எனக்கின்னே வருவீங்களாடா?
நேற்று சாயந்தரம் 5 மணிக்கு, என்னுடைய Brother-in-lawவிடமிருந்து ஒரு ஃபோன்.
“நம்ம மாப்பிள்ளை வீட்டு வாசல்ல ஒரு கார் நிக்குது. கொஞ்சம் என்னன்னு பாருங்க!”
எனக்கு ஒரே ஆச்சரியம்! மாப்பிள்ளையும் அவன் மனைவியும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் மாம்பலம் போயிருக்கிறார்கள். இன்னும் இரண்டு நாட்கள் கழித்துத்தான் வருவார்கள்.
வாசல் பெருக்குபவருக்குச் சிரமம் இருக்க வேண்டாமென்று வீட்டைப் பூட்டிவிட்டு, வாசல் கேட்டை மட்டும் வெறும் கொண்டி போட்டு விட்டு, பூட்டாமல் போயிருக்கிறார்கள்.
உடனே மாப்பிள்ளையைக் கூப்பிட்டேன். “நீ யாருக்காவது காரை பார்க் பண்ண permission கொடுத்திருக்கிறா���ா?”
அவனுக்கு என்னுடைய கேள்வியே ஒரு Breaking News!
“இல்லையே!” என்றான். என்னிடம் Duplicate சாவி உண்டு. அவனுடைய வீடு மூன்று நிமிட தூரம்தான். போய்ப் பார்த்தேன்.
காம்பவுண்டுக்குள் ஒரு கார் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது! காரை எடுக்காமல், வீட்டுக்குள் யாரும் போக முடியாது. அந்த அளவு close parking.
காரைப் பார்த்தால், வீட்டின் உரிமையாளரே வாடகை கொடுத்துக் குடியிருக்கிறாரோ என்று சந்தேகம் வரும் அளவுக்கு உரிமையுடன் நின்றிருந்தது! அருகில் ஐயப்பன் கோவில். கொஞ்சம் கூட்டம் இருந்தது.
அங்கே போய், “இங்கே யாராவது கார் பார்க் பண்ணியிருக்கீங்களா?” என்று சத்தமாகக் கேட்டேன்.
கோவில் ஆபீஸில் இருந்தவரும் கூப்பிட்டார். பதிலில்லை!
ஐயப்பனைத் தரிசிக்க வந்தவர்கள் எல்லோரும் இருந்தார்கள். ஆனால் காரின் உரிமையாளர் மட்டும் மாய��ாகிவிட்டார்! வேறு வழியின்றி அவன் வீட்டுக்குத் திரும்பினேன்.
கேட்டைப் பூட்டினேன். பூட்டில், “CALL THIS NUMBER” என்று ஒரு பேப்பரில் என் ஃபோன் நம்பரை எழுதி பூட்டில் சொருகிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். ஒருமணி நேரம் ஓடிவிட்டது. I was slightly restless.
இரவு 7.30 மணிக்கு ஃபோன். “சார்! காரை எடுக்கணும். பூட்டைத் திறந்து விடுங்க!”
நான் அப்போது மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். “சாப்பிட்டுவிட்டு வருகிற��ன்” என்று சொன்னாலும், அவசர அவசரமாகச் சாப்பிட்டேன்.
காரை நிறுத்தியவருக்கு அவசரம். காரைப் ப���ட்டிய எனக்குச் சாப்பிடக்கூட அவகாசமில்லை! என்ன ஒரு சமூக நீதி!
போய்ச் சேர்ந்தேன். ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அருகில் அவர் மனைவி. என்னைப் பார்த்ததும், “என்ன சார்! இப்படிப் பூட்டிட்டுப் போயிட்டீங்க?” என்றார்.
அவர் கேட்ட தோரணையைப் பார்த்தால், அவருடைய சொந்த வீட்டில் நான் அத்துமீறிப் பூட்டுப் போட்டுவிட்டது போலிருந்தது!
