சிங்கப்பெண் படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் - அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே?
சென்னை வண்டலூர் அருகே அரசுப்பள்ளி மாணவியை மர்ம ந���ர்கள் சிலர் பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்தே கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெண்கள் பாதுகாப்பில் No compromise என்று சொல்லிக்கொள்ளும் Dummy முதலமைச்சரின் Circus ஆட்சியில், அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமை��்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும் - அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும் - பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
குற்றவாளிகளைப் பிடிக்க வக்கின்றி பாதிக்கப்பட்ட பெற்றோரின் செல்போன்களை கைப்பற்றி இந்த சம்பவ��் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று போலீஸ் தரப்பில் மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த Reels ஆட்சியாளர்களின் அராஜகப் போக்கு, குற்றவாளிகளுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் சித்திரவதை செய்வது போல் இருக்கிறது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.
குற்றவாளிகள் ய���ராக இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப்பள்ளி உட்பட அனைத்துப்பள்ளி வளாகங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
இடைத்தேர்தல் வருகிறது என்று இந்த கொடுமையை மூடி மறைக்க முயற்சித்தால், மக்கள் இந்த ஆட்சியாளர்கள் முகத்தில் கரியை பூசுவது உறுதி.
☀️ தந்தை பெரியார் - விடியலுக்கான கேள்விகளை விதைத்தவர்!
☀️ பேரறிஞர் அண்ணா - தமிழ்நாட்டுக்கான அரசியலை வடிவமைத்தவர்!
☀️ திராவிட முன்னேற்றக் கழகம் - சாமானிய மக்களால் கட்டமைக்கப்பட்ட இயக்கம்!
இந்தப் பேராள���மைகளின் பிறந்தநாளையும், பேரியக்கத்தின் பிறந்தநாளையும் இணைத்துக் கொண்டாடும் #முப்பெரும்_விழா - வரலாற்றைத் திரும்பிப் பார்க்க மட்டுமல்ல; அடுத்த தலைமுறை முன்னோக்கிப் பயணிப்பதற்கும்தான்!
சிந்திக்காமல் Scroll செய்வதும், சரிபார்க்காமல் Share செய்வதும் அல்ல அரசியல். Clarity over Virality என்பதே இளைஞர்களின் அரசியலாக உருப்பெற உழைப்போம்!
எங்கள் குடும்பத் தலைவரும், கழகத் தலைவருமான மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, சேலம் மேற்கு மாவட்டம், சங்ககிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தாரமங்கலம் மேற்கு ஒன்றியக் கழக செயற்குழுக் கூட்டம் எனது தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கழகத்தின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமைப்பு மறுசீரமைப்பு குற���த்து ஆலோசிக்கப்பட்டு, நிர்வாகிகளின் முழுமையான ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் , சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
#DMK
நாளை மாண்புமிகு முதலமைச்சர் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது பதிலுரை அளிப்பதற்கு முன்பாக அவரது கட்சிப் பிரமுகர் ஒருவரே தலைநகரில் கொலைக்கு ஆளாகியுள்ளார்.
அதுவும், தனது உயிருக்குப் பாதுகாப்பு வேண்டி ஆளும் த.வெ.க.வில் இணைந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி சாலையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதுதான் தமிழ்நாட்டின் ‘வெற்றி சட்டம்-ஒழுங்கு’ நிலை!
தலைநகரிலேயே ���ாலையில், இப்படி ஒரு கொலை நடக்கும் அளவு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா?
இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாகத் த.வெ.க. இருப்பதை நினைத்து வருந்துவதா?
இதற்கும் தி.மு.க.வை எப்படி குற்றம் சொல்லலாம் என யோசிப்பதை நிறுத்திவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
#Murder
#BanNEET
Why NEET when Tamilnadu was already delivering best medical care without NEET!
Bring education system under state concurrent list!
DMK Leader @mkstalin article in opEd in @the_hindu
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @mkstalin, அமெரிக்கத் துணைத் தூதர் திருமிகு மரியானா எல். நெய்���ூலர் அவர்கள் இன்று (02-07-2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அதுபோது கழகத் தலைவர் அவர்கள், “The Dravidian Model” புத்தகத்தை வழங்கினார்.
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
முன்னாள் கழகப் பொருளாளரும், கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான அண்ணன் திரு. ஆற்காடு நா.வீராசாமி அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் @DrKalanidhiV அவர்களின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்திய மகிழ்வான தருணம்.
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாரமங்கலம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளரும், பாசமிகு அன்புத் தம்பியுமான திரு. அய்யப்பன் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி���ில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய மகிழ்வான தருணம்.
காலம் கடந்தாலும்... கருத்தால் வாழ��ம் தலைவர்!
தலைமுறைகள் மாறினாலும்... நினைவில் நிற்கும் தலைவர்!
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பிறந்தநாள் புகழ் வணக்கம்!
கலைஞர் புகழ் என்றும் ஓங்குக!
#Kalaignar103
@mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @DMKSalem_
இசையால் நம்மை என்றென்றும் ஆளும் இசைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தலைவர் கலைஞர் மீது கொண்ட மதிப்பின் காரணமாகத் தனது பிறந்தநாளையே ஒரு நாள் முன்னதாக மாற்றிக் கொண்டவர். ‘இசைஞானி’ என்று தலைவர் கலைஞர் பட்டம் சூ��்டினார்.
அன்னக்கிளியில் தொடங்கி சிம்பொனி வரையிலான ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்.
ராஜா என்றும் ராஜாதான்! ♥️
@ilaiyaraaja #HBDIlaiyaraaja
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐
95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத��� தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்!
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை!
#12thResults #ExamResult
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.