அரசியல் என்பது கொள்கை, கோட்பாட்டிற்கு அப்பாற்பட்டு எந்த வித பாகுபாடும் இன்றி அனைத்து மக்களின் நலன் கருதி, மக்களின் தேவைகளை முன்னிறுத்தி பணியாற்றுவதே
தவிர, கொள்கை கோட்பாடுகளுக்கு உட்பட்டதல்ல
மக்களே எங்கள் பிரதானம், மக்கள் பணியே எங்கள் கொள்கை, கோட்பாடு
#தமிழகவெற்றிக்கழகம்
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் பணிவான கோரிக்கை.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், புதூர் கிராமம், சர்வே எண் 229/14-ல் அமைந்துள்ள அரசு நிலத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த இடம் பல ஆண்டுகளாக அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டுக்காக பயன்படுத்தி வரும் பொதுப் பயன்பாட்டு இடமாக உள்ளது.
தற்போது சிலர் அந்த அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் (RDO) அவர்களிடம் ஒரு வாரத்திற்கு முன்பே புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு அரசு நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கவும், அப்பகுதி இளைஞர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அந்த இடத்தை அதிகாரப்பூர்வ கிரிக்கெட் மைதானமாக அறிவித்து தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்த நிலத்தை சுற்றியுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள பிற அரசு இடங்களையும் ஆய்வு செய்து, அவற்றை மீட்டு பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அரசு நிலம் என்பது மக்களின் சொத்து. பொதுச் சொத்துக்களை பாதுகாப்பது அரசின் கடமையும், சமூகத்தின் பொறுப்புமாகும். இளைஞர்களின் விளையாட்டு உரிமையையும், அரசு நிலங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும்.
@CMOTamilnadu@district_salem@KASengottaiyan@AadhavArjuna
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.06.2026) உடல் நலக்குறைவால் காலமான இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன்.
கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள்.
தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய, மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு, தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட“சிங்கப்பெண்” திட்டத்தின் தொடக்க விழா நிகழ்வின் சிறப்புத் தருணங்கள்
Glimpses from the Inaugural Launch of Singappen by the Hon’ble Chief Minister
https://t.co/rzpOXOQPos
#CMJosephVijay#Singappen#TNPolice#DGPTamilNadu
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (9.6.2026) சென்னை, எழும்பூர், இராஜரத்தினம் அரங்கத்தில் நடைபெற்ற
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழாவில், பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் 09.06.2026ம் தேதி மாலை 04.45 மணியளவில் தமிழ்நாடு காவல் துறையின் 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றுகிறார்கள்.
Live: https://t.co/hFkOQMgYsU
Under the guidance of Hon'ble Chief Minister Thiru C. Joseph Vijay, I visited HD Hyundai Heavy Industries' Ulsan shipyard in the Republic of Korea, where I toured shipbuilding facilities, observed advanced production systems, and held discussions on potential areas of cooperation.
The proposed Thoothukudi Greenfield Shipyard is one of the earliest outcomes of the India–Republic of Korea maritime cooperation framework and reflects the growing strategic partnership between our two countries in the maritime sector. The project is envisaged as a mega greenfield shipyard with the capability to support large commercial vessel segments and strengthen India’s long-term shipbuilding capacity
With one of India’s longest coastlines and a strong maritime tradition, Tamil Nadu is well placed to become a leader in the Blue Economy and a major hub for shipbuilding and maritime industries. Thoothukudi, with its port-led location and industrial hinterland, offers a strong platform for developing a new maritime manufacturing cluster.
Under the leadership of Hon'ble Chief Minister, the Government of Tamil Nadu is committed to realising this potential through a stable, transparent and facilitative business environment.
The proposed greenfield ship building cluster with HD Hyundai as an anchor player in Thoothukdui is an important project in advancing India’s shipbuilding ambitions and Tamil Nadu’s vision for maritime growth. HD Hyundai’s experience in developing and operating world-class shipyards, building large commercial vessels, and integrating marine engineering and production systems will be valuable as Tamil Nadu works to create a globally competitive shipbuilding ecosystem.
