புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.
கொடுத்த வாக்குறுதியில் மோசடி செய்த விஜய்!
மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் என வாக்குறுதியாக சொல்லிவிட்டு, தற்போது 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என சொல்கிறார். அதுவும் 500 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டும்!
500 யூனிட் க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் 200 யூனிட் இலவச மின்சாரமும் இல்லை என்பதே பெரிய மோசடி!
முன்பு இது போல நிபந்தனை இல்லாமல் அனைவருக்கும்
100 யூனிட் இலவச மின்சாரம் என்ற சலுகைகளும் தற்பொழுது இல்லாமல் போகும்...
ஆக இந்த திட்டத்தால் எந்த பயனும் இல்லாமல் போவதை விட மக்களுக்கு மேலும் சுமையையே இது ஏற்படுத்தும்...
இந்த அறிவிப்பு மறைமுகமாக மின் கட்டண உயர்வையே காட்டுகிறது
#TVKFails
TVK has the popular vote that clearly means they must be invited to form government & prove their majority in the assembly.
That’s an ideal world, this is BJP’s Barath. The Governor will pull every tool in their playbook to subvert this. For 5 years the DMK fought them tooth & nail over every piece of legislation.
If TVK says Goveror is not allowing & throws up their hand that is not enough. They are being given ample time to prove they have the requisite numbers.
It is not reasonable to expect parties who have won seats based on the DMK platform to support them, that would be a betrayal of their voters.
TVK are being given an early lesson on what they ridiculed as payasam. Now they need to show how they will fight it.
Progressive parties will try all they can to stop Presidents rule. The BJP have already telegraphed their intentions by serving an ultimatum to Tamilnadu with their education bill. We can’t allow the vacuum to subvert years of resistance.
Nobody is stopping the TVK from defeating these subversive tactics. But the buck stops with you. Best of luck 👍
இதுவரை மக்களை நேர்கொண்டு பார்க்க முடியாமல் ஓடிய தலைவர்களை தான் பார்த்திருப்போம். First time in history of democracy people couldn't face a leader and see him eye to eye due to guilt.
பீடியை ஒரு இழுப்பு இழுத்துவிட்டு, “வெக்கமா இல்ல…. இப்புடில்லாம் பண்ணிட்டு திரியுறதுக்கு” என்று சொன்ன தொனியில் நிமிர்ந்து உட்கார்ந்தவன், “சோபா சிலுக்கையெல்லாம் கொஞ்ச வயசுலயே கூப்டுகிட்டீக, பவுனுத்தாயிக்கு மட்டும் என்ன பதினாறு வயசா நடக்குது, நேத்துத்தான் சமஞ்சாளாக்கும்?” என்று தொடங்கி, “நான் கேட்டத நீ குடுக்கலை, வெசக்குட்டாங்கிற என் பேரை சாய்குட்டான்னு மாத்தி வச்சிக்கிட்டு, சாய் பாபாவைக் கும்புடப் போயிருவேன்” என்று வெசக்குட்டா கருப்பனை நோக்கி ஆங்காரமாகப் பேசி முடிக்கும் பொழுது மனதார சிரித்து மாய்ந்திருந்தேன். ‘தாய் கிழவி’ திரைப்படத்தில், கருப்பசாமியுடன் வெசக்குட்டா நடத்திய அந்த உரையாடல், தமிழ் நிலத்தின் எளிய மக்கள் தங்கள் தெய்வங்களுடன் கொண்டிருக்கும் உறவின் ஆகச்சிறந்த பிரதிபலிப்பு.
விருமாண்டி திரைப்படத்தின் “அந்தக் காண்டாமணி ஓசை கேட்டிருச்சு” என்கிற பாடலின் இரண்டாவது சரணத்தில், “திக்கத்த ஏழைக்கிங்க ஒன்னை விட்டா, கஷ்டத்தில் கைகொடுக்க யாரிருக்கா” என்று தொடங்கும் வரிகள், “கொறையேதும் இல்லாத சாமி, எங்க தெய்வமின்னு எங்களுக்குக் காமி” என்று முடியும். அதன் இன்னொரு வடிவம் தான் வெசக்குட்டா கருப்பனிடம் பீடியை இடுக்கியவாறு ஒரண்டு இழுத்தது. தான் நம்பும் தெய்வத்தைக் கட்டளையிட்டு, அதனை தெய்வமென்று நிரூபிக்கச் சொல்லும் உரிமைக்குப் பெயர் பக்தி என்றால், இருந்துவிட்டுப் போகட்டும். அப்படியொரு உரிமையை மீறும் வலு எந்த நிறுவப்பட்ட மதத்திற்கும், அதன் கோட்பாடுகளுக்கும் இல்லை என்பதே உண்மை.
நடிகர் முத்துக்குமார் “ஜவஹர்லால் நேரு” என்கிற தன் பெயரை “சவர்ஹலால் நேரு” என்று சொல்வதாகட்டும், அவரது மகன் “ராஜீவ் காந்தி”, “பென்னிகுக்கை” பார்த்து “ம்ம்..தள்ளுன” என்பதாகட்டும், கதை மாந்தர்களிடமும், வசனங்களிலும் அவ்வளவு மண்வாசம். இதற்கு முன்னர் ஆடுகளம், பருத்திவீரன், சுப்ரமணியபுரம் ஆகியவை மட்டுமே தங்கள் மாந்தர்களையும், அவர்களின் உரையாடல்களையும் மதுரை நிலப்பரப்பிற்கு இத்தனை நெருக்கமாகக் கொண்டு வந்திருக்கின்றன என்று நினைக்கிறேன்.
வெசக்குட்டா கதாபாத்திரம் சுப்ரமணியபுரத்தின் டும்காவை நினைவுபடுத்தியது. இரண்டுமே வெகு இயல்பான பாத்திரப் படைப்புகள். அவர்கள் இருவரின் உலகமும் மிகச்சிறியது, நிறைய எதிர்பார்ப்புகள் இல்லாதது. வெசக்குட்டாவின் உலகம் கருப்பனோடு முடிந்து விடுவதைப் போல், டும்காவின் உலகம் அழகரோடும், பரமனோடும் முடிந்து விடுகிறது. இரு கதாப்பாத்திரங்களும் கதையின் போக்கிற்கு அவசியமானவை என்பதைத் தாண்டி, கதையினை அது நிகழும் நிலப்பரப்போடு பொருத்திப் பார்ப்பதற்கு, இவை அதிமுக்கியம். டும்காவாக நடித்த மாரி, வெசக்குட்டாவாக நடித்த ஆத்தாடி குமரன் இவ்விருவரின் உடல் மொழியும், உச்சரிப்பும் அத்தனை நேர்த்தியாக இருந்ததற்குக் காரணம், இவர்கள் கதை நடக்கும் நிலம் சார்ந்தவர்கள் என்பது மட்டுமே. மதுரை மதுரையாக திரையில் தெரிவதற்குக் காரணம் இது போன்ற பாத்திரங்கள் தான். இல்லாவிட்டால், அவிய்ங்க, இவிய்ங்க என்று பேசுவதோடு நின்று விடும்.
இயக்குநர் வெற்றி மாறன் ஒரு நிகழ்ச்சியில், “You have to go more local, to go international” என்று சொல்லியிருப்பார். சர்வதேச தரத்திலான படங்களை எடுப்பதற்கு நாம் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும், புதிய தொழில் நுட்பங்களை நாட வேண்டும் என்கிற அவசியமில்லை. நம் மண் சார்ந்த கதைகளை, மனிதர்களை, அவர்களின் வாழ்வியலைத் துல்லியமாகக் காட்சிப்படுத்துதல் மூலம் சர்வதேச பார்வையாளர்களை அவர்கள் அறிந்திராத முற்றிலும் புதிய ஒரு உலகிற்கு அறிமுகப்படுத்த முடியும். அந்த அனுபவம் தரும் உளக்கிளர்ச்சியின் மூலம் மட்டுமே ஒரு படைப்பு சர்வதேசத் தரத்திற்கு உயர்கிறது.
