மொத்தம் 32 பேர். இந்த 32 பேரை வெச்சிக்கிட்டு ஆர்ப்பாட்டம் பண்ண வந்திருக்கார் அண்ணன் @NainarBJP ! பத்திரிகையாளர்கள் கூட 38 பேர் இருக்காங்க.
எதுக்கு இந்த வெட்டி விளம்பரம் @VinojBJP ?
அண்ணன் @NainarBJP அவர்களுக்கு... பொய் சொன்னாலும் கொஞ்சம் பொருத்தமா சொல்லக்கூடாதா?
மாணவர்களின் மா��ெரும் எதிர்ப்பைப் பார்த்து நிலைதடுமாறி, யார் மேல பழி போடலாம்னு யோசிச்சு, எல்லாத்துக்கும் காங்கிரஸ்தான் காரணம்னு 12 வருஷமா கதையளக்கிறீர்கள்! இந்த பழசான ரீலை மக்கள் இனி நம்பப்போவதில்லை.
2016-ல் நீட் தேர்வைக் கொண்டுவந்து, 2017 முதல் அமல்படுத்தியது உங்கள் பா.ஜ.க அரசுதான்! அனிதா தொடங்கி இன்றுவ��ை தமிழ்நாட்டில் மட்டும் 36-க்கும் மேற்பட்ட ஏழைப் பிள்ளைகளின் உயிரைப் பறித்திருக்கிறது இந்த #NEET!
தங்களின் நிர்வாகத் தோல்வியையும் அலட்சியத்தையும் மறைக்க, காங்கிரஸ் மீது பழிபோடும் மலிவான அரசியலை நிறுத்துங்கள்.
பொய் சொன்னா சாமி கண்ணைக் குத்தும்னு அண்ணனுக்குச் சொல்லி வளர்த்திருப்பாங்களே... அதை நினைவூட்ட விரும்புகிறேன்!
மாணவர்களின் உணர்வுகளையும் உயிரையும் மதிக்காத இந்த இரக்கமற்ற பா.ஜ.க அரசுக்கு எதிராக, மாணவர்களுடன் சேர்ந்து எங்கள் போராட்டம் தொடரும்! ✊
#BanNEET #BJPExposed
பிரதமர் மோடியின் கையால் எழுதப்பட்ட அஞ்சல் அட்டை விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள செய்தி, தற்போது ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
விளம்பரத்திற்கு மட்டும் இஸ்ரோவையும், விண்வெளித் துறையையும் பயன்படுத்தும் மோடி அரசு, நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விஞ்ஞானிகளின், ஊதியத்தையும் பணிச்சூழலையும் மேம்படுத்த மறுப்பது ஏன்?
@isro
https://t.co/ZTjhUSyOFH
ஹலோ @VinojBJP, நாடகம் போதும்!
தமிழக உரிமையைப் பற்றி பேசுவது போல் நாடகம் ஆட வேண்டாம்.
▶️கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கான DPR தயாரிக்க ஆரம்பக்கட்ட தொழில்நுட்ப அனுமதி வழங்கியது யார்?
மத்திய பாஜக அரசின் மத்திய நீர் ஆணையம் (CWC) தானே!
அண்ணன் @manickamtagore பற்றி பேசுவதை விடுவித்து டெல்லியில் இருக்கும் உங்கள் பாஜக தலைமையிடம் சொல்லுங்கள்:
➡️ மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக்கூடாது.
➡️ தமிழகத்தின் நீர்வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்தத் திட்டமும் முன்னேறக் கூடாது.
என்று.
காவிரி விவகாரம் என்பது அரசியல் ��ேடை அல்ல.
இது தமிழ்நாட்டின் உயிர், விவசாயியின் வாழ்வாதாரம், கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் உரிமை.
இங்கே போட்டி தமிழ்நாடு Vs கர்நாடகா;
காங்கிரஸ் Vs பாஜக அல்ல.
தமிழகத்தின் உரிமைக்காக அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டிய நேரத்தில், அரசியல் ஆதாயம் தேடுபவர்களை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழக நலனுக்கு எதிராக யார் செயல்படுகிறார்கள் என்பதையும், உண்மையான துரோகம் எது என்பதை��ும் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.
1924-ல் பள்ளியை விட்டு வெளியேறிய ஒரு சிறுவன்…
பின்னர் லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் பாதையை உருவாக்க உதவிய தலைவரானார்.
அதுதான் பெருந்தலைவர் காமராஜரின் வரலாறு.
#லஞ்சம்தவிர்நெஞ்சம்நிமிர்
Remembering Bharat Ratna Thiru K. Kamaraj on his birth anniversary.
His unwavering commitment to education, social upliftment, and ethical leadership transformed millions of lives. His ideals continue to illuminate the path of public service.
கல்வி இன்று கோயிலாக இல்லை… கடையாக மாறிவிட்டது!
நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டிலேயே 12 கல்லூரிகள் மூடப்பட்டிருப்பது கவலைக்குரியது.
ஒரு காலத்தில் பொறியியல் படிப்பு நடுத்தர குடும்பங்களின் கனவாக இருந்தது. இன்று அது அதிக கட்டணம் வசூலிக்கும் வணிகமாக மாறிவிட்டது. லாபம் கிடைக்கும் வரை மாணவர் சேர்க்கை; லாபம் குறைந்தவுடன் கல்லூரிகளுக்கு பூட்டு. இதுதானா புதிய இந்தியாவின் கல்விக் கொள்கை?
ஆர்எஸ்எஸ் சிந்தனையால் வழிநடத்தப்படும் மத்திய கல்வி அமைச்சகம், கல்வியை ஒரு அடிப்படை உரிமையாகப் பார்க்காமல், சந்தைப் பொருளாக மாற்றிவிட்டது. புதிய கல்விக் கொள்கை (NEP) குறித்து பெரிய விளம்பரங்கள் செய்தாலும், அதன் மத்தியில் உயர்கல்வியின் அடிப்படை பிரச்சினைகள்—கல்விக் கட்டண உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, தரமான அரசு முதலீட்டின் குறைவு, கல்வி நிறுவனங்களின் வணிகமயமாக்கல்—தீர்க்கப்படவில்லை.
இதன் விளைவு என்ன?
நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மட்டும் 12 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
மாணவர்கள் படிப்பை விட கல்விக் கடனைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.
பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக அலைகிறார்கள்.
கல்வி நிறுவனங்கள் சமூகப் பொறுப்பை விட வருமானத்தையே முன்னிலைப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.
கல்வியை சந்தையின் கைகளில் ஒப்படைத்தால், மாணவர்கள் வாடிக்கையாளர்களாகவும், கல்லூரிகள் கடைகளாகவும் மாறிவிடும். அப்போது லாபம் இல்லாத கடைகள் மூடப்படுவது போல, கல்லூரிகளும��� மூடப்படும்.
கல்வி விற்கப்படும் பொருள் அல்ல. அது சமூக முன்னேற்றத்தின் அடித்தளம். கல்வியை வணிகமயமாக்கும் கொள்கைகளிலிருந்து விலகி, அனைவருக்கும் தரமான, மலிவான, சமத்துவமான உயர்கல்வியை உறுதி செய்வதே அரசின் முதல் பொறுப்பாக இருக்க வேண்டும்.
#Education
#EngineeringCollegesClosed
கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணையே இல்லையா உங்களுக்கு. ஏன் அடுத்தவன் கட்சி தான் ���ோராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தனுமா? நீங்க எதுக்கு கட்சி வெச்சிருக்கிங்க? பாப் கார்ன் சாப்பிடவா? எங்க உங்க திமுக கடைசியா நடத்தின 10-15 போராட்டங்கள் பட்டியல் கொடு பார்க்கலாம். ஓசியிலேயே மற்றவன் முதுகுல சவார�� செஞ்சுட்டு எங்களால் தான் ஜெயிச்சிங்க எங்களால் தான் ஜெயிச்சிங்க என்று பொய் பீத்தல் வேற. அதை amplify பண்ண 50-60 பத்திரிகையாளர் போர்வையில வாயை வாடகைக்கு விட்டு பொழைக்குற ஒரு கூட்டம் ஒரு 100 யூடியூபர்ஸ் கூட்டம். இதுவரை சுதந்திரம் வாங்கின பிறகு ஒரு தேர்தலாவது சொந்த கால்ல தனியா நின்னு ஜெயிச்சிருக்கிங்களா? அது கூட வேண்டாம். தனியா நின்னு இருக்கிங்களா? வெக்கமா இல்ல. சொந்த கட்சி தலைவரையே ஜெயிக்��� வைக்க துப்பு இல்ல திராணி இல்ல வாக்கு இல்ல. வந்துட்டாங்க கேள்வி கேட்க.
ஒழுங்கு மரியாதையா திமுக கடைசி 5 வருஷத்தில நடத்தின போராட்டங்கள் பட்டியல் கொடுங்க பார்ப்போம். என்னால காங்கிரஸ் நடத்திய போராட்டம் பட்டியல் கொடுக்க முடியும். இன்னும் சொல்ல போனா இந்த வாரத்தில் மட்டும் இளைஞர் காங்கிரஸ் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து போராட்டம் - கைது, காங்கிரஸ் ஆராய்ச்சி துறை ஒரு நாள் அடை���ாள உண்ணாவிரதம். அதற்கு முன்பு மாணவர் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம். எல்லாம் சென்னையில தான் ��டந்தது. உங்க சன் டிவி கலைஞர் டிவி கூட வந்திருந்தாங்க. ஆன நியூஸ் அவங்க டிவியில வராது. வேணும்னா @INCTamilNadu @TN_PYC போய் பாருங்க.
