சொத்து குவிப்பு வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒருவரை ஆளுங்கட்சி பெரிய விழா எடுத்து பாராட்டி சீராட்டி தன்னுடைய கட்சியில் இணைத்துக் கொண்டால், நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணை நடக்கும் போது லஞ்ச ஒழிப்புத்துறையும், அரசு வழக்கறிஞர்களும் எப்படி ஆதாரங்களை நியாயமாக முன் வைக்க முடியும்?
இதற்கு பதில் இருக்கா முதல்மைச்சர் விஜய் அவர்களே?
@TVKVijayHQ@CMOTamilnadu@CTR_Nirmalkumar
#Vijayabaskar
அடிக்கடி லண்டன் துபாய் போன்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் தமிழக அரசியல்வாதிகள் அங்கே சாலை அமைக்கும் பணிகளை சற்று பார்வையிட்டிருந்தால் தமிழ்நாட்டில் அவர்கள் ஆட்சியில் சாலை உயரங்களை அதிகரித்து மக்களை படுகுழியில் தள்ளி இருக்க மாட்டார்கள்.
டெண்டர் செட்டிங் செய்வது, கமிஷன் வாங்குவது என்ற இரண்டு விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தியவர்கள் இந்த சாலை உயரங்களால் மக்கள் படும் அவஸ்தையை பற்றி கொஞ்சம் கூட எண்ணிப்பார்க்கவில்லையே..!
இது வரை இருந்த ஆட்சியாளர்கள் செய்த தவறை புதிய அரசு திருத்திக் கொள்ளுமா? புதிய சாலைகள் அமைக்கும் போது பழைய சாலை உயரத்தை விட அதிகரிக்காமல் இருக்க கடுமையான விதிமுறைகளை கொண்டு வருமா? சாலை உயரங்களால் பள்ளத்தில் தள்ளப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு வழங்குமா?
உங்கள் பகுதியில் சாலை உயரங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஆவணப்படுத்துங்கள். இந்த https://t.co/ybX0o0gohd இணைப்பில் பதிவு செய்யுங்கள்.
சாலை உயரங்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய அறப்போர் வாட்ஸப் குழுவில் https://t.co/G36QHwVWAP இணைந்து கொள்ளுங்கள்.
படங்கள் மூலம் ஆவணப்படுத்த இந்த appஐ https://t.co/DeUlRNWQsG பயன்படுத்துங்கள்.
@TVKVijayHQ@CMOTamilnadu@AadhavArjuna@chennaicorp@CMDA_Official
இவர்கள் கெடு விதிப்பதும் அவர்கள் அதை சட்டை செய்யாமல் இருப்பதும் தொடர்ந்து பல வருடங்களாக நடந்து வருகிறது. ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் ரெஜிஸ்ட்ரார் கடிதம் போடுவதோடு தனது பணியை முடித்துக் கொள்கிறார். அவருக்கு அதற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க துணிவில்லை. திமுகவை சேர்ந்த நாராயணன் கட்டுப்பாட்டில் தான் இந்த பல்கலைக்கழகமே இயங்குகிறது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகாவது ஏதாவது நல்ல மாற்றம் ஏற்படும் என்று பார்த்தால் இது வரை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இந்த பல்கலைக்கழக அவலங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தற்பொழுது கெடு காலத்தை 3 மாதங்களுக்கு தள்ளி வைக்க தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் பல்கலைக்கழகத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
கல்லூரிக்கு ஒரு முதல்வரை நியமிக்க கூட வக்கில்லாதவர்கள் தான் தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள் என்பது தமிழக அரசுக்கு ஒரு பிரச்சனையாகவே தெரியவில்லை என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.
என்ன செய்ய போகிறீர்கள் முதல்வர் விஜய் அவர்களே? எப்பொழுது இந்த விஷயம் குறித்து பேச போகிறீர்கள் அமைச்சர் விஸ்வநாதன் அவர்களே?
@TVKVijayHQ@Viswanathan_INC@CMOTamilnadu@lokbhavan_tn
என்ன கொடுமை சரவணன் இது!!
முதல்வர் விஜய் அவர்கள் ஒழித்துக் கட்டுவதாக சொன்ன ஊழல் மற்றும் போதை கலாச்சாரத்தின் மிகப்பெரிய சக்தி தான் C விஜயபாஸ்கர். இப்படிப்பட்ட ஒருவரை, அமைச்சர்கள் தலைமையில் ஆடம்பர விழா நடத்தி கட்சியிலும் இணைத்துக் கொண்டு, அவர் மீது விசாரணையும் தொடரும் என்று சொல்வது மக்களை முட்டாளாக்கும் செயல். விஜயபாஸ்கர் வைத்திருக்கும் வாக்கு வங்கிக்காக, முதல்வர் விஜய் கொடுக்கும் மிகப்பெரிய லஞ்சம் தான் அவரை கட்சியில் இணைத்துக் கொண்டது.
