நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்!
உண்மையின் முகம் இதுதான்: TNEB பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!
உண்மையின் பின்னணி இதோ:
நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.
திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது!
இப்போது எழும் கேள்வி?
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?
மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?
தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு [28.01.2024 & 21.08.2025 G.O]
குறிப்பு:
மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்!
- கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
#DMK
புத்தெழுச்சி 3
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற புத்தெழுச்சி நாள் புகழரங்கில்,கலைஞர் அவர்களின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சமூகநீதி,சமத்துவக் கொள்கைகள் மற்றும் மக்கள்நலச் சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டன. நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான நேற்று(3/6/2026) கழகத்தலைவர் அவர்கள் தலைமையில், கழக இளைஞர் அணி செயலாளர் அவர்கள் முன்னிலையில்
மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்திலும்,மற்றும் அண்ணா அறிவாலய வளாகம், முரசொலி அலுவலக வளாகம்,சென்னை ஓமந்தூரார் அரசினர் வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள
அவரது திருவுருவ சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த,அவரது திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தப்பட்டது.
DMK - Dravida Munnetra Kazhagam
DMK - @ arivalayam @dmk #dmk @mkstalin Udhayanidhi Stalin #Udhaystalin#Youth4DMK2026 #MKStalin @DMKITwing #thiruvikanagar #thayagamkavi #dmkyouthwing
அன்புடன்
ப.தாயகம்கவி,Ex.M.L.A.
கழக துணை அமைப்புச்செயலாளர்
ஒரு கோமாளி அரண்மனைக்கு போறதாலேயே அவன் அரசன் ஆயிட மாட்டான், அந்த அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாக மாறிடும்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. இன்னைக்கு அதுதான் நம்ம கண்ணு முன்னாடி நடந்துட்டு இருக்கு.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
திராவிட நாயகர், கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளோடு, இன்று கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில், மத்திய மண்டல அலுவலகம் அருகில், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த போது..
அவதூறு - பஞ்ச் டயலாக்குகள், Reels, Horse Trading என மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த #SofaModel த.வெ.க அரசு, ஆட்சிப்பொறுப்பில் இருந்துகொண்டும் அதே வேலைகளை செய்து மக்களை ஏமாற்றாமல், உருப்படியான பணிகளை செய்து மக்கள் நலனில் அக்கறை காட்டவேண்டும்!
@Udhaystalin#DMK4TN#TVKFails
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான இன்று,
நம் @dmk_youthwing-ன் தலைமையகமான அன்பகத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் 75 அடி உயர கம்பத்தில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் மார்பளவுச் சிலைகளைத் திறந்துவைத்தார்.
மேலும், அன்பகத்தின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தைத் திறந்துவைத்து, இளைஞர் அணி மேற்கொண்டுவரும் ஆக்கப் பணிகளைப் பார்வையிட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று- கழகத் தலைவர் தலைமையில் திராவிட இயக்க இலட்சியங்களை வென்றெடுக்க,
கழக இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்!
#KalaignarForever #Kalaignar103
புத்தெழுச்சி-1
பன்முக ஆற்றலின் நாயகன்!
பலர் வாழ உழைத்த சூரியன்!!
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் துறைமுகம் தொகுதியில் கலைஞரின் புகழைப் போற்றும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
#HappyBirthdayKalaignar
புத்தெழுச்சி2
தியாகத்தால் உயர்ந்த ஆகாயம்!
திராவிட இனத்தின் பூபாளம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு,சென்னை கிழக்கு மாவட்ட திமுக,அம்பத்தூர் கிழக்கு பகுதி சார்பில் நடைபெற்ற மாபெரும் புகழரங்கில்,கலைஞரின் சாதனைகள் எடுத்துரைக்கப்பட்டு புகழுரையாற்றப்பட்டது