This project has the potential to generate large-scale employment, attract global suppliers, strengthen domestic shipbuilding capability, create opportunities for MSMEs and ancillary industries, and position Tamil Nadu as a major contributor to India’s maritime and Blue Economy ambitions.
Read more: https://t.co/PPh3rcI4Sx
@CMOTamilnadu
#InvestInTN #MakeInTN #ThriveInTN #TamilNadu
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் பணிவான கோரிக்கை.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், புதூர் கிராமம், சர்வே எண் 229/14-ல் அமைந்துள்ள அரசு நிலத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த இடம் பல ஆண்டுகளாக அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டுக்காக பயன்படுத்தி வரும் பொதுப் பயன்பாட்டு இடமாக உள்ளது.
தற்போது சிலர் அந்த அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் (RDO) அவர்களிடம் ஒரு வாரத்திற்கு முன்பே புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு அரசு நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கவும், அப்பகுதி இளைஞர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அந்த இடத்தை அதிகாரப்பூர்வ கிரிக்கெட் மைதானமாக அறிவித்து தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்த நிலத்தை சுற்றியுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள பிற அரசு இடங்களையும் ஆய்வு செய்து, அவற்றை மீட்டு பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அரசு நிலம் என்பது மக்களின் சொத்து. பொதுச் சொத்துக்களை பாதுகாப்பது அரசின் கடமையும், சமூகத்தின் பொறுப்புமாகும். இளைஞர்களின் விளையாட்டு உரிமையையும், அரசு நிலங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும்.
@CMOTamilnadu@district_salem@KASengottaiyan@AadhavArjuna
@DanwayDelux@annamalai_k இந்த இடம் மட்டும் இல்லாமல், இதை சுற்றியுள்ள அரசு நிலத்தையும் ஆக்கிரமிக்க முயற்சிப்பது திமுக, அதிமுக ஆதரவாளர்கள் தான்...
நல்ல அரசு வந்ததால் தான் நாங்க தைரியமா புகார் குடுத்து உள்ளோம்...
தி.மு.க வின் அரசியலே ஒட்டுமொத்தமாக பொய்யும், புரட்டையுமே தங்களது அரசியல் வழியாக காலந்தோறும் செய்துவருகிறது. அதன் நீட்சியை இப்போது தி.மு.கவின் ஐ.டி-விங்கும் துவக்கியுள்ளது. தரம்தாழ்ந்த அரசியல் விமர்சனங்களையும், உண்மைக்குமாறான தகவல்களையும் பொதுவெளியில் பரப்பிவருவது திமுகவின் ஐடி விங்கிற்கு வாடிக்கையாகிவிட்டது.
அந்த வகையில், மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை, அவதூறு செய்திகளை தற்போது பரப்பி, தங்கள் அரசியல் நாகரீகம் அற்றவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்துவருகிறார்கள்.
அரசியலில் நேருக்கு நேர் எதிர்கொள்ள துணிவில்லாமல் தேர்தல் தோல்வியால், பித்துப் பிடித்த மனநிலையில் உள்ள திமுக தலைமை, மாண்புமிகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை குறிவைத்து உண்மைக்கு மாறான வதந்திகளை தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். திமுகவின். இதுபோன்ற அவதூறுகள் மற்றும் பொய்யுரைகளை கண்டுதான் மக்கள் அவர்களுக்கு தேர்தலில் தக்க பாடத்தை தேர்தல் நேரத்தில் கொடுத்தார்கள்.
தற்போது அமலாக்கத்துறை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள குறிப்பிட்ட நபருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு துளி அளவும் தொடர்பு இல்லை. தைரியம் இருந்தால் அதை சட்டரீதியாக தி.மு.க ஐ.டி விங் இதை நிரூபிக்கட்டும். ஐந்து வருடங்களாக தி.மு.க ஆட்சியிலிருந்த போது போதை கலாச்சாரத்தை ஊக்குவித்து, தமிழகத்தை நாசகரம் செய்தததை மக்கள் மறக்கவில்லை. இன்று அதை ஒழிக்கவும், அடுத்த தலைமுறையை நல்வழிப்படுத்தி போதை கலாச்சாரத்தை முற்றிலும் தமிழகத்திலிருந்து அகற்றுவதற்கான பெரும் போராட்டத்தை எல்லா வகையிலும் இந்த அரசு செய்து வருகிறது.
