வன்மையான கண்டனங்கள்!
#கோவை_உடையாம்பாளையம்
பகுதியில் தள்ளுவண்டியில் பீஃப் கடை வைத்திருக்கும் உரிமையாளர்களை பீஃப் கடை போடக்கூடாது,வேறு எந்த கடை வேண்டுமானா��ும் போடு என
மிரட்டும் சுப்பிரமணி மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில்
வழக்கு பதிவுச் செய்து
கைது செய்ய வேண்டும்.
மேலும் கடை உரிமையாளர்களுக்கு
தகுந்த பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
@CollectorCbe
#சென்னையில் பள்ளி மாணவருக்கு நிகழ்ந்த சாதிய தீண்டாமையை
#நீலம்பண்பாட்டுமையம் வன்மையாகக் கண்டிக்கிறது!
#கோடம்பாக்கம், புலியூர் கிராமம் 134வது வார்டு,பதிப்பக செம்மல் கா.கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் தமிழ்வாணனை சாதிரீதியாக ஆசிரியர்களே (S.மீனாட்சி கணித ஆசிரிய��், R.சீனிவாசன் விளையாட்டு ஆசிரியர்) இழிவுபடுத்திய சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது.
த��டர்ந்து ஆறு மாதங்களாக வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் மைதானத்தில் அமர வைத்திருப்பதற்கான காரணத்தை மாணவரின் வாயிலாக அறியும்போது அதிர்ச்சி அளிக்கிறது. அதாவது, மாணவர் வெட்டியான் மகன் என்கிறது ஒரு காரணத்திற்காகவே ஆசிரியர்கள் வகுப்பறைகுள் அனுமதிக்காமல் வெளியில் அமர வைத்திருக்கிறார்கள். அதோடு அம் மாணவரை சக மாணவர்கள் முன்பு அவமானப்படுத்தும் விதமாகக் கொச்சையான வார்த்தைகளால் பே��ியும் அரைநிர்வாண நிலையில் நிற்க வைத்தும், வகுப்பறைக்குள் அனுமதித்தாலும் தனி இருக்கையில் அமர வைத்து அவரின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தி பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார்.
அவர் பள்ளியின் கலைத்திருவிழாவில், பறையிசை அடித்தற்காக "நீ பறை அடிக்கத்தான் லாயக்கு. உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு. அங்கேயே வேலைக்குப்போ' என்றெல்லாம் சொல்லி சாதி ரீதியாக தொடர்ந்��ு
துன்புறுத்தியும் வந்திருக்கிறார்கள் என்று மாணவரே உண்மை வாக்குமூலம் அளிக்கிறார்.
எனவே, இவ்விசயத்தில் பள்ளி கல்வித்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவருக்கும் அவருடைய குடும்பத்திருக்கும் தகுந்த பாதுகாப்பையும் வழங்க வேண்டும்.
@CMOTamilnadu @Anbil_Mahesh