபோன தீபாவளிக்கு வாழ்த்துச் சொன்னார் என்று பேட்டி தருகிறார்கள் சட்டமன்ற உறுப்பினர்கள். இது தான் கல்லக்குறிச்சி எம்.எல்.ஏ.வும், சட்டப்பேரவைத் துணைத் தலைவரும் நடந்து கொண்ட முறையைக் கண்டிப்பதா? அல்லது இப்படி நடந்���ுகொண்டதற்குப் பரிசு வழங்கிப் பாராட்டுகிறார்களா? சட்டமன்ற உறுப்பினர் மக்கள் ஊழியர் அல்லவா? அவர்களுக்கென பொது ஒழுக்கம் வேண்டாமா?
🔺ஆளுங்கட்சி என்றால் ஒதுங்கிக் கொள்ளுமா?
இன்னொரு அரசு ஊழியரான அய்.ஏ.எஸ். அதிகாரிக்குத் தொல்லை தரலாமா? அதுவும் பாலியல் தொல்லை! எதிர்க்கட்சிகளோ, மக்களோ போராட்டம் நடத்தினால், அதிகாரிகளைப் பணியாற்றவிடவில்லை என ‘அரசு ஊழியரைப் பணியாற்ற விடாமல் தடுத்தா��்கள்’ என்று வழக்குப் போடப்படுகிறதே! இந்தப் பிரிவு த.வெ.க. சட்டமன்ற உறுப்பினருக்குப் பொருந்தாதா? மாவட்ட ஆட்சியருக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு அவருக்கு உரிமை உண்டா? பெண்களுக்குப் பணியிடப் பாதுகாப்புக்கான சட்டம் இருக்கிறதே! தீவிரமான பிரிவுகள் இருக்கின்றனவே! அவையெல்லாம் ஆளுங்கட்சி என்றால் ஒதுங்கிக் கொள்ளுமா?
பாலியல் வன்கொடுமைகள், ஏமாற்று வேலைகள், கொலை, திருட்டு, போதைப் பொருள் க���த்தல் வழக்குகள் என ஆளுங்கட்சியினர் மீது ஏராளமானப் புகார்கள், அன்றாடம் வந்துகொண்டிருக்கின்றன. ஆட்சியைத் தக்க வைப்பதற்காக இத்தகைய அநீதிகளை இந்த அரசு கண்டுகொள்ளாது என்றால், யார் இதற்கெல்லாம் பொறுப்பாளி?
விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க முடியாது; காவல்துறையை போதிய வேகத்தில் இயங்க வைக்க முடியாது; சட்டம்-ஒழுங்கைக் கட்டுக்குள் வைக்க முடியாது; சொந்தக் கட்சிக்காரர்களையும் கட்டு��்குள் வைக்க முடியாது என்றால் இதில் ஆளுமை எங்கே இருக்கிறது? 1/2
As many as 72 former IAS, IPS and other former civil servants have written to Chief Minister C Joseph Vijay, urging him to restore the High-Level Committee on Union-State Relations, chaired by former Supreme Court judge Justice Kurian Joseph, which was disbanded on November 6.
The signatories said Part I of the report was widely appreciated across political parties, including by Union Ministers, academics, legal experts and former civil servants. They urged the government to allow the committee to complete Part II of its report, scheduled for May 2027.
இது கிறித்தவ,தலித் ஆதரவு ஆட்சி என இன்னும் நம்புவோர்க்கு வாழ்த்துகள்! “மணிப்பூர் Kuki ST கிறித்தவ பெண் நிர்வாண ஊர்வலம்! 350 தேவாலயங்கள் எரிப்பு, 360 Kuki மக்கள் படுகொலை!” BJPயை மகிழ்விக்க சமவெளி Meitei இனத்தை ST என்று தீர்ப்பளித்து மணிப்பூரை எரியவைத்த இவர்தான் SC,ST Commn Chairman!
