I have written to the Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay, with the following recommendations to strengthen the upcoming Gram Sabha meetings on 2 October as more meaningful institutions of grassroots democracy:
• Enhance the honorarium of Village Panchayat representatives.
• Give Gram Sabhas a decisive voice on local TASMAC outlets.
• Increase awareness and public participation.
• Ensure time-bound action on Gram Sabha resolutions.
• Give citizens a greater say in the Gram Sabha agenda.
• Strengthen research and capacity-building in local governance.
• Make village development planning genuinely participatory.
• Build a stronger culture of grassroots accountability.
Gandhiji’s vision of Gram Swaraj was rooted in empowered villages and participatory democracy. The best way to honour his legacy would be for Tamil Nadu to become India’s model State for village governance.
@TVKVijayHQ@CMOTamilnadu
#GramSabha
தென்னகத்திலிருந்து வெடித்து எழுந்த சுதந்திர முழக்கத்துக்குச் சொந்தக்காரர், ஆங்கிலப் பேராதிபத்தியத்துக்கு எதிராக மேலைக்கடலில் கப்பல் விட்டு விடுதலை வேட்கை என்னும் நெருப்பைப் பரவச் செய்த மாவீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் இன்று. நமக்கெல்லாம் உத்வேகம் தரும் அவரைப் போற்றுவோம்.
‘தான் பெற்ற செல்வம் பெறுக இவ்வையகம்’ என வாழும் ஆசிரியப் பெருமக்களை வணங்கி வாழ்த்துகிறேன். கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொடுக்கவும் ஒருபோதும் தயங்காதிருப்போம்.
Thank you, Thiru @ikamalhaasan ,Your long and distinguished journey in cinema and public life is something I have always held in the highest regard..Your relentless commitment to the craft, your intellectual curiosity and your courage to keep experimenting and evolving have made your journey truly distinctive. Few artists have approached their work with such conviction while continuing to question, learn and move with the times. I sincerely appreciate your birthday wishes and wish you good health, strength and peace always.
Heartiest birthday wishes to Shri @PawanKalyan Garu, Deputy Chief Minister of Andhra Pradesh.
Wishing you good health, strength and a long, fulfilling journey of meaningful public service.
Excellent. சட்டமன்றத்தில் தனக்குக் கிடைக்கும் நேரத்தை மிகச் சரியாகவும், துல்லியமான தகவல்களோடும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் சகோதரி @Sowmiyanbumani அவர்களைப் பாராட்டுகிறேன்.
We teach our kids one thing in school. We test them on another for college admissions!
Government’s Vineet Joshi Committee has admitted this mismatch between school education and college entrance exams.
For NEET, the first step must be abolition. Clear Tamil Nadu’s NEET Exemption Bill, still awaiting Presidential assent. Don’t reform an unfair system. End it.
For other entrance exams, the Committee has made sensible suggestions: give Class 12 marks greater weightage, offer multiple attempts through the year, and cap coaching at 2–3 hours a day.
கிராமம் தொடங்கி நகரம் வரைக்கும் ரசிகர்களை ஈர்த்ததிலும்; நடிகர் சங்கம் தொடங்கி, தேமுதிக வரைக்கும் தன் நிர்வாகத் திறனைக் காட்டியதிலும் கேப்டன் என்று கொண்டாடப்படும் அன்பு நண்பர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. அவருக்கான வாழ்த்துகள் என்றும் உண்டு.
மண்வாசனையைத் திரையில் பதிவு செய்த இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இது காலத்தினாற் செய்த நன்றி.
‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி.
அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்.
கருப்பு வெள்ளை, மோனோ, ஸ்டீரியோ, சினிமாஸ்கோப், அவிட், டிஜிட்டல் என காலம்தோறும் பல தொழில்நுட்ப மாற்றங்களின் வழியாக வளர்ந்தது சினிமா. அதன் அத்தனை மாற்றங்களிலும் பெரும்பங்களிப்பாற்றிய ஆளுமை, பிரசாத் ஃபிலிம் லேப்பின் தொழில்நுட்பத் தலைவரான எஸ். சிவராமன் மறைந்து விட்டார்.
பிராசஸிங் மற்றும் கலர் கரெக்ஷன், ஒலித் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு அளப்பரி�� பங்களிப்பைச் செய்தவர். சினிமா சார்ந்த பல தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வர காரணமானவர்.
��பிலிம் சுருளில் இருந்து திரைப்படங்கள் டிஜிட்டலுக்கு மாறியபோது சக கலைஞர்களுக்குத் தேவையான பயிற்சிகளை அளித்தார். பல முன்னணி ஒளிப்பதிவாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் தொழில்நுட்ப வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அந்த வகையில் தன் வாழ்நாளில் ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 500 படங்களையேனும் ஒலியே இல்லாமல் பார்த்திருப்பார். அது அத்தனை சுலபமான வேலை அல்ல.
தென்னிந்திய சினிமா தனது தூண்களுள் ஒன்றை இழந்திருக்கிறது. சாதாரணத் தூண் அல்ல. கல் தூண். மிகப்பெரிய இழப்பையும் வெற்றிடத்தையும் உணர்கிறேன்.
A warm Thank you to the one and only @ikamalhaasan for lending his support for the Asha Bhosle ji’s tribute music video. Having a legend who has enriched Indian cinema in so many ways be part of this tribute is truly special. #ComingSoon#AshaForever
பிறப்பினால் எவரும் எவருக்கும் தாழ்ந்தவரும் அல்ல உயர்ந்தவரும் அல்ல எனும�� மானுட சமத்துவத்தை அரசியல் சித்தாந்தமாகக் கொண்டு களமாடும் என் உடன் பிறவாச் சகோதரர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், எழுச்சித் தமிழர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து.
@thirumaofficial
‘கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திர தேவி, நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே’ என்கிற பாரதி வரிகள் என்றும் சாஸ்வதம். சக இந்தியர்க்கு சுதந்திர தின வாழ்த்துகள்.
Thanks to all who wished me well on my 67 years of cinema.
Out of those 67, I think I can only salvage about 20 years as my actual learning. The rest was going with the flow of the wastewater.
The uplifting hope is, however dark the waterway turns out to be, the wait for a confluence with the largest singular form called the collective cinema, an unchannelled sea. We are all flowing towards it - artists, audience, and all.
So I guess what I have salvaged as experience can be improved upon before people stop counting my years in this field and start looking for better numbers elsewhere.
Since the Lumière brothers’ first public film screening in December 1895, the film industry has been around for approximately 130 years and 8 months. My team reminded me that I have been around for 67 of those years, more than half of the entire history of the film industry! That is a rather extraordinary thought to take in. Yet, in my own account, I can claim only about 20 years as actual learning.
I am probably the oldest of the Gen Z in cinema. 😊🙏
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரு தீர்மானங்கள் ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளமை மகிழ்வளிக்கிறது.
நீட் நுழைவுத் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்பதும், ஒன்றிய அரசு க��ண்டுவந்துள்ள வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுமே அத்தீர்மானங்கள்.
பா.ஜ.க. நீங்கலாக, தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடும் இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டின் நலனுக்கான இந்த ஒற்றுமைப் போக்கு தொடரவேண்டும்.