இதைத் தவிர இன்னொரு முக்கியமான விசயம் இசை. எத்தனை இசையமைப்பாளர்களை நமக்குப் பிடித்திருந்தாலும், இளையராஜாவுக்கு ஒரு தனி இடம் நம் மனதில் இருப்பதற்குக் காரணம், அவரது இசை நம் மண் சார்ந்தது என்பதன்றி வேறென்ன ?. “கரகாட்டக்காரன்”, “தாரை தப்பட்டை”, “கும்பக்கரை தங்கய்யா”, “எங்க ஊரு பாட்டுக்காரன்” போன்ற படங்களின் பாடல்கள் எல்லாம் நம்மை உசுப்பி உலுக்கி விடுகிறதில்லையா ? தாய்க்கிழவி திரைப்படத்தின் ஒரு காட்சியில், சுருளி “யத்தா…” என்று அழைத்தும் மாடியில் இருந்து பவுனுத்தாயி வராத காரணத்தினால், சுருளி தன் மகன் குலுக்கையை (ராஜீவ் காந்தி) மேலே சென்று பார்த்து வரச் சொல்வாள். குலுக்கை பவுனுத்தாயின் அறைக்குச் சென்று அவள் சாகக் கிடப்பதைப் பார்க்கும் நொடியில் ஒரு இசைக்கோர்வை தொடங்கும். அதற்கு, தியேட்டரில் என்னை அறியாமல் மட்டியைக் கடித்தவாறு தலையை ஆட்டிக் கொண்டிருந்தேன் என்று என் மனைவி சொல்லித் தான் தெரிந்தது. அந்தக் கோர்வை என் மனதிற்கும், மண்ணிற்கும் வெகு அணுக்கமாக இருந்தது மட்டுமே அதற்குக் காரணம். “ஆறடி காத்திருக்கு” என்கிற பாடலின் prelude-உம் அதுதான். முழுப் பாடலும் வேறு genre, ஆனால் ஆங்காங்கே வரும் இந்தக் கோர்வைக்காக @nivaskprasanna வின் இந்தப்பாடலை கேட்டுப் பாருங்கள். அதே போல், “சேயான்” படத்தின் முன்னோட்டத்தில் வரும் “பனைமரமா எட்டு வச்சு, சூரியன பொட்டு வச்சு, வாரான் வாரான் பாரு விருமாண்டி” என்கிற பாடலும் எனக்கு இதே உணர்வினை அளித்திருக்கிறது. தவிர அந்தோணி தாசன், அந்தக்குடி இளையராஜா போன்றோரின் குரலும், பாடலும் நமக்குச் சட்டென உவகை தருவதற்கான காரணம், அவை இசையின் கூறுகளைக் கடந்து நம் நிலத்தையும் மக்களையும் பிரதிபலிப்பதனால்தான்.
தாய்க்கிழவி திரைப்படமும், அதன் மொழியும், என் மக்களை, என் ஊரை, பெரும் பிரியம் கொண்ட என் தாய்க்கிழவிகளை இரத்தமும் சதையுமாக என் கண்முன் நிறுத்திவிட்டது. படம் முடிந்து நிறைவோடு வெளியே வந்த வேளையில், “ஊருக்குப் போகணும்” என்று தோன்றியதுதான் படத்தின் வெற்றி. ராதிகா, இளவரசு, சிங்கம்புலி, பாலசரவணன் @Bala_actor , அருள்தாஸ் அண்ணன் போன்ற தேர்ந்த கலைஞர்களுக்கு இது ஹோம் கிரவுண்ட். They are lovely and at their hilarious best. அவர்களுக்கும், ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை மதுரை மண்ணின் நையாண்டியோடு காட்சிப்படுத்திய இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கும் @Dir_SivakumarM , வெசக்குட்டாவாக வாழ்ந்திருக்கும் நடிகர் ஆத்தாடி குமரனுக்கும், இதனைத் தயாரித்த சிவகார்த்திகேயனுக்கும் @Siva_Kartikeyan நெஞ்சம் நிறைந்த அன்பும் முத்தங்களும்.
#ThaaiKizhavi #தாய்கிழவி
Trying to register to new Indian Bank portal but it shows "Request timed out" after entering 2nd step in the registration process. Can you please help in completing the registration. @MyIndianBank
@chellamzutk82@airtelindia@Airtel_Presence The issue seems with incoming profiles. Reach out to customer care or airtel store and ask for "Profiles Refresh". After that issue gets fixed.
Trying to resolve Airtel SIM issue for over a week with multiple store visits.Wanted to switched to eSIM but no incoming calls after 3 days. Store asked to change to physical SIM and then eSIM-no incoming even after 24 hr.When will this be fixed? @airtelindia@Airtel_Presence
With more than a week unable to receive a resolution for this and no response on any channels. Unable to reach customer care. I am left with no choice other than so MNP for all my 4 family numbers. @airtelindia@Airtel_Presence thank you airtel for wonderful experience.
I tried switching from Physical SIM to eSIM. Submitted a request from AirtelThanks App. Got confirmation call in 10 mins. But never received any email communication with QR code for migrating to new phone. Visiting store didn't help. @airtelindia@Airtel_Presence
“சூப்பர் பேரு சார்”. என்று நான் சொன்னதற்கு,
“என்ன சார்” என்று புருவத்தை உயர்த்தியவர், சடுதியில் புரிந்து கொண்டு, நெஞ்சில் இருந்த பேட்ஜை தொட்டவாறு,
“ஹா..ஹா..ரைட் சார்..நன்றி நன்றி” என்று கண்கள் விரிய முகம் மலர்ந்தார்.
முகம் மலர்ந்தவர், சென்னை விமான நிலையத்தில் இருந்த சி.ஆர்.பி.எஃப் காவலர். பெயர் “பொற்சுடர்”.
தூத்துக்குடி செல்லும் விமானத்திற்காக, எனது போர்டிங் பாஸை ஸ்கேன் செய்யும் போது நடந்த மிகச்சிறிய உரையாடல் அது. அத்தனை அழகான பெயர். பெயர் குறித்த இது போன்ற முகமன்களை நிறைய கடந்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும், அது எனக்கும் எதிரில் இருப்பவருக்கும் உவப்பானதொரு அனுபவமாகவே இருந்திருக்கிறது.
பொற்சுடருக்கு முன்னர், பெயர் குறித்த உரையாடல் நிகழ்ந்தது எங்கே என்பது, அந்த உரையாடல் நடந்த ஞாயிற்றுக்கிழமை வெயிலின் அனலோடு நினைவிருக்கிறது. 200 அடி ரேடியல் சாலையில் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்க்கில் காரை நிறுத்தி இறங்கி நின்று கொண்டிருந்தேன். பங்க்கின் ஓரத்தில் நடப்பட்டிருந்த குரோட்டன்ஸ் செடிகள் கிழக்கே இருந்து அடித்த அனல் காற்றில் திணறிக் கொண்டிருந்தன. யாரையும் காணாமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்த போது, தனது உருவத்திற்கு சற்றும் பொருந்தாத டீ சர்ட், பேண்ட், பூட்ஸ் அணிந்து, பில்லிங் கவுண்ட்டர் அறையிலிருந்து இறங்கினாள் அந்தப் பெண். வெயிலுக்காக தலை குனிந்து, தொப்பியை சரி செய்தவாறு என்னை நோக்கி நடந்து வந்தாள். அருகே வந்தவுடன்.
“பெட்ரோல், டேங்க் ஃபுல்” என்றேன்.
எந்த சுரத்துமில்லாமல்,
“ஜீரோ பாத்துக்கங்க” என்று ஆள்காட்டி விரலை டெர்மினலைக் நோக்கிக் காண்பித்து விட்டு, பெட்ரோல் போடத் தொடங்கினாள்.
தலையில் இருந்த கேப்-ஐ கழற்றி, வியர்வையை துடைக்க முயன்றவள், தனது நீளமான ஒற்றைச் சடையை கேப்பின் பின்பக்க லூப்பில் சிக்கிக் கொள்ள,
“இது வேற” என்று சன்னமான குரலில் அங்கலாய்த்தவாறு மறுபுறம் திரும்பினாள்.
பெட்ரோல் வாசனையை அடிவயிறு வரை நுகர்ந்து ருசித்தேன். “மந்திரப்புன்னகை” திரைப்படத்தின் வசனமொன்று நினைவிற்கு வந்தது. ஒவ்வொரு முறையும் பெட்ரோல் வாசனையை நுகரும் போதெல்லாம் இந்த வசனம் நினைவுக்கு வருவது, கரு.பழநியப்பன் எழுதிய சொற்களின் ஆயுளை மேலும் ஒரு முறை நீட்டிக்கிறது. “டக்” என்ற சத்ததோடு பெட்ரோல் கன் கட்-ஆஃப் ஆனதை நான் சட்டை செய்யவில்லை.
“கேஷா..கார்டா சார்” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன்.
“கேஷ் தர்றேன்” என்றவாறு, சில ஐநூறு ரூபாய் நோட்டுகளை நீட்டினேன்.
மூன்று முறை எண்ணினாள். ரூபாய் நோட்டுக்களை தனது கண்டக்டர் பையினுள் வைத்து விட்டு, மீதிச் சில்லறை தருவதற்காக தன் சிறிய கைகளால் துழாவிக் கொண்டிருந்தாள். சில்லறையை எடுக்க திணறிக் கொண்டிருந்தவளைப் பார்க்கையில், ஊர் டவுன் பஸ்களில், எந்தப் பிடிமானமும் இல்லாமல், படியில் நின்றவாறு, ஒரு கையால் தோல்பையினை உலுக்கி, ஒரே தடவையில், இரண்டு நாலணாக்களையும், ஒரு ஐம்பது காசையும் ஒரே சேர எடுத்து சுழற்றிக் கொடுக்கும் கண்டக்டர்கள் நினைவில் வந்து போனார்கள்.
“இந்தாங்க சார்” என்று அவள் மீதிப் பணத்தை நீட்டும் போது தான், அவளது ஐடி கார்டில் இருந்த பெயரப் பார்த்தேன்.
“செம பேரு போங்க” என்றேன்.
“எங்க அப்பா வச்ச பேரு சார்”, என்றாள் சிறிய சிரிப்புடன்.