அடுத்து இவருக்கு MLA, அமைச்சர் என்று பதவி கொடுத்து அழகு பார்த்து தமிழக வெற்றிக் கழகத்தை, குட்கா வெற்றிக் கழகமாக மாற்ற இருக்கிறீர்களா மிஸ்டர் விஜய்?
@TVKVijayHQ@TVKPartyHQ@CMOTamilnadu
விதிமீறல் செய்த தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்வோம் - அமைச்சர் நிர்மல் குமார்.
மோசடியாக நடத்திய ஆய்வின் மூலம் அங்கீகாரம் பெற்ற இந்த தனியார் சட்டக் கல்லூரிகள் மீது இது வரை என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் அமைச்சரே? @CTR_Nirmalkumar@CMOTamilnadu
விரிவான வீடியோ - https://t.co/pi4gr8UOLj
சாலை உயரம் ! மக்களுக்கு துயரம்!
சாலை உயரத்தை அதிகரிப்பதால் நடக்கும் கேடுகள் என்ன? அறப்போர் இயக்கத்தில் இணைந்து தன்னார்வலர் பணி செய்ய விரும்புவோர் அனைவரும் தற்பொழுது உங்கள் பகுதியில் உள்ள சாலை உயரம் பிரச்சனைகளை ஆவணப்படுத்தலாம். இனி ஒரு சாலையின் உயரத்தை கூட அரசு அதிகரிக்க விடக் கூடாது !
உங்கள் பகுதியில் சாலை உயரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த இணைப்பில் படங்களுடன் https://t.co/ybX0o0gohd பதிவு செய்யுங்கள்.
Party Fund விஜயபாஸ்கர்
👉சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
👉இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
👉சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
👉RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளில் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா மிஸ்டர் விஜய்?? @TVKVijayHQ #Vijayabaskar
இன்று வீட்டு வசதி துறை அமைச்சர் திரு ராஜ்குமார் கண்ணகி நகர் எழில் நகர் பகுதிகளை வந்து பார்வை இட்டுள்ளார். அவர் கவனத்திற்கு இந்த பிரச்சினைகள் கொண்டு செல்லப்பட்டதா அல்லது எவ்வளவு மக்களை அவர் சந்தித்து பேசினார் என்பது தெரியவில்லை.
கண்ணகி நகர் வீடு எண் 4090 இன் நிலைமை. வீட்டு சுவருக்குள் தண்ணீர் வழிந்து தள்ளிக் கொண்டு இருக்கிறது. மக்கள் வசிக்க வீடு கொடுத்தார்களா அல்லது எதையோ ஒன்று கட்டி விட்டோம் என்று மக்களை குடி பெயர்த்து வைத்தார்களா என்று தெரியவில்லை. இது ஒரு வீடு மட்டும் இந்த நிலைமையில் இல்லை. எழில் நகரில் கூட 21வது ப்ளாக்கில் 76 வது வீட்டில் வெளி வேலை சரியாக செய்யாததால் உள் சுவற்றில் ஓதம் ஏறி வீடு முழுவதும் ஈரப்பதமாகவே இருக்கிறது. இதனால் குளிர் ஜுரம் வருகிறது என்கிறார் வீட்டில் வசிப்பவர்.
உடனடியாக இந்த வீடுகளில் மற்றும் இது போல சிரமப்படும் வீடுகளை TNUHDB சரி செய்வதை உறுதி செய்வாரா அமைச்சர்? சரி செய்யும் வரை இவர்களுக்கு மாற்று வசதி செய்து தர முடியுமா??
@TNUHDB_Official@CMOTamilnadu
ஏற்கனவே தனியார் பள்ளிகளின் சங்க தலைவர் என்று சொல்லிக் கொண்டு திமுகவை சேர்ந்த அரசகுமார் 200 கோடி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனியார் ஆசிரியர் கல்லூரிகளை திமுகவின் கல்வியாளர் அணி துணைத் தலைவர் நாராயணன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது.
