நீட்டுக்கு எதிரான போராட்ட களத்தில்..
இன்று (25.07.26) காங்கிரஸ் பேரியக்கம் சென்னை தியாகராயநகர் முத்துரங்கம் சாலையில் ஒருங்கிணைத்த நீட்டுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பங்கேற்று முழங்கினோம்.
@thirumaofficial
ஜூலை -27 ஆர்ப்பாட்டம் சென்னையில் மட்டும் நடைபெறும். அமைச்சர் தர்மேந்திர ��ிரதான் பதவி விலகியதையடுத்து அனைத்து தொகுதிகளிலுமான போராட்டம் என்பதற்கு மாற்றாக ஒரே இடத்தில் மையப்படுத்திய ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
தர்மேந்திர பிரதான் பதவி விலகல்:
---------------------------------
மாணவர்களின் போராட்டத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றி!
எழுச்சித்தமிழர் @thirumaofficial
அறிக்கை
இந்திய ஒன்றிய அரசு நீட் தேர்வை முற்றாக கைவிட வலியுறுத்தியும்! தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை ���யற்றக் கோரியும் அதே நாளில் சென்னையில் மட்டும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
--------------------------------
வினாத்தாள் கசிவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது மாணவர்களின் சார்பில் காக்ரோச் ஜனதா பார்ட்டியால் முன்னெடுக்கப்பட்ட அறவழிப் போராட்டத்துக்குக் கிடைத்த மகத்தான வெற்றியாகும். தர்மேந்திர பிரதான் விலகலையடுத்து அப்பொறுப்பில் கல்வியாளர் ஒருவரைக் கல்வி அமைச்சராக நியமிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.
“நீட் தேர்வு தேவையில்லை, மருத்துவப் படிப்��ுக்கான நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்” எனப் பல ஆண்டுகளாக விசிக உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் அதற்காக நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் அன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டிருந்தார். நீதிமன்றம் தலையிட்டதால் அதைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் அது நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பப்பட்டது. அதை சட்டத்துக்குப் புறம்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். அங்கு அவர் கிடப்பில் போட்டிருந்தார். உச்சநீதிமன்றம் தலையிட்டபின் அதைத் திருப்பி அனுப்பினார். இவை யாவற்றுக்கும் பாஜக அரசே காரணம்.
காக்ரோச் ஜன்தா கட்சியின் போராட்டத்துக்குப் பிறகு ‘நீட் தேர்வே வேண்டாம்’ என்ற தமிழ்நாட்டின் நிலைபாட்டை இப்போது மேலும் பல மாநில அரசுகளும், கட்சிகளும் வழிமொழியத் தொடங்கியுள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு முறையை ரத்துசெய்ய ஒன்றிய அரசு முன்வர வேண்டும். ஏனெனில், நீட் தேர்வு என்பது அனைத்துத் தரப்பினரின் விருப்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அல்ல. உச்ச��ீதிமன்றத்தில் அனில் ஆர்.தவே என்ற ஒரே ஒரு நீதிபதியின் விருப்பத்தின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்த ஒன்றாகும்.
மருத்துவக் கல்வியப் பாதுகாக்க நீட் தேர்வை முற்றாக ஒழிப்பதுதான் ஒரே வழி. எனவே, எதிர்வரும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின்போது இதற்கான சட்ட மசோதாவைக் கொண்டுவந்து சட்டமாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண���டும் என வலியுறுத்தி நடந்து வந்த மாணவர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தும்; நீட் தேர்வை இந்தியா முழுவதும் ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் விசிக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 27 திங்கட்கிழமையன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பதால், அந்த ��ர்ப்பாட்டம் அதே நாளில் சென்னையில் மட்டும் எனது தலைமையில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இயக்கத்தின் முன்னோடிகள் யாவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர்- தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
25.7.2026
நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஒன்றிய கல்வி அமைச்சர�� தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தியும் சிபிஐ பாலன் இல்லத்தில் மாணவர்கள் நடத்தும் தொடர் முழுக்க போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
சுற்றறிக்கை
~~~~~
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் அனைவருக்கும் வணக்கம்!
