வதந்தி director : அஜித் சார் வாலி டைம்ல அவ்வளவு charm smartness எப்படி கடவுள் அஜித் சார் இவ்வளவு அழகா படைச்சார் யோசிச்சு இருக்கேன் 🫶💥🔥🔥
நம்மள விட வெறிதனமா தலய ரசிச்சு இருக்காப்ள இவரு 🔥
🫶💥
#Ajithkumar 💥🔥
பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் டேட்டா சென்டர் அல்லது செமி கண்டக்டர் மையங்கள் அமைக்கலாம் என அரசு யோசிப்பதாக தகவல்கள் சொல்லப்படுகின்றது
ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு முதல் 11 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்
அதுவே செமி கண்டக்டர் உற்பத்தி மையங்கள் என்றால் 8 முதல் 38 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு தேவைப்படும்!
இவ்வளவு தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாயிகள் பெரிய மகிழ்ச்சி அடைவார்கள்
சௌம்யா அன்புமணி ஒரு புதிய கண்டுபிடிப்பு. இவர் ஏன் இதற்கு முன்பு அரசியலுக்கு வரவில்லை என்று தெரியவில்லை.
Very unassuming.
Very easy going .
Always well prepared. Confident....and.....
Absolutely Serious!
ஒவ்வொரு முறை இவர் சட்டசபையில் எழுந்து பேசும் போதும் பல கருத்துக்கள் வெளி வருகின்றன. முழுக்க முழுக்க தயார் செய்து கொண்டு வருகிறார்.
இவருக்கு முன்னால், திமுக அதிமுக எம்எல்ஏக்களில் ஒருவர் கூட சோபிப்பதில்லை.
இவர் அளவுக்குக் கருத்துச்செறிவு அங்கு யாருக்கும் இல்லை.
சௌம்யா அன்புமணி பேசுவதை நோட்ஸ் போட்டுக்கொண்டு ஒவ்வொன்றாக டிக் அடித்து நிறைவேற்ற வேண்டும். அவ்வளவு சிறப்பாக குறிப்புகள் கொடுக்கிறார்.
தன்னுடைய தர்மபுரி மட்டுமல்ல.... கடலூரில் தொடங்கி தர்மபுரி வரை உள்ள பல்வேறு ஊர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுகிறார். சென்னை பற்றிப் பேசுகிறார்.
30 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருப்பவர்கள் இந்தத் அடிப்படைத் தகுதியைக் கூட வளர்த்துக் கொள்ளவில்லை என்பது வருத்தத்திற்குரியது.
இவர் பாமகவின் தலைவர் என்றால் தேமுதிகவுக்கும் ஒரு பெண் தலைவர் இருக்கிறார். இவரும் முதல் முறை எம்எல்ஏ தான். கொஞ்ச காலமாக அரசியலில் இருக்கிறார். அவையில் இருவரும் எழும்போதே eloquent ஆகத் தெரிகிறார்கள். தன்னம்பிக்கை மிளிர்கிறது.
இவர்களுடைய பேச்சைக் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது.
பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது இவ்வளவு கருத்துச்செறிவு இருப்பதில்லை. டிராமா தான் அதிகம் இருக்கிறது.
விஜய் கட்சி எம்எல்ஏக்கள் சௌமியா அன்புமணியை குருவாக ஏற்றுக்கொண்டு அவருடைய பாணியை பின்பற்றுவது அவர்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது.
சௌம்யா அன்புமணி போன்றவர்களைத்தான் அண்ணாமலையின் இயக்கம் தற்போது உருவாக்கி வருகிறது. 2031-ல் அந்த இயக்கத்தில் இருந்து பயிற்சி பெற்ற எம்எல்ஏக்கள் ஒரு சிலரை சட்டசபையில் நாம் பார்க்கலாம்.
234 உறுப்பினர்களும் சௌம்யா அன்புமணியைப் போன்றவை நேர்மையாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தால் தமிழ்நாடு எங்கோ போயிருக்கும்.
(Unassuming = தனது நற்பண்பு, முக்கியத்துவம் முதலியவை மக்கள் கவனத்தை ஈர்ப்பதை விரும்பாத. தன்னடக்கமுள்ள. தற்பெருமை கொள்ளாத, பகட்டிக்கொள்ளாத ஒரு தலைவி
வாழ்க வளமுடன்
உங்களைப் போல் உள்ளவர்களால் சிறந்த தமிழகம் உருவாக வேண்டும்
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி சிறக்கட்டும்
கோயம்புத்தூர் பார்டர் தாண்டி கேரளா போகும் போது நம்ம டிரைவர் கரெக்டா சீட் பெல்ட் போடுறாரு.. வண்டி ஸ்பீட் லிமிட் 80-90 மேல போறது இல்ல.. ஏன்னா..? ஒவ்வொரு 50 மீட்டரிலும் கண்காணிப்பு கேமரா இருக்கு.. மீறி போனா உடனடியா அபராதம் போடுறாங்க கேரள அரசு.. ஆனா இங்கே 180, 160 ஸ்பீட்ல போயிட்டு இருக்கோம்..