ஜான் ஆரோக்கியசாமி
விஷ்ணுரெட்டி
ஆகியோர் தமிழ்நாடு அரசில் என்ன நியமன பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதை பொதுவெளியில் சொல்லாத வரையில், தார்மீக ரீதியாக வெளிப்படைத்தன்மை (Transparency) குறித்த பெரிய பெரிய Tall-claims களை தவெக தலைமையிலான கூட்டணி அரசு எடுப்பது சரியானதாகாது.
முதலாளிகளுக்கு மகிழ்ச்சித் தரும் செயல்களை மட்டுமே செய்யும் தவெக அரசு.
மாநில உரிமைகளை அடகு வைப்பதில் தீவிரம் காட்டும் விஜய் அரசு தமிழ்நாட்டின் மிகப்பெரிய கேடு. மொழி உரிமை, மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் என்று முழங்கிக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் சத்தமே இல்லாமல் சினிமா ஆசைக் காட்டி, இனி இவை எல்லாம் நமக்கு தேவை இல்லை; வாங்க, காலை 6 மணிக்கே சினிமா தியேட்டர் போலாம் என்ற நிலையை உருவாக்கி உள்ளது.
#Breaking: the highly acclaimed Report of the High Level Committee on Union State Relations (Justice Kurien Joseph Committee) vanishes from the Tamilnadu government website!
It’s now available only at the Committee website (https://t.co/2w8zfwZjPZ).
You all might remember the hullabaloo caused by @TVKVijayHQ government since the time @BloomsburyIndia published the report. At that time, the Tamil version was available at https://t.co/6B8lqZeGZY. After the copyright was annulled by @CMOTamilnadu, the English version was uploaded too.
Now, both versions are missing in the TN government website.
To read more about the factual situation, see my article in @frontline_india here: https://t.co/aGVVMrhu50
🔺உச்சநீதிமன்ற (ஓய்வு) நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைந்த ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த உயர்மட���டக் குழுவை கலைப்பதா?
🔺ஆணையம் கலைக்கப்பட்டதை உடனடியாக, பா.ஜ.க. வரவேற்றுள்ளதே!
🔺த.வெ.க. அரசு யாருக்குச் சார்பானது என்பது தெள்ளத் தெளிவாகிறதே!
மாநில உறவுகள்பற்றி அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்திற்கென ‘திராவிட மாடல்’ அரசின் மானமிகு மு.க.ஸ்டாலின் ஆட்சியில், உச்சநீதிமன்ற (ஓய்வு) நீதிபதி குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில், ஓய்வுபெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி கே.அசோக் வர்தன் ஷெட்டி, சிறந்த நிர்வாகி எனப் பெயர் பெற்றவரும், சிறந்த பொருளாதார வல்லுநரும���ன பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் இணைந்த மூவர் குழு. முதற்கட்ட பரிந்துரை – ஆய்வுகளை காலதாமதப்படுத்தாமல், தி.மு.க. ஆட்சியின்போதே அளித்துவிட்டனர்.
புதிதாக வந்த அரசும், முதலமைச்சரும் அந்த அறிக்கையைப் புரட்டிக்கூடப் பார்த்திருப்பார்களா என்பது நமது அய்யம்.
நாம் முழுவதும் படித்து, அதன் மீது ஆய்வரங்கத்தினை நடத்த முடிவு செய்திருந்தோம். அருமையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்த���ற்கான அரிய ஆவணம் அந்த முதற்கட்ட அறிக்கை.
ஏற்கெனவே, முதலமைச்சராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இருந்தபோது, ஒன்றிய- மாநில அரசுகளின் உறவுகள் மற்றும் மாநில சுயாட்சி குறித்து ஆராய 1969 செப்டம்பர் 22 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் தலைமை நீதிபதி டாக்டர் பி. வி. ராஜமன்னார் தலைமையில், வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜமன்னார் குழு அமைத்தார். அதன் உறுப்பினர்களாக மேனாள் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் பி. சந்திரா (ரெட்டி), பிரபல கல்வியாளரும், சென்னை பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான டாக்டர் சர். ஏ. லட்சுமணசாமி (முதலியார்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
‘மாநில சுயாட்சி உரிமைகள் பெருக்கம் ஏன் தேவை?’ என்பதை விளக்கும் நீதிபதி ராஜமன்னார் குழு 1971 ஆம் ஆண்டு தனது வரலாற்றுப் புகழ்பெற்ற அறிக்கையைத் தமிழ்நாடு அரசிடம் அளித்தது.
