இது உங்கள் வீட்டு பட்ஜெட் அறிக்கை கிடையாது #தவெக அமைச்சரே.. அனைத்து நம்பிக்கை கொண்ட ஒட்டு மொத்த தமிழ் நாட்டு மக்களுக்கான வேளான் பட்ஜெட் அறிக்கை .. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கை வெங்காயத்தை உங்கள் வீடுகளில் உட்கார்ந்து உரியுங்கள்.. @TVKVijayHQ
அன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே, பெற்றோர்களே!
வினாத்தாள் கசிவுகள், நீட் முறைகேடுகளுக்கெதிராக தில்லியில் வெடித்த வீரஞ்செறிந்த மாணவர் போராட்டம், நாடெங்கும் பரவி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 12 ஆண்டுக���ாக எதற்கும் வாய்திறக்காத, பொறுப்பேற்காத பாசிச மோடி அரசு போராட்டத்திற்குப் பணிந்து, கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். சுருங்கச் சொன்னால்,உலகின் மிகப்பெரிய பாசிச சக்தியான மோடி கும்பல் முதன்முறையாக மாணவர்கள் முன் மண்டியிட்டு நிற்கிறது.
இவ்வெற்றி மகத்தானதுதான் என்றாலும், நீட் தேர்வு இரத்து செய்யப்படும் வரை இப்போராட்டத்தை நாம் தொடர வேண்டியுள்ளது. அதற்கு, முதலில் நீட் போன்ற உயர்கல்விச் சேர்க்கைக்கான ‘தேசிய அளவிலான போட்டித் தேர்வுகள்’ ஏன் கொண்டுவரப்பட்டன; இதன் பின்னால் யாருடைய நலன் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நீட் தேர்வு என்பது, இந்திய உயர்கல்வியினை வணிகமயமாக்கித் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கொள்ளையடிப்பதற்காக பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் திணித்துவரும் ‘கல்விச் சீர்திருத்தங்களின���’ (reforms) ஒருபகுதியாகும். உலகளவில், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இலாபத்தை அள்ளித்தரும் தொழிலாக இன்று கல்வி வியாபாரம் உள்ளது. இந்திய உயர்கல்வித்துறை பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தையாக வளர்ந்துள்ளது. இச்சந்தையைத் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பன்னாட்டுக் கல்வி நிறுவனங்களும் நிதிமூலதனக் கும்பல்களும் துடிக்கின்றன. இதற்கு உலக வர்த்தகக் கழகம், உலகவங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களையும், காட்ஸ் போன்ற ஒப்பந்தங்களையும் பயன்படுத்துகின்றன.
‘கல்வியை பொதுச் சேவையாகவோ, அடிப்படை உரிமையாகவோ கருதக் கூடாது அதனை சந்தையில் விற்கப்படும் ஒரு பண்டமாகத்தான் பார்க்க வேண்டும்’ என்று காட்ஸ் ஒப்பந்தம் கூறுகிறது. இவ்வொப்பந்தத்தின் ஒரு அங்கமாக இந்தியா இருப்பதால், கல்வி குறித்த சட்டங்களும், கொள்கைகளும் இக்கண்ணோட்டத்திற்கு ஏற்பவே மாற்றியமைக்கப்படுகின்றன.
2015-ஆம் ஆண்டு உலக வர்த்தக கழகத்தின் நைரோபி மாநாட்டில் உறுதியளித்தபடி, ��ாட்ஸ் ஒப்பந்தம் கோரிய சீர்திருத்தங்களை நிறைவேற்றும் வகையில், புதிய கல்விக் கொள்கையை (NEP) மோடி அரசு உருவாக்கியது. அதன்படி, உயர்கல்வியில் 100% அந்நிய முதலீட்டை அனுமதிப்பது; வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்காகச் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்குவது; அரசுப் பல்கலைக் கழகங்களைத் ‘தன்னாட்சி’ நிறுவனங்களாக மாற்றுவது; நீட் போன்ற தேசிய அளவிலான ஒருங்கிணைந்த போட்டித் தேர்வுகளை நடைமுறைப்படுத்துவது – ஆகிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.