சும்மா ஓரமா போம்மா. எங்களுக்கு லாம் வகுப்பெடுக்க உங்களுக்கு எந்த யோக்கியதையும் அருகதையும் கிடையாது.
The Modi Govt is proposing to bulldoze a Bill to increase the size of the Lok Sabha by 50%. The number of seats allocated to each state is also proposed to be increased by 50%.
The argument that a 50% increase in seats across-the-board is equitable is deceptive. Proportions may not change for the present but there are deeper implications that cannot be wished away.
Any increase in the gap in the existing strengths of different states in the Lok Sabha will place South Indian states at a disadvantage. For instance, currently Uttar Pradesh has 80 seats and Tamil Nadu has 39. With the proposed Bill, UP’s strength will zoom to 120 while Tamil Nadu will crawl up to at best 59. Similarly, Kerala will increase from 20 Lok Sabha seats to 30 seats, while Bihar will move from 40 to 60 seats. Overall, the southern states will gain 66 seats while the northern states will gain 200 seats.
Mr. Modi is unilaterally preparing a law which will disadvantage smaller states in the South, Northeast, and West. The Chief Minister of Telangana has already raised an alarm. Others may very well follow as this proposal becomes officially public.
திரு.அதவ் அர்ஜுனின் கருத்துகள் வெறும் பொறுப்பற்றவை அல்ல — அவை கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
இந்திய தேசிய காங்கிரஸ் என்பது சாதாரண கருத்து தெரிவிக்கும் மேடை அல்ல; இது தியாகம், ஒழுக்கம் மற்றும் கூட்டு முடிவெடுப்பின் அடிப்படையில் உருவான வரலாற்றுப் பெரும் இயக்கம். நாங்கள் ஒரு குடும்பமாக செயல்படுகிறோம் — ஒன்றாக முடிவு செய்கிறோம், ஒன்றாக செயல்படுத்துகிறோம்.
இந்த அமைப்பின் வரலாறும் மரபும் தெரியாதவர்கள் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிடாமல் அமைதியாக இருக்க வேண்டும். மேலும் தெளிவாகச் சொல்கிறேன் காங்கிரஸ் கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்த அமைப்பில் இடமில்லை.
நாங்கள் மகா��்மா காந்தியின் சிந்தனைகளையும், தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராஜர் காட்டிய மக்கள் பாதையையும் உறுதியாக பின்பற்றுகிறோம்.
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள், பிளவை உருவாக்கும் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக அச்சமின்றி தினமும் போராடி வருகிறார். அவரது தலைமையிலும், திருமிகு.மல்லிகார்ஜுன் கார்கே அவர்களின் வழிகாட்டுதலிலும், கட்சி உறுதியாகவும் ஒன்றுபட்டும் நிற்கிறது.
பொறுப்பில்லாமல் பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்க வேண்டாம். நாங்கள் பதிலடி உறுதியாகவும் ��ொடுப்போம்.
இது சாரசரி கட்சி அல்ல ..இது கொள்கைக்கான கட்சி, தியாகம் எங்கள் அடையாளம்.
ஒற்றுமை எங்கள் வலிமை.
India is now staring at a serious LPG supply vulnerability, and the people deserve answers.
Over the past decade, LPG consumption has increased dramatically — especially after the expansion of cooking gas connections under the Pradhan Mantri Ujjwala Yojana. While providing access to clean cooking fuel is important, the Union government failed to plan the infrastructure and strategic reserves needed to support this surge in demand.
Today, India imports nearly 60% of its LPG requirement, and shockingly more than 85% of these imports pass through the Strait of Hormuz, one of the most geopolitically sensitive routes in the world. Any disruption in this region can immediately affect India’s LPG supply chain.
Even more alarming is the fact that India’s total underground LPG storage capacity is only about 1.4 lakh tonnes, located in two caverns at Mangaluru and Visakhapatnam. This is less than two days of India’s LPG consumption.
The International Energy Agency has already flagged this lack of storage infrastructure as a serious weakness in India’s energy security framework.
In simple terms, a country of 140 crore people is running its household cooking fuel system with barely two days of strategic backup.
This raises serious questions:
• Why was no long-term storage plan created despite the massive expansion in LPG consumption?
• Why has the government allowed such extreme dependence on imports?
• Why were additional underground storage caverns not built over the last decade?
At a time when people are already facing high fuel prices and supply anxieties in several regions, the government should be explaining its preparedness to the nation.
But instead of coming to Parliament of India and facing a discussion, Narendra Modi and his ministers are running away from Parliament and avoiding a full debate on the emerging energy crisis.
Energy security is not a slogan. It requires planning, transparency and accountability.
The country deserves a serious discussion in Parliament, not silence.
#LPG
#Energy