அந்த அறிக்கையில்,
ஒன்றிய அரசிடம் மட்டுமே அதிகாரங்கள் குவிந்திருப்பதைத் தடுத்து, உண்மையான கூட்டாட்சி முறையை ஏ��்படுத்த வேண்டும். பாதுகாப்பு, வெளியுறவு, பன்னாட்டு வர்த்தகம் மற்றும் நாணயம் போன்ற முக்கியத் துறைகள் மட்டுமே ஒன்றிய அரசிடம் இருக்க வேண்டும் என்றும்,
மாநில அரசுகளைத் தன்னிச்சையாகக் கலைக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356 மற்றும் 365 ஆகிய பிரிவுகளை முற்றிலும் நீக்க வேண்டும் அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும்,
மாநிலங்களின் சமூக���் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நிதி ஆதாரங்களை மாநிலங்களே திரட்டிக் கொள்ளும் வகையில், நிதிப் பங்கீடு மாற்றி அமைக்கப்பட வேண்டும்; தற்காலிகமாக இருக்கும் நிதி ஆணையத்தை ஒரு நிரந்தர அமைப்பாக மாற்றவேண்டும் என்றும்,
கல்வி, சுகாதார��், விவசாயம், தொழிற்சாலைகள் மற்றும் மின்சாரம் போன்ற உள்ளூர் மக்களுக்கு நெருக்கமான துறைகளில் மாநில அரசுகள் தடையின்றிச் செயல்பட, ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள பல முக்கிய அதிகாரங்களை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைத்தது.
🔺 ‘மாநில சுயாட்சி தீர்மானம்!
இந்த அறிக்கையின் அடிப்படையில்தான், ‘‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’’ என்ற முழக���கத்துடன், 1974 ஏப்ரல் 16 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘மாநில சுயாட்சி தீர்மானம்' நிறைவேற்றப்பட்டது.
அந்த அடிக்கட்டுமானத்திற்கு மேல்தளம்தான் தற்போது கலைக்கப்பட்ட மூவர் குழு; அறிக்கை, பரிந்துரைகள்.
‘மாற்றம்’ என்று கூறி, வந்தவர்கள் இதனைக் கலைத்து, மாநில சட்டக் குழுவே (State Law Commission) பார்த்துக் கொள்ளும் என்று கூறியதைக் கேட்டு, சட்ட நிபுணர்கள் சிரிப்பார்கள்!
ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி, மாநிலங்களே இருக்கக் கூடாது.
கூட்டாட்சிக்குப் பதில், ஒற்றை ஆட்சியே இருக்கவேண்டும் (Not Federal Government but only Unitary Government) என்ற கொள்கை நிலைப்பாட்டை மறைமுகமாக ஆதரிப்பது அல்லாமல், வேற�� என்ன?
தமிழ்நாட்டை டில்லிக்குக் கப்பம் கட்டும் சிற்றரசாக ஆக்குவதற்கு ஒன்றிய அரசுக்குக் ‘சரணம்’ பாடுவதல்லாமல், வேறு என்ன?
ஆணையம் கலைக்கப்பட்டதை உடனடியாக, பா.ஜ.க. வரவேற்றுள்ளதே, இது யாருக்குச் சார்பானது என்பதை எடுத்துக் காட்டுகிறதே!
இதை எதிர்பார்த்தே, மானமிகு பேராசிரியர் நாகநாதன் அவர்கள், புதிய ஆட்சி வந்ததும், தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பிவிட்டார்; அவர் சுயமரியாதை வீரர் ஆயிற்றே!