தி.மு.க வின் பொய்களுக்கும், வதந்திகளுக்கும் நாகரீகமற்ற குற்றசாட்டுகளுக்கும் விரைவில் சட்டரீதியாக நாங்கள் பதிலடி கொடுப்போம். அமைச்சர் மீது அபாண்டமான பொய் குற்றச்சாட்டை முன்வைத்து தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட தி.மு.க ஐ.டி விங்கை சட்ட ரீதியாக எதிர் கொள்வோம்…அபாண்ட பொய்களையும், அவதூறு செய்திகளைப் பரப்பியே பழக்கப்பட்ட தி.மு.க ஐ.டி விங்கின் முகமூடியை மக்கள் முன் உண்மைப்படுத்துவோம்…
மாற்றத்தின் முதல் 30 நாட்கள்
தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற இந்த ஒரு மாதத்திற்குள், தமிழக ஆட்சி நிர்வாகத்திலும் மக்கள் நலனிலும் தொலைநோக்குத் திட்டங்களுடன் நிகழ்த்தப்பட்ட 50 முக்கிய அதிரடி சாதனைகளின் முழுப்பார்வை,
1.புதிய DGP நியமனம்: அரசியல் தலையீடற்ற, நேர்மையான புதிய DGP நியமிக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
2.நேரடி இணையப் புகார்: பொதுமக்கள் காவல் நிலையம் செல்லாமல், நேரடியாக முதல்வரின் பிரத்யேக இணையதளத்தில் புகார் அளிக்கும் வசதி அறிமுகம்.
https://t.co/Ey0CWpJcME Patrol விரிவாக்கம்: இரவு நேரங்களில் தனியாகப் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முக்கிய நகரங்களிலும் ரோந்து வாகனங்கள் அதிகரிப்பு.
4.சிறப்புப் படை அமைப்பு: மாநிலம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை வேரோடு ஒழிக்க அதிநவீன வசதிகளுடன் கூடிய தனிச் சிறப்புப் படை உருவாக்கம்
5.காவலர் நலன்: காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை மற்றும் சுழற்சி முறை பணி நேரம் அமல்.
6.சைபர் கிரைம் தடுப்பு: ஆன்லைன் நிதி மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க வட்டார அளவில் பிரத்யேக மீட்புக் குழுக்கள் அமைப்பு.
7.விபத்தில்லா நெடுஞ்சாலைகள்: விபத்துகளைக் குறைக்க அதிவேக கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவசரக்கால ஆம்புலன்ஸ் சேவைகள் முழுமையாகச் சீரமைப்பு.
8.சமூக விரோதிகள் ஒழிப்பு: மாநில அளவிலான ரவுடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, குற்றச்செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அதிரடி உத்தரவு.
9.ஸ்மார்ட் வகுப்பறைகள்: அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அதிவேக இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் திட்டம் தொடக்கம்.
10.முதலையமைச்சர் கல்வி நிதியம்: ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்க பிரத்யேக நிதியம் உருவாக்கம்.
11.ஊட்டச்சத்து காலை உணவு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் கூடுதல் ஊட்டச்சத்துக்களுடன் தரம் உயர்த்தப்பட்டு விரிவாக்கம்.
12.உலகளாவிய திறன் மேம்பாடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி மற்றும் கணினி கோடிங் வகுப்புகள் அறிமுகம்.
13.மருத்துவச் சேர்க்கை மாற்றுப் பாதை: நீட் தேர்வுக்கு மாற்றாக மாநில அளவிலான மருத்துவச் சேர்க்கைக்கான சட்டபூர்வ அழுத்தங்கள் மற்றும் இலவச உயர்தரப் பயிற்சி மையங்கள்.
