இலங்கைத் தமிழர்களின் துயர் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையுலகில் எழுதிவந்த அன்புக்குரிய @RKRadhkrishn அவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறுவாழ��வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழரின் வாழ்க்கை குறித்து #FacelessPeople எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதனைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!
இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமையைத் தெளிவாக வலியுறுத்தும் இந்த ஆவணப்படத்தை உணர்வுடனும், பொறுப்புடனும் இயக்கிய திரு.ஆர்.கே. அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!
#DravidianModel ஆட்சியில், முகாம் வாழ் தமிழர்கள் நலன் காக்க:
🔷 மறுவாழ்வு முக���ம் எனப் பெயர் மாற்றம்
🔷 7 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வீடுகள்,
🔷 மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பா��்திரங்கள்,
🔷 கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
அதுமட்டுமின்றி, அவர்களது வாழ்வுரிமைக்கான நீண்டகாலத் தீர்வு குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை குறித்த சட்டப்பூர்வ உரிமைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக 11-01-2026 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினேன்.
தி.மு.க. ஆட்சியில் சட்ட உதவிகள் மூலம் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்ற���, இந்திய குடிமக்களானதுடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றியுள்ளனர். குடியுரிமை பெறத் தகுதி ��ள்ள ஏறத்தாழ 25 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்காகத் தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள்.
தற்போதைய அரசும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காகத் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட திட்டங்களைத் தொய்வின்றித் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அப்பாக்களின் தினம் இன்று!
உழைத்து, தன்னை உருக்கி மக்களை அவையத்து முந்தியிருக்கச் செய்து, அறிவை - ஆற்றலை -அன்பை - பண்பை - வளத்தைத் தந்ததால் அவர் தந்தையர்!
#FathersDay-இல் எந்தையை நினைத்து வணங்குகிறேன்! எல்லார் தந்தையரையும் வாழ்த்துகிறேன்!
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் #103வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற "நவீன தமிழ்நாட்டின் சிற்பி"முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என்னும் தலைப்பில் #கருத்தரங்கம் நடைபெற்றது.
@mkstalin@Udhaystalin@ErodeVeeramani
கழகத்தின் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் @DrKalanidhiV அவர்களின் அன்பு மகன் வி.கே.சித்தார்த் - அஷ்ரயா இணையரின் திருமணத்தை க��கத் தலைவர் @mkstalin அவர்கள் வானகரத்தில் இன்று நடத்தி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம்.
கலைஞரும் - கழகமும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்வென வாழ்த்தி மகிழ்ந்தோம்!
நான் வளர்ந்த - என்னை வளர்த்த அன்பகம் புதுப்பொலிவுடன்🖤♥️
@dmk_youthwing புதுவேகத்துடன் - புதிய இளைஞர்களைக் கொள்கையோடு வளர்த்து, வெற்றியை நமதாக்கட்டும்!
@Udhaystalin#KalaignarForever
மோடியை எதிர்த்தால் தன்னை தான் ஆதரிக்க வேண்டும் என்பது ராகுல்காந்திக்கு வந்திருக்கும் புதுவகையான அரசியல் நோய்.
இந்தியாவில் பாஜக எதிர்ப்பு என்பது இந்துத்துவா எதிர்ப்பு,இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பு , மாநில உரிமை பாதுகாப்பு, வழிபாட்டு சுதந்திரம் என வேற்றுமை ஒற்றுமை கொண்ட இந்தியாவை கட்டுவதில்தான் இருக்கிறது.
பாஜக எதிர்ப்பு என்பதை காங்கிரஸ் ஆதரவு என்பதோடு சுருக்கிக்கொள்ள முடியாது. இன்று பாஜக எதிர்ப்பு என்னும் ஒரு குடையில் நிற்கும் எல்லா கட்சிகளும் எதோ ஒரு வகையில் காங்கிரஸால் பாதிக்கப்பட்டவையே.
கடந்த காலத்தில் காங்கிரஸின் இந்தி மொழி திணிப்பும்,மாநில உரிமை பறிப்பும் என்ற சர்வாதிகார போக்கும் தான் இந்தியாவில் பல கட்சிகள் தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது.
பாஜகவை எதிர்த்தால் தன்னை ஆதரிக்க வேண்டும் என்கிற ராகுல்காந்தியின் ப��க்குதான் இந்தியா கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணம்.
பாஜக எதிர்ப்பு அரசியலுக்கு திமுகவிற்கு காங்கிரஸ் ஒன்றும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!!