மாற்றம், மாற்றம் என்பது இதுதானோ? இது தடுமாற்றம் அல்லவா!
உரிமை முழக்கக் குரல் இனி மெல்ல மெல்ல கேட்கா நிலைதான் ஏற்படும்.
தி.மு.க.வின் சாதனைகள், பெருமைகள் இப்போது விளங்குகிறது!
நிழலின் அருமை, வெயிலில்தான் தெரியும்!
- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
A shame that a thoughtful, academic exercise into the nature of Indian federalism, headed by one of India's most respected judges, has been abruptly terminated like this. The committee's first report produced a very incisive look into various aspects of our federal architecture. I wonder if any other state Government could ask the same committee to continue the task and produce further reports. @CMofKarnataka@PriyankKharge@Cmkeralaa
எம்.எல்.ஏ.க்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயத்தை வாங்கத் தெரியவில்லையா என்று உதயநிதி கேட்டிருக்கிறார். ஒருவேளை, வெங்காயத்திற்கு எம்.எல்.ஏ. என்று பெயர் வைத்திருந்தால் கட்டாயம் வாங்கி வைத்திருப்பாராக்கும்.
HC தீர்ப்பு வந்தபோதே "SC போவார்கள் கோட்டை விட்டு விடாதீர்கள்" என்றேன். 2008 இல் "HRCE எடுக்கலாம்" என்று HC தீர்ப்பளித்த அன்று மாலையே கோவிலை takeover செய்தார் கலைஞர். "அதுக்கெல்லாம் ஞானம் வேணும் டோய்"
So let me get this straight. Jason Shreier insinuated that the $500 million budget for Gears E Day was real.
A developer then debunked that and pointed to other costs unrelated to E Day.
Jason then explained that he was demonstrating the cost of AAA games and how much it has increased.
Correct me if I'm missing something, but wouldn't that be him inflating the budget by leaving out context to fit his narrative?
கள்ளநோட்டை கண்டுபிடிப்பதாகச் சொல்லி நல்லநோட்டுகள் அனைத்தையும் செல்லாததாக்கிய பாஜக அரசு இப்போது வாக்காளர் பட்டியலில் இருக்கும் வெளிநாட்டினரை கண்டுபிடிக்கப் போவதாகச் சொல்லி SIR கொண்டுவந்து 13.8 கோடி இந்தியர்களின் வாக்குரிமையைப் பறித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட வெளிநாட்டவர் 1600பேர்
🔸அரசு துறைகளில் நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதற்குப் பதிலாக ஒப்பந்த முறையில் பணி நியம��ம் செய்வதா?
🔸ஒரு நூற்றாண்டாக திராவிட இயக்கம் பாடுபட்டு – கல்வி வாய்ப்பு அளிக்கப்பட்ட நம் மக்களைப் பின்னோக்கி இழுப்பதா?
🔸சமூகநீதி பாதிக்கப்படும் – நிர்வாகமும் சீர்குலையும் –
இளைஞர்கள் மத்தியில் போராட்ட உணர்வையும் தூண்டும், எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் நூறு ஆண்டுகால திராவிட இயக்கத்தின் உழைப்பால், போராட்டத்தால், முயற்சியால் கல்வி நீரோடை பெருகி, இன்று கல்லூரி செல்லாதவர்கள் குடும்பம் இல்லை என்னும் இலக்கை நோக்கிய பாதையில் விரைந்து கொண்டிருக்கிறோம். கற்றவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டியது அரசின் கடமையாகும்.
🔸‘திராவிட மாடல்’ அரசுகளின் வெற்றி!
அதற்காகத் தான் பல துறை சார்ந்த தொழில்களையும் ஊக்குவிக்கிறோம். அதன் மூலம் வேலைவாய்ப்பைப் பெருக்குகிறோம். நமது செல்வமான மனிதவளத்தைத் திறனுடையவர்களாக உருவாக்கி, பிற நாடுகளிலும் சென்று பணியாற்றத்தக்க வகையில் தகுதிப் படுத்துகிறோம். நூற்றாண்டு ‘திராவிட மாடல்’ அரசுகளின் வெற்றி இது தான்.