“வீட்ல அரசின்னு கூப்டுவாங்களோ” என்று கேட்டதற்கு,
“எப்டி சார் ?” என்று புருவத்தை உயர்த்தினாள்.
“மக பேர்ல ‘அரசி’ங்கிற வார்த்தை இருக்கும் போது, எந்த அப்பா அம்மா வேற பேர் சொல்லிக் கூப்ட போறாங்க ?” என்றேன்.
“எப்பவும் ராணி மாதிரி இருக்கணும்னு நினைச்சு இந்தப் பேரை வச்சாராம். ஆனா பெட்ரோல் தான் போட்டுட்டு இருக்கேன்” என்று சிரித்தாள்.
“திருநெவேலி பக்கமா” என்றேன்.
“ஆமா சார்…நீங்களுமா” என்றாள்.
“இல்லல்ல..கொஞ்சம் கிட்டதான்.. உங்க பக்கம் நிறைய தில்லைன்னு பேரு வச்சு கேள்விப்பட்டிருக்கேன். சாமி பேருல்ல ” என்றதற்கு.
“ஆமா சார்” என்றாள்.
“சரி..பாப்போம்” என்று விலகி காரை நகர்த்தினேன். பெட்ரோல் பங்க்கின் எக்ஸிட் அருகே சென்று ஏர் செக் செய்து கொண்டிருந்த போது திரும்பிப் பார்த்தேன். டெர்மினல் அருகே நின்று, தனது தொப்பியில் சிக்கிய ஒற்றைச் சடையை எடுக்க போராடிக் கொண்டிருந்தாள், “தில்லைக்கரசி”.
பொற்சுடருயும் தில்லைக்கரசியும் நினைவுக்கு வந்தது, நிறைய பெயர் சார்ந்த உரையாடல்களை எழுதப் பணித்தது. பிடாங்கு, முப்புடாதி, பாபநாசம் போன்ற அத்தனை பெயர்களையும் மீறி நினைவின் படிமங்களில் இருந்து மேலேறி வருவது ஒரு பெயர் தான். உத்தராக்கண்ட் மாநிலத்தின் ஒரு மலைக்கிராமத்தில் தான் அந்தப் பெயர் எனது மனதில் ஆழப்பதிந்தது.
கல்லூரி முதல் செமஸ்டரின் போது பெரிதாக நண்பர்கள் அமைந்திருக்கவில்லை. படிப்பில் ஈடுபாடில்லாமல், எந்த நோக்கமும் இன்றி விட்டேத்தியாக சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் என்சிசி-யில் சேர்ந்திருந்தேன். வடக்கே தேசிய அளவிலான ஒரு கேம்ப்புக்கு தேர்வாகியிருந்த சீனியர்கள் இருவர் செல்ல முடியாமல் போக, எங்கள் பேட்ச்சில் இருவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. பற்றிக் கொண்டேன். தமிழ்நாட்டில் இருந்து பதினோரு பேர் மட்டும் சென்றிருந்தோம். பதினோரு பேரும் திருநெல்வேலி, மதுரை பக்கத்து ஆட்கள். உத்தராக்கண்ட்டில் நைனிதால், பீம்தால், சாத்தால், கெளசானி பக்கம் இருந்த மலைகளைக் கடக்க வேண்டியிருந்த டிரெக்கிங் கேம்ப் அது. காலையில் எழுந்தவுடன், தூரத்தில் தெரியும் ஒரு மலையைக் காண்பித்து அங்கே போகச் சொல்லி விடுவார்கள். மதிய உணவுக்கு, ஒரு சருவத்தாளில் இரண்டு சப்பாத்திகளும், வெங்காயமும் கட்டிக் கொடுப்பார்கள். சூரியன் மறைவதற்குள் அடுத்த இடத்தில் இருக்கும் கேம்ப்பை சென்றடைய வேண்டும். இது போல நாளைக்கு ஒரு கேம்ப் என்று மாறிக் கொண்டே இருக்கும்.
பயம் ஒன்றுமில்லை, சாலை வழியாகவும், சிறிய கிராமங்கள் வழியாகவும் இலக்கை நோக்கி நடந்து கொண்டே இருக்க வேண்டியது தான். வெவ்வேறு மொழி, கலாச்சாரங்களைச் சார்ந்தவர்கள், நல்ல ஷார்ப்பான ஆட்கள், திறமையானவர்கள், மோடுமுட்டிகள், அரை மெண்டல் குஸ்காக்கள், என்று பலதரப்பட்டவர்களுடன் பழக வாய்ப்புக் கிடைத்தது. பீகாரைச் சேர்ந்த அப்படிப்பட்ட ஒரு குஸ்காவிடம், எனக்கு சென்ட்ரி (Sentry) ட்யூட்டி வாய்த்த ஒரு நல்லிரவில், சிக்கிக் கொண்டேன். எனது ட்யூட்டியை அவனது ட்யூட்டி என்று தவறாக நினைத்துக் கொண்டு, “ஏன் நைட் வெளிய சுத்துற” என்று என்னிடம் ஒரண்டு இழுத்துக் கொண்டிருந்தான். அவன் இந்தியிலும், நான் தமிழிலும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டதில் பஞ்சாயத்தானது. எனக்கு ஓரளவுக்கு இந்தி புரிந்து, அவன் திட்டியதில் கடுப்பாகி நான் சட்டையைப் பிடிக்க, அவனோடு இன்னொருவனும் சேர்ந்து கொள்ள சலசலப்பானது. நான் அடி வாங்க சில நொடிகள் இருக்கும் போது, எனக்கும் அவ்விருவருக்கும் இடையே அந்த அண்ணன் வந்து நின்றார்.
மாவட்ட கலரில், ஆறடி உயரத்தில், நரம்பாக இருந்தாலும் இரும்பாக இருப்பார். ஒட்ட நறுக்கப்பட்ட தலைமுடி, நீண்ட முகம், சற்றே ஒடுக்கு விழுந்த கன்னங்கள், உயர்ந்த கன்ன எலும்புகளோடு கூடிய கூரிய பார்வை கொண்டவர். Hunter’s eyes என்பார்களே, அதனுடைய சரியான உதாரணம் இவர்தான்.
இடது கையால என்னை பின்னுக்குத் தள்ளி,
“வெலகுலே” என்றவர், எதிரே எகிறிக் கொண்டிருந்தவனின் நெஞ்சில் தனது வலதுகையை வைத்து லேசாகத் தள்ளினார். இரண்டடி பின்னே சென்றான். ஆள்காட்டி விரலை மட்டும் அவனிடம் உயர்த்திக் காட்டினார். இருவரும் கப்சிப்பென்று அமைதியானார்கள். திரும்பி, என் தோளைத் தட்டி
“வாலே” என்று நடக்கத் தொடங்கினார். சற்று தூரம் நடந்த பின்னர், நேரே பார்த்தவாறு,
“செமக்க வாங்கிருப்ப. சண்டை போடணும்னு முடிவு பண்ணிட்டா, சண்டை போடணும். சும்மா கத்திட்டு இருக்கக் கூடாது, புரியுதாலே” என்று திரும்பி என்னைப் பார்த்தார். தலையாட்டினேன்.
அதிலிருந்து, டிரெக்கிங்கில், பெரும்பாலும் நானும் அவரும் சேர்ந்து நடப்பது வழக்கம். ஒரு நாள், நாங்களிருவரும் வேகமாக நடந்ததில், மற்றவர்களுக்கு வெகு தூரம் முன்னே சென்று விட்டோம். நல்ல வெயில். அன்று நாங்கள் ஏறிக் கொண்டிருந்த மலையில் சரியான சாலைகள் இல்லை. தார்ச்சாலை போடுவதற்காக, மானாவாரியாக நிரடி விட்டு, அப்படியே கிடப்பில் போட்டுருந்தார்கள். கற்களும் பாறைகளும் நிறைந்த அந்த சாலையில், தோள்களில் கிட் பேக்கோடு ஏறிக் கொண்டிருந்தோம்.
“எவனையும் காணும்லே, கொஞ்ச நேரம் நிப்பமா” என்றார்.
“பசிக்குது…எதாது ஊராப் பாத்து உக்காருவோம்ணே” என்றேன். மேலேறி நடக்கத் தொடங்கினோம்.
சற்று நேரத்திற்கு பின்னர், ஒரு சிறிய ஒரு குடியிருப்பை வந்தடைந்தோம். மலையின் உட்புறம் இல்லாமல், சாலையின் விளிம்பில் வரிசையாக வீடுகளை அமைத்திருந்தார்கள்.
“என்னண்ணே இப்டி கட்டிருக்காய்ங்க, அவசரத்துக்கு கொல்லப் பக்கம் போனா, குப்புறடிக்க பள்ளத்தாக்குலதான் டைவ் அடிக்கணும். பல் வெளக்காமயே செத்துருவாய்ங்களே” என்றேன்.
லேசாகச் சிரித்தவர்,
“அங்கன உக்காருவோம்” என்று அந்த வரிசையில் முதலில் இருந்த டீக்கடையக் காண்பித்தார்.
கடையின் வாசலில், கிட் பேக்கை தொப்பென்று கீழே போட்டேன்.