தேசிய நெடுஞ்சாலையில் 100 கிமீ தான் ஸ்பீடு லிமிட்... மாநில நெடுஞ்சாலையில் 80 கிமீ.. இதுதான் சட்டம்.. இதை முதலமைச்சர் கடுமையாக அமல்படுத்த சொல்லி இருக்காரு.. - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
#TNAssembly | #AadhavArjuna | #RoadSafety | #Highways
இன்று சென்னையில் பேரணியில் அண்ணாமலை பேசியதை நீங்களும் கேட்டிருப்பீர்கள்.
தமிழ்நாட்டில் இதைப் போன்ற சிந்தனைத் தெளிவுடன் பேசுமளவுக்கு திறமையும் நேர்மையும் தொலை நோக்குப் பார்வையும் கொண்ட அரசியல்வாதி எவராவது இருக்கிறாரா?
தமிழ்நாட்டின் அனைத்து முன்வரிசை அரசியல்வாதிகளில் வயதால் இளையவர் அண்ணாமலை. ஆனால் நான் மேலே சொல்லியிருக்கும் தகுதிகளின் அடிப்படையில் பார்த்தால் அவரே எல்லாருக்கும் மூத்தவர்.எல்லாருக்கும் அறிவுரை சொல்லும் நிலையில் அவர் உயர்ந்து நிற்கிறார்.
மீண்டும் தலைதூக்கும் இலஞ்ச இலாவண்யத்தை ஆதாரத்துடன் எடுத்து வைத்தார்.அதைக் கட்டுப் படுத்த வேண்டும் என்றும் ஜோசப் விஜய் க்கு அறிவுறுத்தினார்.
பட்ஜெட் டிலிருக்கும் நிதியை எப்படிச் செலவு செய்வது என்பதை ஜோசப் விஜய் க்கு விளக்கமாகச் சொன்னார்.
அது மட்டுமா ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் செய்யும் கேவலமான சண்டையை நிறுத்தும் படியும் சொன்னார்.
ஒரு வருடத்துக்குப் பின் ஆளுங்கட்சியை கேள்வி கேட்பதில் முதல் ஆளாக நான் தான் இருப்பேன் என்றும் சொன்னார்.
அப்படியே மத்திய அரசுக்கும் இளைஞர்களின் படிப்புக் கேற்ற வேலை வாய்ப்புகள் இல்லாத அவல நிலையை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.மத்திய அரசும் மாநில அரசும் இனியும் தூங்கிக் கொண்டிருந்தால் Gen Z இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்றும் எச்சரித்தார்.
ஆக மொத்தத்தில் Gen Z இளைஞர்களின் நாடித் துடிப்பைச் சரியாக அறிந்து வைத்திருக்கும் அரசியல்வாதி நான் மட்டுமே என்று நேரடியாகவே அண்ணாமலை சொல்லி விட்டார்.
Gen Z தலைமுறையை மெல்ல மெல்லத் தம் வசம் இழுத்துக் கொண்டு வருகிறார்.
ஏற்கெனவே நான் சொன்ன படி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் LKG /UKG படிப்பவர்களாக இருக்கிறார்கள். அண்ணாமலையோ Phd செய்து முடித்தவராக இருக்கிறார்.
அரசியல் வல்லுநர்கள் ஏன் அண்ணாமலையை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கிறார்கள் என்பது இப்போது பலருக்கு விளங்கக் கூடும்.
மிகவும் ஆற்றலுள்ள கூர்மையான அறிவுள்ள அரசியல்வாதியாக அவரை ஏன் குறிப்பிடுகிறார்கள் என்பதும் விளங்கக் கூடும்.
அப்படித் தெளிவாக இருப்பதால் தான் அவரால், தான் உண்டு தன் கடமை உண்டு என்று இருக்க முடிகிறது.அவதூறுகள் அவரை எதுவும் செய்ய முடியவில்லை.
உங்களைக் கண்டு குரைக்கும் நாய் ஒவ்வொன்றின் மீதும் நீங்கள் கல்லெறிந்து கொண்டு நின்றால் உங்கள் இலக்கினை நீங்கள் அடைய முடியாது என்று சொன்னார் வின்ஸ்டன் சர்ச்சில்.