அதே நேரத்தில், அரசு சார்ந்த துறைகளுக்குத் தேவையான ஊழியர்களை முறைப்படி தேர்ந்தெடுக்க அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கி வழிகாட்டியது நீதிக்கட்சி அரசு. (பனகால் அரசர் என்ற ராமராய நிங்கர் சென்னை மாநில பிரதமர் – ஆண்டு 1924) அதனை முறைப்படுத்தி, 69 சதவிகித இடஒதுக்கீட்டின் மூலம் அனைத்து சமூகத்தவரையும் அதிகாரத் தளத்திற்குக் கொண்டு வந்து, ஆட்சியில் அதிகாரத்தில் பங்கேற்கச் செய்திருப்பது தமிழ்நாட்டின், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சாதனையாகும்.
🔸கடந்த தி.மு.க. ஆட்சியின் சாதனை!
கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும், அரசு ஊழியர்களுக்கான உரிமைகளை வழங்க, தொடர் முயற்சி எடுத்து, 21 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்ட ஓய்வூதியப் பலன்களை மீண்டும் பெறுவதற்கான புதிய வழிவகையினையும் கடந்த தி.மு.க. ஆட்சி செய்தது. தற்காலி��த் தேவைக்காகப் பணியாளர்களை நியமித்துக் கொண்டாலும், நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு கொடுத்த நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும், திட்டமிட்டு படிப்படியாக நிறைவேற்றி வந்தது கடந்த தி.மு.க. அரசு.
ஆனாலும், எல்லா துறையிலும் நிரந்தரப் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எல்லா தரப்பிலும் இருந்து வந்து, அதுவே ஆங்காங்கு போராட்டமாகவும் நடந்து வந்தது. இந்தப் போராட்டங்களை அரசு நடத்துவோர் அக்கறையுடன் கவனித்துத் தீர்வுகளை வழங்கி வந்த வேளையில், இதனை அரசியல் பிரச்சினையாக ஆக்கி, அதன் மூலம் பலன் பெறலாம் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகளாக இருந்தோர் செயல்பட்டு வந்தனர். அதில், ‘தற்காலிகப் பணியாளர்களையெல்லாம் நிரந்தரமாக்குவோம்’ என்று உறுதிமொழி வழங்கிய தற்போதைய ஆளுங்கட்சியான த.வெ.க.வும் அடக்கம்.
🔸ஆட்சிக்கு வருமுன்னரும் – தேர்தல் அறிக்கையிலும் கூறியது என்ன?
சாத்தியக் கூறுகள் என்ன, சட்டம் என்ன, முறைப்படி நிரந்தரப் பணியாளர்கள் ஆக்குவதற்கான வாய்ப்பு என்ன என்பதையெல்லாம் அறியாமல், ஆட்சிக்கு வரும் முன்னர் எதையும் பேசலாம் என்ற நோக்கில் உறுதிமொழிகளை அள்ளி வழங்கினர். அதை நம்பி வாக்களித்தவர்கள், தங்கள் நம்பிக்கை பொய்த்ததால், போர��ட்டத்தை நடத்துகின்றனர். அவர்களை ஒடுக்கும் வேலைகளில் இந்த அரசு ஈடுபடுகிறது.
ஆனால், அதை விட அதிர்ச்சி தரும் வகையில், தற்போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) வழியாக அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாடு அரசு சொல்லவருவது என்ன? டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரந்தரப் பணியாளர்களை எடுப்பதற��குப் பதிலாக ஒப்பந்த முறையில் பணியாளர்களை நியமிப்பதையே தொடரப் போகிறார்களா? ஒவ்வோராண்டும் கல்லூரிப் படிப்பை முடித்து அரசு வேலை பெற வேண்டும் என்னும் நோக்கில், தங்கள் இளமைக் காலத்தைப் பலிகொடுத்துப் படித்து வருபவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கும் நிலையில், அவர்களின் கனவுகள�� அனைத்தையும் சிதைக்கும் வேலையா இது?