மோடியின் வெற்றி என்பது காங்கிரஸ் கட்சியின் பண்ணையார் தனத்தால் தான் நடந்தது!!
மோடியை எதிர்த்தால் தன்னை தான் ஆதரிக்க வேண்டும் என்பது ராகுல்காந்திக்கு வந்திருக்கும் புதுவகையான அரசியல் நோய்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தன் அரசின் நிர்வாகத் தோல்விகளை மறைக்க முதலமைச்சர் விஜய் அவர்கள் முந்தைய ஆட்சியாளர்கள் மீது பழி போடுவதா?
#TVKVijayFails
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி திட்டத்திலேயே மிகச்சிறந்த திட்டம் 'கலைஞர் ம��ளிர் உரிமைத் தொகை திட்டம்'.. Trendsetter திட்டம்..
கழகத் தலைவர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்கள் மாதந்தோறும் 1.31 கோடி பெண்களுக்கு வழங்கிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாட்டு மகளிர்களுக்கு வரவு வைக்க எதற்கு கால அவகாசம்?
இது மாற்றம் இல்லை, ஏமாற்றம்..
உங்களின் Reels lifeஐ ஒதுக்கி வைத்து விட்டு, மக்களின் Real lifeஐ கவனியுங்கள்..
தமிழ்நாட்டு மகளிர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பெரிதும் பயன்படும் கலைஞர் மகளிர் உரிமை தொகையை உடனடியாக அவர்களுடைய வங்கி கணக்குகளில் வரவு வைக்க வேண்டும்..
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையில மிகப்பெரிய மாற்றத்த கொண்டு வரலாம்னு இருக்கேன். அந்த மாற்றம்தான், நம்ம கழகத்தை இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு உயிர்ப்போட வெச்சிருக்க போகுது!
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMK
அவதூறு அரசாகவும், அவகாச அரசாகவும் மட்டுமே இந்த அரசு செம்மையாகச் செயலாற்றுகிறது!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வரவு வைக்க ஏன் அவகாசம்? இதுதான் மனசாட்சி உள்ள அரசா மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே? மக்களின் இன்ப துன்பங்கள் தெரிந்தால் இப்படி நடக்க மாட்டீர்கள்!
கழகத் தலைவர் @mkstalin அவர்கள���ன் கேள்விகளுக்கு பதில் சொல்வீர்களா? அல்லது Social Media Team-ஐ வைத்து அவதூறு பரப்பி Reels வெளியிடச் சொல்வீர்களா?
தோல்விக்கான காரணங்கள் குறித்து, உடன்பிறப்புகள் வெளிப்படையா தகவல் சொல்றதுக்காக தனி Website நாளைக்கே அறிவிக்கப்படும்.
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMK
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் நன்றியறிவிப்பு அறிக்கை
எந்த நிலையிலும் மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் உரிமைக்காகவும், தன் பயணத்தைத் தொய்வின்றித் தொடரும் அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 2019-ஆம் ஆண்டிலிருந்து 2 நாடாளுமன்றத் தே���்தல்கள், 2 சட்டமன்றத் தேர்தல்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்கள் எனத் தொடர்ந்து பங்கெடுத்து வரும் தோழமைக் கட்சியின் மதிப்புக்குரிய தலைவர்கள் – நிர்வாகிகள் - தொண்டர்கள் அனைவருக்கும் தி.மு.கவின் தலைவர் என்ற முறையில் என் நன்றியினை உரித்தாக்குகிறேன்.
