அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களு��்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்!
உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!
#CMJosephVijay | #Census2027 |
Breaking
சட்டரீதிய���ல் தமிழக வெற்றிக் கழகத்திடம் முதல் தோல்வியை பெற்றது திமுக
மனுவை முறையாக தயாரிக்காமல் சரியான தகவல்களை மூத்த வழக்கறிஞர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது. இதனாலேயே திமுகவின் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தார் திமுகவில் இருந்தார் என்று கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. திரு.ஸ்டாலின் அவர்கள் பெருமை பொங்க பேசினார். தி.மு.க.வால்தான் முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆனார். அதுதான் வரலாறு என்றெல்லாம் சொன்னவர், பிறகுதான் தனிக்கட்சி கண்டார் என்றும் தொடர்ந்து சொன்னார்.
ஆனால், தன் வாழ்நாள் எதிரியே தி.மு.க.தான் என்று கடைசிவரை வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை ஒரு ���ீயசக்தி என்று அன்று சொன்னவர் எம்.ஜி.ஆர். தான் உயிரோடு இருக்கும்வரை தி.மு.க.வைக் கூப்பிலேயே உட்கார வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். என் நண்பர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் இருந்து வந்ததும் ஆட்சியைத் திருப்பித் தந்துவிடுகிறேன். அதுவரை என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள் என்று தி.மு.க.வைக் கெஞ்ச வைத்தார் எம்.ஜி.ஆர். இதுவும் வரலாறுதான் என்ற உண்மையைச் சொல்வாரா ஸ்டாலின் சார்?.
சட்டம் ஒழுங்கு டிஜிபிய�� நியமிக்காமல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கையே சந்தி சிரிக்க வைத்தவரும் இன்றைய நிலைக்கு ஆழமாய் விதை போட்டவரும் ஸ்டாலின் சார்தான். ஆனால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இன்று ஏதோ தன்னால் தமிழகம் பாழ்படவே இல்லை என்பதுபோலப் பேசித் தன் நகைச்சுவைத் திறனைக் காட்டுகிறார்.
இந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். மூன்று வருடத்தில் வரலாம். ஆறு மாதத்தில்கூட தேர்தல் வரலாம் என்று பொறாமையும் விரக்தியும் பொங்கப் பேசுகிறார் ஸ்டாலின் ���ார். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு வாய்க்கு வந்ததைப் பேசுகிறார். மக்கள் தீர்ப்பை அவமதிப்பு செய்கிறார். ஆட்சி அதிகாரத்தை இழந்த விரக்தியில் விம்முகிறார். வெடிக்கிறார். துடிக்கிறார்.
ஸ்டாலின் சார் என்னதான் ஆலாய்ப் பறந்தாலும் அங்கலாய்த்தாலும் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாலும்
இனி வருகின்ற ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100% சதவிகிதம் துடைத்தெறியப்படப் போவது உறுதி.