“பைய்ய ஒழுங்கா வைலே, இந்தக் கனத்த செமக்க மாட்டியோ” என்றபடி, அவரது கிட் பேக்கை ஓரமாக சாத்தி வைத்து விட்டு கடையின் அருகில் இருந்த முகட்டை நோக்கிச் சென்றார்.
“சாய் ?” என்று கேட்ட கடைக்காரரிடம், வேண்டாமென்று வேகமாக தலையாட்டிவிட்டு, ஒரு பார்லே-ஜி பிஸ்கெட் பாக்கெட் மட்டும் வாங்கினேன்.
தமிழ்நாடு என்று தெரிந்து கொண்ட கடைக்காரர், நியூஸ் பேப்பரை காண்பித்து “சிஎம்..சிஎம்” என்றார். ஜெயலலிலதா படம் போட்ட அந்த இந்தி பேப்பரில் இருந்து, செல்வம் என்றொருவர் புதிய முதலமைச்சராகிறார் என்ற செய்தியை மட்டுமே என்னால புரிந்து கொள்ள முடிந்தது..
கடைக்கு அருகே இருந்த சிறிய முகட்டில் அண்ணன் அமர்ந்திருந்தார். அவரின் அருகே சென்று அமர்ந்தவாறு,
“யாரோ செல்வம்னு ஒருத்தரு புதுசா சிஎம் ஆயிருக்காராம்ணே நம்மூர்ல”, என்றேன்.
“அப்ப..அம்மா?” என்றார்.
“தெர்லண்ணே….அரெஸ்டு போல”, என்றவாறு பிஸ்கெட் பாக்கெட்டை நீட்டினேன்.
மொட்டை வெயிலில், முகட்டில் அமர்ந்து, கால்களைத் தொங்கப்போட்டவாறு, பள்ளத்தாக்கை வேடிக்கைப் பார்த்தபடி ஆளுக்கொரு பார்லே-ஜி பிஸ்கட்டை மென்று கொண்டிருந்தோம்.
“இன்ஜினியரிங் தான படிக்க…நீ எதுக்குலே இந்த கேம்ப்புக்கு வந்து கஷ்டப்படுத ?” என்று கேட்டார்.
“கஷ்டம்லாம் இல்லண்ணே, காலேஜுக்கு இது பரவால்ல” என்றதற்கு சிரித்தார்.
“நீங்க எதுக்கு வந்தீங்க” என்றேன், அடுத்த பிஸ்கெட்டை எடுத்தவாறு.
“மிலிட்டரிக்கு போணும். என்சிசி சி சர்டிபிகேட் இருந்தா லேசா இருக்கும்” என்றார்.
“எதுக்குண்ணே மிலிட்டரிக்கு போறீங்க, வேற நல்ல வேலைக்கு போலாம்ல”, என்றேன்.
“வீடு இருக்க நெலமைக்கு நா திருநெவேலி வரைக்கும் வந்து படிக்கதே பெருசுலே. ஸ்போர்ட்ஸ் கோட்டானால ஹாஸ்டல் அப்டி இப்டின்னு ஓடுது. இந்த வருசத்தோட படிப்பு முடியுது. மத்த வேலையெல்லாம் எத்தன நாள்ல கிடைக்கும்னு உறுதியில்ல. இதுனா அடுத்த வருசம் செலக்சன் வரும். ஒரே அட்டெம்ட்ல போயிட்டா, பிரச்சனையில்ல. இதுக்கு மேல வீட்டை சிரமப்படுத்த முடியாது”. என்றார்.
“அப்பா..விவசாயமாண்ணே”,
“ம்ம். நெலம் கெடக்கு. ஆனா காட்டை மட்டும் நம்பி இருக்க முடியாதுல்ல. அக்கா தங்கச்சிக்கு எடுத்து செய்ய அது மட்டும் தான் இருக்கு.” என்றார்.
அதுவரையில் பொருளாதார ரீதியாக எந்த சிரமமும் இல்லாமல் வளர்ந்திருந்த எனக்கு அந்த பதில் அத்தனை அதிர்ச்சி அளித்தது. இராணுவத்திற்கு செல்வதற்கு நாட்டின் மீது கொண்ட பற்றின் அளவுக்கு, வறுமையிலிருந்து எப்படியாவது தப்பிப் பிழைத்திட வேண்டும் என்கிற வெறியும் காரணம் என்ற புரிதல் எனக்குக் கிடைக்க, நான் உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைமுகடு வரை செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அந்தப் புரிதல் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. இன்று வரையில், அலுவலக வேலை, நேர்காணல்கள் என்று ஊழியர்கள் சார்ந்த நிறைய முடிவுகளை பரிவுடன் எடுக்க வேண்டும் என்ற முனைப்பு இருப்பதற்கு, மலைமுகட்டில் நடந்த அந்த உரையாடலும் ஒரு காரணம்.
கேம்ப்பின் மீதி நாட்கள் எனக்கு அவரது நிழலியே கழிந்தன. அவரது நிதானமும், பொறுப்புணர்வும் அவர் மீதான மரியாதையையும் அன்பையும் அதிகப்படுத்தியிருந்தன. கேம்ப் முடிந்த பிற்பாடு அவரவர் வழியில் சென்று பிறகு, தொடர்புக்கு சாத்தியமில்லாமல் போக, அந்த அண்ணனை அதன்பிறகு பார்க்கவில்லை. எப்போதாவது நண்பர்கள் யாரிடமாது கதை பேசும் பொழுது, அவரையும், அவரது பெயரைப் பற்றியும் பேசுவதுண்டு. அந்தந்த நேரத்து நினைவுகளோடு சரி.
பல வருடங்கள் கழித்து, “கர்ணன்” படம் பார்த்த பொழுது, அந்த அண்ணனின் பெயர் குறித்த வசனம் ஒன்றை கவனிக்க நேர்ந்தது. அந்த அண்ணன் திருநெல்வேலிக்காரர் என்பதும், ஊரை விட்டு வெளியேறி மேடேற, இராணுவத்துக்கு செல்வது தொடர்பான காட்சிகள் அந்தப் படத்தில் அமைந்திருந்ததும் நிறைய ஒத்துப் போனது. படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜிடம் ஒரு நாள் போனில் பேசும் போது,
“யாரை நினைச்சு இந்த பேரை வச்சீங்க ? உங்களுக்கு தெரிஞ்சவங்களா ? எனக்குத் தெரிஞ்ச அண்ணன் ஒருத்தரு என்சிசில இருந்தாரு. கண்டுபுடிக்க முடியுமா” என்று கேட்டு டிரெக்கிங் கேம்ப் கதையைச் சொன்னேன்.
“எங்க ஊர்ப்பக்கம் இந்தப் பேருல நிறைய இருப்பாங்களே, நிறைய மிலிட்டரிக்கும் போவாங்க. இத மட்டும் வச்சுக் கண்டுபிடிக்க கஷ்டம்”, என்றார்.
அந்த அண்ணன் மிலிட்டரிக்கு வேலைக்குச் சென்றாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இப்போதும், மனம் அவரை ஒரு இராணுவ வீரராகத் தான் உருவகம் செய்து கொள்கிறது. இராணுவத்திற்குச் செல்ல வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதும், அவர் நினைத்தது அவருக்குக் கிடைக்க வேண்டும் எனறு நான் ஆசைப்பட்டதும் கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.
தனது ரோமியோ-ஜூலியட் நாடகத்தில், “What’s in a name ? That which we call a rose by any other name would smell as sweet” – என்ற வரிகளில் – வெறும் பெயரில் ஒன்றுமில்லை. ஒரு மனிதனின் எண்ணமும் செயலும் தான் முக்கியம் என்பதை ரோஜாப் பூவை உருவகமாகப் பயன்படுத்தி விளக்கியிருப்பார் ஷேக்ஸ்பியர். அது எனக்கு மிகவும் பிடித்த வரிகளுள் ஒன்று. ஆனாலும், சில நேரங்களில் பெயர்களும் முக்கியம் தானே ? பெயர் இல்லாவிட்டால், நம்மிடம் என்றோ ஒரு நாள் கரிசனம் காட்டிவிட்டு கண்ணுக்குத் தென்படாத தூரம் சென்று விட்ட நல்லுள்ளங்களை வேறு எதை வைத்து நாம் அடையாளப்படுத்த முடியும் ?
சமீபத்தில் “தென்னாடு” பாடலில் நடிகர் பசுபதியை பார்த்ததும் அந்த அண்ணன் குறித்த நினைவுகள் மனதை ஆக்கிரமத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு வேளை அந்த அண்ணன் நினைத்ததெல்லாம் ஈடேறி, இராணுவத்தில் இருந்து ஊருக்குத் திரும்பியிருந்தாலோ அல்லது ஊரிலேயே சம்சாரியாக இருந்திருந்தாலோ, Bison படத்தில் வரும் பசுபதி தோற்றத்தில் தான் இருப்பார். உங்களுக்குத் தெரிந்து திருநெல்வேலி பக்கம் யாராவது, அதே தோற்றத்தில், தங்கள் நாற்பதுகளில் இருந்தால் சொல்லுங்கள்.