"You will never reach your destination if you stop and throw stones at every dog that barks."
புத்தகங்களை வாசிப்பதில் ஈடுபாடுடையவர் அண்ணாமலை என்பது நமக்குத் தெரிந்ததே.
படிப்பதோடு நில்லாமல் அவற்றில் உள்ள நல்ல விஷயங்களைத் தம்முடைய வாழ்க்கையில் இணைத்துக் கொள்பவர் அவர்.
வின்ஸ்டன் சர்ச்சிலின் மேற்கண்ட வரிகளை அவர் படிக்காமலா இருந்திருப்பார்?படித்திருப்பார்,
அதைத் தம் அன்றாட வாழ்விலும் நடைமுறைப் படுத்துபவராகவும் இருப்பார்.
அதனால் தான் எவர் எதைச் சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தம்முடைய இலக்கின் மீது மட்டுமே கண் வைத்து நடக்கிறார் அண்ணாமலை.
"எதிரிகள் சேற்றை வாரி இறைக்கட்டும், புழுதியை அள்ளித் தூற்றட்டும், புரளியைக் கிளப்பி விடட்டும், பொய்க் கதைகளைக் கட்டி விடட்டும், எதுவும் என்னைப் பாதிக்காது, ஏனென்றால் நான் என்னை அறிந்தவன், என் பலத்தை அறிந்தவன் " என்று சொல்லாமல் சொல்லி தனக்கே உரிய புன்னகையுடன் நகர்ந்து விடுகிறார்.
"அண்ணாமலையின் அரசியல் எதிரிகள் " என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள்,
அவர் மீது அவதூறு பரப்புதை விடுத்து வேறு உருப்படியான காரியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
அவரைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால் அம்மஞ்சல்லிக்குப் பிரயோஜனம் இல்லை.
அண்ணாமலைக்கு எதிரியாக/போட்டியாளராக நிற்கும் தகுதி தமிழகத்தில் எவருக்கும் இல்லை.
அவர் தமிழகத்தின் முதல்வராக வருவது தாமதமாகலாம்.
ஆனால் தடை என்று எதுவும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை.
***
💥உண்மையில் அதிர்ச்சியாகவும் ஆச்சரியம் கலந்த சந்தோஷமாகவும் இருக்கிறது..
இதுவரை எந்த ஆட்சியாளர்களும் பண்ணாத துணிச்சலான முடிவை சிஎம் விஜய் எடுத்திருக்கிறார்... தமிழகத்தின்16 கோடி கைகள் மானசீகமாக உங்களிடம் கை குலுக்கிக் கொண்டிருக்கிறது...
" கனிம வளங்கள் வெளிமாநிலங்களுக்கு போக தடை"...என்ற அரசாணை
இது பல ஆண்டுகளாக ஒவ்வொரு தமிழர்களும் இந்த தடையை போட மாட்டார்கள் அரசாங்கம் என்று ஏங்கிக் கொண்டிருந்தோம்...பல லாரிகளில், டாரஸ் வண்டிகளில் இங்கிருந்து மலைகள் வெட்டி எடுக்கப்பட்டு கரும் பாறைகளாகவும், ரோடு போடும் ஜல்லிகளாகவும், எம் சான்ட்களாகவும் கேரளாவுக்கு,ஆந்திராவுக்கும், கர்நாடகாவுக்கும் சென்று கொண்டே இருக்கும்.... சாமானிய மக்கள் அதை பார்த்து செய்வதறியாது விழித்திருக்கிறோம்...
🎯எதிர்கால சந்ததியினருக்கு என்னதான் நாம் நகையும்,பணமும், வீடு வாசல் வைத்திருந்தாலும் நல்ல ஆரோக்கியமான சுழலை வைக்க முடியாமல் போய்விடுமோ என்று கலங்கி இருக்கிறோம்... அதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி.. " கனிம வளங்கள் ஏற்றுமதி வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கு தடை.. என்ற காது குளிரும் செய்தி...
💥கேரளாவில் அவர்கள் மண்ணிலிருந்து கனிமங்கள் எடுப்பதற்கு மிகப்பெரும் கட்டுப்பாடு, கடுமையான சட்டங்கள்...ஆனால் இங்கு இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் போகலாம்.. அதிகாரிகளுக்கு சில 100 ரூபாய்களை கொடுத்தாலே அனுமதி கிடைக்கும்...ஆழமாக தோண்டி எடுத்து போய்க் கொண்டே இருந்தது.. கேட்பாரற்று கிடந்தது....