2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மேலும் புதிய கட���சிகள் இணைந்து, மாநில நலனுக்கான குரலை ஓங்கி ஒலித்ததையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பங்கெடுத்துத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள், போட்டியிட முடியாமல் போன - போட்டியிட விருப்பமில்லாத -தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட கட்சிகள் - இயக்கங்கள் ஆகியவற்றின் தலைவர்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், தேர்தல் களத்தில் வழங்கிய ஒத்துழைப்பையும் என்றும் மறக்க மாட்டேன்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்கள், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் திரு. வைகோ அவர்கள், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் திரு. தொல். திருமாவளவன் எம்.பி. அவர்கள், இந்திய கம்���ூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் திரு. மு. வீரபாண்டியன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் திரு. பெ. சண்முகம் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் திரு. கே.எம். காதர் மொகிதீன் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் திரு. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்கள், மனிதநேய ஜனநாயகக��� கட்சித் தலைவர் திரு. தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்கள், முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் திரு. கருணாஸ் அவர்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் திரு. வி.எம்.எஸ். முகமது முபாரக் அவர்கள், தமிழ்த்தேசம் கட்சி நிறுவனத் தலைவர் திரு. கே.கே. செல்வகுமா��் அவர்கள், கிறித்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் திரு. இனிகோ இருதயராஜ் அவர்கள் ஆகிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தேர்தல் களத்தில் போட்டியிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குவதுடன், தேர்தல் களம் காணாத நிலையிலும் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தலைவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
93 வயதிலும் தமிழ்நாடு முழுவதும் பயணித்துப் ��ரப்புரை மேற்கொண்ட, நம் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யா திரு. கி. வீரமணி அவர்கள், போட்டியிடத் தொகுதிகள் தேவையில்லை; தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றியே குறிக்கோள் என நேரில் தெரிவித்துப் பணியாற்றிய மக்கள் நீதி மய்யம் தலைவர் நண்பர் திரு. கமல்ஹாசன் எம்.பி. அவர்கள், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் திரு. பொன். குமார் அவர்கள், சமத்துவ மக்க���் கழகம் தலைவர் திரு. எர்ணாவூர் நாராயணன் அவர்கள், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் திரு. முருகவேல் ராஜன் அவர்கள், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் திரு. அதியமான் அவர்கள், புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் திரு. கே.எஸ். ராஜ்குமார் அவர்கள், திராவிடத் தமிழர் கட்சி தலைவர் திரு. வெண்மணி அவர்கள், ஆதித்தமிழர் கட்சி தலைவர் திரு. கு. ஜக்கையன் அவர்கள், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. நாகை திருவள்ளுவன் அவர்கள். தமிழ் மாநில ��ேசிய லீக் பொதுச்செயலாளர் திரு. திருப்பூர் அல்தாப் அவர்கள், அகில இந்திய வல்லரசு பார்வர்டு ப்ளாக் நிறுவனத் தலைவர் திரு. பி.என். அம்மாசி அவர்கள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செலயாளர் திரு. சுப. வீரபாண்டியன் அவர்கள், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் திரு. உ. தனியரசு அவர்கள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
மதச்சார்பற்ற முற்போக்குக் ���ூட்டணியின் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், தொகுதி ஒதுக்கீடுகள், ஒப்பந்தங்கள், பரப்புரைப் பணிகள் அனைத்திற்கும் பொறுப்பினை ஏற்று, செயல்பட்டவன் என்ற முறையில், தேர்தல் அரசியல் களத்திற்கேயுரிய தன்மையினால் எந்தவொரு கட்சித் தலைவருக்கோ, அதன் நிர்வாகிகளுக்கோ சிறிதளவு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தாலும் அதற்கும் பொறுப்பானவனாக என் வருத்தத்தையும் பதிவு செய்து, தங்கள் அனைவரின் உழைப்புக்கும் ஒத்துழைப்புக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டை முன்னேற்றப்பாதையில் தொடர்ந்து கொண்டு செல்லவும், மாநில உரிமைகள் பறிபோகாமல் தடுக்கவும் ஒருங்கிணைந்து செயல்பட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையான வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், வலிமை குன்றாத வகையில் 1 கோடியே 54 இலட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகளைப் பெற்று, 72 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது, தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பெரும்பாலான தோழமைக் கட்சிகள் கொள்கைத் தோழமையுணர்வு மாறாமல், தி.மு.க.வுடன் தொடர்ந்து பயணிப்பதை வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது கழகத்தின் மீது தோழமைக் கட்சித் தலைவர்கள் வைத்துள்ள உறுதிப்���ாட்டை வெளிப்படுத்துகிறது. அதற்கேற்ப, நாம் கொள்கை உறுதிமிக்க அரசியல் கட்சிகளாக ஒன்றுபட்டு நின்று, மக்கள் நலனுக்காகவும், மாநில உரிமைக்காகவும் நம் பயணத்தை எப்போதும் போல தொடர்ந்து மேற்கொள்வோம். தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும்.
***
#DMK
கழகத்தின் அமைப்பு முறையில் அவசியமான மாற்றங்களை முன்னெடுப்பது பற்றி இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினேன்.
தோல்விக்க��� யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கட்சித் தலைவர் என்கிற முறையில நானே இதுக்கு பொறுப்பேத்துக்குறேன்.
பின்னடைவை வென்று முன்னேறுவோம்! மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்!
#DMKDistrictSecretariesMeet