இந்திய உயர்கல்வியினை மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகங்களே கட்டுப்படுத்துகின்றன. இவை மாநில அரசின் நிதியிலிரு��்து அந்தந்த மாநில மக்களின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை. இவற்றின் அதிகாரத்தைப் பறித்தால்தான், இந்திய கல்விச் சந்தையில் பன்னாட்டு கல்வி வியாபாரிகள் நுழைய முடியும்.
ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனித்தனியாக நுழைவுத் தேர்வு நடத்தும்போது அவற்றின் தன்னாட்சி பாதுகாக்கப்படும். அதுவே, நாடுமுழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு அமல்படுத்தப்படும்போது சேர்க்கைமுறை ஒரே மாதிரியாக்கப்படுகிறது. இதனால் தனியார் பல்கலைக் கழகங்களும் அதே மதிப்பெண்களைப் பயன்படுத்தி மாணவர்களை எளிதாக சேர்த்துக்கொள்ள முடியும். அதுமட்டுமன்றி, மாணவர் சேர்க்கை குறித்த அதிகாரமும் பல்கலைக் கழகங்களின் கையிலிருந்து பிடுங்கி ஒன்றிய அரசின் கைகளில் கொடுக்கப்படும்.
தற்போது மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதையே பொறிய��யல், உள்ளிட்ட எல்லா உயர்கல்விப் படிப்புகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. அதனைச் சாத்தியப்படுத்தவே கியூட் (CUET) போன்ற தேர்வுகள் திணிக்கப்படுகின்றன.
மறுபுறம், நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் உருவாக்கியிருக்கும் கோச்சிங் சந்தை இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கார்ப்பரேட் வணிகமாக மாறியுள்ளது. இச்சந்தையைப் பிடிக்க பல்வேறு கோச்சிங் நிறுவனங்களும் தமக்குள் போட்டி போடுகின்றன. அதற்காகவே, அரசு எந்திரத்தையும் அரசியல்வாதிகளையும் தொடர்ச்சியாக ஊழல்படுத்தி, வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே, இத்தகைய ஊழல் முறைகேடுகளெல்லாம் தனிப்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தவறுகளால் மட்டும் நிகழ்வதல்ல. கோச்சிங் சந்தை பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்பதன் தவிர்க்க���ியலாத விளைவுகளே! அமைச்சர்கள் பதவி விலகுவதோ, அதிகாரிகள் மாற்றப்படுவதோ ஒருபோதும் தீர்வைத் தராது!!
மொத்தத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் பல்கலைக் கழகங்கள், அவற்றில் முதலீடு செய்திருக்கும் கல்வி முதலாளிகள், இவர்களின் நலனை முன்னிறுத்தும் உலக வர்த்தக கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிறுவனங்கள் – ஆகியவற்றின் கூட்டுதான் இந்தியாவின் கல்விக் கொள்கையைத் தீர்மானிக்கிறது. இத்தகைய மதயானைகளை எதிர்த்துதான் நாம் போராடுகிறோம்! நமது உண்மையான எதிரி ஒன்றிய மோடி அரசு மட்டுமல்ல, அதை ஆட்டிப் படைக்கும் மேற்கூறிய பன்னாட்டு முதலாளிகள்தான்!
நாம் யாரை எதிர்த்துப் போராடுகிறோம் என்பதுதான், நாம் எத்தகைய போராட்டத்தை நடத்த வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது. கல்வி கார்ப்பரேட்மயமாவதை எதிர்த்த மாபெரும் போராட்டங்களை நடத்தாமல், நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை முறியடிக்க முடியாது.
வெல்லற்கரியது என்று பீற்றிக் கொள்ளப்பட்ட மோடி கும்பலை மண்டியிட வைத்த வீரஞ்செறிந்த போராட்டத்திற்குச் சொந்தக்காரர்கள் நாம். அதே உத்வேகத்தோடு, கல்வி வணிகமயமாவதற்கு எதிரான மகத்தான போராட்டங்களை முன்னெடுப்போம்! மதயானைகளைச் சிற்றெறும்புகள் வீழ்த்தும் கதையை மறுபடியும் இந்தியா பார்க்கட்டும்!!
Director Lenin Bharathi joins the No More NEET protest, standing in solidarity with students demanding equitable access to education.
📍 Rajarathinam Stadium, Egmore, Chennai
Stand with students. No More NEET.