இந்த அடையாளத்ததை வைத்து கண்டுபிடிப்பது சிரமமானதாக இருக்கும் என்று தோன்றலாம். ஆனால், திருநெல்வேலி செயிண்ட் சேவியரில் படித்து, என்சிசியில் இருந்து, உத்தராக்கண்ட் கேம்ப்புக்கும் சென்று, இன்று தனது நாற்பதுகளில் இருப்பவர்களில் எத்தனை பேருக்கு “ஊய்க்காட்டான்” எனும் அட்டகாசமான பெயர் வாய்த்திருக்கும் ?
This has been speed for lad 3 days of JioFiber in my apartment community even after multiple complaints from multiple residents. My complaint number: SR00002JZ6VP. The engineer visit is scheduled for 8th August for a complaint raised on 5th August. @JioCare@JioFiberChennai
மற்றவர் மீது பரிவு காட்டுவது, அவர்களின் சூழ்நிலையைப் புரிந்துகொள்வதோடு நின்றுவிடுவதில்லை. ஒருவர் கடந்து வந்தவைகளை உணர்ந்து, அதன் அடிப்படையில் அவர்களின் செயல்களை புரிந்து கொள்ள முயற்சிப்பதே பரிவு, அச்செயல்கள் நமக்கு பிடிக்காதவையாக இருந்தாலும் கூட. அதனால்தான் பரிவோடு இருத்தல் சவாலான காரியமாக இருக்கிறது.
ஒருவர் மேல் உண்மையான பரிவோடு இருப்பவர்கள், அவர்களின் செயல்களை நேர்மையாகப் புரிந்துகொள்ள முயல்கிறார்கள். அந்த நேர்மைக்கும், முயற்சிக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்காதபோது மனம் காயமடைவது இயல்பு. வலிமையானவர்களால் மட்டுமே மற்றவர் மீது பரிவு காட்ட முடியும். நீங்கள் பரிவோடு இருக்கிறீர்கள் என்றால், வலிமையாக இருக்கிறீர்கள் என்று பொருள். Stay strong 👍
அன்று காலை அலுவலகத்துக்குச் செல்வதற்காக எப்போதும் போல பெருங்குடி சிக்னலில் நின்றிருந்தேன். வலப்புறம் மெட்ரோ வேலைகளுக்கான கட்டுமானம், இடப்புறம் அப்போல்லோ ஆஸ்பத்திரிக்கு கார் பார்க்கிங்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சர்வீஸ் லேன், பத்திருபது அடி முன்னே, பல ஆண்டுகளாக சீர் செய்யப்படாமல் இருக்கும் கிடங்கு, இவற்றினூடே எனக்கான பச்சை விளக்கு ஒளிர காத்துக் கொண்டிருந்தேன். சிக்னல் பச்சையானவுடன், எம்ஜிஆர் சாலையில் நான் நகரத் தொடங்கி வேகமெடுக்கவும், எங்கிருந்து வந்தார் என்று தெரியாமல், எனக்கு எதிர்ப்புறம் இருந்து ஒரு ஷேர் ஆட்டோ ஒன் வேயில் பாய்ந்து வந்து, மூன்று சக்கரங்களும் அந்தக் கிடங்கில் இறங்காமல் லாவகமாக இடது புறம் ஒடித்து , OMR சாலையில் நுழைந்து அநாயசமாக சீறிச் சென்றார். சட்டென்று அடித்த பிரேக்கில் எனக்குத் தான் வயிற்றில் இருந்து ஒரு உருண்டை வாய் வரை வந்தது. உருண்டையோடு ஒரு கெட்ட வார்த்தையும் வர, இரண்டையும் முழுங்கிக் கொண்டேன். பின்னால் இருந்து வந்த இன்னோரு ஷேர் ஆட்டோக்காரர், கண்ணாடியைத் தட்டி,
“இப்டித்தான் சடன் பிரேக் போடுவியா…இடிச்சா என்னாகும் தெரியுமா”, என்றார்.
“சடனா போடுறதுக்குத் தான பிரேக் வச்சிருக்காங்க. பிரேக் அடிக்கிறதுக்கு முன்னாடி, உங்களுக்கு லெட்டர் போட்டுட்டா அடிக்க முடியும்” என்றதற்கு மையமாக பார்த்துவிட்டு மனதுக்குள் நாலு நல்ல வார்த்தை சொல்லிவிட்டுச் சென்றார். சரியான பதிலடி கொடுத்து விட்ட திருப்தியோடு நகர்ந்தேன். கிடங்கைத் தாண்டியவுடன், லாஸ்ட் வேர்ல்டு திரைப்படத்தில் தாவி வரும் வித விதமான டைனோசர்கள் போல, ரைட் அண்டு ராயலாக ஒன் வேயில் சீறிப் பாயந்து வந்த டூ-வீலர்களை சமயோசிதமாக கையாண்டு, தப்பித்து ஆசுவாசப்படும் போதுதான் ரோட்டிற்கு இடப்புறம் இருந்த சிறிய சந்தின் முனையில் வைக்கப்பட்டிருந்த அந்த ஃப்ளெக்ஸைப் பார்த்தேன்.
இருபதாம் ஆண்டு நினைவு அஞ்சலி என்று அச்சடிக்கப்பட்ட அந்த எட்டுக்குப் பத்து ஃப்ளெக்ஸில் அடர்ந்த தாடி மீசையோடு சிரித்துக் கொண்டிருந்தார், ஆர்.சிவாஜி. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஓரிரு முறை இவரை இதே இடத்தில் ஃபிளக்ஸில் பார்த்திருக்கிறேன். அரசியலிலோ, பொது வாழ்விலோ இருந்தவராகத் தெரியவில்லை. மறைந்த ஒருவரை, இருபது வருடங்களாக அவரது குடும்பத்தினர் நினைவில் வைத்திருக்கலாம்தான். ஆனால், தொடர்ந்து பல வருடங்களாக நினைவில் வைத்து ஃபிளெக்ஸ் அடித்து தெரு முனையில் வைப்பது சற்று வித்தியாசமாகப் பட்டது. அன்போ நன்றியோ இவ்விரண்டில் ஒன்று மிகுந்திருக்காமல் ஒருவரை சுற்றத்தாரும் உறவும் இத்தனை ஆண்டுகள் நினைவில் வைத்து அங்கீகரிப்பது சாத்தியமில்லை. எப்போதும் தன்னை மையப்படுத்தியே சிந்திக்கும் மனம், என் காலம் முடிந்த பின்னர், என்னை யார் நினைவில் வைத்திருப்பார்கள், எத்தனை ஆண்டுகள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று யோசித்தது. சட்டென்று, நான் யாரை நினைவில் வைத்திருக்கிறேன் என்ற கேள்வி எழ, மனம் வெள்ளைப்பாட்டியை கண் முன் நிறுத்தியது. அடுத்த நொடி – அரைடவுசர், பனியன் அணிந்து எட்டு வயது சிறுவனாக, அந்த சிற்றூரின் அரசுப் தொடக்கப்பள்ளிக்கு எதிரே இருந்த வெள்ளைப்பாட்டியின் வீட்டு வாசலில் நின்றிருந்தேன்.
அந்த வீட்டின் ஓட்டுச்சாப்பை தாங்கி நின்ற குத்துக்கற்களில், வாசலுக்கு நேராக இருந்த குத்துக்கல் ஒன்றில் ஒற்றைக்காலில் சாய்ந்து நின்று, எதிரேயிருந்த காலியிடத்தில் கட்டிக் கிடந்த எருமை மாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருந்தேன். குறிப்பாக, அதில் இருந்த ஒரு பெரிய எருமை மாட்டின் மீது தான் எனது கவனம் இருந்தது. மற்ற மாடுகளாவது அவ்வப்போது வெளியே சென்று வருவதைப் பார்த்திருக்கிறேன். இது காலையில் இருந்து தின்பதை மட்டுமே சோலியாக வைத்திருந்தது. மற்ற மாடுகளை விட இது மட்டும் எப்போதும் கோபமாக இருப்பதாகத் தோன்றும். சராசரிக்கும் சற்றே பெரிய அளவிலான கொம்புகள் இருந்தது காரணமாக இருக்கலாம். வெறுமனே சாய்ந்து அமர்ந்து எதையாவது மென்று கொண்டே இருக்கும். சகதியும் சாணியும் உடம்பில் சேர்ந்து காய்ந்து ஒட்டி, கற்கள் பதித்து போல இருக்கும் அதனருகில் வேற்றாள் யாரும் சென்று நான் பார்த்ததில்லை. பள்ளி நாட்களில், தெருவோரத்தில் பிரைஸ் அட்டையும், ஜவ்வு மிட்டாயும் விற்கும் பாட்டி, அதனருகே ஒரு இரண்டி தள்ளி ஜவ்வு மிட்டாய் ஒட்டிய பலகையை வைத்திருப்பாள். பள்ளிக்கு எதிரே இருந்ததால், இடைவேளையின் போது, அந்த பாட்டியிடம் ஐந்து பைசா, பத்து பைசா கொடுத்து பிரைஸ் அட்டை கிழிக்க சிறுவர்கள் கூட்டமாக வருவார்கள். அப்போது மட்டும் பெருமூச்சு விட்டு, எழுவதைப் போல ஆக்சனைப் போட்டு பயமுறுத்தும். மற்றபடி அதனிடம் பெரிதாக எந்த அசைவும் இருந்ததில்லை.