அடிப்படை வசதிகள் இல்லாமல், பேராசிரியர்கள் பட்டியல் இல்லாமல், ஏன் கல்லூரிக்கு முதல்வர் கூட இல்லாமல் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு தனியார் பயிற்சி கல்லூரி நடத்துபவரே இந்த ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. ஆசிரியர்களின் தரம், மற்றும் மாணவர்களின் நலம் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
@imrajmohan@Viswanathan_INC@CMOTamilnadu
மாநில நெடுஞ்சாலைத்துறையில், சாலை போடாமலேயே சாலை போட்டதாக பல கோடி ரூபாய் ஒப்பந்ததாரருக்கு கொடுத்ததாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை திமுக அமைச்சர் வேலு மற்றும் பலர் விசாரணைக்கு அழைப்பு.
சாலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே வருவதால் அந்த பகுதி வீடுகள் பள்ளத்தில் தள்ளப்படுகிறது. இந்த வீடுகளை மீண்டும் சாலையை விட உயரத்தில் தூக்கி நிறுத்த லட்சக்கணக்கில் மக்கள் செலவு செய்து வருகிறார்கள்.
அரசாங்கத்தின் அலட்சியத்தால், அரசு ஊழியர்களின் கவனக்குறைவால், ஒப்பந்ததாரர்களின் ஊழலால் பொது மக்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இனி இந்த தவறுக்கு அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். சாலை உயரத்தால் பள்ளத்தில் தள்ளப்படும் வீடுகளை உயர்த்தும் செலவை அரசாங்கமே ஏற்க வேண்டும்.
உங்கள் பகுதியில் சாலை உயரத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த இணைப்பில் படங்களுடன் https://t.co/ybX0o0fQrF பதிவு செய்யுங்கள்.
சாலை உயரம் தொடர்பான அறப்போர் வாட்சப் குழுவில் இணைய இந்த இணைப்பை https://t.co/G36QHwVoLh பயன்படுத்துங்கள்.
#சாலை_உயரம்_மக்களின்_துயரம் #ArapporRoadHeightAudit
@CMOTamilnadu@AadhavArjuna@MawsTamilNadu@tnmaws@chennai_Highway@chennaicorp
தமிழ்நாட்டில் திமுகவின் கல்வியாளர் அணி துணை தலைவர் நாராயணன் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆசிரியர் கல்வியியல் பல்கலலைக்கழகத்தின் மோசமான நிலை குறித்து அறப்போர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு அரசாங்கத்தின் உடனடி தலையீட்டை கோரி வருகிறது.
697 ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் கிட்டத்தட்ட 227 கல்லூரிகளுக்கு முதல்வர் கிடையாது என்று அறப்போர் புகார் அளித்ததை அடுத்து 100 கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து பட்டியல் வெளியிட்டுள்ளது ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம். மீதம் இருக்கும் 127 கல்லூரிகள் முதல்வர் கூட இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இதில் பல கல்லூரிகளில் அடிப்படை வசதி கூட கிடையாது என்று தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன.
இத்தனை புகார்கள் இருந்தும் இது வரை தவெக அரசு எந்த கல்லூரிகளிலும் எந்த ஒரு ஆய்வும் நடத்தாமல் இருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு திமுக நபரின் கட்டுப்பாட்டில் ஓட்டு மொத்த ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் இருப்பதை தமிழக அரசு என்ன செய்து தடுக்கப்போகிறது? ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் 200 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் மற்றும் திமுக நிர்வாகியான பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுகவின் நாராயணன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் என்ன என்ன மோசடிகள் நடந்துள்ளது என்று தமிழக அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
@CMOTamilnadu@imrajmohan@Viswanathan_INC@lokbhavan_tn
அதிமுக ஆட்சியில் குட்கா முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் குட்கா விற்க அனுமதி கொடுத்தாக புகாருக்கு உள்ளான அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அன்றைய டிஜிபி ராஜேந்திரன்.
இவர்கள் மீது அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்பொழுது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல். 🤦♂️🤦♂️
திமுக ஆட்சியில் 16 கோடியில் கட்டப்பட்ட பாலம் கட்டி முடித்து மூன்றே மாதத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்த பாலத்திற்கு மேலேயும், கீழேயும் இருக்கும் இரண்டு பழைய பாலங்கள் அதே வெள்ளத்தை தாங்கி நின்ற போது இந்த புதிய பாலம் கட்டி 3 மாதத்தில் உடைந்து போனது ஏன் என்ற கேள்விக்கு விடை தேடிய போது தான் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் கிடைத்தன.
விரிவான வீடியோ பார்க்க - https://t.co/IapYM5oBEg
பாலத்தின் வழியாக செல்லும் வெள்ள நீரின் அளவை குறைவாக கணக்கிட்டது.
பாலத்தை கட்ட தேர்வு செய்த இடத்தில் கோட்டை விட்டது.
பாலத்தின் அகலத்தை குறைத்தது.