#NoMoreNEET#StandWithStudents#EducationForAll#LeninBharathi
டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்துகிறது பாசிச #பாஜக அரசு.. இங்கே அந்த மாணவர்களுக்கு ஆதரவாக போராடும் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்திக் கொண்டு திரையில் போலி #ஜனநாயக���் பிம்பத்தை வளர்க்கிறது #தவெக அரசு.. #நீட் #BanNeet_SaveStudents
நீட்டுக்கு எதிராக டெல்லியில் போராடும் மாணவர்களை கொடுரமாகத் தாக்கும் #பஜக அரசை கண்டிக்க திரைக்கவர்ச்சி முதலவர் @TVKVijayHQ க்கும் தமிழ்த்திரையுலகின் ஆகச்சிறந்த வீராதி வீரர் @rajinikanth க்கும் ஏன் தைரியம் இல்லை..? திரையில் டாப்புகள்.. நிஜத்தில் டூப்புகள்..
ஜந்தர் மந்தரில் ஒரு மெரினா!
மோடி அரசுக்கு எதிராக வெடித்த மாணவர் எழுச்சி!
நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி மதிப்பீட்டு முறைகேடுகள், புதிய கல்விக் கொள்கையின் பெயரில் கல்வியை முழுமையாக சந்தைமயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு எதிராக, இந்தியா முழுவதிலுமிருந்து ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தில்லியில் ஒன்றுகூடி நாடாளும��்றத்தை முற்றுகையிட முயன்றது, நாட்டின் தலைநகரையே அதிரவைத்துள்ளது. இது வெறும் தேர்வுக் குளறுபடிக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல; கடந்த பத்தாண்டுகளாக கல்வி, வேலைவாய்ப்பு, ஜனநாயக உரிமைகள் என மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் குவிந்து கிடந்த அதிருப்தி இன்று நீட் ஊழல் எனும் தீப்பொறியினால் வெடித்த அரசியல் எழுச்சியாக மாறியுள்ளது.
மாணவர்களின் இந்த எழுச்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத மோடி அரசு, அவர்களின் கோரிக்கைகளுக்குப் பதில் சொல்லாமல், போலீசையும் துணை இராணுவத்தையும் ஏவி அடக்குமுறையின் மூலம் போராட்டத்தை நசுக்க முயற்சிக்கி���து. கல்வி தொடர்பான கோரிக்கையை முன்வைத்து அமைதியாகத் திரண்ட மாணவர்களை எதிர்கொள்ள அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், தடுப்பரண்கள், தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டுகள், இணைய சேவை முடக்கம் ஆகியவற்றை அரசு தேர்வு செய்துள்ளது.
விரிவாகப் படிக்க 👇
https://t.co/FJMWkLuRFo
தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கடந்த காலங்களில் ஆதிக்கசாதி வெறியின் முகமாய் இருந்த #திமுக எப்படி “பாசிசத்திற்கு எதிரான முதன்மை எதிர்க்கட்சியாக திமுக உருவெடுக்கும் நேரம் இது” என்று மனசாட்சியில்லாமல் கூறுகிறீர்கள் மதிப்பிற்குரிய மர���த்துவர் @AmalJos95950131 அவர்களே..
“We are repeatedly told, ‘today or tomorrow’, but nobody tells us exactly what is happening. Every official who visits says they are waiting for approval from the government,”
In a video appeal addressed to the Jharkhand government, a worker, identified as Dilip, said the group had been staying at the camp for the past six days after being evacuated from the factory. While food and accommodation were being provided, he alleged that they were neither allowed to leave the camp nor given any official update on their relatives.
@xpresstn@JharkhandCMO
Read Here : https://t.co/wjx2EH1q3I
எங்களை விடுங்கள் ! - பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சட்டவிரோதமாக அடைத்துள்ள தவெக அரசு !
