பொண்ணுங்களுக்கு பொதுவா நகை,புடவை தான் பிடிக்கும் நினைக்கிறீங்களா? கிடையவே கிடையாது..
இன்னைக்கு சமைக்க வேணாம்
வெளியே போய் சாப்பிடலாம்னு சொல்லிப் பாருங்க
அந்த சந்தோஷத்துக்கு அளவே இருக்காது
#Warrant - 2026
OTT : Zee5 (Tamil)
@Cineeloop - 2.75/5
திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றும் கோட்டேக்கருப்பு (பிரசாந்த் பாண்டியராஜ்), தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற அரசு வேலையில் சேர பல்வேறு தேர்வுகளை எழுதுகிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வாய்ப்பை தவற���ிடுகிறார். டிரைவர���க இருக்கும் அவரது மாமா காளி வெங்கட்டின் உதவியால் போலீஸ் வேலையில் சேரும் கருப்பு, வீட்டில் செல்லமாக வளர்ந்த ஒருவனாக இருந்து, பணியில் சேர்ந்த பிறகே வாழ்க்கையின் கடினமான யதார்த்தங்களை நேருக்கு நேர் சந்திக்கிறார்.
அப்பாவித்தனமான குணம் காரணமாக சக அதிகாரிகளாலும் குற்றவாளிகளாலும் தொடர்ந்து அவமதிக்கப்படும் கருப்பு, ஒரு கட்டத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கிறார். ஆனால் அந்த முடிவுகளே அவரை பெரிய சிக்கலில் சிக்க வைக்கின்றன. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதே தொடரின் மையக்கதை. ‘விலங்கு’, ‘மாமன்’ படங்களை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ், இந்த தொடரின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
முதல் இரண்டு எபிசோடுகள் சற்று மெதுவாக நகர்ந்தாலும், மூன்றாவது எபிசோடிலிருந்து கதை வேகம் பெறுகிறது. அப்பாவியான கதாபாத்திரத்திற்கு பிரசாந்த் பாண்டியராஜ் ஓரளவு பொருத்தமாக இருந்தாலும், நடிப்பில் இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம். சில கதாபாத்திர��்கள் வலுவாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றின் பயணம் முழுமையாக பயன்படுத்தப்படாமல் போவது ஏமாற்றமளிக்கிறது. தேவையற்ற சில காட்சிகளும் கதையின் ஓட்டத்தை பாதிக்கின்றன. 8 எபிசோடுகளுக்காக திரைக்கதை சற்று இழுக்கப்பட்டதுபோல் தோன்றினாலும் இது ஒரு ஆவரேஜ் ஆனால் டைம் பாஸ் சீரிஸ்.
புருசனை பிடிக்கலைனா டைவர்ஸ் பண்ணிட்டு போயி என்னவேணா பண்ண வேண்டியது தானே புள்ளைய காப்பாத்தி கரை சேர்க்க நினைக்காமல் தன்சுகம் பெரிதென நினைக்கும் தாய்களால்
கள்ளக் காதலுக்காக இன்னும் எத்தனை குழந்தைங்க தான் சீரழிய போகுதுங்களோ 💔😭
ரீல்ஸ் மோகம் ஒரு குடும்பத்தை அழிச்சிடுச்சு...
பாவம் குழந்தைகள் 😭 சுய ஒழுக்கம் இல்லாத ஆணும் பெண்ணும் சமூக சீர்கேடுகள் ஓவரா பெண் சுதந்திரத்திற்கு பாடுபட்டு விட்டோமோ என்று தற்போதைய சூழலில் தோன்றுகிறது 🤦
#BLAST 💥
@Cineeloop - 3.75/5
நல்ல ஆக்ஷன் படம். அர்ஜுன் ஸ்மார்ட்டாகவும் சூப்பராகவும் நடித்திருக்கிறார். முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாவது பாதியில் சில லா��ிக் குறைகள் இருந்தாலும், சமீபத்தில் வரும் பல படங்களோடு ஒப்பிடும்போது இது பரவாயில்லை என்று சொல்லலாம்.
மொத்தத்தில், பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் சென்றால் ஜாலியான டைம் பாஸ் என்டர்டெய்னர்.