பாலத்தின் கட்டுமானத்தில் அலட்சியமாக இருந்தது போன்ற பல்வேறு புகார்கள் இருந்தும் திமுக ஆட்சியில் யார் மீதும் வழக்கு தொடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க ஒரு அலட்சியமான இந்த செயலால் 16 கோடி வீண். ஆனால் இதற்கு யாரும் காரணமில்லை என்று அத்துடன் பிரச்சனையை முடித்துக் கொண்டார்கள். ஒரு வேளை விசாரணை நடத்தினால் இன்னும் பெரிய விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்து விடுமோ என்ற பயம் கூட காரணமாக இருக்கலாம்.
தற்பொழுது இந்த புகாரை வீடியோவில் சொல்லி இருக்கும் அனைத்து ஆதாரங்களுடன் தவெக அரசுக்கு சமர்ப்பித்து இருக்கிறோம். விரைவில் FIR பதியப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
#DVACFiles #DVAC40 #Arappor
@CTR_Nirmalkumar@CMOTamilnadu@TVKVijayHQ@ArunIPSCOP
சாலை உயரங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? படங்களுடன் இந்த இணைப்பில் https://t.co/CKzdRh1Tqb பதிவு செய்யுங்கள்.
தமிழகத்தில் இனி ஒரு வீடு கூட சாலை உயரத்தால் பாதிக்கப்பட கூடாது என்ற உறுதியை அரசாங்கத்திடமிருந்து உரிமையுடன் கேட்டுப் பெறுவோம்.
அரசு செலவில் உயர்படிப்பு படிக்கிறார்கள். படிக்கும் சமயத்தில் அவர்களுக்கு சம்பளமும் தரப்படுகிறது. இதற்கு பதிலாக அரசாங்கம் அவர்களை அரசு மருத்துவமனைகளில் அரசு சம்பளத்துடன் பணிபுரிய சொல்கிறது. அப்படி பணி செய்ய முடியவில்லை என்றால் அவர்கள் படிப்பிற்கு அரசாங்கம் செய்த செலவை கொடுத்துவிட்டு செல்லலாம் என்று சொல்கிறது.
ஆனால் 10% மருத்துவர்கள் அரசு செலவில் படித்துவிட்டு நீண்ட விடுப்பில் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள். தனியார் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர்கள் நடத்துகிறார்கள். இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று அரசாங்கத்தை நோக்கி அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியதை அடுத்து தற்பொழுது அரசாங்கம் முழுமையற்ற ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. 680 மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டதாக சொல்லி இருக்கிறது. ஆனால் அந்த 680 மருத்துவர்கள் யார்? அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட இறுதி ஆணை என்ன என்பதை வெளியிடவில்லை.
வெளிப்படையான நிர்வாகத்தை தருவதாக உறுதி அளித்துள்ள TVK அரசு ஏன் இந்த விவரங்களை வெளிப்படையாக வெளியிடவில்லை. யார் அவர்களை தடுத்தது? இரண்டு மாதங்களாக தொடர் விடுமுறையில் இருந்தாலே காவல்துறையில் தெரிவிக்க வேண்டும், பிணயப்பத்திர தொகை வட்டியுடன் வசூலிக்கப்பட வேண்டும், பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்க பல ஆண்டுகளாக நீண்ட நெடிய விடுமுறையில் இருக்கும் இந்த 10% மருத்துவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள மக்களாகிய எங்களுக்கு உரிமை இல்லையா?
@arunraajkg@CMOTamilnadu@TVKVijayHQ@TNHealthDept@TNDIPRNEWS
ஏற்கனவே கடும் பணி சுமையில் இருக்கும் அரசு மருத்துவர்கள் மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும் இந்த 10% காணாமல் போன மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை வைப்பார்களா?
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலப் பகுதி எல்லையை சுற்றி 1 கிமீ சுற்றளவிற்கு எந்த கட்டிட அனுமதியும் கொடுக்க கூடாது என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் CMDA பொறுப்பு வகித்த சேகர் பாபு அந்த ராம்சார் நிலத்தின் எல்லைக்கு உள்ளேயே 1250 வீடுகள் கட்ட அனுமதி கொடுத்துள்ளார். இங்கே கட்டிடம் கட்ட ஆட்சேபனை இல்லை என்று சுற்றுச்சூழல் துறை மோசடியாக தடை இல்லா சான்றிதழும் கொடுத்துள்ளது.
தற்பொழுது சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் CMDA கொடுத்த முறைகேடான கட்டிட அனுமதி ஏன் இது வரை ரத்து செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசு பதில் சொல்லுமா?
#DVAC40