திருவள்ளுர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள செயின்ட் பால் & பீட்டர்' (St. Paul & Peter) கடல் உணவு ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த ஜூன் 21 அன்று அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து கொத்தடிமை முறையி���் இருந்த கூலித் தொழிலாளர்களும் குழந்தைத் தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டு தற்போது தமிழ்நாடு அரசுக் கட்டுப்பாட்டில் பெரியபாளையத்தில் MSN திருமண மண்டபத்தில் (சிறைவைக்கப்பட்ட நிலையில்) வைக்கப்பட்டுள்ளனர். "எங்களை விடுவியுங்கள், எங்கள் ஊருக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் (பெரும்பாலும் பழங்குடியின சமூகத்தினர்) பொதுமக்களிடமும் ���ார்க்கண்ட் மாநில அரசிடமும் சமூக வலைதளம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணொளியில் தொழிலாளி தெரிவிப்பவை
"ஜார்க்கண்ட் அரசு ��தைக் கவனித்து எங்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்க வேண்டும். எனக்குப் பின்னால் அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்; அனைவரும் தங்கள் ஊருக்குச் செல்ல விரும்புகிறார்கள், ஆனால் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அரசு அதிகாரிகளும் தனியார் நிறுவன ஊழியர்கள் என்று யார் சென்று கேட்டாலும், 'இன்று அல்லது நாளை செல்லலாம்' என்
தெளிவற்ற பதிலையே கூறுகிறார்களே தவிர, இதுவரை தெளிவான முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் அனைவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்; சிலர் இங்கேயே தங்க விரும்பலாம், சிலர் ஊருக்குத் திரும்ப விரும்பலாம் - அது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் எங்களுக்கு எந்தவிதத் தகவலும் இங்கு வழங்கப்படுவதில்லை. நாங்கள் அனைவரும் 'செயின்ட் பீட்டர் & பால்' மீன் பதப்படுத்தும் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள்; அம்மோனியா வாய�� கசிவு காரணமாக நாங்கள் இங்குத் (MSN திருமண மண்டபம்) தங்க வைக்கப்பட்டுள்ளோம். இங்கு எங்களுக்கு இலவச உணவு கிடைக்கிறது, உணவில் எந்தப் பிரச்சினையும் இல்லை, மருத்துவ வசதிகளும் உள்ளன; ஆனால், நாங்கள் எப்போது இங்கிருந்து செல்ல முடியும் என்பது குறி��்த எந்தத் தகவலும் இல்லை. ஜார்க்கண்ட் அரசு இந்தக் காணொளியைப் பார்த்து, எங்களுக்குத் தெளிவான பதிலை அளிக்க வேண்டும், எங்களை எங்கள் ஊருக்குத் திரும்பி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
முதலீடுகளை ஈர்ப்பதுதான் வளர்ச்சியா?
கடந்த சில நாட்களாக திமுக – தவெக இடையில் நடந்துவரும் விவாதங்களில் முக்கியமான ஒன்று யார் அந்நிய முதலீட்டை அதிகம் ஈர்க்கிறார்கள் என்பதாகும். எதிர்க்கட்சி தலைவர���ன உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் “தவெகவிற்கு ஆட்சி நடத்த தெரியவில்லை, அவர்களுக்கு நிர்வாகத்திறனும் அனுபவமும் இல்லை, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாடு முதலீடுகளை இழந்து வருகிறது, இது தமிழ்நாடு வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது” என்று குற்றம்சாட்டி வருகின்றனர். மறுபுறம் தவெகவின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவோ, “திமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு அதிகளவில் முதலீடுகளை இழ��்தது” என்று “பிளேட்டை திருப்பி” திமுகவினரை குற்றம்சாட்டி வருகிறார்.
இப்படி மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டினாலும் “அந்நிய முதலீட்டை ஈர்ப்பதுதான் வளர்ச்சி” என்ற புள்ளியில் இருவரும் ஒன்றுபடுகிறார்கள். மோடி முதல் ஸ்டாலின், விஜய் வரையிலும் அனைவரும் ஒருவருக்கொருவர் “ஈவில்” “டெவில்” என மாறிமாறிக் குற்றம்சாட்டிக் கொண்டாலும், அனைவரது கருத்தும் இதில் ஒன்றுதான். அந்நிய முதலீடு என்பது ஒரு அமுத சுரபிக் கிண்ணம் போலவும், அது வந்துவிட்டால் வேலையின்மை, வறுமை ஆகியவை ஒழிந்து நாடு சுபிட்சம் பெற்றுவிடும் என்றும் கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் காதுகளில் இவர்கள் பூச்சுற்றி வருகிறார்கள்.