எனக்கொரு ஆசை இருந்தது. எப்போதும் உட்கார்ந்தே இருக்கும் இந்த எருமை மாட்டினை ஓடிச் சென்று தாண்டிப் பார்க்க வேண்டும் என்கிற ஆசை. அதற்குத் தடையாய் இருந்தது ஒன்றே ஒன்று தான் – மாட்டிற்கு அந்தப் பக்கம் எருமைக் கன்றுகள் கட்டிப் போடுவதற்காக இருந்த ஒரு சிறிய கூரைச்சாப்பு. அதனுள் நான்கைந்து கன்றுகள் கட்டிக்கிடக்கும். மாட்டைத் தாண்டினால், அந்த நான்கு கன்றுகளுக்கு ஊடே தான் குதித்தாக வேண்டும். கன்றுகள் மிரண்டு விட்டால் சிக்கல். என்றைக்காவது கன்றுகள் இல்லாத போதுதான் காரியத்தைச் சாதிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். அந்த நாள் அன்று வாய்த்திருந்தது.
கூரைச்சாப்பினுள் கன்றுகள் இல்லை. கண்கள் சொருக, தன் கோணலான வாயில் மாடு எதையோ மென்று கொண்டிருந்தது. தெருவிலும் ஆள் நடமாட்டம் இல்லை. மாடு தன் கண்களை முழுதாக மூடிவிட்டால், ஓடிச் சென்று தாண்டிவிடலாம் என்று யோசித்தவாறுதான் தூணில் சாய்ந்து ஒற்றைக்காலில் நின்றிருந்தேன். மாடு கண்களை மூடியது. இன்னும் இரண்டொரு நிமிடங்கள் பொறுத்து ஓடத் தொடங்கலாம் என்று எண்ணி தூணில் இருந்து விலக எத்தனிக்கும் போது,
“விடியமின்ன எந்திச்சு ராமாயி வீட்டு எருமைய வேடிக்கை பாத்துட்டு இருந்தா வெளங்கவா ?. இதுல ஒத்தக்காலு வேற. ஒத்தக்கால்ல நிக்காத, வீட்டுக்கு ஆகாதுன்னு எத்தனை தடவை சொல்றது” என்று கீழவீட்டில் இருந்து ஞானம்பாட்டி கத்தியதில் மாடு விழித்துக் கொண்டது.
“வடை வாங்கிட்டு வந்திருக்கு. போயி ரெண்டத் தின்னுட்டு குளிக்கிற வழியைப் பாரு”, என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். மாடு திரும்பி என்னைப் பார்த்தது. பின்னர் வழக்கம் போல மெல்லத் தொடங்கிவிட்டது. நல்ல வாய்ப்பைக் கெடுத்ததற்காக ஞானம்பாட்டியின் மேல் கோபம் வந்தது. சத்தம் கேட்டு வெள்ளைப்பாட்டி வீட்டினுள் இருந்து வெளியே வந்து, முந்தியில் கைகளை துடைத்துக் கொண்டே
“என்ன காலையிலயே கத்துறா” என்றார்.
“ஒத்தக் கால்ல நிக்கக் கூடாதாம்.வடையத் தின்னுட்டு குளிக்கணுமாம்.” என்று நகர்ந்தேன்.
“நீச்சத்தண்ணி உப்பு போட்டு தரவா, புடிக்கும்ல, கொண்டு வரட்டா” என்று கேட்கவும் எச்சில் ஊறியது. மனதே இல்லாமல்,
“வேணாம்…ஞானம் பாட்டி திட்டுவாங்க” என்றேன்.
“அவ கெடக்கா…நான் சொல்லிக்கிருதேன்..வா” என்று வெள்ளைப் பாட்டி சொல்லவும், நடுவீட்டைக் கடந்து வெள்ளைப்பாட்டியோடு அடுப்பறைக்குச் சென்றேன். அடுப்பறைக்குள் நுழைந்ததும், அடுப்பில் கனன்று கொண்டிருந்த கங்கின் நெடி அடி நெஞ்சு வரை சென்று சுருக்கென்று குத்தியது. இதோ, இதை எழுதும் போது கூட, அந்த வாசனை துளி கூட மாற்றமின்றி அப்டியே நினைவுக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகளில் அந்த நெடி வாசனையாக மாறியது தான் ஆச்சரியம்.
“செத்த உக்காரு….உலைய வச்சிட்டு வந்துர்றேன். அந்தாளு பசிக்குதுன்னு வந்துருவாப்ல” என்று எனக்கு சிறிய மரப்பலகையை எடுத்துப் போட்டுவிட்டு,ஊதுகுழலை எடுத்து அடுப்பினருகே சென்று குத்த வைத்து அடுப்பில் கிடந்த கங்கினை ஊதத் தொடங்கினார். பாட்டியிடம் நான்கைந்து இருமல்களை வாங்கிக் கொண்டு அடுப்பு எரியத் தொடங்கியது. உலையை வைத்து விட்டு, நீச்சத் தண்ணி இருந்த சட்டியில் சிறிது கல்லுப்பை அள்ளிப்போட்டு, என்னிடம் நகர்த்தினார்.
“இத்தினி ஊறுகா தரவா” என்றார். உப்புக் கரித்த நீச்சத்தண்ணியை விழுங்கிக் கொண்டே,
“ம்ஹீம்” என்று வேகமாகத் தலையாட்டினேன்.
பாதித் தண்ணியை குடித்து முடித்து ஏப்பம் விட்டவுடன் திரும்ப எருமை ஞாபகத்துக்கு வந்தது. உட்கார்ந்திருந்த பலகையில் இருந்து லேசாக நகர்ந்து எட்டி தெருவைப் பார்த்தேன். எருமை மாட்டின் உடம்பு மட்டும் தெரிந்தது. எப்போதும் ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் அதன் வாலில் அசைவில்லை. பாத்திரத்தை கீழே வைத்து விட்டு,
“ஒரு நிமிசம் பாட்டி..இந்தா வந்துர்றேன்” என்று எழுந்து மெதுவாக வாசலை நோக்கி நடந்தேன்.
“யேய்..சாப்டும் போதும் ஊடால எந்திச்சு போகாதய்யா” என்று அவர் சொல்லி முடிக்கும் போது வாசல் நிலைக்கு அருகே நின்றிருந்தேன்.
மாட்டின் கண்கள் மூடியிருந்தது. அதன் பெரிய வயிறு சீராக ஊதவும், சுருங்கவுமாக இருந்தது. கூரைச் சாப்பினுள் கன்றுகள் இன்னும் வந்திருக்கவில்லை. குத்த வைத்து அமர்ந்திருந்த வெள்ளைப் பாட்டி, கைகளை ஊன்றி, அலமாரியில் கைவைத்து எழுந்து, நடுவீட்டின் வாசல் வரை வர, சில நிமிடங்கள் ஆகும். சட்டென்று வேகமெடுத்து ஓடத் தொடங்கினேன். இரண்டு தாவல்களில், ஓட்டுச் சாப்பைக் கடந்திருந்தேன். பலமுறை ஓடித் திரிந்த வீடும் தெருவும், காலுக்குப் பழகியிருந்ததால், வாசலில் கிடந்த கல்லையும் தெருவுக்கு அந்தப் பக்கம் ஓடிய சிறிய சாக்கடைக்கும் ஊடே எத்தனை அடி வைக்க வேண்டும் என்று துல்லியமாக கணிக்க முடிந்தது. மாட்டினுடைய முதுகின் நடுப்பகுதியைத் தான் குறிவைத்து ஓடிக் கொண்டிருந்தேன். சாக்கடையைத் தாண்டி மாட்டை அடைய ஒரு நான்கைந்து அடிகள் இருக்கும் போதுதான், நான் செய்த தவறு புரிந்தது. என்னுடைய அனாலிசிஸில், மாட்டைச் சுற்றி சொத சொதவென்று கிடந்த சாணியையும், சேறையும் கணக்கில் கொள்ள மறந்து விட்டேன். சட்டென கால் வழுக்க நிலை குலைந்தேன். அரவத்தில் மாடு கண் விழித்தது. நான் அதன் கண்ணைப் பார்த்ததை, அதுவும் பார்த்து விட்டது. ஓடி வந்த வேகத்தில் நிற்க முடியாமல் நான் தாவவும், மாடு பெருமூச்சோடு எழவும் சரியாக இருந்தது. மாட்டைத் தாண்ட வேண்டியவன், மாட்டின் மேலே கோணல் மாணலாக மோதி, சைடு வாக்கில், சகதிக்குள் விழுந்தேன். தட்டித் தடுமாறி நான் எழவும், வெள்ளைப்பாட்டி வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது. கீழே விழுந்த அதிர்ச்சி, முழங்கையில் இருந்த வலி, உடம்பு முழுக்க இருந்த சாணி வாடை என்று அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அடக்கிக் கொண்டே வீட்டை நோக்கி ஓடினேன்.