நான் பொறுமையாக, “நீங்க யாரு சார்?” என்றேன்.
“கோவிலுக்கு வந்தோம். எங்க பார்க் பண்ணலாம்னு பார்த்தோம். வீடும் பூட்டியிருந்தது. கேட்லயும் பூட்டு இல்லை. அதான் பார்க் பண்ணினேன்!” என்றார்.
அடடா! என்ன ஒரு அருமையான லாஜிக்! வீட்டில் ஆள் இல்லையென்றால் அது Google Maps காட்டும் Free Parking Zone ஆகிவிடுமா?
எனக்குச் சரியான கோபம். “பார்க் பண்ணினீங்க சரி. பக்கத்து வீட்டிலேயாவது சொல்லியிருக்கலாமே? உங்க வீட்டில் யாராவது இப்படி வந்து காரை நிறுத்தினால் சும்மா இருப்பீங்���ளா?” என்றேன்.
அதற்குள் அவர் மனைவி ஆரம்பித்தார். “என்ன பெரிய திருட்டுக் குத்தமா பண்ணிட்டோம்?”
நல்லவேளையாக அந்தக் கணவர் உடனே மனைவியை OFF செய்தார்.
எனக்கு அந்த பெண்மணி பேசிய ஸ்டைலில் கோபம் வந்தாலும், மேலும் பேசுவது சரியாக இருக்காது என்று அமைதி காத்தேன். அவர்கள் காரை எடுத்துக் கொண்டு போனால் தேவலை என்றிருந்தது
கேட்டைத் திறந்தேன். அவர் காரை எடுத்தார். கிளம்பிப் போனார்.
குறைந்தபட்சம் ஒரு “Sorry” கூட இல்லை! பிறகு கேட்டை மீண்டும் பூட்டினேன்.
மாப்பிள்ளையைக் கூப்பிட்டேன். “இனிமேல் வீட்டில் நீங்க இல்லைன்னா, கண்டிப்ப��கக் கேட்டைப் பூட்டிட்டுத்தான் போகணும்!” என்றேன்.
ஏனென்றால் இன்றைக்கு ஒரு கார் வந்தது. நாளைக்கு Parking Available” என்று போர்டே வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
இதில் இன்னொரு பெரிய சந்தேகம்... கேட் திறந்திருந்தால் கார் நிறுத்தலாம் என்றால், வீட்டுக் கதவு திறந்திருந்தால் உள்ளே போய் AC போட்டுத் தூங்கலாமா?
எனக்கு இன்னும் ஒரு விஷயம் புரியவில்லை. கோவிலுக்கு வந்தவர்கள், அடுத்தவர் வீட்டில் அனுமதியின்றி காரை நிறுத்திவிட்டு, அதைக் கேட்டால் நம்மையே குற்றவாளி போலப் பார்ப்பது என்ன மாதிரியான Behaviour?
Outstanding work, @MumbaiPolice! 👏 You’ve once again given us a live demonstration of how the VIP culture works, and how being a commoner is apparently a punishable offence.🥵
Two Indias. Two sets of rules. One glorious VIP culture!
A massive tunnel has been discovered beneath a house in Kasaragod while digging a pit for a septic tank. The residents are now scared to stay in their own home.
”அய்யா இது என்னோட சொந்த கோரிக்கை.. 280 கி.மீ தூரத்துல இருந்து தான் இங்க வர்றேன்.. சொந்தமா வண்டி இல்ல வாடகை வண்டியில தான் வர்றேன்.. மக்களை போய் சந்திச்சு பணி செய்ய கூட ஒரு வாகனம் இல்ல.. அதனால ஒரு வாகன வசதி செஞ்சு கொடுங்க”... உறுப்பினர் வைத்த கோரிக்கை... கவனித்து கொண்ட முதலமைச்சர்
#Chennai | #TNAssembly | #CMVijay | #TVK | #VCK | #JothimaniMLA | #SpeakerJCDPrabhakar | #PolimerNews