💰 நண்பர் அல்லது உறவினர் பணம் கேட்டால் No சொல்வது எப்படி?
நம்மகிட்ட ஒருவர் ₹1 லட்சம் கடன் கேட்கிறார். நம்மகிட்ட ₹1 லட்சம் இருக்கிறது. அப்ப கொடுக்கணுமா? அவசியம் இல்லை.
ஏன்னா நம்ம Bank Account ல பணம் இருக்கிறது என்பத��்கும், அந்த பணத்தை மற்றவர்களுக்கு கொடுக்க நம்மால் முடியும் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. ஆனா இதை Family அல்லது Friends கிட்ட சொல்வதுதான் கஷ்டம். 😄
பணம் கொடுக்கலைன்னா என்ன நினைப்பாங்க?
நம்மை தப்பா எடுத்துக்குவாங்களா?
Relationship கெட்டுப் போயிடுமா?
ன்னு overthinking பண்ணுறோம். அதனால் விருப்பமே இல்லாமல் சில நேரம் பணம் கொடுத்துடுறோம். கொடுத்த பிறகு பணமும் வராது. Relationship ம் பழைய மாதிரி இருக்காது. இதை எப்படி handle பண்றது?
முதலில் ஏன் பணம் கேட்கிறார்கள் என்று புரிஞ்சுக்கோங்க
Medical Emergency?
Job Loss?
குழந்தைகளின் Fees?
Business Loss?
Credit Card Debt?
புதிய Car வாங்க?
Vacation போக?
எல்லா Money Request ம் ஒரே மாதிரி கிடையாது. ஒருவருக்கு உண்மையான Emergency இருக்கலாம். இன்னொருவர் தொடர்ந்து தன்னுடைய வருமானத்தைவிட அதிகமாக செலவு செய்து கொண்டிருக்கலாம்.
உதவி தேவைப்படுவதற்கும், நம்முடைய பணத்தை வைத்து ஒருவருடைய Lifestyle ஐ தொடர்ந்து நடத்துவதற்கும் வித்தியாசம் இருக்கு.
💰 பணம் இருக்கே... கொடுத்தா என்ன?
உங்களிடம் ₹5 லட்சம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதில் ₹3 லட்சம் அவசரகால நிதி. ₹1 லட்சம் குழந்தையின் School Fees க்கு. மீதமுள்ள ₹1 லட்சம் அடுத்த சில மாத தேவைகளுக்கு.
Bank Balance ₹5 லட்சம்.
ஆனா மற்றவர்களுக்கு கடன் கொடுக்க available money ₹5 லட்சம் கிடையாது. இதுதான் முக்கியம். ஒரு பணத்திற்கு ஏற்கனவே ஒரு வேலை இருந்தால், அது Free Money கிடையாது.
🙏 No சொல்லும்போது பெரிய Explanation கொடுக்க வேண்டியதில்லை. நம்மில் நிறைய பேர் இங்கதான் தவறு பண்றோம். Sorry da... Actually Home Loan இருக்கு... School Fees வருது... இந்த மாதம் செலவு அதிகம்...ன்னு நம்முடைய முழு பொருளாதார நிலைமையையும் explain பண்ண ஆரம்ப���ச்சுடுவோம்.
அது தேவையில்லை. Simple ஆ சொல்லலாம். இப்ப இந்த Amount அ என்னால் கொடுக்க முடியாது. என்னுடைய பணம் ஏற்கனவே சில தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கு.
அவ்வளவுதான். No சொல்லுவதற்கு Balance Sheet காட்ட வேண்டிய அவசியம் இல்லை. 😄
🤝 முழு Amount முடியலைன்னா வேறு வகையில் உதவ முடியுமா?
ஒருவர் ₹1 லட்சம் கேட்கிறார். உங்களால் ₹1 லட்சம் கொடுக்க முடியவில்லை. ஆனா ₹10,000 உதவ முடியும். அப்படின்னா அதை சொல்லலாம். அதுவும் Loan ஆ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. திரும்ப வரவில்லை என்றாலும் உங்களுக்கு பிரச்சனை இல்லாத Amount என்றால், இதை திருப்பிக் கொடுக்க வேண்டாம். என்னால் இவ்வளவுதான் உதவ முடியும் ன்னு சொல்லிவிடலாம்.
சில நேரங்களில் ₹10,000 Gift, ₹1 லட்சம் Loan ஐ விட Relationshipக்கு நல்லது.
⚠️ கடன் கொடுக்கிறீங்களா? ஒரு Rule வச்சிக்கோங்க
Family அல்லது Friends க்கு கொடுக்கும் பணத்தில் ஒரு simple rule வைத்துக்கொள்ளலாம். திரும்ப வரவில்லை என்றாலும் உங்க வாழ்க்கையை பாதிக்காத அளவுக்கு மட்டும் கொடுங்க.
Emergency Fund அ உடைத்து கடன் கொடுக்காதீங்க.
Credit Card ல எடுத்துக் கொடுக்காதீங்க.
Personal Loan வாங்கிக் கொடுக்காதீங்க.