14.டிஜிட்டல் நூலகங்கள்: அனைத்து முக்கிய ஊராட்சிகளிலும் நவீன வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் நூலகங்கள் அமைக்க அரசாணை வெளியீடு.
15.சர்வதேச விளையாட்டு மைதானங்கள்: கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க மாவட்டந்தோறும் சர்வதேச தரத்திலான மைதானங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு.
16.75% உள்ளூர் வேலைவாய்ப்பு: தமிழகத்தில் தொடங்கும் புதிய தொழிற்சாலைகளில் 75% வேலைவாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்ற அதிரடி சட்டம்.
17.15 நாள் ஒற்றைச் சாளர அனுமதி: புதிய தொழில் தொடங்குவதற்கான அனுமதிகளை 15 நாட்களுக்குள் வழங்க டிஜிட்டல் ஒற்றைச் சாளர முறை அமல்.
18.மண்டல IT பூங்காக்கள்: சென்னை, கோவை தாண்டி திருச்சி, மதுரை, சேலம் ஆகிய நகரங்களிலும் புதிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்க அடிக்கல்.
19.பெண் தொழில்முனைவோர் ஊக்கம்: சுயதொழில் தொடங்கும் பெண்களுக்கு வட்டி இல்லாத கடன் மற்றும் மானியங்கள் வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்.
20.இடைத்தரகர்கள் இல்லா கொள்முதல்: நெல் மற்றும் கரும்பு கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் நீக்கப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பணம் செலுத்தும் முறை.
21.குளிர்சாதனக் கிடங்குகள்: காய்கறிகள், பழங்கள் வீணாவதைத் தடுக்க மாவட்ட வாரியாகப் புதிய குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் அமைக்க உத்தரவு.
22.24 மணி நேர இலவச மின்சாரம்: தடையில்லா 24 மணி நேர இலவச விவசாய மின்சாரம் வழங்க புதிய மின்மாற்றிகள் நிறுவும் பணி தொடக்கம்.
23.இயற்கை விவசாய மானியம்: ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்குப் பிரத்யேக ஊக்கத்தொகை மற்றும் மானியங்கள்.
24.முதலமைச்சரின் நீர் பாதுகாப்புத் திட்டம்: பருவமழைக்கு முன்னதாகவே மாநிலத்திலுள்ள அனைத்து முக்கிய நீர்நிலைகளையும் தூர்வாரும் பணிகள் தொடக்கம்.
25.போர்க்கால சாலைச் சீரமைப்பு: சேதமடைந்த கிராமப்புறச் சாலைகளைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க தனி நிதி ஒதுக்கீடு.
26.அரசு மருத்துவமனைகள் தரம் உயர்வு: தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர அவசரச் சிகிச்சை மற்றும் ICU வசதிகள் கட்டாயமாக்கல்.
27.நடமாடும் மருத்துவச் சேவை: மலைக்கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு வாரந்தோறும் நேரடியாகச் செல்லும் மருத்துவ வாகனங்கள் அறிமுகம்.
28.மருந்துகள் டிஜிட்டல் கண்காணிப்பு: அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க டிஜிட்டல் கண்காணிப்பு முறை அமல்.
29.முதியோர் இல்லம் தேடி மருத்துவம்: முதியோர்களுக்கான வீடு தேடி வரும் மருத்துவச் சேவைகள் பலப்படுத்தப்பட்டு, மாதந்தோறும் இலவச பரிசோதனை உறுதி.
30.இலவச புற்றுநோய் சிகிச்சை: மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் இலவச புற்றுநோய் கண்டறிதல் மற்றும் கீமோதெரபி மையங்கள் அமைப்பு.
31.72 மணி நேர மக்கள் குறைதீர்ப்பு: முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வரும் மக்கள் புகார்கள் மீது அதிகபட்சம் 72 மணி நேரத்திற்குள் தீர்வு காண உத்தரவு.
32.ரகசியக் கண்காணிப்பு: அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க ரகசியக் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் திடீர் ஆய்வுகள் தீவிரம்.