மலைகள் வெட்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது... வயல்கள் காய்ந்தது... பக்கத்தில் வீடுகள் எல்லாம் விரிசல் விட்டது... மக்கள் புழுங்கி, புலம்பித் தவித்தார்கள்....
கேரளாவுக்கு இங்கிருந்து கனிமங்களை ஏற்றுவார்கள்.. அவர்கள் மருத்துவ கழிவுகளையும் மற்ற கழிவுகளையும் நம் எல்லையில் கொண்டு வந்து தட்டி விட்டு செல்வார்கள்... அது தென் மாநில மக்களுக்கு எப்பொழுதும் மிகப்பெரிய ஒரு சவாலாக இருந்தது... இப்பொழுது இந்த அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்ததற்கு உண்மையில் நாங்கள் மிகுந்த சந்தோஷப்படுகிறோம்... மனம் நிறைந்த நன்றிகள்.🤝🤝
🎯இந்தத் தடை நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொரு தமிழர்களும் கை கூப்பி கேட்டுக்கொள்கிறோம்.🙏🙏
இங்கே இருந்து கனிமங்கள் வாங்கி அவர்கள் நன்றாக முன்னேற்றவர்கள்.. சாலைகளாகவும், பிரமாண்டமான கட்டிடங்களாகவும், தொழிற்சாலைகள் ஆகவும்..ஆனால் நமக்கு உரிமை பெற்ற முல்லை பெரியாரின் அணையை உடைத்து அதற்கு கீழே இன்னொரு அணை கட்டுவதற்கு அதிக பட்ச பிரம்ம பிரயத்தனம் செய்வார்கள் ... எப்பவுமே தமிழர்கள் இளிச்சவாயர்கள் தானே..
🎯இதே கதை தான் கர்நாடகாவும் பெங்களூரின் பெரும்பான்மை வளர்ச்சிக்கு தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து போன கனிம வளங்கள் தான் ரோடுகளாகவும் தொழிற்சாலைகளாகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும்.. ஆனால் இங்கே நம்மிடம் இருந்து வாங்கி இந்தியாவில் வளர்ந்து வரும் பெருநகரங்களில் ஒன்றாக மாறி.. அங்கிருந்து பல கோடி லிட்டர் உபயோகப்படுத்திய தொழிற்சாலை கழிவுகள்,மக்கள் புலங்கிய கழிவு நீரை "சுத்திகரிக்காமல் மனசாட்சியே இல்லாமல் "தென்பெண்ணை ஆற்றில் விட்டு விடுவார்கள்.. நுரை பொங்கி தமிழ்நாட்டிற்குள்ளே வருகிறது..
அந்தத் தண்ணீர் குடிநீருக்கும்,நம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இன்று நோய்க்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம்.. புற்றுநோய் பெருகிக் கொண்டிருக்கிறது... குடிக்க தண்ணீர் இல்லாமல் நாதியற்று கிடைக்கிறோம்..
இயற்கை அவர்களுக்கு கொடுத்த வரப்பிரசாதம் நம்மளை விட உயரத்தில் இருக்கிறார்கள்... இயல்பாகவே அந்த தண்ணி இங்கேதான் வரும்.. நம் விரல் வைத்து நம் கண்ணை குத்துவது போல்..அவர்களுடைய பெரும்பாலான முன்னேற்றத்திற்கு இங்கே இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கனிமங்கள்.. ஆனால்..அசுத்தமான உபயோகப்படுத்தப்பட்ட கழிவுகள் நமக்கு.. சுத்தமான காவிரி நீர் கிடைக்காது.. என்ன ஒரு ராஜதந்திரம்..
இதே தான் இந்த பக்கம் ஆந்திராவிலும் திருத்தணி தாண்டி உள்ள அத்தனை டெவலப்மெட்டும் நம் இங்கிருந்து போகக்கூடிய கனிமங்கள்..
நான் எவ்வளவோ மாண்புமிகு முதலமைச்சர் இடம் முரண்பட்டு இருக்கிறேன்.. எதிர்த்து கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறேன்.. ஆனால் முதலமைச்சரின் இந்த துணிச்சலான முடிவை பார்த்து வார்த்தைகளற்ற நிற்கிறேன்.. மனம் நன்றியால் நிறைகிறது. 🙏
மனம் நிறைந்த நன்றிகள் சார் ஒவ்வொரு தமிழரின் சார்பிலும்..இதை கட்டாயம் நிரந்தரமாக்கி நம் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்..
🌹🌹🌹🌹🌹🌹நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