கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து, தமிழ் நாட்டிற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கும், மேகதாதுவில் தமிழ் நாட்ட��ன் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முழுமையாகத் தொடர்ந்து எடுக்க வேண்டுமென்று தமிழ் நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
சென்னை ஆலந்தூரில் தவெக நிர்வாகி வேம்புலி என்பவர் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
அதேபோல் சேலத்தில் தவெக நிர்வாகி ஒருவர் பல பெண்களை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி, வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் செய்திகள் வருகின்றன.
இது தான் “மாடர்ன் மனுநீதிச் சோழன்” ஆட்சியா? இப்படி ஒரு வார்த்தையை சொல்ல இன்றைய ஆளுங்கட்சி ஆச்சரியக்குறிகளுக்கு வெட்கமே இல்லையா? அமைதிப்படை நாகராஜசோழனை விட கேவலமான ஒரு ஆட்சி தான் இங்கு நடக்கிறது.
குற்றச் செயல்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகமானதை சுட்டிக் காட்டினால், தன் மீது வீண் பழி சுமத்துவதாக கூறும் இன்றைய முதலமைச்சர், கடந்த 1 மாதமாக தொடர்ச்சியாக அவரது கட்சிக்காரர்களே கொடும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
ஆளுங்கட்சி என்றால் சகல குற்றங்களும் செய்யலாம்; சட்டத்தை மீறிய அதிகாரம் இருக்கிறது என்ற எண்ணம் இன்னும் மாறவில்லை என்று தானே எடுத்துக்கொள்ள வேண்டும்?
சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் இன்றைய முதல்வர் பேசியதை அவரது கட்சியினரே மதிக்கவில்லையா? தனி மனித ஒழுக்கத்தை முதலில் உங்களைச் சுற்றி இருப்பதை உறுதி செய்யுங்கள். அதுவே பாதி குற்றங்களை குறைத்துவிடும்!
மேற்கூறிய வழக்குகளில் தொடர்புள்ள ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறோம்.
#பொய்க்கால்_குதிரை_அரசு
அதிமுக தனிநபருக்கு சொந்தமானதோ அல்லது ஒரு குடும்பத்திற்கு சொந்தமானதோ இல்லை.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுக என்றுமே தொண்டர்களின் சொத்து!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்