கூடுவாஞ்சேரியை அடுத்த அஸ்தினாபுரம் அரசுப்பள்ளி மாணவ – மாணவிகள் எழுதிய 37 சிறுகதைகள், ‘ஒரு ஊர்ல’ எனும் புத்தகமாக வெளி வந்துள்ளது அறிந்து மகிழ்ந்தோம்.
கல்வியின் வழியே படைப்பாற்றலும் – பகுத்தறியும் சிந்தனையும் மாணவர்கள் மத்தியில் வளர்ந்திட வேண்டும் என்பது நம் மாண்ப���மிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் எண்ணம்.
அதனை நிறைவேற்றும் வண்ணம், செயல்பட்டுள்ள அஸ்தினாபுரம் அரசுப்பள்ளி மாணவச்செல்வங்களுக்கும், அவர்களுக்குத் துணை நின்ற ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்மாணவ எழுத்தாளர்கள் நாளை மாபெரும் படைப்பாளிகளாக உயர்ந்திட வாழ்த்துகள்.
@Anbil_Mahesh