Retirement அல்லது குழந்தைகளின் படிப்புக்கான முதலீட்டை விற்றுக் கொடுக்காதீங்க.
மற்றவர்களின் பொருளாதார பிரச்சனையை தீர்க்கப் போய் உங்களுக்கு ஒரு புதிய பொருளாதார பிரச்சனையை உருவாக்கிக்காதீங்க.
📝 பெரிய Amount என்றால் எழுதிக்கோங்க
Family தானே...
Friend தானே...
எதுக்கு Documentation ன்னு நினைக்கலாம்.
ஆனா ₹5 லட்சம், ₹10 லட்சம் என்று பெரிய Amount என்றால் எப்போது திருப்பிக் கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக வைத்துக்கொள்வது இருவருக்குமே நல்லது. Clarity Relationship ஐ கெடுக்காது. Confusion தான் கெடுக்கும்.
🔄 அடிக்கடி பணம் கேட்கிறார்களா?
இது இன்னொரு முக்கியமான விஷயம். ஒருமுறை Emergency க்கு உதவுவது வேறு. ஒவ்வொரு இரண்டு மாதத்துக்கும் பணம் கொடுத்து ஒருவருடைய செலவுகளை நாமே நடத்துவது வேறு.
Repeated Borrowing ஆ இருந்தா பணம் கொடுப்பதைவிட Problem எங்கே என்று பார்க்க உதவுங்க.
Monthly Budget போடலாம்.
Debt Repayment Plan உருவாக்கலாம்.
தேவையில்லாத செலவுகளை குறைக்கலாம்.
பல நேரங்களி���் இன்னொரு Loan அந்த பிரச்சனைக்கு Solution கிடையாது. அதே Problem அ இன்னும் கொஞ்ச நாள் தள்ளிப்போடுறது மட்டும்தான்.
😕 No சொன்னா Relationship போயிடுமா?
இது தான் நமக்கு இருக்கும் பெரிய பயம். ஆனா ஒரு நல்ல Relationship நீங்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறீர்கள் என்பதில்தான் நிற்கிறது என்றால், அங்கே பிரச்சனை பணம் இல்லை.
Healthy Relationshipல் Boundaries இருக்கலாம். நம்மால் உதவ முடிந்தால் உதவலாம். முடியவில்லை என்றால் முடியவில்லை என்று சொல்லலாம். அதற்காக Guilt Feel பண்ண வேண்டியதில்லை.
💡 கடைசியாக...
Family மற்றும் Friendsக்கு பணம் கொடுக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை. நம்மால் முடிந்தபோது உதவுவது நல்ல விஷயம். ஆனா உதவி செய்வதற���கும் நம்முடைய பொருளாதார பாதுகாப்பை ஆபத்தில் போடுவதற்கும் வித்தியாசம் இருக்கு.
அதனால் அடுத்த முறை ஒருவர் பணம் கேட்டால் மூன்று கேள்விகள் கேட்டுக்கோங்க.
இது உண்மையான தேவையா?
இந்த பணத்தை கொடுத்த பிறகும் என்னுடைய முக்கியமான தேவைகள் பாதிக்கப்படாதா?
இந்த பணம் திரும்ப வரவில்லை என்றாலும் என்னால் Manage பண்ண முடியுமா?
மூன்றாவது கேள்விக்கு பதில் No என்றால்... அந்த Amount ஐ கடனா கொடுக்குறதுக்கு முன்னாடி நல்லா யோசிங்க.
பணத்தை கொடுக்க முடியாது என்று சொல்வது Relationship ஐ நிராகரிப்பது கிடையாது. அது உங்களுடைய பொருளாதார எல்லையை தெளிவாக வைத்துக்கொள்வது. சில நேரங்களில் நல்ல Relationship க்கு பணத்தைவிட நல்ல Boundary தான் முக்கியம்.
புரிஞ்சுதா மக்களே!!! 👍👍👍
உண்மை என்னான்னா இப்ப பொண்ணு மட்டும் கொடுத்தா போதும்முன்னு எவ்வளவோ பசங்க காத்துக்கிட்டு இருக்காங்க.ஆனால் பொண்ணு வீட்டுல தான் நிறைய மாப்பிள்ளை கிட்ட எதிர்பார்க்குறாங்க
We have super talented young and mid-aged artist in Kollywood. Give them a chance to act in Tamil movies rather than cast other Industry people just to make it so called Pan India film.
Anyways, All the best for the Movie #Mandaadi
😂 Superstar #Rajinikanth recalls a hilarious #Bharathiraja sir memory!
With just two pants during a shoot, one had a broken zip, pinned together! 😂 Sridevi noticed and asked him to hide it, but he simply said, “Leave it, we’ll manage!”
His focus? Only cinema & direction! 🎬🔥
Indha CommonMan Show neraya per ku negativity kuduthurkalam, ana #Oviya ku matu avlo positive comments across the internet.
The kind of character we got a chance to witness only once in our lifetime. That is BiggBoss Tamil Season 1 the OG.
#BiggBossTamil10#BiggBossTamil