மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.7.2026), கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அடிடாஸ் நிறுவனத்திற்காக 850 கோடி ரூபாய் முதலீட்டில், 6,750 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், கரூர் மாவட்டத்தில் தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்குக் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
#CMJosephVijay
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாளில் எனத�� மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்த மாவீரன் அழகுமுத்துகோன் அவர்கள், தமிழக மண்ணின் வீரத்திற்கும், தன்மான உணர்விற்கும், சுதந்திர வேட்கைக்கும் அடையாளமாக விளங்கியதோடு, அடிமை வாழ்வைவிட சுதந்திரமே உயர்ந்தது என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் உணர்த்தி, தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர்.
அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்.
#CMJosephVijay
வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.
இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்�� உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக்கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவு��் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத ம��த்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் ��ன்றும் நிலைத்திருப்பார்.
அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
மாண்புமிகு மதுரை MLA 's அணைவருக்கும் ஒரு வேண்டுகோள்..
மதுரை முன்பு இருந்தது போல் இல்லை சுத்தம் சுகாதாரம் சாலை வசதி எல்லாம் ரொம்ப மோசம் aaa இருக்கு...
கோயம்புத்தூர்லா ஒரு இடம் அப்படி பாக்கல இந்த 2 வருடத்துல அவளோ சுத்தமா இருக்கு..
அப்போ மதுரையும் சுத்தம் செய்ய முடியும்..🙏🏻🙏🏻