“மாடு அத்துக்கிச்சா, முட்டிருச்சாக்கும்” என்று கத்தியவாறு வெள்ளைப்பாட்டி வந்தார். இடது கையைப் பிடித்துக் கொண்டு, என் கன்னத்தில் அப்பியிருந்து சாணியை வழித்துப் போட்டார். அழுகையை அடக்கியதில் தொண்டை வலித்தது. மாட்டைத் திரும்பிப் பார்த்தேன். நின்றவாறு எதையோ மென்றுகொண்டே என்னை சலனமில்லாமல் பார்த்தது.
“கழுவணும் பாட்டி, ஒரு மாதிரி இருக்கு” என்றவனை வீட்டினுள் அழைத்துச் சென்றார். அடுப்பறைக்குப் பின்னால், ஈயப்பாத்திரத்தில் முந்தைய நாள் பிடித்த தண்ணீர் இருந்தது. அதை எடுத்து அள்ளி இரைத்து கழுவி விட்டார்.
“உங்க கையி சொரசொரன்னு இருக்கு பாட்டி” என்று எரிச்சல் பட்டேன். வெள்ளைப்பாட்டியின் கைகள் சொரசொரவென்று இருப்பது எனக்குப் பிடித்திருந்தில்லை.
“ரத்தம் வருதான்னு பாரு…சாப்டும் போது எவனாது இப்டி ஊடால எந்திச்சுப் போயி சாணியில விழுந்துட்டு வருவானா. கொடுமய எங்க போயிச் சொல்ல” என்று எத்துப்பல் தெரிய லேசாகச் சிரித்தார்.
“அந்தத் தொட்டில கொஞ்சம் தண்ணி கெடக்கு. இங்கயே குளிச்சிரு. நான் கீழ வீட்டுல போயி துணிய எடுத்துட்டு வாரேன். அவளுக்குத் தெரிஞ்சா வைய்யப் போறா” என்று ஞானம் பாட்டியின் வீட்டுக்கு கிளம்பினார்.
ஏன் இங்க வந்து குளிக்க மாட்டானா என்று ஞானம்பாட்டி திட்டும் வாய்ப்பு உண்டு. ஆனால் எருமைச்சாணிக்கு விழும் திட்டை விட, இதற்குக் கம்மியாகத்தான் விழும் என்பதால், இரண்டு ஆப்சன்களில் இதை டிக் செய்தேன். உண்மையில் நான் விழுந்ததை ஞானம்பாட்டி பார்த்திருந்தால், முதுகு பழுத்திருக்கும் வாய்ப்பு அதிகம் தான்.
வெள்ளைப்பாட்டியும் ஞானம்பாட்டியும் அக்காள் தங்கை. பள்ளிக்கூடத்துக்கு எதிரே இருந்த அந்தத் தெருவில், அடுத்தடுத்த வடக்குப் பார்த்த வீடுகளில் குடியிருந்தார்கள். கிழக்கே இருந்த வீட்டில் ஞானம்பாட்டியும், மேற்கே இருந்த வீட்டில் வெள்ளைப்பாட்டியும் வசித்தார்கள். ஞானம்பாட்டியிடம் எத்தனை அன்பு இருக்கிறதோ அத்தனை கண்டிப்பு இருக்கும். குடும்பம் எப்படியாவது மேடேற வேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கமாக இருந்தது. ஆனால் வெள்ளைப்பாட்டி, யாரையும் எதற்காகவும் கடிந்து நான் பார்த்ததில்லை. ஒரே ஒரு முறை, மாட்டுக்கு வைத்திருந்த தவிட்டை எடுத்துத் தின்றதற்காக, அருள் மாமாவிடம் மாட்டி விட்டதைத் தவிர பெரும்பாலும் என்னை என் போக்கில் தான் விட்டிருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இன்றி, இப்படித்தான் நீ இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறைகளும் இன்றி, என்னை நான் என்பதற்காகவே வாரியணைத்துக் கொண்டிருக்கிறார். வெகு சமீபமாகத்தான், என்னை என் குறைகளோடு ஏற்றுக் கொள்கிறவர்கள் மீது, எனக்கு பற்றுதல் சற்று அதிகம் என்பதை உணர்ந்திருக்கிறேன். அவர்களைத் தவிர, யார் எனக்கு கட்டுப்பாடுகள் விதித்தாலும் எப்பாடு பட்டேனும் அதை மீறவே முயற்சித்திருக்கிறேன்.
தன் தங்கையின் மகள் வழிப் பேரனான என்னை, தன் பேரனாகவே தான் பாவித்தார் வெள்ளைப்பாட்டி. ஞானம்பாட்டிக்கு என் அம்மாவையும் சேர்த்து ஐந்து பிள்ளைகள். என் அம்மாவோ, சித்தியோ, மாமாமாரோ வெள்ளைப்பாட்டியை பெரியம்மா என்றழைத்து நான் பார்த்ததே இல்லை. அம்மா என்றே அழைத்திருக்கிறார்கள். ஞானம்பாட்டிக்கும் வெள்ளைப்பாட்டிக்கும் வயது வித்தியாசம் சற்று அதிகம். அதனால், ஞானம்பாட்டியையும் கிட்டத்தட்ட அவர் தான் வளர்த்திருக்கிறார். என் பாட்டியை வளர்த்து, என் அம்மாவை வளர்த்து, பின்னர் என்னையும் அவரே தான் வளர்த்தார். எல்லாரையும் தன் பிள்ளையாகத்தான் நினைத்தார்.
எருமை மாடு எபிசோடில் வெள்ளைப்பாட்டி என்னை கடிந்து கொள்ளாதது எனக்குப் பிடித்திருந்தது. அதனால் அவரது வீட்டில் அதிக நேரம் செலவிடத் தொடங்கினேன். நீச்சத் தண்ணி, பழைய சோறு, மிதுக்கு வத்தல் நாவுக்கு பழகியது. ரோஸ் நிற பாக்கெட்டில் வரும் கோபால் பல்பொடி எனக்குப் பிடிக்கும் என்று தெரிந்து, அதை வாங்கி வைக்கத் தொடங்கினார். எனக்கு கோபால் பல்பொடியைக் கொடுத்துவிட்டு, அவர் மட்டும் சாம்பலில் பல் விளக்கிக் கொள்வார். கோபால் பல்பொடியின் ருசி பிடித்துப் போக, பல் விளக்கும் போதெல்லாம் அதை தின்னவும் தொடங்கினேன். ஒரு நாள் காலையில்,
“எவனாது இப்டி பல்பொடிய திம்பானா” என்று வாய்நிறைய சாம்பலோடு அவர் சிரித்தது, சித்திரமாக அப்டியே மனதில் பதிந்திருக்கிறது.
ஒருமுறை அவரது மடியில் நான் படுத்திருந்த போது, எனது கையை அவரது உள்ளங்கைக்குள் வைத்திருந்தார்.
“ஏன் பாட்டி உங்க கையி சொரசொரன்னு இருக்கு” என்றதற்கு,
“வேல செய்றம்ல, காச்சுப் போயிரும்ல” என்றபடி, சொரசொரப்பான கையினால் என கன்னத்தைத் தடவினார். சிறிது சிறிதாக அந்த உள்ளங்கை சொரசொரப்பு எனக்கு பிடித்துப் போனது. பள்ளி, கல்லூரி என்று வளரத் தொடங்கவும் ஊருக்குப் போவது குறையத் தொடங்கியது. எப்போது ஊருக்குப் போனாலும் என் கையில் பணம் திணிக்காமல் அவர் அனுப்பியதே இல்லை. அவருக்கு என்ன வருமானம் இருந்ததென்று எனக்குப் பணம் கொடுத்தார் என்று தெரியவில்லை. ஞானம் பாட்டி இறந்த போது கூட,
“அவ போயி சேர்ந்து, நான் இருக்கவா..இன்னும் எத்தன கொடுமைய நான் பாக்கணுமோ” என்று அரற்றிக் கொண்டிருந்தவர், நான் கிளம்பும் போது, ஒரு நூறு ரூபாய்த் தாளை என் கையில் திணித்தார்.
“எனக்கு எதுக்கு பாட்டி, நான் வேலைக்கு போறேன் இப்ப. நாந்தான் உங்களுக்குத் தரணும்” என்றதற்கு,
“எனக்கெதுக்குய்யா காசு, நீ எதாது புடிச்சத வாங்கிச் சாப்டு” என்று தன் சொரசொரப்பான கைகளால் என் கையைப் பிடித்துக் கொண்டார்.
வேலை, குடும்பப் பிரச்சனைகள் என்று ஊடே சில வருடங்கள் ஊருக்குச் செல்வது குறைந்து விட்டது. சில வருடங்கள் கழித்து, என் மகளுக்கு சற்றே விவரம் தெரிந்த பிற்பாடு வெள்ளைப் பாட்டியை பார்க்கச் சென்றேன். பள்ளிக்கூடத்துக்கு எதிரே எருமை மாடு கட்டிக் கிடந்த இடத்தில், புதிதாக ஒரு வீடு முளைத்திருந்தது.
