கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை ��ன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர்கள�� ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சு���ுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.
ஆறு மாதம் கூட விமர்சனம் செய்யாமல் இருக்கிற மாதிரி இந்த ஆட்சி நடக்குமா? என்று, ஏற்கனவே நான் கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகளில் பேசினேன். உடனே, அதை உண்மைக்கு மாறாகத் திரித்து, “ஆட்சியைக் கவிழ்க்க சதியா?” என்று கேட்டு நமது எதிரிகள் அழ ஆரம்பித்துவிட்டார்கள்
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்.
#TVKFails
பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாய் ஒளிவீசி - தமிழ்மொழி மற்றும் பண்பாட்டைக் காக்க களப்பணியாற்றிய திரு.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் புகழை அடுத்தடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்ப்போம் - இனமானம் காப்போம்!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#DMK
முதலமைச்சரான பிறகும் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதுபோலப் பேசி வருகிறார் விஜய்!
200 யூனிட் மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரங்களில் தமிழ்நாட்டு மக்கள��� ஏமாற்றுகிறது தவெக அரசு!
தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட மோடியிடம் அனுமதி கேட்கிறார் விஜய்!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (01-06-26) மருத்துவர் எழிலன் நாகநாதன் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தது குறித்த செய்திக்குறிப்பு:
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் அவசர அவசரமாகக் காரில் ஏறிப் போன முதலமைச்சர் விஜய், இன்று திருச்சியில் பொதுமக்களுக்குப் பதிலாகக் "கேப்டிவ் ஆடியன்���்" (Captive Audience) எனப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டத்தை வைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர்கள் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தபிறகு ஊடகவியலாளர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால், முதலமைச்சர் விஜய் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் காரில் ஏறித் தப்பிச் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அறிஞர் அண்ணா கூறியதைப்போல, "எதிர்க்கட்சியாக இருக்கும்போது கிண்���த்தை எப்படி வேண்டுமானாலும் சுழற்றலாம்; ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஆட்சி என்பது நெய்க்கரண்டியைப் போன்றது, அதனைச் சிந்தாமல் கையாள வேண்டும்". முதலமைச்சர் விஜய் இன்னும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே பேசுவதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கான தெளிவான "விஷன் ஸ்டேட்மென்ட்" (Vision Statement) வழங்க வேண்டும் என டாக்டர் எழிலன் வலியுறுத்தினார்.
தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மாதந்தோறும் மின்கட்டணம் மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்காமல், இன்னும் இரு மாதங்களுக்கு ஒருமுறைக் கட���டணம் வசூலிப்பதையும், அதில் பல்வேறு நிபந்தனைகள் விதிப்பதையும் எழிலன் சுட்டிக்காட்டினார். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதில் மக்களை ஏமாற்றாமல், 2006-ல் கலைஞர் அவர்கள் நிபந்தனையின்றி 7,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்த அரசாணையைப் படித்துப் பார்க்குமாறு முதலமைச்சருக்கு அறிவுறுத்தினார்.
மகளிர் உரிமைத்தொகை, காலை உணவுத்திட்டம், மக்களைத் தேடி மருத்துவம் போன்ற திராவிட மாடல் ஆட்சி��ின் சாதனைகளைத் தாம் தொடர்வதாகக் கூறிவரும் முதலமைச்சர், புதியதாகத் தமிழ்நாட்டிற்கு என்ன செய்யப்போகிறார் என்றும் கேள்வி எழுப்பினார். 100 யூனிட் இலவச மின்சாரத்தின் தொடக்கம் 1989-ல் கலைஞர் வழங்கிய இலவச மின்சாரத்தில்தான் உள்ளது என்பதையும் அவர் நினைவூட்டினார்.
தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஆணவப்படுகொலைகள் குறித்துக் கேள்வி எழுப்பிய எழிலன், முன்பு திமுகவை நோக்கி விஜய் எழுப்பிய கேள்விகள் இப்போது அவரிடமே "பூமராங்" ஆகத் திரும்பிவருவதாகக் குறிப்பிட்டார். மேலும், தமிழ்த்தாய் வ���ழ்த்தைவிட "வந்தே மாதரம்" பாடலுக்கு முக்கியத்துவம் அளிப்பதன்மூலம் மாநில உரிமைகளை முதலமைச்சர் விட்டுக்கொடுக்கிறாரா? என்றும், மேகதாது மற்றும் மும்மொழிக்கொள்கை குறித்து அவர் ஏன் மௌனம் காக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.
முதலமைச்சர் விஜய் தமது அமைச்சர்களை ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும், வெறும் ரசிகர்மன்றத் தலைவராகச் செயல்படாமல் பொறுப்புள்ள முதலமைச்சராகச் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கை காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM SIR!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKFails
அன்பு உடன்பிறப்புகளே,
https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் இதுவரை 4.60 லட்சம் கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த இணையத்தளத்தின் முக்கிய நோக்கமே உடன்பிறப்புகள் அனைவரும் எவ்விதத் தயக்கமுமின்றி உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் கருத்துகள் நேரடியாக எனக்கே வந்து சேரும்.
இந்த இணையத்தளத்தில் உடன்பிறப்புகள் மட்டுமல்லாமல், கழக நிர்வாகிகள், கழக அனுதாபிகள், பொதுமக்கள் என அனைவரும் அளிக்கும் ஆலோசனைகளை ஆராய்ந்து நம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நான் திட்டமிடுவேன். எனவே மே மாதம் 31-ஆம் தேதிக்குள் உங்கள் கருத்துகளை https://t.co/IYC924jbDY இணையத்தளத்தில் பதிவு ச��ய்யவும்.
கழக மாநிலப் பொறுப்பாளர்களும், கழக மாவட்டச் செயலாளர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்ற முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் மறக்காமல், இந்தச் செய்தி அனைத்து உடன்பிறப்புகளுக்கும் சென்றடையும் வண்ணம் உங்களுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் Whatsapp குழுக்களிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Strongly condemn the Enforcement Directorate raids directed against former Kerala Chief Minister Com. @pinarayivijayan.
Such actions once again raise serious concerns over the growing pattern of central agencies being weaponised against Opposition leaders.
Incidentally, this also exposes the hollowness of the reckless allegations made by some Congress leaders who repeatedly questioned why Pinarayi Vijayan had “not yet been targeted by the BJP”!
#EDraids
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறு��ிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்��ு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உ��்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வ��ண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்திற்கு, இளைஞர்களே நீங்கள்தான் எதிர்காலம்!
இனி நம் plan and execution-ஐ upgrade செய்வோம்.
ஆக்கப்பூர்வமான அரசியல் உரையாடல்களை நிகழ்த்துங்கள்!
புதிய வரலாற்றை எழுதுவோம்!
@Udhaystalin@dmk_youthwing
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்��்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க���கட்சியாகச் செயல்படுவோம்.
தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள், பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது!
சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை.
ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவத���ல்லை. நடத்தட்டும்!
ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
ஏற்கெனவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது.
இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்டிருக்கும் பெட்ரோல், டீசல், CNG விலை உயர்வால் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகப் போகிறது.
இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?