இந்திய ஒன்றிய அரசு நீட் தேர்வை முற்றாக ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டத்தை இயற்றக் கோரியும் 27.7.2026 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட ஒரே ஆர்ப்பாட்டமாக சென்னையில் எனது தலைமையில் 27.7.2026 அன்று காலை 10 மணிக்கு இராஜரத்தினம் விளை��ாட்டரங்கம் அருகே நடைபெறுகிறது. எனவே, சட்டமன்றத் தொகுதி வாரியாக ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைப்பதை விடுத்து அனைத்து பொறுப்பாளர்களும் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவண்
முனைவர் தொல்காப்பியன் திருமாவளவன்.
நிறுவனர் - தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இலக்கு: தர்மேந்திர பிரதான் மட்டுமல்ல; நீட் ஒழிப்பு தான்!
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் குளறுபடிகளை எதிர்த்து தொடங்��ிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம், நாடெங்கும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாட்டுக்கு எதிரான ஒரு பேரலையாக எழுச்சி பெற்றது.
கரப்பான் பூச்சிகள் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் கிண்டலடிக்கப்பட்ட இளைஞர் படை,
CJP அமைப்பாக மாறி இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இளைஞர்களின் சமரசமற்ற போராட்டத்தால் ஒன்றிய பாஜக அரசு பணிந்தது. நீக்கவே முடியாது என்று சொல்லப்பட���ட ��ன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதுபோல தான் முன்னர் விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களில் ஒரு புள்ளியை கூட மாற்ற முடியாது என்றார்கள். ஆனால் நடந்தது என்னவென்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. மக்களுக்கு பதிலளிக்கவே முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்த பிரதமர் மோடி, இரவெல்லாம் தூக்கம் இழந்து இளைஞர்களுக்கு வீடியோ வெளியிட்டுக் ���ொண்டுள்ளார்.
நீட் தேர்வு சீரமைக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் திரண்டிருந்தாலும், 10 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டில் நமது தங்கை அனிதா பற்ற வைத்திருந்த நீட் ஒழிப்பு எனும் முழக்கம் இன்று நாடு முழுவதும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசும்போது,
தமிழ்நாட்டில் மட்டுல்ல; இந்தியா முழுமைக்கும் நீட் கூடாது”என வலியுறுத்தினார். மாணவர்கள் - இளைஞர்கள் இப்போது உண்மையை உணர தொடங்கியுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை சமூக மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைக்கும் நீட் தேர்வு ஒழிப்பே ந��ரந்தர தீர்வாக அமையும். அதன் முதல்படியாக கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.
வடஇந்திய மாணவர்கள் சொல்வது போல, அமைச்சர் பிரதானுடன் தொடங்கிய இந்த போராட்டம்,
பிரதான் மந்திரி மோடியை நீக்குவதில் தான் முடியும்!
இப்போதாவது, மோடி அரசு நீட்டை
ரத்து செய்து மாணவர்களின் கடுங்கோபத்திற்கு ஆளாகாமல் தப்பித்துக்கொள்வது நல்லது.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதல���ச் சிறுத்தைகள் கட்சி
25.7.2026
நான் மட்டுமல்ல அனைத்து அமைச்சர்களும் சிறப்பாக தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், அதை துறை ரீதியாக தான் பார்க்க வேண்டும் - பா. ரஞ்சித் கு��்றச்சாட்டுக்கு அமைச்சர் வன்னியரசு பதில்
#PaRanjith | #VanniArasu | #Minister | #PolimerNews
"அது மாதிரி சித்திரங்கள் வேண்டாம்.. இது நம் போராட்டத்தின் நோக்கத்தை திசை திருப்பிவிடும்.." முதலமைச்சர் விஜய் குறித்த கண்ணிய குறைவான கேலிச்சித்திரங்கள் படங்களுடன் நீட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வீரபாண்டியன் வைத்த வேண்டுகோள்
#Chennai | #Veerapandiyan | #NEET | #Protest | #PolimerNews