🔸ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் நிரந்தரத் தீர்வாகுமா?
அரசுப் பணிகளுக்கான தேர்வுகளுக்குத் தயாராவோரைத் திறனுடையவர்களாகத் தயாரிக்க ‘நான் முதல்வன்’, ‘முதல்வர் படைப்பகம்’ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி அவர்களின் திறன்களை வளர்த்தது கடந்த ‘திராவிட மாடல்’ அரசு. ஆனால், அவற்றின் முக்கியத்துவத்தைப் படிப்படியாகக் குறைக்கச் செய்து, ��ந்தத் திட்டங்களில் குளறுபடிகளை உருவாக்கி, கடந்த அய்ந்து மாதங்களாக இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை இந்த அரசு தோற்றுவித்திருக்கும் சூழலில், ஓ.எம்.சி.எல். மூலமாக ஒப்பந்தப் பணியாளர்களை நியமிப்பதையே நிரந்தரத் தீர்வாக்குவது போல இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிரந்தரப் பணி அல்லாமல், ஒப்பந்த முறையில் பணிகளை வழங்குவதில் சமூகநீதி பாதிக்கப்படும்; இளைஞர்களின் கனவு சிதையும். அரசுக்கும் முழுமையான தகுதி படைத்த, நெடுங்காலம் பணியாற்றத்தக்க பணியாளர்கள் கிடைக்க மாட்டார்கள். நிர்வாகமும் சீர்குலையும். ஆளுமை மிக்க அரசுக்கு, அரசு ஊழியர்களின் பங்களிப்பு அவசியமானது. அந்தக் கட்டமைப்பு தான், ஆட்சிகள் மாறினாலும் அரசு இயந்திரத்தை ஓரளவேனும் ஓட்டிக் கொண்டிருக்கிறது. அதில் கைவைப்பது – அச்சாணியை உருவுவதைப் போல!
ஏற்கெனவே, போக்குவரத்துத் துறையில் 12,000 பேரைத் தேர்ந்தெடுக்க வடநாட்டு நிறுவனத்துக்கு வாய்ப்பளித்தது இந்த அரசு, மின் துறையில் தற்காலப் பணியாளர்களை நியமிக்க முயன்று எதிர்ப்பைச் சந்தித்தது. இப்போது இதையே தொடர்வதென முடிவெடுத்துவிட்டதா?
🔸இளைஞர்களின் மத்தியில் போராட்ட உணர்வைத் தூண்டும்!
இளைஞர்களின் கனவைச் சிதைத்துவிட்டு, அவர்களின் ஆளுமையை அழித்துவிட்டு, தலைமுறையையே வீணடிக்க முடியாது, கூடாது! உடனடியாக, அரசு இத்தகைய முயற்சிகளை விடுத்து, அரசுப் பணிகள், பேராசிரியர்கள், ஆசிரியர் பணியிடங்கள், மருத்துவப் பணியாளர்கள் என அனைத்துத் துறைகளுக்கும் நிரந்தரப் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி-யின் மூலமும், பிற உரிய தேர்வாணையங்களின் மூலமும் நிரப்ப வேண்டும்.
இல்லையென்றால், இளைஞர்கள் மத்தியில் போராட்ட உணர்வே தலைதூக்கும், எச்சரிக்கை!
- கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
30.10.2026
சென்னை
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று காவல்துறையினரால் அறிவிக்கப்படுகிறவர்கள், எப்படி மசூதிகளை மட்டும் குறிவைத்து தாக்குகிறார்கள்.?!
வேறு எந்த மதங்களின் வழிபாட்டுத் தலங்களின் மீதும் அவர்களுக்கு Phobia/வெறுப்பு வராமல் போனதன் பின்னணி என்னவாக இருக்கும்.?!