33.இடைத்தரகர்கள் இல்லா சான்றிதழ்கள்: சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் இடைத்தரகர்கள் இன்றி ஆன்லைனில் விரைவாகக் கிடைக்க வழிவகை.
34.பயோமெட்ரிக் வருகைப்பதிவு: அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை துல்லியமாக்கப்பட்டு, பணி நேரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
35.மின்சாரப் பேருந்துகள் திட்டம்: பொதுப் போக்குவரத்தின் தரம் உயர்த்தப்பட்டு, புதிய நவீன மின்சாரப் பேருந்துகள் அறிமுகம் செய்யத் திட்டம்.
36.பாதுகாப்பான மகளிர் இலவசப் பயணம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் மேலும் பாதுகாப்பான முறையிலும், கூடுதல் வழித்தடங்களிலும் விரிவாக்கம்.
37.நேரடி முதியோர் உதவித்தொகை: தகுதியுள்ள அனைத்து முதியோர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை எவ்வித தடையுமின்றி நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை.
38.மாற்றுத்திறனாளிகள் நலன்: மாற்றுத்திறனாளிகளுக்கான சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் அரசுப் பணிகளில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டைக் கண்காணிக்கத் தனிக்குழு.
39.நெசவாளர் ஆதரவு: கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சார அளவு அதிகரிப்பு மற்றும் நூல் மானியம் வழங்கல்.
40.மீனவர் பாதுகாப்பு: கடலுக்குச் செல்லும் மீனவர்களின் பாதுகாப்பைக் காக்க நவீன GPS கருவிகள் மற்றும் அவசரக்கால உதவிக் கட்டுப்பாட்டு அறை அமைப்பு.
41.தூய்மைப் பணியாளர்கள் காப்பீடு: தூய்மைப் பணியாளர்களின் குடும்பப் பாதுகாப்பிற்காகப் பிரத்யேக ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அமல்.
42.சுத்தமான குடிநீர் இணைப்பு: அனைத்து வீடுகளுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் விடுபட்ட பகுதிகளுக்குப் புதிய குழாய் இணைப்புகள்.
43.நெகிழி மாற்று இயக்கம்: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களை ஊக்குவிக்கும் மாபெரும் மக்கள் இயக்கம்.
44.பசுமைத் தமிழகம்: மாநிலத்தின் காடுகளின் பரப்பளவை அதிகரிக்க ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்கு முதற்கட்டமாக வித்திடப்பட்டது.
45.சூரிய ஒளி மின்சக்தி: அரசு அலுவலகக் கட்டடங்கள் அனைத்திலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலான சூரிய ஒளி மின்சக்தி அமைக்கும் பணி தொடக்கம்.
46.மழைநீர் சேகரிப்பு தணிக்கை: புதிய மற்றும் பழைய வணிக வளாகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாக உள்ளதா என அதிரடி தணிக்கை.
47.சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாடு: உலகளாவிய அளவில் தமிழ் மொழியைக் கொண்டு சேர்க்க சர்வதேச மாநாடு நடத்த முதற்கட்டப் பணிகள் தொடக்கம்.
48.கலைஞர்கள் வாழ்வாதாரம்: நலிந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் திரைத்துறைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கப் புதிய நலத்திட்டங்கள்.
49.அரசுச் செலவுகள் குறைப்பு: ஆடம்பரக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, அரசுச் செலவுகளைக் குறைத்து, எளிமையின் அடையாளமாக கோட்டையில் சுழலும் மக்கள் முதல்வர்.
50.மக்களாட்சியின் பொற்காலம்: வெளிப்படையான நிர்வாகம், துரிதமான செயல்பாடுகள் மூலம் தமிழக வரலாற்றில் ஒரு புதிய அரசியல் பண்பாட்டை விதைத்துள்ளது இந்த முதல் மாதம்.
இவை வெறும் 30 நாட்களின் அசுர வேகத் தொடக்கம் தான்! இன்னும் ஐந்து ஆண்டுகால பொற்கால ஆட்சி நம் கண் முன்னே! ✍️ @TVKVijayHQ@CMOTamilnadu