“முன்னாடி இங்க எருமை கட்டிக் கெடக்கும் பாப்பா” என்று மகளிடம் சொல்லிக் கொண்டே வெள்ளைப்பாட்டியின் வீட்டுக்குள் நுழைந்தேன். ஒற்றைக்காலில் நான் சாய்ந்து நின்ற குத்துக்கல் இத்தனை சிறியதா என்று தோன்றியது. வலதுகையை ஓட்டுச்சாப்பின் மேல் வைத்து குனிந்து உள்ளே சென்றேன், தாவி ஒடித் திரிந்த வாசலையும் குனிந்து தான் கடக்க வேண்டியிருந்தது. அரவம் கேட்டவுடன், வலதுபுறம் இருந்த கட்டிலில் படுத்திருந்த வெள்ளைப்பாட்டி,
“யய்யா” என்று கூட்டிச் சேர்த்து எழுந்தார்.
“நல்லாருக்கீங்களா பாட்டி” என்று அருகே சென்று அமரவும், கையை பிடித்துக் கொண்டார். இம்முறை அவரது உள்ளங்கையை, எனது உள்ளங்கைக்குள் அடக்கிக் கொண்டேன். இத்தனை ஆண்டுகள் கழித்தும் அதே சொரசொரப்பு இருந்தது. நானும் மனைவியும் அவருக்கு இருபுறம் அமர்ந்திருக்க, வழக்கம் போல குசலம் விசாரிக்கத் தொடங்கினார். என் மகள் சன்னல் அருகே இருந்த மர பெஞ்ச்சில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். அந்த மரபெஞ்ச்சில் அமர்ந்து சன்னல் வழியாகப் பார்த்தால் பள்ளிக்கூடம் தெரியும். மதிய நேரங்களில் அதே பெஞ்ச்சில் அமர்ந்துதான், பள்ளியில் சமைக்கும் சத்துணவின் வாசத்தை அடிவயிறு வரை இழுத்துக் கொண்டிருப்பேன்.
“ஒம் மகளா.. நல்ல நெறமா இருக்காய்யா. பாட்டிக்கிட்ட வா”, என்றார். என் மகள் சிரித்துக் கொண்டே கிட்டே செல்லவும், தன் கைகளால் அவளது முகத்தை அள்ளிக்கொண்டார். என் மகளும் அந்த உன்னதமான சொரசொரப்பை உணர்ந்திருப்பாள்.
“ஒங்கப்பன் பாசக்காரன். ஒரு தடவ..இந்த… செயவிலாஸ் பஸ் இருக்குல்ல, அதுல ஏத்தி விட்டுட்டு, எங்க பாட்டியை பத்திரமா எறக்கி விட்டுருங்கன்னு, கண்டக்டர்ட்டயும், டிரைவர்ட்டையும் அத்தனை தடவ சொல்லுதான். பஸ்ஸு கெளம்புற வரைக்கும் அத்தனை தடவை சொல்லுதானாக்கும்” என்று என் மகளிடம் சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து தெத்துப் பல் தெரிய சிரித்தார். பின்னர் என்னிடம் திரும்பி,
“நீச்சத்தண்ணி தரவா?” என்று கேட்டார்.
“வேண்டாம் பாட்டி..இருக்கட்டும் உக்காருங்க” என்று சொல்லவும், என் மகளிடம் திரும்பி,
“ஒரே அதத்தான் கேப்பானாக்கும். அவ வைஞ்சாலும் கேக்க மாட்டான்” என்று ஞானம்பாட்டியைச் சொன்னவர், சட்டென்று,
“எனக்கு மின்ன போயிச் சேர்ந்துட்டா. அவ போயி நான் இன்னும் கெடக்கேன்” என்றார்.
“மெட்ராஸுல தான வேலை பாக்க ? செல்லச்சாமிய பாத்தியா” என்று அவரது தம்பியை விசாரித்தார்.
“எங்க அண்ணாச்சி இருந்தா பாத்திருப்பாக, அவரும் இல்ல” என்று மறைந்த அவரது அண்ணனை நினைத்தவர், “இப்டி ஆளுக்கு ஒரு திக்கம் கெடக்கமே” என்று கண்கள் பனித்தார்.
“பிரச்சனையாக்கும் யா ? என்னத்துக்கு ஒங்கிட்ட பேச மாட்டிக்காய்ங்களாம்” என்று மாமாமாரை பேருக்குக் குறை சொன்னார்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி. சரியாப் போயிரும்” என்றவுடன்,
“நீச்சத்தண்ணி தரவா” என்று மறுபடியும் கேட்டார். வேண்டாம் என்று மறுத்து விட்டு அடுப்பறை நோக்கி நடந்தேன். அதே கங்கின் நெடி அடி நெஞ்சில் சுருக்கென்றது. கோபால் பல்பொடி வைத்திருந்த அலமாரி, அதே இடத்தில் நூலாம்படையோடு அப்படியே இருந்தது.
“மீனா வெளிநாட்டுல இருக்காளாம்ல. வருசத்துக்கு ஒரு தரம் வருவாளா ?” என்று என் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தது கேட்டது.
வெள்ளைப்பாட்டிக்குப் பிறகு, இந்த வீட்டிற்கும் எனக்கும் தொடர்பு இருக்காது என்ற உண்மை உரைத்தது. அடுத்தத்த முறை பார்க்கச் செல்லும் போது, அவர் உடல்நிலை மோசமாகிக் கொண்டேதான் இருந்தது. தொண்ணூறுகளில் வேறென்னெ எதிர்பார்க்க முடியும்.
கோவிட் காலகட்டத்தில் ஒரு நாள், சட்டென்று சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டவர், ஒரு வாரத்தில் போய்ச் சேர்ந்திருந்தார். ஊருக்குப் போனேன். வெள்ளைப்பாட்டியை நடுவீட்டில் மர நாற்காலியில் சாத்தி வைத்திருந்தார்கள். அவரது உள்ளங்கையைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். உயிரற்ற அந்த உள்ளங்கையில் எப்போதும் இருக்கும் சொரசொரப்பு இருக்காதோ என்று தோன்றியது. அவர் உயிரோடிருந்த போது, அவரிடம் இருந்து கடைசியாக எனக்குக் கிடைத்த, அந்த உள்ளங்கை சொரசொரப்பை இழக்க மனமில்லாமல், அவரது முன்னங்கையில் “முத்துலட்சுமி” என்கிற தன் பெயரை பச்சை குத்தியிருந்ததை மட்டும் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, வெளியே வந்து விட்டேன்.
மனிதர்களை takers, matchers, givers என்று மூன்று வகைப்படுத்தலாம். Takers எப்போதும் அடுத்தவர்களிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருப்பவர்கள். Matchers, அடுத்தவருக்கு ஏதாவது செய்தால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்கிற கணக்கோடு செயல்படுபவர்கள். இவர்கள் பெரும்பான்மையினர். Givers வெகு அரிதானவர்கள். எப்போதும் தன்னைவிட அடுத்தவரை முன்னிறுத்துபவர்கள். தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு நன்மை செய்வதை முதல் நோக்கமாகக் கொண்டவர்கள். அவர்கள் தான் தசாப்தங்கள் தாண்டி சுற்றத்தாரின் நினைவில் நிற்பார்கள் – வெள்ளைப்பாட்டியைப் போல, ஆர்.சிவாஜியைப் போல.
பெருவாழ்வு வாழ்வதற்கு உலகம் முழுக்க பயணப்பட வேண்டும், பெருஞ்சொத்து, பேர், புகழ் சேர்க்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் இல்லை. நிறைந்த மனதோடு தன்னைச் சுற்றியிருப்பவர்களைப் பார்த்துக் கொண்டால் போதும். எனக்குத் தெரிந்த வரையில் வெள்ளைப்பாட்டி அந்த சிற்றூரை விட்டு அதிகமாக வெளியேறியதில்லை. அங்கேயே பிறந்து, வளர்ந்து, வாழ்க்கைப்பட்டு, அங்கேயே மறைந்தார். நாங்கள் விருதுநகர் ஹவுசிங் போர்டில் குடியிருந்த போது, ஒரு வாரம் வந்து எங்களுடன் தங்கியிருந்தார். திரும்ப ஊருக்குச் செல்லும் போது, ஜெயவிலாஸ் பஸ்சில் ஏற்றிவிட்டது அப்போது நடந்தது தான். பிறந்த ஊரிலேயே வளர்ந்து, வாழ்ந்து, மறைந்தார். கிட்டத்தட்ட ஒரு மரத்தினைப் போல. மூன்று தலைமுறைகள் அப்பெருமரத்தின் நிழலில் வளர்ந்தன. எல்லா குடும்பங்களிலும் பிறர்க்காக வாழ்ந்த, வாழ்கின்ற இது போன்ற பெருமரங்கள் உண்டு. அம்மரங்கள் அன்றி நம்மைப் போன்றோர் பறவைகளாக முடியாது. பறவைகளான நமக்கு, அம்மரங்களை தொழுவதைத் தவிர வேறென்ன மீட்சி இருந்திவிடப் போகிறது ?