ஆனால், உண்மை இதற்கு முற்றிலும் முரணானதாக உள்ளது. 1980-களில் தொடங்கி இன்றுவரை, தனியார்மயமும் அந்நிய முதலீடுகளும் எவ்வளவு அதிகரித்து வருகிறதோ, அவ்வளவு வறுமையும் வேலையின்மையும் அதிகரித்தே வருகிறது என்பதுதான் உண்மை. பட்டினிக் குறியீட்டில் ‘பாரத தேசம்’ இன்று படுகேவலமான நிலையில் இருப்பதே இதற்குச் சான்று. அந்நிய முதலீடுகள்தான் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்பதும் புழுத்த பொய்யாகும். இரண்டு மாதங்களுக்கு முன்பு அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட “State of Working India Report” என்கிற அறிக்கை வேலையின்மையின் கோரமுகத்தை வெளிச்சம்போட்டு காட்டியது. 1985ல் 35 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் இன்று 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. பல இலட்சம் இளைஞர்கள் பட்டப்படிப்பை முடித்தும் வேலையில்லாமல் இருக்கின்றனர். கல்லூரி படிப்பை முடித்த ஒருவருடத்திற்குள், ஏழு சதவீதப் பட்டதாரிகளுக்கு மட்டுமே நிரந்தர வேலை கிடைக்கிறது. 43 சதவீதத்தினர் பகுதிநேரமாகவோ அல்லது கிடைக்கின்ற வேலைகளையோ செய்கின்றனர். மீதமுள்ள 50 சதவீதத்தினர் எந்த வேலைக்கும் செல்வதில்லை.
இதுதான் 30 ஆண்டுகாலம் இந்தியாவுக்குள் நுழைந்த அந்நிய முதலீடுகள் உருவாக்கிய வளர்ச்சி! அவை மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் உருவாக்கவில்லை. மண்டை ஓடுகளையும் பிச்சைப் பாத்திரங்களையுமே நாட்டில் உருவாக்கியுள்ளது!
வெளிநாட்டு கம்பெனிகள் இங்கு படையெடுத்து வருவது மோடியோ, விஜயோ, சந்திரபாபு நாயுடுவோ அழைக்கிறார்கள் என்பதற்காக அல்ல. மாறாக இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை (அதாவது அதிக உழைப்பு சக்தி) கொண்ட நாட்டில், ஏழை எளிய உழைக்கும் மக்களை சுலபமாக சுரண்டமுடியும் என்பதற்குத்தான். அவ்வாறு வரும் எஜமானனை எந்த மாநிலத்திற்குள் இழுத்துவருவது என்று தரகர்களுக்குள் நடக்கும் போட்டிதான் மோடி, சந்திரபாபு நாயுடு, விஜய், ஸ்டால��ன் போன்ற ஓட்டுக் கட்சிகளுக்குள் நடக்கும் சண்டை ஆகும். அதற்காக, எஜமானன் கேட்கும் அனைத்து சலுகைகளையும் செய்துகொடுத்து, தொழிலாளிகளின் உரிமைகள் அனைத்தையும் காவு கொடுப்பதையே “சிறந்த நிர்வாகம்” (good governance) என்று பத்திரிக்கைகள் புகழ்கின்றன.
குஜராத்தில் மோடி எதைச் செய்தாரோ, தமிழகத்தில் எடப்பாடியும் ஸ்டாலினும் எதைச் செய்தார்களோ, அதையே தான் சிறப்பாகச் செய்வேன் என்று கூறும் விஜயும் தவெகவும் எந்த வகையில் அவர்களுக்கு மாற்று என்று நாம்தான் சிந்திக்க வேண்டும்!
#TVKVijay #tvkitwing #dmk #senkanal
செந்த���ல் பாலாஜி போன்ற ஊழல் கறைகளை வெளுத்த #திமுக வாசிங்மிஷின் போல் #தவெக வும் வாசிங்மிஷின் வைத்திருக்கும் அவ்வளவுதான்.. @AmalJos95950131 அவர்களே., இங்கு எல்லாம் மக்கள் விரோத அதிகாரங்கள் தான்.
ஆட்சியாளர்கள் ஊழலை ஒழிக்கவில்லையென்றால் மக்களிடம் ரூ10 கொள்ளையடித்து தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளலாமா? எந்த ஊர் தொழிலாளர் சட்டம் #citu@tncpim தோழர்களே..?